Wednesday, May 26, 2021

இராணுவ வீரர்கள் இத்துபோன இந்திய ராணுவத்துறைய நம்பி சண்டைக்கு போறது பெரிய முட்டாள்த்தனம் - ஊழலின் கூடாரம் தான் இந்திய இராணுவம்..

இந்திய ராணுவத்தின் ஊழல் வரலாறு மிக நீண்ட நெடிய பாரம்பரியம் கொண்டது. ‘சுதந்திர’ இந்தியாவின் முதல் ஊழலே இராணுவத்துக்கு ஜீப்புகள் வாங்கியதில் நடந்தது தான். அந்த வகையில் 1948-ம் ஆண்டே இந்தியாவில் ஊழலுக்கு பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்தவர் வி.கே கிருஷ்ணன் மேனன். 

அதைத் தொடர்ந்து, போபர்ஸ் ஊழல், ஜெர்மன் நீர்மூழ்கி ஊழல், கார்கில் சவப்பெட்டி ஊழல், ஆதர்ஷ் வீட்டு மனை ஊழல், கோல்ப் கார்ட் ஊழல், சுக்னா ரியல் எஸ்டேட் ஊழல்,  ராபேல் ஊழல் என்று சகலத்திலும் ஊழல் நிறைந்தது தான் இந்திய இராணுவம். ஒன்னு ஒன்னா பார்ப்போம்.

போபர்ஸ் ஊழல்:

சுவீடன் நாட்டு போபர்ஸ் நிறுவனத்திடமிருந்து இந்திய ராணுவத்துக்கு 400 பீரங்கிகள் வாங்குவதற்காக,1986-ம் ஆண்டு மார்ச் 24-ம் தேதி ஒப்பந்தம் போடப்பட்டது. 1,437 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக, இந்திய அரசியல் தலைவர்களுக்கும் இராணுவ அதிகாரிகளுக்கும் 64 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது. இந்த ஊழல் விவகாரத்தில், மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களின் பெயர்கள் அடிபட்டது. ஊழலும் மறைக்கப்பட்டது.

சவப்பெட்டி ஊழல்:

கார்கில் போரில் உயிரிழந்தவர்களுக்கான சவப்பெட்டிகளை வாங்க, அமெரிக்க நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்யப்பட்டது. சவப்பெட்டிகளுக்கு உண்மையான விலையை விட, 13 மடங்கு அதிகமாக விலை கொடுக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது.
அப்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் மீது குற்றம் சாட்டப்பட்டது. தவிர, மூன்று ராணுவ அதிகாரிகள் மீதும் சிபிஐ குற்றம் சாட்டியது. இறுதியில், ஊழல் நடந்ததற்கான ஆதாரங்கள் இல்லை என சிபிஐ அறிவித்ததால், வழக்கு இழுத்து மூடப்பட்டது.

இராணுவ டிரக்கு வண்டி ஊழல்:

தற்போது சுமார் 7000 டாட்ரா டிரக்குகள் இந்திய ராணுவத்தால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தரம் குறைந்த இந்த வாகனம் ஒன்றில் விலை சுமார் 1 கோடி.  டாட்ராவின் போட்டி நிறுவனமான உரால்ஸ், இதை விட திறன் மிக்க வாகனங்களை 40 லட்சம் ரூபாய்க்கே தர முடியும் என்கிறது ( இதே திறன் கொண்ட வாகனங்களை டாடாவும் அசோக் லைலேன்டு கம்பெனியும் 16-18 லட்சத்துக்கே சந்தையில் விற்று வருகிறது). டாட்ரா டிரக்கின் விலை மட்டுமல்ல, அதில் பயன்படுத்தப்படும் உதிரி பாகங்களும் மிக அதிக விலைக்கு இராணுவம் கொள்முதல் செய்கிறது.  

பிரதமர் - ஜனாதிபதிக்கான விமானம் வாங்குவதில் ஊழல் :

இந்தியாவின் பிரதமரும், ஜனாதிபதியும், மற்ற மிக முக்கியமான நபர்களும் வசதியாக பயணம் செய்தவற்காக தலா ரூ 300 கோடி விலையில் 12 ஹெலிகாப்டர்களை மொத்தம் ரூ 3,600 கோடி செலவில் வாங்குவதற்கு ரூ 360 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு CBI விசாரணை என்ற பெயரில் மறைக்கடிக்கப்பட்டது.

தார்பாய் ஊழல்:

இந்திய இராணுவம் ட்ரெண்ட் போடவும், விருப்புக்கும் பயன்படுத்தும் தார்பாய்கள் 5,000 ரூபாய்களுக்கு வெளிச்சந்தையில் கிடைக்கும். ஆனால் அதே தார்பாயை 30,000 ரூபாய் செலவு செய்து டாட்ரா நிறுவனத்தில் இருந்து இராணுவத்திற்கு வாங்குகிறது.

ஆதர்ஷ் ஊழல் - கார்கில் போரில் உயிரிழந்தோர் வீட்டுமனை ஊழல் :

மும்பை-கொலாபா பகுதியில் இருக்கும் இராணுவத்துக்கு சொந்தமான நிலத்தில் ஆறு மாடிகள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பைக் கட்டி கார்கில் போர்வீரர்களுக்கும், அப்போரில் மாண்டவர்களின் மனைவிகளுக்கும் தரப்போவதாக ஒரு திட்டத்தை முன்வைத்து ஆதர்ஷ் கூட்டுறவு குடியிருப்பு சொசைட்டியை உருவாக்கியது மகாராட்டிர அரசு.  இது தொடர்பாக எழுந்துள்ள ஊழல் விவகாரத்தில், நாளுக்கு ஒரு மோசடி குறித்த விவரம் வெளிவந்து நாறிக் கொண்டிருக்கிறது.

மகாராட்டிர முதல்வர் அசோக் சவான் தனது மாமியாருக்கும் மருமகளுக்கும் இந்தக் குடியிருப்பில் வீடு ஒதுக்கியிருப்பது அம்பலமாகவே, சவானைப் பதவி விலக வைத்து அதைக் காட்டியே உத்தம வேடம் போட முனைந்தது, காங்கிரசு. ஆனால் உள்ளே செல்லச்செல்ல, காங்கிரசு, பாரதிய ஜனதா, சிவசேனா, அதிகார வர்க்கம், இராணுவ உயர் அதிகாரிகள் என்று மிகப் பிரம்மாண்டமானதொரு ஊழல் வலைப்பின்னல் அம்பலமாகத் தொடங்கியது.

முதலில் 6 மாடிகள், 40 வீடுகள் என்று போடப்பட்ட திட்டம், சுற்றுச்சூழல் விதிகளுக்கு முரணாக 31 மாடிகள், 103 வீடுகள் என்று அதிகரிக்கப்பட்டது. இவ்வாறு அதிகரிக்கப்பட்டபின், 60% வீடுகளை கார்கில் தியாகிகளுக்கும் மீதமுள்ள 40% வீடுகளைப் பொதுமக்களுக்கும் ஒதுக்குவது என்று விதிமுறைகள் தளர்த்தப்பட்டன. தற்போது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 103 வீடுகளில் 34 பேர் மட்டும்தான் இராணுவத்தை சேர்ந்தவர்கள். அதிலும் வெறும் 3 பேர் மட்டும்தான் கார்கில் போர் முனையில் இருந்தவர்கள்.

முன்னாள் மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு (சிவசேனா), முன்னாள் முதல்வர் சுசில் குமார் ஷின்டே (தற்போது மத்திய அமைச்சர்), பாரதிய ஜனதாக் கட்சியின் தலைவர் நிதின் கட்காரி போன்ற சர்வகட்சிப் பிரமுகர்களும் ஆதர்ஷில் வீட்டுமனை ஒதுக்கீடு பெற்றிருப்பது அம்பலமாகியிருக்கின்றது.

டப்பா மட்டன் ஊழல் - ஆட்டுக்கறி ஊழல் :

1987-1988 ஆண்டில் இலங்கையில் இந்திய அமைதிப்படைக்கு டப்பா இறைச்சி வாங்கியதில் ஊழல் தொடர்பான வழக்கில் 22 கழித்து ஊழல் நிரூபணமாகி தண்டனைகள் விதிக்கப்பட்டிருக்கின்றது

1987-ம் ஆண்டு ராஜீவ் காந்தி காலத்தில் ‘ஆபரேஷன் பவன்’ நடவடிக்கைகளுக்காக இலங்கைக்கு இந்திய அமைதிப்படை அனுப்பப்பட்டது. பின்னர், அந்த இயக்கம் முழு வீச்சான போராக மாறியதும் படைகளின் எண்ணிக்கை குறுகிய காலத்தில் 6,000லிருந்து, 1 லட்சமாக உயர்த்தப்பட்டது.

இலங்கையில் தமது வீரர்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை போதுமான அளவில் வாங்க முடியாமல் திணறிய ராணுவத்தின் நிலையை பயன்படுத்திக் கொண்டு ஊழல் புரிந்ததாக இரு ராணுவ அதிகாரிகள் மீது வழக்கு தொடரப்பட்டு 22 ஆண்டுகள் கழித்து தீர்ப்பு வந்திருக்கிறது. இந்திய ராணுவத்துக்கு உணவுப் பொருட்கள் வாங்கி அனுப்பும் பொறுப்பு ராணுவத்தின் தெற்கு மண்டல ஆணையகத்தின், வழங்கல் துறையைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் அனந்த் குமார் குப்தாவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு சிறப்பு சிபிஐ நீதிமன்றம் ஒரு இராணுவ மேஜர் ஜெனரலுக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனையும், அவருக்கு கீழ் வேலை செய்த ஓய்வு பெற்ற லெப்டினென்ட் கர்னலுக்கு 1 ஆண்டு சிறைத் தண்டனையும் வழங்கியிருக்கிறது.

ராஃபேல் ஊழல் - போர் விமான ஊழல் :

2012-ம் ஆண்டு பிரான்சின் தஸ்ஸால்ட் நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி 126 நவீன ரக போர்விமானங்களை (18 விமானங்கள் பறக்கும் நிலையில்) அன்றைய மதிப்பில் சுமார் ரூ 54,000 கோடி செலவில் கொள்முதல் செய்வது, 108விமானங்களை இந்திய அரசின் HAL (இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிமிடெட்) நிறுவனத்துடன் சேர்ந்து இந்தியாவிலேயே தயாரிப்பது, தொழில்நுட்ப பரிமாற்றம் ஆகியவை அடக்கம்.

ஆனால், மோடி ஆட்சிக்கு வந்த பிறகு போட்ட புதிய ஒப்பந்தத்தின்படி, 36 விமானங்களை ஏறத்தாழ ரூ 60,000 கோடி கொடுத்து வாங்க வேண்டும், தொழில்நுட்ப பரிமாற்றம் கிடையாது. முக்கியமாக HAL நிறுவனத்துடன் சேர்ந்து இந்தியாவில் விமானங்களைத் தயாரிக்க வேண்டும் என்பது மாற்றப்பட்டு, அனில் அம்பானி புதிதாகத் திறந்த ரிலையன்ஸ் டிபென்ஸ் லிமிடெட் மூலமாக விமானங்களை சப்ளை செய்ய வேண்டும். ஒரு விமானத்தின் விலை ரூ 700 கோடியிலிருந்து ரூ 1600 கோடியாக இரண்டு மடங்கிற்கும் மேல் உயர்த்தப்பட்டிருக்கிறது, HAL நிறுவனத்திடம் இருந்து ரிலையன்சுக்கு ஒப்பந்தம் மாற்றப்பட்டிருக்கிறது. 

இதில்தான் ரூ 30,000கோடிக்கும் மேல் ஊழல் நடந்திருப்பதாக எதிர்க்கட்சிகளும் யஷ்வந்த் சின்ஹா உள்ளிட்ட முன்னாள் பா.ஜ.க தலைவர்களும் கூறுகின்றனர். இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டு, இதுதொடர்பாக இந்திய அரசிடம் விளக்கம் கேட்டது. ரஃபேல் விமான ஒப்பந்த நடவடிக்கை, விலை நிர்ணயம் ஆகியவற்றில் முறைகேடு இருப்பதற்கான ஆதாரங்கள் இல்லை என்று நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு, வழக்கைத் தள்ளுபடி செய்தது. 

இதையடுத்து, இந்தத் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி சீராய்வு மனு அளிக்கப்பட்டுள்ளது. இதை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டு, விசாரணை நடந்துவருகிறது. ஒப்பந்த விவரங்களை வெளிப்படையாக அறிவிக்க மறுக்கும் மோடி அரசு, குற்றச்சாட்டுகளுக்கு எந்த பதிலும் கூறாமல் இதைப்பற்றி கேள்வி கேட்பவர்கள் தேசத்தின் பாதுகாப்பைக் கொச்சை படுத்துகின்றனர் என்று பிரச்சாரம் செய்து வருகிறார். 

ஜீப் வண்டி ஊழல் :

2012ம் ஆண்டு இராணுவ தலைமை தளபதி ஜெனரல் வி கே சிங், ‘இராணுவத்துக்கு ஜீப்புகள் வாங்குவதற்கான ஒப்பந்தம் தொடர்பாக ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் ஒருவர் தனக்கு ரூ 14 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முன் வந்ததாக’ குற்றம் சாட்டியிருந்தார். வழக்கு மறைக்கடிக்கப்பட்டது.

ராணுவ வீரர் பாதுகாப்பு கவசம் மற்றும் பொருட்களில் ஊழல் :

உயரமான மலைப் பகுதிகளில் பணி புரியும் படை வீரர்களுக்குத் தேவையான பொருட்களை வழங்குவதில் ஊழல் தொடர்பாக அப்போதைய இராணுவ சேவைப் பிரிவின் உயர் அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் எஸ் கே சஹானி 2011ம் ஆண்டு பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

லடாக் மட்டன் ஊழல் :

லடாக் பகுதி படைவீரர்களுக்கு உறைய வைக்கப்பட்ட இறைச்சி வாங்குவதில் நடந்த ஊழல் தொடர்பாக லெப்டினன்ட் ஜெனரல் எஸ் கே தாஹியா மீது விசாரணை நடந்தது. வழக்கு மறைக்கடிக்கப்பட்டது.

தரமில்லாத துப்பாக்கி ரவை குண்டுகள் என புகார் :

"அரசின் இராணுவத் தளவாடத் தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் ரவைகள், குண்டுகள் தொடர்பான விபத்துகள் அதிகரிப்பது இராணுவ வீரர்கள் மத்தியில் நம்பிக்கைக் குறைவை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் டாங்குகளில் பயன்படுத்தப்படும் 125 எம்.எம். அதிதிறன் கொண்ட குண்டுகளின் பயன்பாட்டில் 40-க்கும் மேற்பட்ட விபத்துக்கள் நேர்ந்திருக்கின்றன. 

அது மட்டுமல்லாமல், எல்-70 என்கிற விமானங்களைத் தாக்கும் பீரங்கிகளில் பயன்படுத்தப்படும் அதிதிறன் கொண்ட 40 எம்.எம். குண்டுகளை இராணுவ வீரர்களின் பயிற்சியின்போது பயன்படுத்துவது அறவே நிறுத்தப்பட்டுவிட்டது. அதற்குக் காரணம், இதனால் ஏற்பட்ட எதிர்பாராத விபத்துகளால் பல இராணுவ வீரர்கள் பயிற்சியின் போது காயமடைந்தார்கள் என்பதுதான்.

சில குண்டுகள் வெடிக்காமல் போவதும், வேறு சில பயன்படுத்துவதற்கு முன்பே வெடித்து விடுவதும் இன்னும் சில தாமதமாக வெடிப்பதும் இராணுவ வீரர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியிருக்கின்றன. தரமில்லாத தயாரிப்பாலும், முறையான பாதுகாப்புடன் வழங்கப்படாததாலும் விரைவிலேயே அவை செயலிழந்துவிடுகின்றன” என இராணுவமே பல்வேறு குற்றச்சாட்டுகளைக் குறிப்பிட்டுப் பாதுகாப்பு அமைச்சகத்துக்கு அறிக்கை அளித்திருக்கிறது.

“இந்திய அரசால் நடத்தப்படும் 41 இராணுவத் தளவாடத் தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் ரவைகள், குண்டுகளைவிட, சிவகாசியில் தயாரிக்கப்படும் அணுகுண்டுகள் தரமானவை” என்பதுதான் இந்திய இராணுவம் எழுதியிருக்கும் அறிக்கையின் பொருள்.  "அச்சத்தில் இந்திய இராணுவம்” என்ற தலைப்பில் 15.05.2019 தேதியில் தினமணியில் வெளியான செய்திதான்.

இராணுவ வீரர்களை பட்டினி போட்டு உணவில் ஊழல் :

தேஜ் பகதூர் யாதவ் என்றொரு இராணுவ வீரர், தங்களுக்குக் கொடுக்கப்படும் ரொட்டிக்கு சப்ஜி தரப்படுவதில்லை என்றும், பல நேரங்களில் இராணுவ வீரர்கள் அரைப் பட்டினியாகக் கிடக்குமாறு விடப்படுகிறார்கள் என்றும் குறிப்பிட்டு, இராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் உணவில் நடைபெறும் ஊழலை அம்பலப்படுத்தி, வாட்ஸ் அப் வீடியோவொன்றை வெளியிட்டார்.

அரசு நடத்தும் மாணவர் விடுதிகளில்தான் இப்படியெல்லாம் கேவலமாக ஊழல் நடைபெறுவதைக் கேள்விப்பட்டிருக்கிறோம். இராணுவமும் அதற்கு விதிவிலக்கல்ல என்பது இப்பொழுது அம்பலமாகியிருக்கிறது. ரொட்டிக்கு குருமாகூடத் தராமல் கமிசன் பார்க்கும் இந்திய இராணுவ அதிகாரிகள், பார்டரில் விட்டு கொலை செய்வதற்கா அஞ்சப் போகிறார்கள்?

கடந்த பல பத்தாண்டுகளாக லட்சக்கணக்கான கோடி ரூபாய்கள் மக்களின் வரிப்பணத்தை விழுங்கி ஏப்பமிட்ட இராணுவத்தின் அதிகார வர்க்கம், ஊழலிலும் உல்லாச சொகுசு வாழ்க்கையிலும் ஊறித் திளைத்துக் கிடக்கிறது. இங்கு வேண்டும் மட்டும் கறந்து கொள்ளலாம், கேள்வி முறை கிடையாது, கட்டுப்பாடும் கிடையாது, தணிக்கை கிடையாது. ஆயுதம் முதல் சிப்பாய்களுக்கான அன்றாட ரேசன் வரையில் இராணுவத்துக்காக செய்யப்படும் அனைத்துச் செலவுகளிலும், 10% கமிஷன் என்பது இந்திய இராணுவத்தில் அமல்படுத்தப்படும் எழுதப்படாத விதி. 

மக்களுக்கு நேரடியாக பதில் சொல்லக் கடமைப்படாத திமிரிலிருந்தே புனிதம், பெருமிதம் போன்ற காலாவதியான சொற்களுக்குப் பின்னே ஒளிந்து கொண்டு ஊழல் செய்யும் துணிச்சல் இராணுவத்துக்கும், பாதுகாப்பு துறை அரசியல்வாதிகளுக்கும் வாய்க்கிறது. 

 2018-2019-க்கான மத்திய பட்ஜெட்டில் 3 லட்சம் கோடி ரூபாய் இராணுவத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. உலகில் ராணுவத்திற்கு அதிகம் செலவிடும் நாடுகளில் பிரிட்டனைப் பின்னுக்குத் தள்ளி 5-வது இடத்தில இருக்கிறது இந்தியா. புதிய இராணுவ தளவாடங்கள் வாங்குவதில் முதல் இடத்தில் உள்ளது. தேசப்பாதுகாப்பு என்ற பெயரில் ஆண்டு தோறும் பல லட்சம் கோடி மதிப்பிலான பாதுகாப்புத் துறை ஒப்பந்தங்களில் நடக்கும் ஊழல்களும் வரிப்பணக் கொள்ளையும் யாருக்கும் தெரியாத மர்மங்களாகவே நீடிக்கின்றன.

டக்ளஸ் முத்துக்குமாரின் 300 பாட்டன்ஸ்களில் ஒரு சில பார்ட்டன்ஸின் மறைக்கப்பட்ட வரலாறு.. ✍ 🙇

நல்ல அறிவு, ஒழுக்கம், பக்தி, வீரம், போர்க்கலை, இயல், இசை, நாடகம் னு 64 கலைகளில 63 கலைல சிறந்து விளங்கினார் எங்க பாட்டன். அது வேற யாருமில்ல கிமு.4ஆம் நூற்றாண்டுல ஏசப்பா பொறக்கத்துக்கு முன்னாடியே பாண்டிய நாடு, சேர நாடு, சோழ நாடு, கொங்கு, பிங்கு, வோட்கா னு ஒட்டுமொத்த தமிழ்நாட்டயே ஆண்ட முதல் மாமன்னரான "மன்னன் இரண்டாம் டக்ளஸ்" தான்.

63 கலைகளில பாஸ் பண்ணின பாட்டன் பேலன்ஸ் ஒரு கலையையும் எப்படியாவது கத்துக்கணுமுனு ரெம்ப ஆர்வமா இருந்தாரு. யாருட்ட கத்துக்கலாம் னு எகிப்திய பாரோ மன்னன் அன்பளிப்பா கொடுத்த வெஸ்டன் டாய்லெட்ல உக்காந்து போற பழக்கமில்லாம, மேலயே ஏறி உக்காந்து கக்கா போயிட்டே யோசிச போது கனப்பொழுதில் மைண்ட்க்கு வந்தவர் தான் பாட்டனோட பால்ய நண்பன் Mr.பொய்யில் புலவன். 

"சரி நம்ம நண்பன்ட்யே கத்துக்கிலாம்"னு நண்பன பாக்க பாட்டன் போனாரு. அப்பதான் பாட்டனோட நண்பர் ரெம்ப பிஸியா "செல்வத்துள் செல்வம் செவி செல்வம் அச்செல்வம்..."னு எழுதிட்டு இருக்கும்போதே எங்க பாட்டன் எழுது கோல புடுங்கி தூரபோட்டு "செல்வம் நல்லாத்தான் இருக்கான், நீ எப்படி இருக்க நண்பா..?"னு கேக்க, வள்ளுவருக்கு ஒரே சர்ப்பிரேஸ்... "வா நண்பா எப்படி இருக்க..? என்ன சோலியா இந்த பக்கம்..?"னு கேக்க, எங்க பாட்டன் தலைய சொறிஞ்சிக்கிட்டே "அது ஒன்னுமில்ல.. 64 கலைல 63 தெரியும், பேலன்ஸ் ஒன்ன உன்கிட்ட கத்துக்கிடனும் வந்தேன்"னு சொல்ல, "நீ தலைய சொரியும் போதே தெரியுது நீ எந்த சப்ஜெக்ட்ல வீக் னு, நான் உனக்கு எழுதி தாறேன்"னு ஒரு நைட் புல்லா உக்காந்த வள்ளுவர், எங்க பாட்டனுக்காக எழுதுனது தான் காமத்துபால். வள்ளுவர் சட்டைப் பையில இருந்து எழுதுகோல எடுக்குற அளவுக்கும், புடுங்கி தூர போடுற அந்தளவுக்கும் வள்ளுவரோட எங்க பாட்டனுக்கு பழக்கம் இருந்துச்சி. அப்பிடியே சில்லற கிடந்தாலும் நோண்டி எடுத்துருவாப்ல.

இவர் இப்படினா கிபி.7ம் நூற்றாண்டுல வாழ்ந்த எங்க பாட்டன் "மன்னர் 7ஆம் டக்ளஸ்".. தமிழ்நாட்ட ஒருத்தரே ஆள ரெம்ப சிரமம் இருந்ததால நாட்ட மூணா பிரிச்சி.. சேர, சோழ, பாண்டியனுக்கு  குத்தகைக்கு விட்டு சம்பாரிச்சிட்டு இருந்தாப்பல. நாட்ட குத்தகைக்கு விட்டாலும் நாட்டோட ராணுவம் எங்க பாட்டன் கண்ட்ரோல்லதான் இருந்துச்சி.

சீமான் பாட்டனக்காவது 6000 யானை..., ஆனா என்னோட பாட்டனுக்கு 60ஆயிரம் கோடி யானைகள். எங்க பாட்டன் யானையை கப்பல்ல ஏத்தி கொண்டுபோயி போர் செய்யனமுன்னு அவசியம் இல்ல. "நாங்களும் போருக்கு வாறோம்டா.."னு சொன்னாலே போதும்... அத்தன எதிரி நாட்டு பயகளும் முண்டியடிச்சி வந்து கப்பம் காட்டுவானுக. யானை படை மாதிரி டைனோசர் படையும் வச்சிருந்தார்.

ஆனா எங்க பாட்டன் அவனுக கப்பம் கட்டுற பணத்த எப்பவுமே கைநீட்டி வாங்குனது கிடையாது. இருந்தாலும் காசு குண்டா குண்டாவா சேரும். அவ்வளவு காசுயும், தங்கம், வைரம் எல்லாத்தையும் அவங்களுக்கே திருப்பி கொடுத்துட்டு.., கடைசியா என்னோட பாட்டன் அவங்கள பாத்து சொல்லுற வார்த்த.. "இந்த மாதிரி காசெல்லாம் என்கிட்ட டன் கணக்குல 200 கப்பல்ல இருக்கு.. அதனால இந்த காச நீங்களே எடுத்துட்டு போயி புள்ளிக்கு நாலு பப்பரமுட்டாயி வாங்கி சாப்புடுங்கடா".. னு திருப்பி அனுப்பிச்சிருவாரு.

கப்பல் னு சொன்னதும் தான் நியாபகத்துக்கு வருது, 9ஆம் நூற்றாண்டுல வாழ்ந்த எங்க பாட்டன் "மன்னர் 8ஆம் டக்ளஸ்" ஆட்சி செஞ்சிட்டு இருந்த காலம் அது. சோழ நாட்டில இருந்து எங்க பாட்டனுக்கு ஒரு ஓலை வந்துச்சி. எங்க பாட்டன் விரிச்சி படிச்சா "தாயுள்ளம் கொண்ட 8ஆம் டக்ளஸ் மன்னா.. சோழ நாட்டு நெய்தல் படைக்கு ஆபத்து, எதிரி நாட்டுப்படை நம்ம நெய்தல் படையை நெய்யபுடைக்க அடித்து அனுப்புகிறார்கள். ஆபத்தில் இருக்கும் நம் படைக்கு ஆயுதங்கள் கொடுத்து உதவவும். நெய்தல் படை தளபதியை அனுப்பிவைக்கிறேன்."னு இருந்துச்சி.

ஓலைல இருந்த மாதிரி 3 நாள் கழிச்சு நெய்தல் படை தளபதி கோமாண்டி னு ஒருத்தன் வந்துருக்கான். எங்க பாட்டன் முதல் நாள் அவனுக்கு ஆமக்கறி, நண்டு, நத்த, திமிங்கலக்கறி னு போட்டு விருந்து வச்சிருக்காப்ல. கோமாண்டி சாப்பிட்டுட்டே இருக்கும் போது எங்க பாட்டனோட படைவீரன் என்ன சாப்புடுறான் னு எழுதி வச்சிட்டே இருந்தான். மறுநாள் எங்க பாட்டி நெய்தல் தளபதி கோமாண்டிக்கு இட்டிலி, சட்டினி, சாம்பார் வச்சி கொடுத்துருக்கு. தளபதி சாப்புட இட்டிலிய பிக்கும்போது ஒரு சிக்கன் லாலிபப் பீஸ்சு உள்ள இருந்துருக்கு. கோமாண்டி பாத்து மிரண்டுட்டான். "மன்னா.. இட்லிக்குள்ள எப்படி சிக்கன் வந்துச்சி..?"னு கேக்க, அதுக்கு எங்க பாட்டன் "டே.. சிக்கன் புடிச்சா சாப்புடு, இல்லனா ஓரமா ஒதுக்கி வச்சிட்டு வெறும் இட்டிலிய மட்டும் சாப்புடு "னு சொல்ல, ஆட்சிறியப்பட்டே சாப்ட்டான்.

அடுத்து நைட் டின்னருக்கு கோமாண்டிக்கு சப்பாத்தி சுட்டு கொடுத்துருக்காங்க. சினேகா ஆசிர்வாத் ஆட்டோ மாவுல குல்ஹா சப்பாத்தி செஞ்ச மாதிரி சப்பாத்தி பந்து மாதிரி உப்பி இருக்க.., சாப்புட உக்காந்த கோமாண்டி சப்பாத்தி மேல விரல வச்சி ஓட்டைய போட.. சப்பாத்திக்குள்ள இருந்து ரெண்டு பூனக்குட்டி வெளிய ஓடுது. கோமாண்டி மிரண்டுட்டான். "மன்னா... காலைல இட்லிக்குள்ள சிக்கன் லாலிப்பப் இருந்துச்சி, இப்போ என்னடானா சப்பாத்திக்குள்ள இருந்து ரெண்டு பூன ஓடுது..?"னு கேக்க, அதுக்கு எங்க பாட்டன் "டே.. அது எங்க உணவு வழக்கம், இத உங்க நாட்டுக்கு போனதும் எல்லோரட்டையும் சொல்லு"னு சொல்ல, வழக்கம் போல எங்க பாட்டனோட படைவீரன் என்ன சாப்புடுறான் னு நோட்ஸ் எடுத்துட்டு இருந்தான்.

"மன்னா.. இவர் எதுக்கு நான் சாப்புடுறத நோட்ஸ் எடுக்காரு..? நான் என்ன என்ன விரும்பி சாப்புடுறேன் னு தெரிஞ்சிக்கவா.. ?"னு கேக்க, "நீ புழுக்கைய கொடுத்தாலும் தின்ப.. நீ என்ன சாப்புடுற னு தெரிஞ்சிகிட்டு நான் என்னடா பண்ணப்போறேன். அது நீ சாப்பிட்ட சாப்பிட்டுக்கான பில்லு.. போகும் போது அக்கவுண்ட் செட்டில் பன்னிரு.. ஓசில சாப்புட இது ஒன்னும் சத்திரம் இல்லடா.."னு பாட்டன் சொல்லிஇருக்காரு.

அடுத்து சோழ நாட்டுக்கு வெப்பன் வாங்கி கொடுக்க எங்க பாட்டன் கோமாண்டிய கூட்டிட்டு வெப்பன் குடோன்க்கு போனதும் எங்க பாட்டன பாத்த வேலையாளு "வாங்க மன்னா.. நேத்து தான் புது ஐட்டம் நாளு பீஸ்சு இறங்கி இருக்கு.. சோழ நாட்டுக்கு என்ன வெப்பன் கொடுக்கலாம் மன்னா..?"னு கேக்க, அது எங்க பாட்டன் "Ak 47 ஒரு 50...., Pk 47 ஒரு 70...  "70 போதுமூலடா..?" னு கோமாண்டிகிட்ட கேக்க ",போதும் மன்னா.. Pk 47 என்ன மன்னா புதுசா இருக்கு.?",னு கேக்க "இது புது ஐட்டம்டா, ஏதன்ஸ்ல இருந்து எறக்குமதி பண்ணிருக்கேன். இந்தா சும்மா சுட்டு பாரு.."னு எங்க பாட்டன் கொடுக்க, கோமாண்டி சுட்டு பாத்துட்டு "மன்னா.. இந்த நாட்டுல pk 47 வெப்பன்ல சுட்ட மொத ஆளு நான்தான..?"னு கேக்க, "ஆமடா.. இந்த விசயத்த உங்க நாட்டுல போயி ஊர் ஊரா சொல்லு"னு பாட்டன் சொல்ல, கோமாண்டி தலை குனிஞ்சிட்டு "சரி மன்னா"னு சொன்னான்.

அடுத்து வெங்காய வெடி நாளு பாக்ஸ், தக்காளி வெடி 5 பாக்ஸ், கிழங்கு வெடி 10 பாக்ஸ் னு வாங்கி கொடுக்க, "என்ன மன்னா.. வெடிகுண்டு பேரெல்லாம் குழம்பு வைக்குற ஐட்டமா இருக்கு..?"னு கேக்க, "அது தமிழ் பேருடா.. எல்லாத்தையும் தமிழ்ல மாத்திட்டேன். நாம் தமிழண்டா ங்கிற உணர்வு எல்லோருக்கும் இருக்கணும்டா.. பிளம்ஸ் பழம் னு ஒரு வெடி இருக்கு உங்க நெய்தல் படைக்கு வாங்கிட்டு போறியா..?"னு 10 பாக்ஸ் பிளம்ஸ் வெடிய வாங்கி கொடுத்து வழியனுப்பி வச்சாரு.

அடுத்து கொஞ்ச நாள்ல எங்க பாட்டனுக்கு ஒரு ஆண் குழந்தை பொறந்துச்சி. அவர் பேர் தான் "மன்னர் 9ஆம் டக்ளஸ்". பொறக்கும் போதே நர்ஸ் விரல கடிச்சிபுட்டாப்ல. அவரோட மண்டியிடாத மானம் மறவர் குலத்துக்கே எடுத்துக்காட்டா இருந்துச்சி. எதுக்கும் மண்டி போடமாட்டாப்ல. படிக்கும் போது கூட தப்பா ஆன்ஸர் பண்ணி டீச்சர் மண்டிபோட சொன்னாக்கூடா, தண்டனையை மாத்தி கவட்டைக்குள்ள கையவுட்டு தவளை மாதிரி ஜம் பண்ணியே போறேன் டீச்சர்.. மண்டி மட்டும் போடமுடியாது டீச்சர் னு சொல்லுவாப்பல.

ஒரு சமயம் எங்க பாட்டன் மன்னர் 9ஆம் டக்ளஸ் 4ஆம் ராஜராஜ சோழன்கிட்ட குத்தகை பணம் வாங்க போகும் போது சோழ நாட்டில கடற்போர் நடந்துட்டு இருந்தது. நெய்தல் படை ரெம்ப அடிவாங்கிட்டு இருந்துச்சி. நாங்க Pk 47 வெப்பன் குடுத்தும்கூட எவனுக்கும் குறி பாத்து சுட தெரியல. எங்க பாட்டன் போனதும் எல்லாருக்கும் சுடுற பயிற்சி கொடுத்தாரு. கடற்போர்ல எதிரி நாட்டுகாரங்க நெய்தல் படை கப்பல எல்லாம் அடிச்சி புடிக்கிட்டு போயிட்டாங்க. எங்க பாட்டன் கப்பல்க்கு இப்ப என்ன பண்றது யோசிச்சாரு. தளபதி கோமாண்டிய கூப்பிட்டு "நீங்க எல்லாம் தூண்டி போட்டு ஆளுக்கு ஒரு ஆமைய புடிங்க.."னு கட்டளை போட, அதுக்கு கோமாண்டி "மன்னா.. ஆமக்கறி விருந்தா..? செமயா இருக்கும், படைவீரர்கள் எல்லாம் ஆம புடிக்கட்டும், நான் மசாலா ரெடி பன்றேன்.."னு சொல்ல,

கோவமான எங்க பாட்டன் கோமாண்டிக்கு போடனில ரெண்ட போட்டு "எவன்டா இந்த தின்னிக்கூ...ய நெய்தல் படைல சேத்தது.. போர் நடந்துட்டு இருக்கு தின்கிறத பத்தி பேசுறான்.."னு கத்த ஒரு வழியா Mr.ராஜராஜன் சமாதானப்படுத்திட்டாப்ல. அப்றம் ஆமைய புடிச்சி கறிய தனியா எடுத்து போட்டுட்டு ஆமா ஓட்ட கவுத்தி போட்டு போட் மாதிரி கடல்ல மிதக்க விட்டு ஏறி உக்காந்துட்டு எப்படி போர் செய்யனுமுன்னு கத்து கொடுத்தாரு. எங்க பாட்டன் ஒரு குண்டா சட்டி கெடைச்சாலே கவுத்தி போட்டு கடற்போர் செய்வாரு, ஆம ஓடுனா சும்மாவா விடுவாரு. ஆம ஓட்டுல போயி எதிரி படைகல ஓட ஓட அடிச்சி விரட்டுனாரு. 

ஒரு சமயம் எங்க பாட்டன் நெய்தல் படைக்கு போர் பயிற்சி கொடுக்கும் போது 40000 டன் அரிசி கப்பல் பாடர்ல ரெம்ப நேரமா நிக்க, தளபதி கோமாண்டி "மன்னா.. இது ஆஸ்திரேலியா அரிசி கப்பல்.. நாங்க வேணா கப்பல சுட்டு பயிற்சி எடுக்கட்டுமா.?"னு கேக்க, அதுக்கு எங்க பாட்டன் "நான் எவன் கோவனத்துல கை வச்சாலும் வப்பனே தவிற அடுத்தவன் தீவனத்தில கை வைக்கமாட்டேன்"னு சொல்லிட்டாப்ல. ராஜராஜன் இந்த செயல பாராட்டி பரிசா எங்க பாட்டன் நாடு திரும்பும் போது 48 கிலோ ஆமக்கறிய கொடுத்து அனுப்புனாங்க.

ராஜராஜன் சோழன் வரலாறு பேசுற யாரும் எங்க பாட்டன் வரலாற மறந்தும் கூட பேசமாடிக்குறாங்க. வரலாறு நெடுகிலும் இது திட்டமிட்டே மறைக்கடிக்கப்படுகிறது. இதுக்கு காரணம் திராவிடம் னு போலி கதைகளை சொல்லி திராவிட மக்களை ஏமாற்றி அரசியல் செய்யும் திராவிட கட்சிகள் தான். 

எங்க பாட்டன் வரலாறு இல்லாம தமிழ்நாட்டில எந்த நிகழ்வும் நடக்கல. எங்க பரம்பரையின் முதல் பாட்டனே தமிழர்களின் முப்பாட்டனான முருகனோட வீட்டுக்கு மூணு வீடு தள்ளி வாழ்ந்த மாவீரன் முதலாம் டக்லஸ். முருகனுக்கு வேட்டையாட கத்துக்கொடுத்துவரு. வேல்கம்பையும் மயிலயும் வாடகைக்கு விட்டு வாழ்ந்து வந்தார். உங்க முப்பாட்டன் முருகனே எங்க பாட்டன்கிட்ட வேலும், மயிலும் வாடகைக்கு வாங்கிட்டு போயித்தான் வேட்டையாடி கஞ்சி குடிச்சான். 

வள்ளுவர் வரலாறு தெரியாம போனதால எங்க பாட்டன் "மன்னர் 2ஆம் டக்ளஸ்" வரலாறும் தெரியாம போச்சி. ஆங்கிலேயரை எதிர்த்து முதல் முதலில் விடுதலை போருக்கு வித்திட்ட எங்க பாட்டன் "மாமன்னர் 44ஆம் டக்ளஸ்" மன்னர எத்தனை பேருக்கு தெரியும்..?  ஆங்கிலேயரை என்னோட பாட்டன் முப்பதாயிரம் டைனோசர் படைகள வச்சி ஓட ஓட விரட்டுன வரலாறு எங்கே..?

விடுதலை போரில் கலந்தகொண்டதாக சொல்லப்படுகிற தீரன் சின்னிமலைக்கு போர் செய்ய 50 டைனோசர்களை யார் கொடுத்தது..? விடுதலைப் போரில் கண்டிப்பா கலந்துக்குவேன் என்று புழுதியில் புரண்டு அழுத புலித்தேவனுக்கு அறிவுரை கூறியது யார்..? கிளர்ச்சியின் விளைவால் மறைந்து வாழ்ந்த மருது சகோதரர்களுக்கு மாத்து துணி கொடுத்து உதவியது யார்..? அழகுமுத்து கோன் குழந்தையா இருக்கும்போது கோன் ஐஸ் வாங்கி கொடுத்து கொஞ்சியது யார்..? பண்டார வன்னியனின் பங்காளி சண்டையை தீர்த்து வைத்தது யார்..? வெள்ளயன் கண்ணில் படமாலிருக்க கட்டபொம்மன் தலைமறைவாவதிற்கு  ஓடியதில் கவட்டை அரித்து கயத்தாரில் ஒதிங்கியவனுக்கு கஜா தைலம் அனுப்பியது யார்..? ஓடுவதுக்கு எதுவா ரன்னிங் சூ வாங்கி கொடுத்தது யார்..? அடிமை வேலை என்றால் இப்பிடித்தான் விசுவாசமாக செய்யவேண்டும் என்று எடுத்துக்காட்டாய் விளங்கிய ஒண்டிவீரன், மொண்டிவீரன், நோண்டிவீரன்க்கெல்லாம் ஆயுதம் குடுத்து உதவியது யார்..?

என் பாட்டன் வரலாறு தெரியக்கூடாது என்று தெளிவாய் செயல்படுகிறன திராவிட அரசியல் கட்சிகள். இன்னும் எத்தனை காலம் இந்த அவலம்..? கூடிய விரைவிலேயே "நாங்க தமிழ்காரங்க" கட்சி ஆட்சி அமைக்கும். அப்போது ஒவ்வொரு ஊரிலயும் எங்க பாட்டன்க்கு மரியாதை செய்யும் விதமாக மணிமண்டபம் அமைப்போம் என்று இங்க பதிவு செய்ய நான் கடமைப்பட்டுருக்கிறேன்.

அவர்கள் ஆட்சியிலும் அமைக்காவிட்டால் எனக்கும் வரலாறு தெரியும், ஆமை தெரியும், ஆமக்கறி தெரியும், இடலி கதை தெரியும், ஓநாயும் ஆட்டுக்குட்டியும் கதை தெரியும், அதை மக்கள் மத்தியில் பேசி நானும் "நாம் பச்சை தமிழர், ஊதா தமிழர், வெள்ளை தமிழர், மாநிற தமிழர் என்றோ அல்லது எங்கள் டார்ச் லைட் தலைவனின் ஆசியுடன் நாம் பிராமணர் என்றோ புதிதாக கட்சிஆரம்பிப்பேன் என்று இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.

எவ்வளவு காலம்.. எவ்வளவு காலம் ஏமாறுவது..? இப்படித்தான் ஒரவுகளே.. நம் தமிழ் சமுதாயம் தன் உணர்விழந்து, மானம் இழந்து, மயிரிழந்து., என்னோட பாட்டன் வரலாறு தெரியாம தற்குரிபிள்ளைகளாய் திரிய போகிறார்கள்.. எவ்வளவு பெரிய அவமானம்...?

செல்லாத ஆதாரங்கள் - சங்கர் ஆணவ படுகொலை வழக்கில் விடுதலையான சின்னசாமியும் - நம் தமிழ் சமூக அமைப்பும்..

சாதி விட்டு சாதி லவ் பண்ண கூடாது, அதுதானே இந்த இந்திய நீதிமன்றத்தோட தீர்ப்பு..? இந்த போலீஸ் அழிச்சாட்டியத்துல நீதி துறை தப்பிச்சிருக்கு னு சொல்லலாம். சங்கர் சாதி ஆணவக் கொலை தொடர்பான வழக்கை திருப்பூர் செசன்ஸ் நீதிமன்றம் விசாரித்து 2017-ம் ஆண்டு டிசம்பர் 12ல தீர்ப்பு வழங்கிருக்கு. 

அதுல கவுசல்யாவின் தந்தை சின்னசாமிக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டார் நீதிபதி அலமேலு, இந்தப் படுகொலையில் ஈடுபட்ட கூலிப்படையினரான ஜெகதீசன், மணிகண்டன், செல்வகுமார், கலா தமிழ்வாணன், மதன் ஆகிய அஞ்சி பேருக்கும் தூக்குத் தண்டனை னு தீர்ப்பளித்தார்.

அப்பறம் குற்றவாளிகள் தரப்பல இருந்து உயர்நீதிமன்றத்தில மேல்முறையீடு செஞ்சி இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியான சத்யநாராயணன் மற்றும் நிர்மல் குமார் ங்கிற பார்ப்பன புலித்திக சின்னசாமிக்கும் இந்தக் கொலைக்குமிடையிலான எந்த தொடர்பும் இல்லைனு இந்தப் படுகொலைக்கு சூத்திரதாரியான கவுசல்யா அப்பன் சின்னச்சாமிய விடுதலை செஞ்சதுமில்லாம ஓடி ஓடி சாதி வெறியோட வெட்டுன  கூலிப்படைக் கும்பலுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனைல இருந்து ஆயுள் தண்டனையா குறைச்சிருக்கு. இந்த வெட்டுல தேவர் சாதிவெறி புடிச்ச தாயொழிகளும் 2 வருசத்துல நன்னடத்தையின் காரணமாக னு எப்பிடியும் வெளிய வந்துருவானுக.

போலீசு தரப்பில் ஆதாரமாக இருந்த சி.சி.டி.வி-யின் வீடியோ இருக்கு. உலகமே பார்த்த வீடியோ.

என்னையும், கணவர் சங்கர் மற்றும் அவரது குடும்பத்தாரையும் எங்க அப்பன் சின்னசாமி, தாய் அன்னலெட்சுமி மற்றும் தாய்மாமன் பாண்டித்துரை ஆகியோர் கொலை செய்யப் போறதா தொடர்ந்து மிரட்டினாங்க னு நீதிபதி முன்னாடி கொலையில் நேரடியாக  பாதிக்கப்பட்ட கவுசல்யா சாட்சி சொல்லியிருக்கு.

சின்னசாமியும், ஜெகதீசனும் சேர்ந்து சங்கரைக் கொலை செய்யவும், தடுக்க வந்தா கவுசல்யாவையும் போட்டு தள்ள சொல்லி அனுப்புனாங்க னு கொலை செஞ்சவங்க ஒத்துகிட்டாங்க.

கொலை செய்ய கூலிப் படைக்கு முதல்கட்டமாக ரூ. 50,000 ரூபாய பேங்குல இருந்து எடுத்துக் கொடுத்தது சின்னச்சாமி.  வங்கிக் கணக்கிலிருந்து எடுக்கப்பட்ட ரூ.50,000 பணத்தின் வரிசை எண்களும் கூலிப்படையினரிடமிருந்து கைப்பற்றப்பட்ட பணத்தின் வரிசை எண்களும் ஒரே எண்கள்தான் னு ஆதாரப்பூர்வமாக போலீசு நீதிமன்றத்தில் முன் வைச்சது.  கூலிப்படையைச் சேர்ந்த ஒருவன் சின்னசாமி தனக்கு பணம் கொடுத்ததாக ஒப்புதல் வாக்குமூலமே கொடுத்திருக்கிறான். 

சின்னசாமியின் தொலைபேசிக்கு கூலிப்படையினர் அஞ்சி பேரும் பேசியிருக்குற அந்த ஆடியோ ஆதாரத்தையும் போலீசு நீதிமன்றல முன்வைச்சது.

சின்னசாமி ஏற்கெனவே கவுசல்யாவையும் சங்கரையும் பிரிக்க முயற்சி செஞ்சிருக்குறான். சங்கரையும் கவுசல்யாவையும் கொலை செஞ்சிருவேன் னு கவுசல்யாட்டையே சொல்லியிருக்கிறான்.

என்னை எங்க குடும்பத்தார் கடத்தியதாக கவுசல்யா சங்கர் படுகொலைக்கு முன்னாடி காவல் நிலையத்தில புகார் குடுத்த FIR இருக்கு.

என்னோட மனைவியை மீட்டுத் தாங்க னு சங்கரும் ஏற்கெனவே காவல் நிலையத்தில புகார் பதிவு செஞ்சிருந்தான். அந்த காபியும் இருக்கு. 

சங்கர் கொலை வழக்கை முழுமையா விசாரித்த டி.எஸ்.பி விவேகானந்தன் இந்த வழக்கைப் பற்றி “சின்னசாமியும் அவரது குடும்பத்தினரும் சங்கர் குடும்பத்தினரை பலமுறை மிரட்டியிருக்கின்றனர். அவர்கள் இக்கொலையின் மூலம் இந்தச் சமூகத்திற்கு ஒரு செய்தியைச் சொல்ல முயற்சித்திருக்கிறார்கள்” னு நீதிமன்றல விசாரணை அறிக்கை சமர்ப்பிச்சார்.

இவ்வளவு சாட்சியங்கள் இருந்தும் தமிழகமே சாதி ஆணவப் படுகொலையாகப் பார்த்த உடுமலை சங்கர் வழக்கை சாதாரண கொலை வழக்கா மாத்தி கொலைக்கு காரணமான சாதிவெறியர்கள விடுதலை செஞ்சிருக்கு உயர்நீதிமன்றம்.

இது நீதிமன்றம் இல்ல மனுநீதியோட சனாதன தர்மத்தை காப்பாத்தும் காவி மன்றம். இந்த சமூகத்தில இருக்குற சாதி படுநிலைய பாதுக்காக்க தான் நீதி துறை செயல்படுது நமக்கு நல்லா தெரிஞ்ச விஷயம் தான். ஆனால் இந்த கொலை வழக்க இந்த சமுதாயம் எப்பிடி பாக்குது னு நமக்கு தெரியணும்.

சின்னசாமி விடுதலை ஆனதுமே சாதிவெறி அமைப்பு தலைவர்கள் இது நல்ல தீர்ப்பு னு கொண்டாடுறாங்க, சின்னசாமிக்கு மாலை போட்டு மரியாதை செய்யுறாங்க. இந்த நாயி என்னமோ தேச நலனுக்காக ஜெயிலுக்கு போன மாதிரி மத்த சாதி அமைப்பு வெறியர்களும் பாராட்டுறாங்க.

நம்ம சமுதாய மக்கள் "அந்த பொன்னுதான் வேற ஒருத்தன கல்யாணம் பண்ணிருச்சில, அப்றம் என்ன..? அவுகவுங்க குடும்பத்த பாருங்க"னு சொல்றாங்க.

அப்பன் ஆத்தாள உள்ள தள்ள அலையுது னு பேசுறாங்க. அப்பனா ஆத்தாவா இருந்தாலும் சாதிவெறி புடிச்சி ஆணவ படுகொலை செஞ்ச நாய்க னு சொல்ல மாட்டாங்க. சாதி அவ்வளவு முக்கியம். எப்பிடி சொல்லியாவது சாதிய காப்பாத்த முட்டு கொடுக்கணும்.

முற்போக்கு பேசுற முண்டைக "அவ வேற புருஷனோட இருக்கா, சங்கர் தான் தேவையில்லாம செத்துருக்கான்"னு பேசுறாங்க.

இந்த தேவிடியா மகன்களுக்கு எல்லாம் ஒரு பொண்ணு மறுமணம் பண்ண கூடாது, காலம் பூராம் வெள்ளை சேலை கட்டிக்கிட்டு பாரதி கண்ட புதுமை பெண் னு சாகுற வரைக்கும் வழக்க நடத்தனும் அப்பதான் கவுசல்யா உத்தமி, பத்தினி. மறுமணம் பண்ணிட்டா தேவிடியா.

இப்படி நாயிக சாதி மறுப்பு திருமணத்துக்கு ஆதரவு னு சொல்லும், மறுமணம் பண்ணுனா தப்பு சொல்லி பார்ப்பன சனாதன தர்மத்தை கட்டிகாக்க செயல்படும். பகுத்தறிவு அமைப்புல முதற்கொண்டு இப்படி நாயிக ரெம்ப சுத்துது.

நாடக காதல் னு கொஞ்ச பேரு சொல்லிட்டு திரியுறாங்க. வெட்டுப்பட்டு ஆணவ படுகொலை நடந்தாலும் இந்த முண்டைகளுக்கு நாடக காதலாதான் தெரியும். அவ்வளவு சாதி பற்று.

இப்படித்தான் இந்த சமுதாய அமைப்பும் குடும்ப அமைப்பும் இருக்கு. அத கட்டிக்காக்க தான் நீதிமன்றம் சின்னசாமி நிரபராதி னு விடுதலை பன்னிருக்கு. மேல சாதி பயபுள்ளைக குடும்ப அமைப்ப பார்க்கவேண்டாம், சாதி ஒழியணுமுன்னு கத்திட்டு திரியுற தாழ்த்தப்பட்ட குடும்ப சமூக அமைப்ப பாருங்க. இவனுகளுக்குள்ளயே பொண்ணு கொடுத்து கட்டிக்க மாட்டான். பள்ளர் பறையர்க்கு கொடுக்கமாட்டான். பறையர் சக்கிலியனுக்கு கொடுக்க மாட்டான். சங்கிலியன் புதிரை வண்னார், காட்டுநாய்க்கனுக்கு கொடுக்க மாட்டான்.

இன்னும் சொல்லபோனா ஒரே சாதிக்குள்ளேயே இருக்குற அதே சாதி காரனுக்கு கொடுக்க மாட்டான். கேட்டா அவிங்க வேற கிளை னு ஓழ் விடுவான். பறையர்ல இன்ன பறையருக்கு தான் பொண்ணு கொடுக்கணும் குடும்ப அமைப்பு இருக்கு. பள்ளர்ல அம்மா பள்ளன்,  ஆத்தா பள்ளன் னு குடும்ப பிரிவு இருக்கு. அம்மால இருந்து ஆத்தாவுக்கு சம்பந்தம் வச்சுக்க கூடாது. சக்கிலியனுல.. தெலுங்கு சக்கிலியன், கன்னட சக்கலியன் னு ரெண்டு பிரிவு இருக்கு. ரெண்டும்சேந்துற கூடாது. புதிரை வண்ணானும், காட்டுநாய்கனும் சேர கூடாது. இப்படி சொந்த சாதியிலே கிளை னு வச்சி பிரிச்சி பொண்ணு கொடுக்க மறுக்கும் சமுதாயம் இருக்கும் போது இந்த பார்ப்பன சனாதன தர்மத்தை, படிநிலைய பாதுக்காக்க நீதிமன்றம் இந்த வழக்குல இருந்து சின்னசாமிய விடுதலை தானே செய்யும்.

இந்த குடும்ப கிளை அமைப்பு அழியாத வரை எப்பிடி சாதி அமைப்பு ஒழியும். சாதி ஒழியணுமுன்னு யாருட்ட கேக்குறீங்க..? அது நம்ம குடும்பத்துல தானே இருக்கு. குடும்ப கிளை அமைப்பு உடைஞ்சதுனா சாதி அமைப்பு உடையும், சாதி அமைப்பு உடைஞ்சதுனா பார்ப்பான் வகுத்து வைச்ச படிநிலை அமைப்பு ஒடையும். அப்படி எல்லாம் நடத்துற கூடாது னா சாதி வெறி ஆணவ கொலைகள் நடக்கணும். சாதிவெறி கொலைகளுக்கு எப்பவுமே நீதிமன்றத்தோட ஆதரவு உண்டு.

தேவிகா என்ற 17 வயசு சிறுமி பாலியல் வன்புணர்வு செய்து படுகொலை - பாட்டிலால் குத்தி கிளிக்கப்பட்ட உடல் - பெண்கள் வர்க்கமாக எழுந்து உடலரசியல் பேசாமல் இதற்கு தீர்வு இல்லை.

தெலுங்கானா கொத்தகுடம் பகுதில் 17 வயது பழங்குடியின  சிறுமி தேவிகா பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். பாலியல் வன்புணர்வில் ஈடுபட்ட மிருங்கங்கள் சிறுமியின் உடல் நிர்வாணமாக ரயிவே டிராக்கில் வீசியுள்ளனர். வன்புணர்வுக்கு ஆளாகப்பட்ட சிறுமி பழங்குடி இனத்தை சேர்ந்ததால் இந்த பாலியல் படுகொலையை எந்த மீடியாவும் வெளியில் சொல்லவில்லை என்பது வேதனை.

என்டர் முடித்துவிட்டு கல்லூரி படிப்புக்காக காத்திருந்த சிறுமி இந்த மாதம் 22 அன்று இரவு தூங்கும் போது காணாமல் போயுள்ளார். அவளை தேடிய அந்த சிறுமியின் அம்மா போலீசில் புகார் கூறியுள்ளார். மறுநாள் 23 அன்று கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து சிறுமியின் உடல் மற்றும் பெண்ணுறுப்பு பாட்டிலால் கீரப்பட்டும், கிழிக்கப்பட்டும் படுகொலை செய்யப்பட்டு ரயில்வே டிராக்கில் நிறுவாணமாக கிடைப்பதை பாத்தவர்கள் தெரிவித்துள்ளனர். சிறுமியை சடலமாக பார்த்து கதறி அழும் தாய்க்கு இங்க என்ன நீதி கிடைத்திட போகுது. ஆயிரத்துக்கு மேற்பட்ட பாலியல் குற்ற வழக்குகள் நீதிபதிகள் மீதும், வழக்கறிஞர் மீதும் நிலுவையில் உள்ள நிலையில் இந்த ஆணாதிக்க சமூகம் என்ன நீதி வழங்கிற போகுது.

இந்த கோர பாலியல் படுகொலை 23ஆம் தேதி நடந்தும், எந்த நியூஸ் சேனாலும், பத்திரிக்கைகளும் செய்தியை வெளியிட மறுத்துள்ளது. செய்தியே வெளிய தெரியாத போது காவல்துறை பணி அங்கு எந்த லட்சணத்தில் இருக்கும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள். உடற்கூறு ஆய்வில் கூட்டு பலாத்காரம் செய்து கொல்லப்பட்டதாக அறிக்கை வந்துள்ளது. ஐந்து நாட்களாக வெளிவராத சம்பவம் சமூக வலைத்தளங்கள் மூலமும், Youtube மூலமும் #justicefordevika என்ற கேஷ்டேக் வெளிவந்து பாலியல் வன்புணர்வு படுகொலைக்கு நீதி கேட்டுகிறார்கள்.

குற்றம் என தெரிந்தும் ஒவ்வொரு நீதியை நாம் போராடியே தான் பெறவேண்டியுள்ளது. வழக்கம் போல "பொண்ணுக்கு நடுராதிரியில என்ன வேலை" என்று கலாச்சார காவளவர் கத்திக்கொண்டிருக்கிறார்கள். பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கி கொல்லப்பட்ட சிறுமி ஒரு பழங்குடி ST வகுப்பை சார்ந்த சிறுமி என்பதால் அரசே இதை மூடி மறைக்க பார்க்கிறது. நிர்பயா பாலியல் படுகொலைக்கு கொதித்தெழுந்த எந்த உயர் வகுப்பு மனிதர்களும் இந்த பழங்குடி சிறுமிக்கு நீதி வேண்டும் என்று கொதித்தெழவில்லை.

அய்யர் பொண்ணுங்கள் என்றால் மனிதாபிமானம் உடனே வரும் மத்த வேற்று வகுப்பு மக்கள் என்றால் ஒவ்வொரு நீதியும் போராடித்தான் பெறவேண்டும். பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை குற்றங்கள் இந்தியா முழுவதும் கொடூரமாக நடந்தேறி வருகிறது. 

தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய, அரியலூர் நந்தினி என்ற 15 வயது சிறுமியை இந்து முன்னணியைச் சேர்ந்த பொறுக்கி, பாலியல் வன்கொடுமை செய்து அவளின் பிறப்புறுப்பை சிதைத்து, அவளின் வயிற்றிலிருந்த சிசுவை வெளியே எடுத்து எரித்து கொலை செய்தார். 

ஆசிஃபா இந்த பெயரை யாராலும் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது. ரோஜா போன்ற அந்த குழந்தையை பி.ஜே.பி.யைச் சேர்ந்த கோவில் பூசாரி, 17 வயது சிறுவன், அந்த குழந்தையைத்  தேடிச் சென்ற காவல் துறை அதிகாரி என எட்டு பேர் சேர்ந்த கும்பல் மயக்க மருந்து கொடுத்து கோயில் கருவறையிலே வைத்து பாலியல் பலாத்காரம் செய்து குற்றுயிரும், கொலையுயிருமாக இருந்த அக்குழந்தையைக் கல்லை போட்டு படுகொலை செய்து காட்டில் வீசிவிட்டார்கள். நாடே ஆஷிபா படுகொலைக்கு நீதிகேட்டு வீதியில் இறங்கி போராடும் போது, BJP கட்சி குற்றவாளிகளை காப்பாற்ற போராட்டம் செய்தது.

இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள், அயனாவரத்தில் 11 வயது சிறுமியை பல பேர் கும்பல் ஏழு மாதமாக பாலியல் வல்லுறவு செய்துள்ளனர். 

இத்தனைக்கும் பெண்களுக்கு, குழந்தைகளுக்கான பாதுகாப்பு சட்டங்கள் அதிகம் உள்ள இந்த நாட்டில் தான் பாலியல் வன்முறைகள், படுகொலைகள் அதிகமா நடக்கின்றன. பிறந்த குழந்தையா, பள்ளி படிக்கும் சிறுமியா, வயது வந்த குமரியா, மனைவியா, குழந்தை பெற்ற தாயா, கூன் விழுந்த பாட்டியா என்ற எந்த வயது வித்தியாசமில்லாமல், பெண்கள் மீது நடத்தப்படும்  கொடூரங்களால்  பெண்கள் எப்போதும் ‘தான் ஒரு பெண்’ என்கிற எச்சரிக்கை உணர்வோடு பள்ளி, கல்லூரி, வேலை பார்க்கும் இடங்கள், பேருந்து, ரயில் என எங்கு சென்றாலும் பயத்துடனே போய் வருகின்றனர். இந்த அச்சம் அவர்களின் சொந்த வீட்டிலும் பின்தொடர்கிறது என்பது கொடூரம்.

இப்படி அச்சத்தோடும், பயத்தோடும் பெண்கள் வாழவே தகுதியற்ற நாட்டில் தான் பாதிக்கப்பட்ட பெண்ணையே குற்றவாளியாக்கி, உடை சரியில்லை, இரவு நேரத்தில் அங்கு என்ன வேலை, என அவள் நடத்தையின் மீதே சந்தேகப்பட்டு குற்றம் சாட்டுவது இச்சமூகத்தின் பொதுப்புத்தியாக உள்ளது. இதற்குக் காரணம்  பார்ப்பனியப் பண்பாடும், அது ஊட்டி வளர்க்கும் ஆணாதிக்கமும் தானே தவிற வேற ஏதுவுமில்லை. இந்த மதம் சார்ந்த ஆணாதிக்க மனநிலை தான் பெண் உறுப்புகளை அனுபவிக்க கூடிய பொருளாக மட்டும் பார்க்கும் மனநிலையை ஒரு மனிதனுக்கு ஏற்படுத்துகிறது. 

எந்த ஒரு மிருகமும் கூட்டு பாலியல் வல்லுறவில் ஈடுபடுவதில்லை. அவற்றை விடவும் மோசமானவனாக மனிதன் தாழ்ந்து போகக் காரணம் என்ன? 20 வயது கூட நிரம்பாத இளைஞனும், 80 வயதைத் தாண்டிய கிழவனும் பலாத்காரத்தில் ஈடுபடுகின்றனர். இவர்களை மனிதத்தன்மை அற்றவர்களாக மாற்றியது எது? இந்தக் கேள்விகளுக்கு பதில் தேடாமல், குழந்தைகளையும், பெற்றோர்களையும் எச்சரிக்கையாக இருக்கச் சொல்லி விளம்பரம் போடுவது பெரிய அயோக்கியத்தனம்.

முற்போக்கு, பகுத்தறிவு, பெண்ணியம் பேசும் பெண்கள் சிலர் அதிமேதாவி தனமாக "பெண்கள் என்றால் பாலியல் சுரண்டல், வல்லுறவு, பாலியல் சுதந்திரம் னு இதை மட்டும்தான் பேசனுமா..? பெண்கள் பொது அரசியல் பேசக்கூடாதா..?" என்று கேட்பார்கள். இந்தியா பெண்கள் பாதுகாப்பில் மிக மோசமான பட்டியலில் உள்ள நாடு. இங்கு பெண்கள் உடலியல், உடல் அரசியல் பேசுவது கட்டாயம் அது கடமையும் கூட. இதையெல்லாம் பேசாமல் நீங்கள் என்னதான் முற்போக்கு அரசியல் பேசினாலும் அது BJP பெண் வேட்பாளர் பேசும் அரசியல் மாதிரி தான் இருக்கும். சொல்றதுக்கு ஒன்னுமில்ல.

கோவிலுக்குள் வைத்து வல்லுறவு செய்யும் இந்துமத வெறியர்கள், பாவமன்னிப்பு கேட்கச் செல்லும் பெண்ணைச் சீரழிக்கும் பாதிரியார்கள், ஒடுக்கப்பட்ட பெண்களைச் சூறையாடும் ஆதிக்கச் சாதிவெறிக் கும்பல் என ஆணாதிக்க, காமவெறி நிரம்பி வழியும் மூளைகளைத்தான் சாதி, மதங்கள் உருவாக்கி வருகின்றன. இந்த சிந்தனைதான் பெண்களை ரத்தமும் சதையும் கொண்ட எல்லா உணர்வுகள் உள்ள சக மனுசியாக மதிக்காமல், பெண் என்றாலே அனுபவிக்கக் கூடியவள் என்ற மனநிலையை உருவாக்குறது.

பெண்களுக்கு என்று மதத்தால், சாதிய கட்டமைப்பால் தனியாக போதிக்கப்படும் ஒழுக்கம், கலாச்சாரம், பெருமை, புனிதம், மயிரு, மட்ட என்கிற இதையெல்லாம் உடைச்சேரிந்து வர்க்கமாக இணைந்து உடல் அரசியலை பேசாத வரை தேவிகா போன்று இன்னும் பல பாலியல் வன்புணர்வு படுகொலைகள் நடந்துகொண்டே தான் இருக்கும்.

#Justicefordevika

Douglas Muthukumar

தாலி என்பது பெண்களுக்கு தேவையில்லாத ஆணி - தாலி பற்றி பேசினால் ஆண்களுக்கே அதிக ஆத்திரம் வருவதேன்..?

இதெல்லாம் புனிதம், பெண்மைக்குரியவை னு இந்த சமுதாயம் பெண்களுக்கு மட்டும் ஸ்பெஷலா வைச்சிருக்கும் போதே ஒவ்வொரு பெண்களும் உஷாரா அத சந்தேகப்படனும், "ஏண்டா.. எங்களுக்கு மட்டும் ஸ்பெஷல்..?"னு கேள்வி கேக்கணும். அப்பிடி ஸ்பெஷல் ஐட்டத்தில ஒரு ஐட்டம் தான் தாலி. தாலி தேவையானு பொண்ணுங்கட்ட கேக்கும் போது ஆண்களுக்கு எதுக்கு கோவம் வருது? ஏன்னா அது பெண்களுக்கும் ஆண்களுக்கும் சமமான குறியீடு இல்ல, பெண்களை அடிமையாக்க போடப்பட்ட அடிமை சின்னம்.

ஆணாதிக்க சமுதாயம் தாலி ங்கிறத புனிதம்னு சொல்லி, தொடர்ச்சியாகப் போதிக்கப்பட்டு வருவதால சமூகத்தில் பலரும் ‘தொட்டுத் தாலிகட்டிய புருஷனையே எதிர்த்துப் பேசலாமா? என்பதைப் போன்ற அடிமைச் சிந்தனைகளை தான் பரப்பி வராங்க. ஆண்களை எதித்து பேசுனா எப்பிடி? பெண்கள் கலாச்சாரத்த காப்பாத்தனும், அடங்கி நடந்துகனும்.

தாலியில் குங்கும் வைத்து வழிபட்டால் புருஷன் நீடூழி வாழ்வான் னு சொல்லுவாங்க, சுமங்கலி பூஜை நடத்த சொல்லுவாங்க, இதுதான்  நம்ம கலாச்சாரம் னு சொல்லுவாங்க. இந்த சமுதாயத்தில மனைவி நீடூழி வாழ எந்த பூசையும் ஆண்கள் செய்ய தேவையில்லை. 

தாலி ங்கிறது பெண்களின் உயிர். கணவர் மீது பெண்கள் வைத்திருக்கும் நம்பிக்கை, அடையாளம் னு கிளாஸ் எடுப்பாங்க. தாலி இல்லாம வாழ்றவங்க கணவனுக்கு நம்பிக்கையோட வாழ முடியாது ங்கிற தான் இவுங்க வாதம். பெண்களுக்கு தாலிதான் ஒழுக்கம், அப்பிடி ஒரு ஒழுக்கம் ஆண்களுக்கு இல்லயா னு கேக்க கூடாது.

தாலிதான் பொண்ணுங்களுக்கு வேலி. தாலி போடலானா பொண்ணுங்கள மேஞ்சிருவாங்களா..? இதுதான் இந்த சமூகம்.

ஆயிரம் பேர் மத்தியில மந்திரம் சொல்லி கட்டுற தாலிக்கு எப்படி அர்த்தம் இல்லாம போகும் னு கிளாஸ் எடுப்பாங்க. அது என்ன அர்த்தம்? மந்திரத்திற்கு என்ன அர்த்தம் னு கேக்க கூடாது. ஏன்னா தாலி புனிதம் அவளதான் சொல்லுவோம்.

பெண்களுக்கு தாலி என்பது மந்திர சக்தி மிக்கது. கழற்றினால் புருசனுக்கு சிரமம் ஏற்படும். ஏன்னா தாலி புனிதம். என்ன மந்திர சக்தி னு கேக்க கூடாது.

தாலி கட்டியிருக்கும் பெண்களை சமுதாயத்தில் ஆண்கள் மரியாதையாக பார்ப்பார்கள். கல்யாணம் ஆகலனா பிகரு, ஆச்சினா ஆண்டி, ஆண்டி செம, ஆண்டிதான் ரெம்ப புடிக்கும். இதுதான் மரியாதை.

தாலியால ஏதாவது பயன் இருக்கா, பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கான்னு கேட்டா இல்லைன்னுதான் சொல்லுவாங்க. தாலி போட்டிருக்கும் பெண்களை மட்டும் பொறுக்கிகள் விட்டிருவாங்களா..? அண்ணன் னு கையெடுத்து கும்புட்டாலே பாலியல் வன்புணர்வு பண்ற கூட்டம்.

பொதுவா  பெண்கள்கிட்ட கேட்டா தாலியால் விசேசமான பாதுகாப்பு இல்லனு தான் சொல்லுவாங்க. பாதிக்கு மேற்பட்ட பெண்கள் தாலி அணிவது அவுங்கவுங்க விருப்பம் சார்ந்தது, கட்டாயப்படுத்த யாருக்கும் உரிமையில்லனு சொல்லுவாங்க. சில பெண்கள் தாலி தேவையில்ல, தாலி மாட்டிதான் ஒழுக்கத்த நிறுப்பிக்கணும் னு அவசியம் இல்லன்னு சொல்லுவாங்க.

தாலி புனிதமா, பண்பாடா, மரபா, இது தேவையா கேட்டா பாதிக்கும் மேல குழப்பமாதான் பதில் சொல்லுவாங்க. வேறு வழியில்ல அத ஏத்துகிட்டு தான் ஆகணும் னு அப்பாவியா சொல்லுவாங்க. ஆகமொத்தம் தாலிங்கறது பெண்களை தனக்கு உறிய பொருளா ஆண்கள் அடிமைப்படுத்தவும், புருஷன் செத்ததும் தாலிய அறுத்து முண்டச்சி னு பெண்களை இழிவுபடுத்தவும்தான். இதில என்ன புனிதம் கண்டுட்டாங்க னு தெரியல.

தாலி பத்தி பேசினாலே "தாலியின் புனிதம் தெரியுமானு செம்ப தூக்கிட்டு வந்துருவாங்க. இவனுங்க சொல்ற புனிதம், மகத்துவம் என்னன்னா..? "மாங்கல்யத்தில் நான் போடும் முதல் முடிச்சி நீ தெய்வத்திற்கும் மனசாட்சிக்கும் கட்டுப்பட்டவள் என்பதை காட்டட்டும். இரண்டாவது முடிச்சி குலபெருமையை நீ பாதுகாப்பாய் என்பதை காட்டட்டும் மூன்றாவது முடிச்சி குலவாரிசுகளை முன்னின்று காப்பவள் நீயென்று காட்டட்டும்"னு அடிமைத்தனத்தை தான் இவ்வளவு பவ்வியமா விளக்கம் கொடுப்பாங்க. ஆண்களுக்கு இந்த மாதிரி கட்டுப்பாடுகள் ஏதும் கிடையாது.

சில ஆன்மிக நாயிக தாலிக்கு சாஸ்திர விளக்கம் கொடுக்கும் "மாங்கல்யம் என்பது புனிதம், ஒன்பது தாத்பரியம் கொண்டது. தாலி கட்டுவது பெண்கள் தூய்மை, தன்னடக்கம், தொண்டு, பணிவு, தெய்வீக நோக்கம், உத்தம குணம், நம்பிக்கை, புரிந்து நடந்துகொள்ளுதல், மேன்மை என ஒன்பது தாத்பரியங்களும் கொண்டு ஒழுக்கம் தவறாமல் நடப்பதே ஆகும்"னு எல்லாம் பெண்களை எப்பிடி எப்படி அடிக்கி ஒடுக்கி வைக்கணுமோ அதுக்கு ஏத்த மாதிரியே தாலியின் மகத்துவத்த விளக்குவானுக. இதுல என்ன மகத்துவம் இருக்கு.? அடிமையா இருக்கணும் அவளதான னு கேட்டா..? எங்கள் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை, அப்பவே எல்லாம் சைன்டிஸ்ட் னு தாலிக்கு அறிவியல் விளக்கம் கொடுப்பாங்க பாருங்க..

"தாலியை அறிவியலின் படி பார்த்தால் தாலி என்பது பெண்களின் இரத்த ஓட்டத்தை சரிசெய்கிறது. அதுமட்டுமல்லாது பெண்களின் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. இதனால் தான் தாலியை மறைத்து உடலோடு ஒட்டி உரசும்படி அணிய வேண்டும் என்று முன்னோர்கள் கூறினர்" னு அடிச்சி விடுவாங்க. பெண்கள் எல்லாத்துக்கும் என்ன ரத்த அழுத்த நோயா இருக்கு..? வெளிநாட்டு பெண்கள் தாலி போடலயே..? ஆண்களுக்கு இந்த மாதிரி ஏதும் இல்லையே..? விதவைகளும் பெண்கள் தானே..? அறிவியல் ஆதாரம் என்ன..? எதுக்கும் பதில் வராது.

சில தமிழ் சங்கிக "பெண்களுக்கு தாலி ஏன் அவசியம் என்று தெரியுமா.. பெண்களின் மார்பு பகுதியில் நரம்பு முடிச்சிகள் உள்ளது. அது ஆண்களுக்கு இல்லை. அது நேராக மூளைக்கு சென்று பெண்களை குழப்பமான மனநிலைக்கு ஆளாக்கும். அந்த நரம்பு செயல்களை கட்டுப்படுத்தவே தாலி அணியப்படுகிறது. இதை 12 நூற்றாண்டில் ஒரு ஞானி கண்டறிந்து ராஜராஜ சோழனிடம் சொன்னார். மன்னர் தாலி அணிவதை கட்டாயமாகினார்."னு கதை விடுவானுக. அந்த நரம்பு விதவைக்கு இருக்காது.? வெளிநாட்டு பெண்களுக்கு இருக்காது.?

இங்க தாலி புனிதம் னு பேசுரவுங்க நாயிக்கும் நாயிக்கும் தாலிகட்டுறப்ப, மனுஷனுக்கும் கழுதைக்கும் தாலிகட்டி கல்யாணம் பண்ணிவைக்கும் போது இவுங்க புனிதம் எங்க போச்சி னு தெரியல. காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவிச்சி Rss காரங்க நாயிக்கி தாலி கட்டி எதிர்ப்பு தெரிவிச்ச நிகழ்வுகள் வருச வருசம் நடந்துட்டுத்தான் இருக்கு.

ஒரு தலித் பையன் உயர்சாதி பொண்ண காதலிச்சி கோவிலுலயோ, பதிவு அலுவலகத்திலயோ திருமணம் பண்ணுனா, பொண்ணு வீட்டுக்காரன் பொண்ணு தாலிய அறுத்து போட்டு கூட்டி போயி, சொந்த சாதி பையனுக்கு கட்டிவைக்குறான். இங்க தாலியின் புனிதம் என்ன..? தாலி பொண்ணுக்கு வேலியா..? மகத்துவமா..? மயிரா..? இங்க சாதி தான் மனிதனுக்கு பெரியது. சாதிய நிலைய கட்டிக்காக்க பொண்ணுங்கள அடைக்கி அடிமைப்படுத்துற புனிதம் தாலி. இங்க சாதி தான் புனிதமே தவற தாலியில்ல.
வெளிநாடுகளில் பெண்களை வம்ச வாரிசுகளுக்காக மதத்தோட பேருல அடைக்கி வைச்சா.. இங்க வாரிசுக்காகவும், சாதிய கட்டிகாக்கவும் பெண்கள் அடங்கப்போக வேண்டியிருக்கு. இதுல தாலியின் புனிதம் என்ன? பெண்கள் எப்போதும் ஆண்களின் உடைமைகள் தான். உடைமைகள் கைமீறிப் போகும்போது கவுரவக் கொலைகள் கூட நடக்கும். இங்க பெண்கள் நடத்தை என்பது மதத்தின் பேருல ஒரு சாதிக்கு கட்டுப்பட்டு, சாதிய வெறியர்களை உற்பத்தி செஞ்சி, சாதிகளை வளர்க்கும் செயல்தான். இதுக்காகதான் தாலி. இதுல அடிமை ங்கிற அடையாளத்த தவிர புனிதம் ஒன்னுமில்ல. 

சாதிக்கு ஒரு டிசைன் தாலி எதுக்கு.? நீங்க தாலி செய்ய குடுக்க, வாங்க நகைக்கடைக்கு போனா..  என்ன ஆளுக தான் கேட்டு தாலி கொடுப்பான். என் உங்க தாலி மட்டும் இந்த டிசைன்ல இருக்கு னு கேட்டா, "இது எங்க வழக்கம், நாங்க இப்பிடி தான் தாலி போடுவோம்"னு சொல்லுவாங்க. தாலி பெண்களோட அடிமைப்படுத்தும் அடையாளம் மட்டுமில்ல, அது ஒரு சாதிய குறியீடு.

இப்ப சொல்லுங்க உங்க தாலியின் புனிதத்த..?

பெண்கள் தாலியை வைச்சிதான் குடும்ப உறவில் துணைவனிடம் அன்பையும் உண்மையையும் காட்ட வேண்டியுமா.? அது இல்லாமலேயே அன்போடும் அறனோடும் இல்லறம் நடத்தலாம். குடும்ப அமைப்பில் சமமற்ற ஆணாதிக்க தன்மையை வலியுறுத்தும் தாலி வேண்டாம் என்று சொல்வதற்கு சனநாயக நாட்டில் எல்லாருக்கும் உரிமை இருக்கு.  இந்த நவீன காலகட்டத்தை விட்டுட்டு காட்டுமிராண்டி போல நாடோடி கால காட்டத்திற்கு பின்னோக்கி செல்ல வேண்டாம். தாலி நம்ம கலாச்சாரமா..? தாலியின் வரலாறு என்னனு எல்லாம் ஆராய வேண்டியதில்ல. ஆதனால என்ன யூஸ்..? எதுக்காக பெண்கள் மட்டும் கட்டிகனும் னு யோசிச்சா போதும்.

தாலி என்பது நிலவுடைமை சமூகத்தின் பெண்களது அடிமைத்தனத்தை நிலைநாட்டுகின்ற அடையாளம். அதை கருத்தாக, கதைகளாக, நீதிகளாக, சட்டமாக பார்ப்பனியம் பெண்கள் மீது ஒழுக்கம் ங்கிற பேரில திணிக்கிறது. பார்ப்பனியம் பெண்களுக்கு சொல்லுகிற கதைகளை காலத்துக்கு ஏற்றது போல இப்பவும் சொல்லுகிறது.  அதுதான் அக்சய திரிதியை என்ற பெயரில் தாலியும், பெண்ணடிமைத்தனமும். 

இந்த உலகத்தில் இருக்கிற எல்லா உயிர்களுக்கும் சுதந்திரமாக வாழ உரிமையுண்டு. ஆண்கள் மட்டும் அதிகாரமாக இருக்கவும், பெண்கள் வரையறுத்து நடத்தப்படுவதும் இயற்கைக்கு மாறானது. இதை பெண்கள் உணர்ந்து வர்க்கமாக இணைந்து பிற்போக்குகளையும், அடிமைப்படுத்துகிற புனிதங்களையும் உடைத்தெரியவேண்டும்.

அம்பேத்கர் கருத்துகளுக்கு கொல்லி வைக்கும் செயல் - நாயக வழிபாடு தேவையா..? - அடையாள வெறியர்கள்..

"அரசியல் பக்தி அல்லது நாயக வழிபாடு என்பது நிச்சயம் சீரழிவுக்கான பாதையாக அமைந்து, இறுதியில் சர்வாதிகாரத்திற்கு வழிவகுக்கும்" சொன்னவர் அண்ணல் அம்பேத்கர்.

"கடவுளையோ, மகான்களையோ சார்ந்திருக்க வேண்டாம். எளிய மனிதனாகிய என்னைக் கடவுளாக்க முற்படுகிறார்கள். அது தவறு. தலைமை வழிபாட்டு எண்ணத்தை முளையிலேயே கிள்ளியெறிய தவறுவீர்களாயின், அது உங்கள் அழிவுக்கே வழிவகுக்கும்" னு ரெம்ப தெளிவா சொல்லியிருக்காரு நம்ம அண்ணல்.

ஆனால் ஒரு முப்பது வருசமாவே அவர கடவுளாக்கும் முயற்சிகள் தலித் மக்களின் அறியாமை யின் வெளிப்பாடாய், சாதி அடையாளத்தின் திமிராகவும், சாதிய சுயவிளம்பரமாகவும் அது அம்பேத்கரின் விருப்பத்துக்கு மாறா நடந்து வருது.

வேற எந்த தலைவருக்கும் இல்லாத அளவுக்கு சிலைகள் அவருக்கு இருக்கு. உலகம் முழுவதும் எடுத்துட்டா கூடா அண்ணல் அவர்களுக்கு தான் அதிக சிலைகள் இருக்குனு பெரும பேசுற  தலித் மக்கள் ஒரு முப்பது வருசமாவே மெல்ல மெல்ல சிலை நிறுவுதலை ஒரு வழிபாட்டுச் சடங்காக மாற்ற வச்சதுமில்லாமல், அண்ணல் சிலைக்கு பொங்கல் வைக்குறது.. மொட்ட போடுறது.. தேர் இழுத்து ஊரவளம் போகுறது னு அவரை கடவுளாக்கவே மாத்துறாங்க.

அவர தலைவராகவும், மக்களின் வழி காட்டியாகவும் நாம ஏத்துகிட்டா அவரோட கருத்துக்களை நாம பின்பற்றனும், அவர் சொன்ன வழியில நடக்கணும்.. எதுக்கு இவ்வளவு சிரமம்..?  அவர கடவுளாக்கி, சிலை வழிபாடு நடத்திட்டா போதும் வருசத்துக்கு ரெண்டு முறை பொங்கல் வச்சி, நிகழ்ச்சி நடத்தி, ரெண்டு வணக்கத்த வச்சிட்டு கெளம்பிரலாம் ங்கற மனநிலை தான் இங்க நிறைய பாக்க முடியுது.

இந்த மாதிரி இருந்தா நாம இப்படியே தான் இருக்கமுடியும், நம்மட்ட இருக் கின்ற மூடப்பழக்கங்கள தொலைக்க வேண்டிய அவசியமில்ல, கற்பி, ஒன்று சேர், புரட்சி ங்கிறதுக்கு வேலை இல்லயில..? இதத்தான் BJP காரனும் பண்ணிட்டு இருக்கான். அண்ணல் பத்தி படிச்சிற கூடாது, அறிவா வளர்ந்திற கூடாது னு அண்ணலயே கையில் எடுத்து அவன் கும்புட ஆரம்பிச்சிட்டான். இங்க அவனுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்..? கடவுள் வழிபாடு, நாயக வழிபாடு பண்றத்தான் நாமளும் பண்றோம் அவனும் பண்றான்.

நாயக வழிபாடு, தலைவர் வழிபாடு நம்ம மக்கள் புத்தியில  ஊறிக்கிடக்கிற ஒன்னு. அரசன் கடவுளின் பிரதிநிதி, பிராமணன் கடவுளின் பிரதிநிதி னு சொல்லி சத்திரிய வகுப்பை உருவாக்கி விட்டதிலிருந்தே இந்தமாதிரியான மனநிலை வரலாறு நெடுகிலும் நம்மள தொத்திட்டு இருக்கு. 

ஒரு அடிமை இன்னொரு அடிமைக்கு தலைவராக முடியாது. அண்ணல் அடிமைங்கிற விஷயத்த உடைச்சிதான் வெளிய வந்தார். நீங்களும் அதை உடைக்கணுமுன்னு பேசுனாரு. இங்க தலைவன் இல்லனா எதுவும் நடக்காது னு ங்கிற நிலைக்கு எதிரான ஜனநாயக நிலையை சமூகத்திலும், அரசியலிலும் கொண்டு வந்தார்.

தன்னை வணங்குவதையும், தன் காலில் விழுவதையும் அவர் ஒரு போதும் விரும்பியதில்ல. ஆனால் இன்று அவர் "வழிபாட்டுக்குரிய' தலைவராக மாற்றப்பட்டிருக்கிறார். இதோட இன்னொரு கேவலம், அறியாமையினால தலித்துகள் அம்பேத்கரை இந்துவாக்கவும் முயன்று வருகிறார்கள். இதைதான் இந்துத்துவாவும் பண்ணிட்டு இருக்கு.

முதுகில நாலஞ்சி ஊக்கால குத்தி ஓட்டைய போட்டு கிரேன்ல மாட்டி, அதுல தொங்கிட்டு போயி அம்பேத்கர் சிலைக்கு மாலை போடுறது என்ன மனநிலை..? அறிவில்லாம பணறாங்க னு இத கூட விட்டுறலாம். ஆனால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த செயலை ஆதரிச்சி ஜெய் பீம்.. ஜெய் பீம்..னு கத்துறாங்களே.. இது என்ன மாதிரி மனநிலை..?

தொங்கிகிட்டு மாலை போட்டவன கூட சரி செஞ்சிறலாம், ஆனா தொங்கவிட்டு வேடிக்கை பாக்குற கூட்டத்த எப்படி சரிசெய்ய முடியும்..? இது அம்பேத்கருக்கு செய்யும் எவ்வளவு பெரிய துரோகம்..? மோசடி..? இதுதான் "கற்பி ஒன்றுசேர் புரட்சிசெய்"ங்கிறத இங்க விளங்கிகிட்டதா..?

எங்கயோ மூளையில நடக்குறத சொல்றேன் னு நினைக்க வேண்டாம். இது மாதிரி கேவலமான புத்தி நமக்குள்ளேயும் இருக்கு. அம்பேத்கர் கருத்துக்கள புறக்கணிச்சி அவர் உருவத்தை மட்டும் வழிப்படுற கேவலகேட்ட புத்தி நம்மகிட்டயும் ஊறி கெடக்கு.

ஊருல மாரியம்ம்மா, காலியம்மா, சிவராத்திரி, பாரிவேட்டை னு எந்த திருவிழாவானாலும் அம்பேத்கராத்த தான் கடவுளுக்கு விளம்பர போர்டா வைக்கிறான். சோப்பு விளம்பரத்துக்கு வர்ற கதாநாயகி மாதிரி. "நான் சாகும் போது ஒரு இந்துவாக சாகமாட்டேன்"னு சொன்ன மனிதர உங்க மூடத்தனத்துக்கும், உங்க சாதி அடையாளத்துக்குமா அவரை அடையாளப்படுத்துறது..? அவர் எழுதிய ஏராளமான கட்டுரைகள், ஆராய்ச்சிகள், புத்தகங்கள், போராட்டங்கள் எல்லாம் இதுக்குதானா..?

திருவிழாகளிலே சினிமா நடிகர் படங்கள் எப்படி பயன்படுத்த படுகிறதோ.., அப்பிடி அண்ணல் படங்களும், பேனர்களும் பயன்படுத்தப்படுகிறது. அண்ணல் கருத்துக்களை மறைச்சி சாதிக்கு, மதத்துக்கு அடையாளப்படுத்துரதால இங்க விரிசல் தான் ஏற்படும். "அது அழிவை நோக்கித்தான் போகும்"னு அண்ணல்லே சொல்லியிருக்கிறார். அதும் ஒரு சைடு வளர்ந்துட்டு இருக்கு.

அம்பேத்கர் அனைவருக்குமான தலைவர். உங்களுக்கு பகுத்தறிவு இல்லனாலும் பரவாயில்ல, தயவுசெஞ்சி இந்த மாதிரி கேவலங்கெட்ட பணியில் இனிமேல் ஈடுபடவேண்டாம் னு சொல்ல விரும்புறேன். அவ்வளவு தான் சொல்லவும் முடியும்..

ஜெய் பீம்... #HBDஅண்ணல்அம்பேத்கர்

பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ வச்சி பொழப்பு நடத்துறத தவிர வேற என்ன பண்ணப்போறாங்க...

எத்தனை நாளைக்கு அந்தாள வச்சி பொழப்ப ஓட்டுவாங்க? அந்தாளு சாக போற காலத்துலயும் களத்துல இறங்கி போராடி செத்தாரு அதுதான் போராட்டம். இப்போ இவனுகளோட புரட்சி ங்கிறது ஒரு கல்யாண மண்டபமோ, அல்லது ஏர் கூலர்  வசதியுள்ள இண்டூர்லயோ முற்போக்கு, நாத்திகம் னு பேசி முடியுது? அப்படி இல்லனா 2 டிவி சேனல்கள்ட்ட முற்போக்கு, நாத்திகம் னு பேசி முடியுது.

எத்தனை நாளைக்கு அவர சொல்லிட்டு போலி புரட்சி பண்ணுவாங்க? அவருக்கு அடுத்து நீங்க என்ன செஞ்சீங்க? இப்படி ஒரு கேள்வி கேட்டா கூட நாங்க 70, 80 களில் தான் ஆறம்பிப்பாங்க. ஒரு சாதி கலவரமோ, மதப்பிரச்னையோ நடந்து முடிச்சதுக்கு அப்றம் "இது இந்துத்துவாவின் மனித வேட்டை, தமிழகத்தில் இந்த அமைப்புகளை முழுவதும் துடைத்தெரியாமல் இங்கு சமத்துவமான சமுதாயம் படைக்க முடியாது" 

இத சொல்றதுக்கு ஒரு இயக்கம் தேவையா? 80களுக்கு அப்றம் சாதி ஒழிப்பிற்கு என்ன நடவடிக்கை எடுத்தாங்க? சிலையை காப்பாத்துரதிரத்திலேயே இவங்க புரட்சி முடிச்சிருது. அப்படி இல்லனா ரெண்டு கல்யாணம் பண்ணி வைக்கறதுல முடிச்சிருது. 80 அப்றம்மும் நீர்த்துபோகம அதே களைப்பணிய மக்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில செஞ்சிருந்தா இங்க எப்படி RSS, இந்துமுன்னணி, சீமான், திருமுருகன் காந்தி, மயிரு மட்ட னு வளர்ந்து வந்துருக்கும்?

வன்முறையை எப்போதும் ஏற்காத பெரியார் கூட குலகல்வி திட்டத்த ராஜாஜி கொண்டுவரும் போது வன்முறையை அனைத்து இளைஞர்களும் கையில் எடுங்கள் னு தமிழகம் முழுவதும் அறிக்கை விட்டாரே அது ஏன் னு கூட இங்க புரிதல் இல்லாமலா இயக்கம் நடத்திட்டு இருக்காங்க. நீட் தேர்வுனால இங்க ஒரு புள்ள சாகும் போதும் கூட ஒரே ரீயாக்ஸன் தான். ரெண்டு tv சேனலை கூப்பிட்டு ஏதாவது மண்டபத்த வாடகைக்கு புடிச்சி பேசுறது. களத்துல இறங்கி எப்போ வேல பாப்பாங்க? எங்க ஊர் பக்கம் எல்லாம் திராவிட கட்சி னா இப்போ இருக்குறவுங்களுக்கு யாருக்கும் தெரியாது. அங்க உறுப்பினரும் யாருமில்ல, கிராம பக்கம் வந்தாதான தெரியும். உறுப்பினர புராம் பாரின்காரன், பணக்காரனத்தான் சேக்கான்.

இவனுங்க இப்படி இருக்க இங்க கம்யூனிஸ்ட் அதைவிட ரெம்ப மோசம். எதுக்கு போராட்டம் நடத்தனும், நடத்த கூடாது னு தெளிவில்லாமா இருக்காங்க. சரி குழுவா விவாதிச்சி கண்டனம் ஆர்ப்பாட்டம் நடத்தாலனு கூட்டம் போட்டு ஒருவழியா எல்லோரும் சரி போராட்டம் நடத்துவோம் னு போனா அந்த இஸ்ஸு முடிஞ்சி ரெண்டு வாரம் ஆகி, அடுத்து அதவிட பெரிய பிரச்சினை போயிட்டு இருக்க, "என்னடா பண்ணலாமுன்னு, மறுபடியும் ஒரு கூட்டத்த போடு னு இப்படியே போயிடுது.

பாவம் நம்ம பசங்க "நம்ம மேல் மட்டத்தில இருக்குறவுங்க பெரிய புரட்சியா பண்ணி இந்த நாட்ட கம்யூனிஸ்ட் நாடா மாத்திருவாங்க"னு ஆர்ட் காலேஜ், லா காலேஜ் னு கிளாஸ கட்டடிச்சாவது மக்கள் பிரச்சினைய மக்களுக்கு புரிய வைக்கனுமூனு.. புதிய மாணவர்கள், புதிய ஜனநாயகம், புரட்சிக்கு ஏங்கும் காலம் னு புத்தக்கத்தையும், உண்டியலையும் குழிக்கிட்டு பஸ்ஸுக்குள்ளயும், ட்ரெயின்க்குள்ளயும் போயி காட்டு கத்து கத்தி மக்களை விழிப்புணர்வு செய்ய பிரசாரம் பண்ணி ஒரு புதிய ஜனநாயக நாட்ட கனவு கண்டா.. இயக்கத்தில மேல இருக்குறவுங்க நமக்கென்ன னு வண்டிய ஓட்டிட்டு இருப்பாங்க.

இயக்கத்தில இருக்குற மாணவர்கள் யாராவது எதுக்குயா இப்படி இடிச்ச புளி மாதிரி இருக்கீங்க, நாம ஏதாவது பெருசா பண்ணுவோம் னு இறங்குனா கூட அமைதியா உக்காருடா ஆர்வக்கோளார் னு அமுக்கி புடுவாங்க. அதையும் மீறி மார்க்ஸீஸ்யம் இப்பிடித்தான் சொல்லுதா னு கேள்விய கேட்டுப்புட்டா  போதும் இயக்கத்தவிட்டு வெளிய போக சொல்லுவாங்க. 

முதலாளித்துவத்த ஒழிக்கணும், சாதிய ஒழிக்கணும் னு இளைய தலைமுறைக போராட்டம் பண்ணிட்டு இருந்தா, இந்த போராட்டம் பண்ணுற கம்யூனிஸ்ட் கட்சியோட மேல்மட்ட தலைவர் ஒரு பார்ப்பணனா இருப்பான் இல்ல பெரிய பெரிய முதலாளிகளுக்கு சொந்தபந்தமா இருப்பான். இவனுங்க எப்படி முதலாளித்துவத்த ஒழிக்க முடியும்,  சாதிய ஒழிக்க முடியும்? இவனுங்க ஒழுங்கா செயல்பட்டுருந்தா எதுக்கு கம்யூனிஸ்ட்குள்ள இவ்வளோ பிரிவு. 

இவனுகள நம்பி எந்த பயனுமில்லனு ஸ்டாலின் ஸ்டைலுல நாமக்கு நாமே ங்கிற மாதிரி சாதிய ஒழிக்க,ஆதிக்க சாதிய எதிர்த்து போராட தாழ்த்தப்பட்ட சாதியில உருவான தலைவன் பின்னாடி போனா.. "அம்பேத்கர் என்ன சொன்னாரு.. கற்பி ஒன்று சேர் புரட்சி செய் னு பேசிட்டு, பின்னாடியே நீ தாழ்த்தப்பட்டவன் இல்ல பல்லவர் வம்சம், வீர சாம்பவன் னு முறுக்கி விடுவானுக. 

இவனுகளும் சாதி ஒழிப்பு பத்தி பேசுறத மறந்துட்டு நாங்க வீர பறையண்டோய், மள்ளர்டோய், தேவேந்திர குலம்டோய், ஒண்டிவீரன் பரம்பரைடோய் னு கத்திட்டு கெடந்தா.. நாங்க வீர வன்னியங்கடோய், அக்கினி சட்டிடோய் னு சாதி சண்ட தான் வரும். இந்த வாக்கு அரசியலுக்கு சாதி சண்டைங்கிறது கண்டிப்பா தேவை. அவன் அத வச்சி தான் அரசியல் பண்ணமுடியும். பண்ணிய விட கேவலமா கூட ஏறங்குவாங்க. வாழ்நாள் முழுக்க இந்துத்துவா எதிர்த்து போராடி, நான் சாகும்போது ஒரு இந்துவா சாகமாட்டேன் னு சொன்ன அண்ணல்லோட கருத்துக்களை பேசிட்டே வாக்கு அரசியலுக்காக பட்டைய போட்டு இந்து சாமியை கும்புடுற ஈனப்பிறவியாக மாறுவாங்க, அல்லது இந்துத்துவா கட்சி கூடயே கூட்டணியை போட்டுட்டு நம்மட்ட சாதிய ஒழிக்க வந்த போராளி னு ஸீன போடுவாங்க. அம்பேத்காரியல் அரசியல் இங்க எப்படி இருக்கு னு புரிச்சிக்கோங்க.

சாதிய ஒழிக்கணுமுன்னு ஒரு சாதில இருந்து ஒரு தலைவர் வந்தா... கருத்து முரண்பாடு னு ஒரு இயக்கத்தில இருந்து 5, 6 இயக்கம் பிரிஞ்சி ஒரே சாதிக்காவே ஆரம்பிக்காணுக. இவனுகளுக்கு சாதிய ஒழிக்கிறத தவிற வேற என்ன கருத்து இருக்க முடியும்..? எதுல முரண்படுறாங்க?

ஒரே சாதிக்கு போராடுரோம் னு முளைச்ச இயக்கங்கள், ஒன்னு ஆளுங்கட்சிக்கு சப்போர்ட்டா இருக்கு, இன்னொன்னு எதிர்க்கட்சிக்கு சப்போர்ட்டா இருக்கு மக்களை அம்பேத்கர், சாதி ஒழிப்பு னு சொல்லி ஏமாத்தி ஓட்டு வங்கியா மாத்தி பிஸினஸ் பாக்குறாங்க. 

இப்படி இருக்குறவுங்க சாதி சண்டை நடந்தா மட்டும் என்னத்த கிழிச்சிற போறாங்க, இதையும் பேசி பிசினஸ் தான் பாக்க போறாங்க. இதுக்கு என்ன முடிவு னு கேட்டா தேர்தல் ரிசல்ட் வரட்டும் இவனுகளுக்கு இருக்கு னு சொல்லி உங்களை சமாளிப்பாங்க. தேர்தல் ரிசல்ட் வந்தா இந்த பிரச்சினை மறந்தே போயிரும்.

அப்றம் சாதி ஒழிப்பு னு கேட்டு ரெம்ப நாள் ஆகுது.. இனிமேலாவது இவனுகள நம்பாம சாதிய ஒழிக்க முறையா கிராம கிராமமா பழையபடி பிரச்சாரம் பண்ணுனாத்தான் ஒரு முடிவுக்கு வரும். எவ்வளவு எதிர்ப்புகள் இருக்கு எவ்வளவு ஏற்புகள் இருக்குனு நாமளும் தெரிஞ்சிக்கலாம். தெரிஞ்சாதான் நமக்கு வலுவான ஆயுதம் கிடைக்கும். அதவிட்டு கல்யாண மண்டபம் புடிச்சி பேசுறது கதைக்காகாது.

பழவேற்காடு - யார் நிலத்த யாருக்கு கொடுக்குறது - தமிழக 34 கடற்கரை கிராமங்களை ஆதானிக்கு கொடுத்த மோடி பாஜக அரசு...

துறைமுகம் என்பது அரசு நடத்த வேண்டும் அதுதான் பாதுகாப்பு. துறைமுகம் உருவாக்கிக்கொள்ள தனியாருக்கு அரசு அனுமதி வழங்கி நிலத்தையும் வழங்கினால் அது எப்பேர்ப்பட்ட அரசாக இருக்கும்? 

பலவேற்காட்டில் ஆதானி என்ற தனியார் நிறுவனத்திற்கு 6500 ஏக்கர் நிலப்பரப்பை வாரி வழங்கியுள்ளது பாஜக மோடி அரசு. 

யார் நிலத்த யார் வாரி வழங்குறது? மோடி அரசு ஆதானிக்கு கொடுத்த நிலமெல்லாம் பாலவேற்காடு பகுதியில வாழுற 34 கடலோர கிராமத்த்தை சார்ந்தது. இந்த கிராமங்கள் பூராமே கடற்கரையயும், பழவேற்காடு எரியையும் நம்பித்தான் வாழ்ந்துட்டு வறாங்க. 

மனிதனுக்கு அவன் வாழுற நிலம் தான் அடையாளம். நிலைத்த புடிக்கிட்டு அவன வேற எங்கயாது வாழ்ந்துக்கோ னு துரத்தி அனுப்புனா அது அகதி. ஆதானி நிறுவனம் மோடியை வைத்து 34 கிராம மக்களை துரத்தும் வேளைய தான் இப்போ மும்முரமா செஞ்சிட்டு வருது. 

"தானா வந்து நிலத்த கொடுக்குறவுங்களுக்கு அதிக பணம்" னு அறிவிச்சிருக்காணுக. 
அப்போ கொடுகலனா....? 
நம்ம தான் புரிச்சிக்கிறனும் என்னனு..

பழவேற்காடு பகுதி 1900 கால வரலாறு. இங்க வாழுற பூர்வீக மக்கள் எல்லோரும் கடல்சார்ந்த தொழில் செஞ்சி இப்போவரைக்கும் வாழ்ந்து வறாங்க. சென்னை என்பது வெறும் 400 ஆண்டு கால வரலாறு தான். பாலவேற்காடு அதன் துறைமுகம் என்பது வெள்ளையர்கள் இங்கு நுழைவதற்கு முன்பு இருந்ததே இருந்தவையாகும். 

இந்தியாவின் இராண்டாவது பெரிய ஏரி பழவேற்கட்டு ஏரி. இங்கு பறவைகள் சரணாலயம், கடல் சார்ந்த வளங்கள், கடல் உயிரினங்கள், பசுமையான காட்டு நிலங்கள் னு நிறைய இருக்கு. இது தெரிஞ்சி தான் ஆதானி குழுமம் மோடியை வச்சி இந்த நிலத்த ஆக்கிரமம் செஞ்சிருக்கானுக. 

ஆதானிக்கும் அம்பானிக்கும் மோடி புரோக்கர் வேலை செய்ய வெளிநாட்டுகளுக்கு போயி கார்ப்பரேட் கம்பெனிகாரங்ககிட்ட டீல் பேசி 6 வருசமா அவனுகளுக்கு உறிவிவிட்டது பத்தாதுன்னு இப்போ தமிழ்நாட்டுல இருக்குற நிலைத்த தூக்கி கொடுத்திருக்கான். 

கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு புரோக்கர் வேலை செய்யத்தான் இந்த பாஜக காவி அரசு இருக்கே ஒழிய மக்களுக்காக இல்ல. 

பழவேற்காடு மக்கள் நீண்ட நாள் கவர்மெண்ட்கிட்ட வச்ச கோரிக்கை "ஏரிய தூர்வாரனும்"ங்கறது தான். அதுக்கு அரசு ஒப்புதல் கொடுக்குற மாதிரி கொடுத்துட்டு, ஆதானி ஆக்கிரமிப்புக்காக எந்த ஒரு தூர்வாருற வேலையும் செய்யம போலீசை வச்சி கட்டையை போடுது. 

ஆதானிக்கு மோடி கொடுத்த 6500 ஏக்கர் இடத்தில 2000 ஏக்கர் நிலம் கடல் பகுதில இருக்கு. இப்போ ஆதானி துறைமுகம் கட்டுறதுக்கு, காமோண்ட் சுவர் எல்லாம் கட்டி கடல துர்வாரிட்டு இருக்கான். ஏண்டா இப்படி பண்றீங்க னு அமைதியா கேட்டா கூட காரணமே சொல்லாம உள்ள தூக்கி போடுது காவியின் எச்சில வாழுற காவல்துறை.

தமிழ்நாட்டுல வந்து நிலத்த புடுங்குற ஆதானி யார்டா னு பாத்தா.. இவன் 15 வருசத்துக்கு முன்னாடி ஜவுளி கடை நடத்திட்டு வந்துருக்கான். நம்ம ஊருல இருக்குற போதிஸ், சரணவா ஸ்டோர்ஸ் லெவல் கூட இருக்காது. அப்றம் வைர வியாபாரத்துல புரோக்கர் வேலை பாத்து அப்போ குஜராத் முதல்வரா இருந்த மோடிய உருவி 10 வருசத்துல பணக்கார லிஸ்ட்ல 5 இடத்துக்குள்ள வந்துட்டான். 

மோடி பிரதமர் ஆனதும் அவன வச்சி கோவா, விசாகப்பட்டினம் னு துறைமுகத்தை 90% சேர்ல வாங்கிட்டான். இப்போ பழவேற்காடு காட்டுப்பள்ளில இருக்குற L&Tயோட 3கிலோமீட்டர் அளவுள்ள தனியார் துறைமுகத்த 90% சேர்ல வாங்குனதுமில்லாம பழவேற்காடு 6500 ஏக்கர் அளவுள்ள 34 கிராமங்க இருக்குற கடற்கரை எரியாவ மோடிய வச்சி துறைமுகத்த விரிவுபடுத்தனும் னு வாங்கிருக்கான். 

பழவேற்காடு பகுதில இதுக்கு முன்னாடி 3 கிலோமீட்டர் அளவுள தனியார் துறைமுகத்தை அமைக்க L&T க்கு இங்க இருக்குற அதிமுக, திமுக நல்லாவே வெப்பன் சப்பல பண்ணிருக்காங்க. அதனால இப்போ நடக்குற பழவேற்காடு பகுதி கிராம ஆக்கிரமிப்ப எதிர்த்து தப்பி தவறி கூட ரெண்டு கட்சியும் பேசமாட்டாங்க. 

அப்றம் நிலம் னு பேசுரவனும், தமிழ்தேசியம் னு வாய வச்சி பொழப்பு நடத்துறவனும் இத பத்தி பேசமாட்டான். ஏன்னா இவன் வாயிக்கே மோடிதான் கஞ்சி ஊத்துறான்.

வாக்கு அரசியல் நமக்கு எப்பவுமே உதவாது.. "வறட்சி இருக்குற இடத்துல தான் புரட்சி இருக்கும்" அதனால நம்மதான் போராடனும் மக்களே....

இந்துத்துவாவுக்கு செம்படித்த பட்டேல்க்கு எதுக்கு 3000 கோடி செலவில் சிலை..? - தேச தலைவரா..? இல்ல தியாகியா..? - மக்கள் பணத்த வீணடித்த இந்துத்துவா மோடி அரசு..

இந்தியாவில் 57% மக்கள் வறுமை கோட்டிற்கு கீழே வாழ்கிறார்கள்.. இதில் பீஹார், ஒரிசா அதிகம். வட மாநிலங்களில் இருந்து வட மாநிலத்து மக்கள் ஆந்திரா சென்னை, பெங்களூர், ஹைதராபாத், கொச்சி, கோவை னு தென் மாநில நகரங்களில வந்து 200, 300 க்கு வேலை இப்போவரைக்கும் வந்துட்டு இருக்குற பாத்தாலே..

உலக நாடுகளில் அதிகா ஏழைகள் வாழும் நாடு பட்டியலில் இந்தியா 2வது இடம். ஏழைகள் அதிகா இருக்குற நாட்டுல 3000 கோடி செலவுல படேல்க்கு சிலை தேவை தானா?. அப்படி என்ன கழட்டிட்டான்.. படேலோட வரலாற திருப்பி பாத்தாலே காறி துப்புற மாதிரி தான் இருக்கும். அந்த வரலாற பாப்போம்.

அங்கிலேயர்களிடருந்து சுதந்திரத்திற்காக இந்துக்குகளும் முஸ்லிம்களும் ஒன்றிணைந்து போராடிட்டு இருக்கும் போது பிராமணர்களும், அவர்களின் மதவெறி இயக்கமான இந்து மகா சபா உறுப்பினர்களும் வெள்ளையர்க்கு ஆதாரவாக செயல்பட்டுட்டு இருந்தாங்க. பிராமண இந்து மகா சபா வின் நோக்கமே சுதந்திரத்துக்கு அப்பறம் இந்த நாட்ட இந்துராஷ்டிரமா மத்தனும், அத பிராமணர்கள் மட்டும் ஆளனும் தான்.

பிராமணர்கள் இந்த நாட்ட ஆளலனும், மத்த மக்கள் எல்லாம் இந்து மனுதர்ம படி அவங்களுக்கு கீழ அடிமையா இருக்கணுமுன்னு இந்து மகா சபாவுக்கு, காங்கிரஸ் உள்ள இருந்தே சப்போர்ட் பண்ணுனவன் தான் இந்த படேல்.

இந்தியாக்கு சுதந்திரம் கொடுத்ததும் இந்து மகா சபாவும் RSS அமைப்பும் அவுங்களையோட வேலைய பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. இதோட விளைவுதான் இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையும், கலவரமும். காந்தியும் காங்கிரஸில இருந்து இந்த பிரவினைய ஏத்துக்கல. இந்துகளும், முஸ்லீம்களும் ஒரே நாட இருக்கணுமுன்னு முயற்சி செஞ்சி பாத்தாப்பல.. இதோட விளைவு, காந்திய போடதுக்கு இந்து மகா சபாவும், RSS ம் பிளான் பண்ணிட்டு இருந்துச்சி.

அப்போ இந்து மகா சபா, RSS தலைமைல கலவரங்கள் தூண்டபட்டு ரெம்ப கொடுமையான சூழலுல இந்தியா இருந்துச்சி. இந்த கலவரத்துக்கு முக்கிய காரணம் RSSம், இந்து மகா சபா தான் னு நேரும், காந்தியும் நடவடிக்கை எடுக்கும் போதெல்லாம் பட்டேல் குறுக்க பூந்து குற்றங்கள் எல்லாம் முஸ்லீம் பக்கம் மட்டும் இருக்குற மாதிரியே பஞ்சாயத்து பேசி இந்துத்துவா அமைப்புக்கு எந்தவொரு பாதிப்பும் வராத மாதிரி பாத்துகிட்டான். கலவரம் அதிகரிக்க இவனே சப்போர்ட் பண்ணுனான்.

இந்தியா, பாகிஸ்தான் தனியா பிரிந்ததுக்கு அப்பறம் இந்தியா மதசார்மை நாடு னு அறிவிச்சாங்க. அதுக்கான சட்டத்த உருவாக்க அண்ணல் பொறுப்புல கொடுத்தது ஆங்கில அரசு. அப்பறம் நேரு பிரதமரானாரு, படேல் துணை பிரதமர், உள்துறை மிஸ்டர் பொறுப்புள இருந்தான்.

RSS,பிராமணர்கள் இந்து ராஷ்டிரம் அமைக்க முட்டா இருந்துட்டானே னு இந்துத்துவா அமைப்பு காந்திய மூணு டயம் போட திட்டம் போட்டு, மூணுமே தோல்வியில முடிச்சது.

முதலில் 1934ல் RSS புனே டவுன் ஹாலில காந்தி வண்டி மேல கையெறி குண்டு வீசுனாங்க. அப்போ ஹரிஜன் யாத்திரைக்காக காந்தி புனே வந்தாரு. பெருசா ஏதும் சேதாரம் இல்ல. 

ரெண்டாவது தாக்குதல் பஞ்ச்கனியில நடந்துச்சு. சங்கி ஒருத்தன் கத்தியோட குத்த வரும்போது பிடிபட்டான். 

பிர்லா ஹவுசில் வச்சு மகாத்மா காந்தியை கொல்ல முயற்சி நடந்துச்சு. குண்டு மேடைக்கு பக்கத்துல குண்டு வெடிச்சும் தப்பிச்சிட்டாப்ல. அப்போ திகம்பர் பேட்ஜ் ங்கிறவன காந்திய சுட சொல்லி சாவர்க்கர், நாதுராம் கோட்சே குரூப் திட்டம் போட்டு குடுத்துச்சி, அவன் சுட பயந்துட்டான். கை குண்டு வீசின RSS அமைப்பை சேர்ந்த மதன்லால் பஹாவே போலீஸ்ட்ட மாடிக்கிட்டிக்கிட்டான். விசாரணை நடந்த சமயம் போலீசார் கைக்குள் வைத்துக்கொண்டு RSSஆல் படுகொலை செய்யப்பட்டான்.

அப்பவே இந்த RSS இந்துத்துவா அமைப்பை தடை பண்ண சொல்லி பல காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் சொல்லியும் படேல் நடுவுல பூந்து பஞ்சாயத்து பண்ணி RSSச தடை பண்ணாத மாதிரி பத்துக்கிட்டான்.

4வது முறை இந்து மகா சபா சாவர்க்கர் பிளான்ல RSS அமைப்ப சேர்ந்த நாதுராம் கோட்செ காந்திய போட்டான். ஊரு பூராம் காந்திய போட்டது முஸ்லீம்தானு பரப்பி விட்டுட்டு இருந்தது இந்து மகா சபா.

நீதி மன்ற விசாரணைல காந்தி படுகொலைல RSS மட்டுமில்ல, இந்து மகா சபா சாவர்க்கருக்கும் சம்பந்தம் இருக்குனு விசாரணைக்கு இழுத்தப்போ. சாவர்க்கர காப்பாத்தணுமுன்னு, இந்து மகாசபையின் தலைவரா இருந்த சியாமா பிரசாத் முகர்ஜி மே 4 1948ல் படேலுக்கு ஒரு கடிதம் எழுதுறான் "(சாவர்க்கர்) அரசியல் கோட்பாடுகளுக்காகவே அவர் விசாரிக்கப்பட்டார் என்று பின்னாளில் பேச்சு எழும்படி எதுவும் நிகழாதவாறு பார்த்துக்கொள்வீர்கள் என்பதில் எனக்கு எந்த சந்தேகமுமில்லை”.

அதுக்கு மே 6 ல படேல் பதில்கடிதம் போடுறான் “சாவர்க்கரை குற்றவாளிப் பட்டியலில் சேர்ப்பதைப் பொறுத்தவரை சட்டம் மற்றும் நீதிமுறைமை எனும் கோணத்தில் மட்டுமே பார்க்கவேண்டுமேயொழிய அரசியல் காரணங்களை இதில் இழுக்கக்கூடாது என அதிகாரிகளிடம் சொல்லியிருக்கிறேன்” 

காந்தி கேஷ ஒழுங்கா விசாரணை பண்ண விடல. சுட பிளான போட்டு கொடுத்த சாவர்க்கர் இந்த வழக்குல சம்பந்தப்படல னு கோர்ட்டும் அறிவிச்சது. பிராமணதத்துக்காக சேவை செய்ய இந்துத்துவா அமைப்ப எப்படியாவது காப்பாத்தணுமுன்னு RSS இந்துத்துவா அமைப்ப பட்டேல் தடை செய்யுற செஞ்சி... அடுத்து தடைய நீக்குனதும் அவன்தான்.
படேல் காங்கிரஸ்குள்ளேயே இருந்து இந்துத்துவா இயக்கங்களுக்கு பல வேலைகளை பாத்ததுக்காக இப்போ "பட்டேல் தேச தலைவர்"னு பெரிய சிலை RSS, பிஜேபி அரசால 3000 கோடி செலவுல வைக்கப்பட்டுருக்கு.. 

படேல் சிலைய செய்ய நம்மட்ட டெக்லாட்ச்சி இல்லாத காரணத்தால சீனாட்ட செய்ய கொடுத்தாங்க.. (இந்தியாட்ட இந்த சிலை செய்ய டெக்லாட்ச்சி கூட இல்ல, இதுல 182 மீட்டர் 3000 கோடி ல சிலை தேவையா னு சீன காரனே சிருச்சிருப்பான்)

பட்டேல் சிலைய செய்ய 30000 கோடி பணம் வேணுமே னு மோடி நிதி பொதுத் துறை  நிறுவனங்கள் மக்களின் கல்வி, மருத்துவம், குடிநீர் முதலான சமூக மேம்பாட்டுக்கு னுஒதுக்கி வச்ச நிதியிலிருந்து எடுத்து கொடுத்தான்.
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் - ரூ.900 கோடி
ஓ.என்.ஜி.சி. (ONGC) - ரூ.500 கோடி
பாரத் bட்ரோலியம் - ரூ.250 கோடி
கேஸ் ஆதாரிட்டி ஆஃப் இந்தியா - ரூ.250 கோடி
பவர்கிரிட் - ரூ.125 கோடி
குசராத் மினரல் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன்  - ரூ.100 கோடி
இதுதவிர, நடுவண் அரசு 2014-15 நிதிநிலை அறிக்கையில ரூ.309 கோடியில் சமூக மேம்பாட்டுக்கு ஒதுக்கும் நிதியிலிருந்து ரூ.146 னு என்னோமோ அவன் அப்பன் வீட்டு காசு மாதிரி மக்களோட பணத்த எடுத்துக்கொடுத்தான்.  

நருமதையை ஒட்டி வாழும் பழங்குடியினர விரட்டிட்டு, பல ஊர்களை அழிச்சி அவர்களின் நிலங்களைப் பறிச்சி பட்டேல் சிலை நர்மதா ஆத்து நடுல 182 மீட்டர் உயராம வச்சிட்டான். 

சிலைய வச்சதுமில்லாம சிலைக்கு கீழ 'ஒற்றுமையின் சிலை ‘Statue of Unity’ னு ஏழு மொழிகளில அத எழுதி இருந்தாங்க. தமிழ் மொழியில "ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி" னு எழுந்திருந்து. இத பாத்த தமிழ் நாட்டு மொழி அரசியல் தலைவர்கள், ஆர்வலர்களும் தமிழ் தவறா எழுதிருக்கு னு கண்டம் தெரிவிச்சாங்க. அப்பறம் அது அழிக்கப்பட்டுருச்சி.

காலம் பூராம் இந்துத்துவாக்கு செம்பு தூக்குனவனுக்கு ஒற்றுமையின் சிலை னு அறிவிச்சத தான் இன்னும் ஜீரணிக்க முடியல..

இந்த பிஜேபி அரசு மக்கள் பணத்த வீணா செலவு பண்ணிட்டு இப்போ ஏழைகள பட்டினி படுகொலை பண்றாங்க. நடு ரோட்டில குழந்தைகள் ஒரு வேல சாப்பாடு இல்லாம பட்டினியால பிச்சை எடுக்கிற நிலமைக்கு கொண்டுவந்துட்டாங்க.

- குறிப்பு ( மோடி நிதி கேக்கும் போது நெறைய பேரு "நிதி எல்லாம் இல்ல.. படேல் சிலைய இரும்பு கடைல போட்டு காசு எடுக்கோ" னு பதிவில வந்தது மகிழ்ச்சியே. மக்களும் சிந்திக்க ஆரம்பிக்கணும்)

மதவெறியை மக்களிடம் தூண்டி அரசியல் செய்யும் RSS, பிஜேபி - முஸ்லிகளுக்கு எதிராக பரப்பப்படும் கட்டுக்கதைகள் - பிராமண ஆதிக்கம்..

இந்தியா என்ற நாடு எப்போதும் ஒரே நாடாக இருந்ததில்லை, இனியும் இருக்கப்போவதும் இல்லை. மன்னராட்சி காலத்தில நாடுகள் ஒரு எல்லைகளுக்கு உட்பட்ட சின்ன தேசங்களாகவும், சமஸ்தானங்களாகவும் இருந்ததே தவிர இந்தியா ங்கிற ஒரு நாடு இருந்ததில்லை. தமிழ்நாட்டில கூட மூணு நாடுகளாக வரையறுத்து வரலாற படிச்சிருப்போம். தமிழகம் கூட ஒன்று பட்டாதாய் ஒரே ஆட்சியின் கீழ இருந்தது கிடையாது..

இந்தியாவை யாரும் இது எங்களுடயது என்று சொந்தம்கொள்ள முடியாது. குறிப்பா பிராமணர்கள். 

பிராமணர்கள் கி.மு. 1500-கி.மு.500 வாக்கில ஆடு மாடு மேச்சிட்டு, நாடோடி கூட்டமா பொதிமூட்ட முடிச்சோட ஈரான் நாட்டு வலிய வந்து கைபர் கணவாய், ஓடை னு கடந்து பஞ்சம் பொழைக்க இங்க வந்தவங்க இங்கிருந்த விவசாய மக்களொட கலந்து, உள்நாட்டுப் பழங்குடியினர அடிமையாக்கிச் மனுசாஸ்திரம் வகுத்து தஸ்யு’க்கள் சூத்திரர்கள், தீண்டத்தகாதவர்கள் னு அவங்களயே அடிமையாகுனாங்க. இதுக்கு ஆரீய ரிக் வேதக் காலமுனு வரலாறு இருக்கு, பார்ப்பான் எழுதின வேதத்திலயும் ஆதாரமும் இருக்கு.

ஆரியர்களான பார்ப்பனர்கள் வந்ததுக்கு பிறகு துருக்கி நாட்டுல இருந்து ரஜபுத்திரர்கள் வந்தாங்க, இங்க இருக்குறவுங்கல ஆட்சி செஞ்சாங்க. பார்ப்பனர்கள் ராஜபுத்திரர்களோட சேந்தே வேறு வேறு பகுதிய ஆட்சி செஞ்சாங்க, ராஜபுத்திரர் ஆட்சியில தலைமை குரு, அமைச்சர் னு முக்கியமான பொறுப்புள பார்ப்பனர் இருந்தாங்க. அப்போதான் ராமாயணம், மகாபாரதம் னு கற்பனை கதைகளை ரெம்ப ஆபாசமா எழுதினாங்க. அதுக்கு பிறகு சௌகான், பரிகரர், சோலங்கி னு வந்தவனெல்லாம் வெளில இருந்து இந்தியாவுக்கு வந்தவங்க தான். சீமான்டிய மாதிரி சொல்லணுமுனா எல்லா பயலும் வந்தேறிகங்தான். 

அடுத்து முஸ்லிம் மன்னர்கள் இங்க வறாங்க, வணிகம் பண்றாங்க, அப்றம் ஒவ்வொரு சின்ன சின்ன  நாட்ட புடிச்சி இங்க இருக்குற மக்களயும் ஆட்சி செயுறாங்க. முஸ்லிம்கள் ஆட்சி செய்யும் போது ராஜபுத்திரர்களோடு சேர்ந்து பிராமணர்களும் முஸ்லிம் மன்னர்கள எதுகுறாங்க. முஸ்லிம்கள் மக்கள்ட்ட பாகுபாடு காட்டாததனால ஆட்சியும் அதிக ஆண்டு தொடர்ந்துச்சி. 

அடுத்து ஆங்கிலேயர்கள் வணிகம் பண்ண வாரங்க. சின்ன சின்ன பகுதியா புடிச்சி, இவுங்க ஆச்சி பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. அதுக்கு பக்க பலமா பிராமணர்கள் இருந்தாங்க. ஆங்கிலேயர்கள் பெரிய நிலப்பரப்ப ஒரே நிறுவாகத்துக்கு கீழ கொண்டு வந்து ஆட்சி செயுறதுக்கு வசதியா, இங்க இருக்குற சின்ன தேசங்கள், குழுக்கள், சமஸ்தானங்கள ஒன்னா இணைச்சி அதுக்கு 'இந்தியா' னு பேரு வச்சி கட்டுப்பாட்டுக்குள்ள இருக்குற மாதிரி நாட்ட உருவாகிட்டாங்க.

ஆங்கில ஆட்சிய எதிர்த்து முஸ்லீம் மன்னர்களும், இந்து மன்னர்களும் போர் செஞ்சாங்க. இது சமாளிக்க யோசிச்ச ஆங்கிலய அரசு.. இந்து, முஸ்லீம், சீக்கிய மத வேறுபாடு, பல மொழி வேறுபாடு, அடுத்து தாழ்த்தப்பட்ட, பழங்குடிகள் உள்ளிட்ட சாதி அடிப்படையிலான வேறுபாடுகள் னு ஒரு குரூப்ப இன்னொரு குரூப்க்கு எதிரா தூண்டிவிட்டு பிரிவினையாக்கி தொடர்ந்து ஆட்சி செஞ்சி வந்தது. 

ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்யும் போது எப்பவும் இந்து, முசுலீம் னு பிரிச்சே தான் ஆட்சி செஞ்சதே தவற எல்லோருக்கும் பொதுவா ஆட்சி பண்ணல. சட்டங்களும் திட்டங்களும் கூட தனிதனியாவே உருவாகுனாங்க. தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்கள மூணாவது பிரிவா பாத்தாலும், அவுங்களையும் இந்துக்கள் னு வரையறுத்தாங்க.

ஆங்கில ஆட்சிய எதிர்த்து முஸ்லீம், இந்து மன்னர்கள் போராட்டத்துக்கு அப்றம் மக்கள் இயக்கங்கள் உருவாகி சுதந்திர கிடைக்க போராட தொடங்கிச்சி. போராட்டத்தில இந்து மக்களும், முஸ்லீம் மக்களும் மத பாகுப்பாடு இல்லாம ஒன்னா சேந்தே போராடுனாங்க. இவங்க போராட்ட நோக்கம் ஆங்கிலயர்கள விரட்டிட்டு ஒன்னா ஜனநாயக முறையில ஆட்சி அமைக்கனமுனுதான்.

இந்த போராட்டத்த எல்லாம் பாத்துட்டு இருந்த பிராமண கூட்டம் "மக்கள் ஒன்னு சேந்து போராடுனா  எப்படி இந்துராஷ்டிரம் அமைச்சி இந்து மன்னர்கள் ஆட்சி செய்யமுடியும்?"னு யோசிச்சி மத ரீதியா பிராமண இயக்கங்கள ஆரம்பிச்சது.

இதோட நோக்கம் ஆங்கிலயர்களுட்ட இருந்து நாட்ட மீட்டு ஒட்டுமொத்த இந்தியாவயும் பிராமணர்கள் மன்னரா ஆட்சி செய்யணும். இந்து நாடா மாத்தனம்" இதுக்காக, ஏற்கனவே மத இயக்கமா இருந்த பிரம்ம சமாஜம், ஆரிய சமாஜத்துக்கு கீழ இந்து மகா சபா னு அமைப்பு பிராமணர்களால ஆரம்பிக்கப்பட்டது.

(இப்போகூட RSS, பிஜேபி சொல்ற விசயமும் அதுதான் "இந்துராஷ்டிரம் அமைக்கணும், ராமராட்சி நடத்தணும்"ங்கிறதுதான்.)

காங்கிரஸ் இயக்கம் அறவழியில போராட்டத்த கையில எடுத்தது. காங்கிரஸ்ல இந்துக்களும், முஸ்லிம்களும் இணைஞ்சே போராட்டம் பண்ணுனாங்க. அதே சமயம் காங்கிரஸ்குள்ளயும் பிராமணர்கள் இருந்தாங்க, இந்து முஸ்லீம் ஒற்றுமைக்கு எதிரா செயல்பட்டாங்க. 

இந்துக்களுக்கு னு தனி நாடு வேணும் னு முதலில் நாட்டு பிரிவினை வாதத்த பேச தொடங்குனது பிராமணர்கள் தான்.  1933ல் இந்து மகாசபையின் தலைவரா இருந்த பாய் பரமானந்தர் பிரிவினைக்கு முதலில் கூட்டம் போட்டு பேசுனான் "இந்தியாவை மத அடிப்படையில் இரு நாடுகளாகப் பிரிக்க வேண்டும்"னு 

அடுத்து1937ம் ஆண்டு அகமதாபாத்தில நடந்த இந்து மகாசபை மாநாட்டில அப்போ தலைவராக இருந்த சாவர்கர், “இந்தியாவை ஒற்றைத் தேசமாகக் கருத முடியாது. முக்கியமாக இரண்டு தேசங்கள் இந்தியாவிற்குள் உள்ளன. ஒன்று இந்துக்களின் தேசம்; மற்றது முஸ்லிம்களின் தேசம்” னு மக்கள்ட்ட மதவெறிய தூண்டிவிட்டு பிரச்சாரம் பண்ண ஆரம்பிச்சுட்டான்.

அதுக்கு அப்புறம் தான் 1940 ஆம் ஆண்டு முஸ்லீம் மக்கள் ஜின்னா தலைமையில கோரிக்கை வச்சாங்க. ஆனா இப்போ வரைக்கும் வரலாறு தெரியாத சங்கிகள் நாடு ரெண்டா பிரிஞ்சத்துக்கு காரணம் முஸ்லிம்கள் தான்னு பழி சொல்லிட்டு இருக்காங்க.

இரண்டாவது உலகப்போரால பல சிக்கல்கள் ஆங்கிலேயர்களுக்கு வரவே அவுங்க கட்டுப்பாடுல வச்சிருந்த நாடுகளுக்கு சுதந்திரம் கொடுக்க ஆரம்பிச்சாங்க. இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுக்கும் போது ஆங்கிலேயர்கள் ஆரம்பிச்சு வச்ச பிரிவினை வாதமே அவங்களுக்கு பெரிய பிரச்சனையா இருந்தது. மத பிரிவு அடிப்படையில நாட்டுக்கு சுதந்திரம் கொடுக்கும் போது, பூரவ குடிகளான தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் மக்களை எதுல சேர்க்கிறது னு தெரியல.

முஸ்லிம்களையும், தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்களையும் சேர்த்தால்.. நாட்டில் இந்துக்களை விட 70% அதிகமா இருந்தாங்க. இந்த 70% சேர்ந்தால் எங்க நம்ம ஆள முடியாதோ னு பல சூழ்ச்சிகள் பண்னுனதால.. ஆங்கில அரசு தாழ்த்தப்பட்ட மக்களையும், பழங்குடி மக்களையும் இந்துகளோட சேர்த்துட்டாங்க. 

இந்தியா பாகிஸ்தான் னு நாடுகள் பிரிக்கப்பட்டு பெரும்பாலான முஸ்லிம்கள் பாகிஸ்தான் போயிட்டாங்க. இங்க இருந்த எல்லா முஸ்லிம்களும் வெளில இருந்து வந்தவங்க கிடையாது. இஸ்லாமியர்கள் வருகைக்கு முன்னாடியே அரபு நாடுகளில வணிக வச்சிக்கிட்ட இந்தநாட்டு மக்கள் முஸ்லிம்களா மாறிஇருக்காங்க, கொஞ்ச பேரு பிராமண மதத்தின் கொடுமை தாங்க முடியாம இஸ்லாமிற்கு மதம் மாறியிருக்காங்க. இந்த நாட்டு முசுலீம் மக்கள் இங்கேயேதான் இருந்தாங்க. 

அப்றம் காங்கிரஸ், மற்றும் முக்கியமான தலைவர்கள் இந்தியா ஒரு மதசார்பற்ற ஜனநாயக நாடு னு அறிவிச்சாங்க. இந்து மகா சபை காங்கிரஸிட்ட இந்து நாடா அறிவிக்க சொல்லி பல முறைகள் கேட்டும், முக்கிய தலைவர்கள் மறுத்துட்டாங்க. ஜனநாயக மக்களாட்சி அமைத்து நேரு தலைமையில காங்கிரஸ் ஆட்சி செஞ்சாங்க. இதெல்லாம் பார்த்து பொறுக்கமுடியாத பிராமணர்களின் அமைப்பான இந்து மகா சபா, RSS.. பல சுதேசி தலைவர்கள கொல்ல முயற்சி பண்ணுனாங்க. மதச்சார்பற்ற ஜனநாயக நாடா அறிவிச்ச காங்கிரஸ் தலைவரான காந்திய சுட்டு கொன்னுட்டாங்க. 

காந்திய சுட்டு கொன்னது ஒரு பார்ப்பன ஐயர், ஆனால் முஸ்லீம் தான் கொன்னாங்க னு வததந்திய பரப்புனாங்க இந்துத்துவா மதவெறியர்கள்.

காங்கிரஸ் தொடர்ந்து ஆட்சி செஞ்சிட்டு வந்தது. காங்கிரஸ்க்குள்ள இருந்தே பல பிராமணர்கள் மதவெறிய தூண்டி மக்களாட்சிய கலைக்க பாத்தாங்க. முடியல.. காங்கிரஸ்க்கு மக்கள் மத்தியில இருக்குற செல்வாக்க எப்படி உடைக்கணுமுன்னு பிராமணர்கள் யோசிச்சாங்க. 

பிராமணர்கள் நேரடியா காங்கிரஸ்க்கு எதிரா கட்சி ஆரம்பித்து மக்கள்ட்ட ஓட்டு வாங்க முடியாது. அதுக்காக பிராமணர்கள் கையில எடுத்த ஆயுதம் "மக்கள்ட்ட மதவெறியை தூண்டி முசுலீம் மக்கள எதிரியா காட்டுறது" அதற்கான முதல் வேலையா "பாபர் மசூதியில் சிலை வைப்பு" - "ராமர் சிலை தானா வந்து பிறந்த இடத்துலேயே முலைச்சிருக்கு"னு மக்களை குழப்பமடைய வச்சாங்க.

அப்றம் காங்கிரஸ்ல இருந்து பிரிஞ்சி வந்து பிஜேபி னு ஒரு காட்சிய தொடங்குனாங்க. அடுத்தது இந்து முஸ்லீம் கலவரம் னு  திட்டம்போட்டு மதகலவரம் பண்ணுனாங்க. முஸ்லிம்களுக்கு எதிரா பல கட்டுகதைகள மக்கள் மத்தியில பரப்ப ஆரம்பிச்சங்க. இதனால இந்து முஸ்லீம் மக்களிடம் பிரிவினை அதிகமாச்சி. அடுத்து மசூதிய இடிப்பு னு  மதவெறிய சாமானிய மக்கள்ட்ட தூண்டி பிஜேபி ஆட்சிய புடிச்சது. 

இந்தியா விடுதலை ஆனதுல இருந்து பிராமணர்கள் சாமானிய மக்கள் மத்தியில பரப்புன கட்டுகதைக்கள் என்னன்னா..

முஸ்லிம்கள் படையெடுத்து இந்து கோவில்களை இடித்தார்கள் - இந்திய வரலாறு பிராமணர்களும், பிரிட்டிஷ்காரங்களும் எழுத்துனதுதான். வரலாற்றுல இடிச்ச மாதிரி எந்த ஆதாரமும் இல்ல. நல்லா ஆட்சி பண்ணுனாங்க னு கூட ஆதாரம் இருக்கு.

அயோத்தி பாபர் மசூதி ராமர் கோவிலை இடித்து கட்டப்பட்டது 
- மசூதி இருந்த இடத்தில ராமர் கோவில் இருந்ததா எந்த வரலாற்றுலயும் இல்ல, இவுங்க எழுதி வைச்ச புராணத்திலயும் இல்ல. அதனாலதான் சுப்ரீம் கோர்ட்டே இது நம்பிக்கையின் அடிப்படையில் வழங்கப்பட்ட தீர்ப்பு னு சொல்லுது.
இந்தியா விடுதலை ஆனதுல இருந்து.

காஸ்மீர் தீவிரவாதிகள் - காஷ்மீர் மக்கள் பழங்குடி விவசாயிகள். அவுங்க உரிமைக்காக போராடுறாங்க. ராணுவம் தான் அங்க வன்முறை செயல்கள் அதிகம் பன்னிருக்கு.

இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்கு காரணம் முஸ்லிம்கள் 
- மேலயே சொல்லிருக்குறேன். 1943ல் முதலில் இந்து நாடு , முஸ்லிம் நாடு என்று பிரிக்க வேண்டும் ஆரம்பிச்சாவங்க இந்து மகா சபை தலைவர்கள்.

முஸ்லிம்கள் மதம் மாற்றுகிறார்கள் - இந்து மக்களை ஒன்னா கூட்டி முஸ்லிம்கள் மதம் மாத்துனா எந்த ஆதாரமும் இல்ல. விருப்பட்டு மக்களே மாறி இருக்காங்க. இளையராஜா மகன் கூடத்தான் மதம் மாறியிருக்கிறார். வரலாறு னு பாத்தா இந்துமத சாதி கொடுமைகள் தாங்கமுடியாமல் இஸ்லாமித்துக்கும், பவுத்தத்திற்கும், கிருஸ்துவத்திற்கும் மதம் மாறி இருக்காங்க. மதம் ஒழுங்கு பூ வா இருந்தா என்ன இதுக்கு மதம் மாறப்போரங்க.

முஸ்லிம்கள் பல திருமணம் பண்றாங்க - இந்தியாவில முஸ்லிம்கள விட இந்துக்கள்லதான் பலதாரமுறை அதிகமா இருந்ததுன்னு சர்வே சொல்லுது.

சகோதர வாரிசுகளை திருமணம் செய்கிறார்கள் - இந்துக்கள் சகோதரி வாரிசுகள திருமணம் பண்றாங்க. இரண்டுமே தப்புதான். ரத்த சம்பந்த உறவுகளை திருமணம் செய்யக்கூடாது னு அறிவியல் சொல்லுது.

குடும்ப கட்டுப்பாடு பண்றதில்ல

கிரிக்கெட்டு

இந்தியா பாகிஸ்தான் மேட்ச்

மாட்டுக்கறி சாபுடுறாங்க

கோரோனா வரைக்கு...

இப்படி அப்படி னு எதையாவது மக்கள் மத்தியில் பரப்பிட்டு இருக்காங்க. முஸ்லிம் இங்க அமைதியாதான் இருக்காங்க இருந்தாலும் இந்துத்துவா மதவெறியர்கள் அவுங்களேயே நோண்டிட்டு இருக்காங்க..

ஏண்டா... இந்துக்கள் 77% சதவீதம் அதிகமா இருக்குற நாட்டுல ஊருக்கு னு கணக்கு வச்சா ரெண்டு வீடு கூட இருக்கமாட்டாங்க முசுலீமு.. அவுங்கள பாத்து எதுக்கு பயப்படனும்..? அவுங்கள குறை சொல்றதால என்ன லாபம்..? 

இந்துத்துவா முஸ்லிம்கள பத்தி கட்டுகதைகள மக்கள் மத்தியில பரப்பிவிட்டதால, மக்களுக்கு முஸ்லிம்கள் மேல வெறுப்பு வரவே, இப்ப மக்களும் எந்த நிகழ்வு நடந்தாலும் அதுக்கு முஸ்லிம்கள் தான் காரணம் னு கத்த ஆரம்பிட்டான். இதெல்லாம் பிராமண இந்துத்துவா இந்த நாட்ட மதவெறி நாடாக்கி, மனுசாஸ்திர படி பிராமணரில்லாத மக்களை கீழ கேவலமா வச்சி ஆட்சி செய்யத்தான் னு மக்களுக்கு புரியல.

மக்கள் சிந்திக்காத விளைவுதான் இப்போ பிஜேபி இந்துநாடா மாத்தனும், ராமராஜ்ஜியம் அமைக்கணும், மனுநீதிய சட்டமாகனும், குழக்கல்வி திட்டம் னு ஒன்னு ஒண்ணுனா கொண்டு வந்துட்டு இருக்காங்க.

இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு. இங்க இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், கிறிஸ்தவர்கள் னு பல மொழி, பல பண்பாடு னு இருக்கு. இந்த நாடு யாருக்கும் தனிப்பட்ட சொந்தம் இல்ல, இது எவன் அப்பன் வீட்டு சொத்துமில்ல. இந்துத்துவா பிராமணர்கள் மதவெறியை தூண்டி, இந்தியாவின் மதச்சார்பின்மைய களைக்கிறதென்றால் அது அனைத்து மக்களையும் பாதிக்கும் என்பதை நன்றாக புரிந்துகொள்ளுங்கள்..

மக்கள் தெளிவு இல்லாமல் குழப்பத்தில் ஏதேதோ செய்கிறார்கள்.. - சலிபடைய வேண்டாம்.. மக்களை புரிந்து பிரச்சாரம் செய்வோம் நண்பர்களே...

தமிழ்நாட்டில பெரும்பாலான மக்கள் விளக்கு ஏத்துனத பாத்துட்டு...,  இவ்வளவு சங்கிகளா..? இவனுகல திருத்தவே முடியாது.. இங்க இப்படி இருக்க நாம வடக்கன்ஸ குறை சொல்றோம்.. உங்களுக்கும் இனி மோடித்தான் பிரதமர்...முட்டாள் கூட்டம் னு சலிப்புல மக்கள நாம குறை சொல்லிட்டு இருப்போம். 

மக்கள் மேல எந்த தவறும் இல்ல. இந்த அரசு கொரோணா வந்தா செத்துருவோம் னு பயத்த மட்டும் காட்டிட்டு, முறையான விழிப்புணர்வு கொடுக்காம, மக்கள வீட்ட விட்டு வெளிய வரக்கூடாது னு ஊரடங்கு போட்டுட்டு... நியூஸ்ல இன்னைக்கு அங்க 700 பேரு செத்துட்டான்.. இங்க 2300 பேரு ஆஸ்பத்திரியில இருக்காங்க, அந்த மாவட்டத்தில இதனை பேரு, இந்த மாவட்டத்தில இத்தனை பேரு, முஸ்லீம் வேணுமுன்னே பரப்புறாங்க னு டிவில காட்டிட்டு இருந்தா மக்களோட மனநிலை என்னவா இருக்கோம்..?

குடும்பம் னு இருந்தா அதுல இருக்குற புருஷன், பொண்டாட்டி, குழந்தை, குட்டிங்க, அம்மா அப்பா, தாத்தா பாட்டி னு எல்லோரு மேலயும் அக்கரை இருக்கத்தான் செய்யும். ஒருபக்கம் மீடியா பயம் காட்டுதுனா, இன்னொரு பக்கம் சங்கிகள் தவறான செய்திய பரப்புறாங்க. எதையும் கண்டுக்காத அரசு சிறுபான்மை முஸ்லிம் மக்களை எதிரியா காட்டுதுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்குது. மக்களும் என்ன செய்யுறது னு தெரியாமதான் மஞ்சள கரைச்சி குளிக்கிறது, வேப்பல கட்றது, கை தட்டுறது, விளக்கு புடக்குறதுன்னு பண்றாங்க. 

மக்களுக்கு பயம் மட்டும்தான் இருக்கு. ஒரு கடைக்கு போனா கூட 20, 30 பிஸ்கட் பாக்கட்ட மொத்தமா வாங்கி போடணுமுன்னு தோணுது. ஊருக்குள்ள எவனும் வரக்கூடாது னு ஹேட்ட போட தோணுது.  இங்க நோய்னா என்னனு சொல்லாம மாஸ்க் போடு, கை கழுவு னு மட்டும் சொன்னா நோய பாத்து பயம் மட்டும்தான் வருமே தவிற எப்பிடி எதிர்கொள்றது னு சிந்திக்கதோனாது.

மக்கள் அறிவாதான் இருக்காங்க. குடும்பத்துல யாருக்காவது வியாதினா, ஆஸ்பத்திரிக்குத்தான் கூட்டிட்டு போறாங்களே தவிற இப்ப யாரும் கோயிலுக்கு கூட்டிட்டுப்போறதில்லை. அதனால மக்கள் முட்டாள்தனமா விளக்கு ஏத்துறாங்களே னு நாம பயபட வேண்டாம். விழிப்புணர்வு சரியா கொடுக்கலங்கிறது தான் உண்மை. 

நேத்து எங்க கிழவி கால் பண்ணி நலம் விசாரிச்சிட்டு.. "நைட் 9 மணிக்கு வெளக்கு போடனுமுனு சொல்லுதாக.. நீயும் வெளக்கு பொறுத்துலே.." னு சொல்லுது. நானும் "அதெல்லாம் ஒன்னுமில்ல.. நான் பாத்துகிறேன்.. நீ வையி" னு சொன்னா.. "கூறு இல்லா பேசாதலே.. தம்பி இப்போதான் வாச்சாத்து செல்ல பாத்துட்டு சொல்லுதான்.. நைட் வையி என்னே.."னு சொல்லிட்டு போன வைச்சிடுச்சி.. அவங்களுக்கு எந்த மாதிரி மோடி அரசியல புரிய வைக்கிறது? நெறைய மக்களோட எதார்த்தம் இப்பிடித்தான் இருக்கு. 

நமக்கு மக்கள் மேல சலிப்பு எல்லாம் வேண்டாம். பெரும்பாலான மக்கள் மோடி சொல்லுற தான் செய்கிறாங்கனா இப்போது பிஜேபி தானே தமிழ்நாட்டில் ஆட்சிய புடிச்சிருக்கணும்..? இங்க மக்கள் ஒன்னும் முட்டாள் இல்ல, முட்டாளாக்கப்படுறாங்க. 

இப்பயே இப்படினா.. 70, 80 வருசத்துக்கு முன்னாடி மக்கள் என்ன நிலையில இருந்திருப்பாங்க? அவுங்களுக்கு புரிய வைக்க எவ்வளவு சிரமப்பட்டுருப்பாங்க நம்மளோட வழிகாட்டி தலைவர்களான மகாத்மா பூலே, அண்ணல், பெரியார் னு. 

அப்பயெல்லாம் மக்கள்ட்ட ஒரு செய்திய கொண்டுபோயி சேர்க்கிறது எவ்வளவு சிரமம்? ஒன்று திரட்டுறது எவ்வளவசிரமம்? அப்படியே ஒன்னா சேர்த்து போராடினாலும், மக்கள் எதிர்க்குறது அந்த ஏரியாவோட பெரிய சாதிக்கறான இருப்பான், பண்ணையாரா இருப்பான். இன்னைக்கு எதுத்துட்டு நாளைக்கு அவன் காட்டுக்கு தான் கூலி வேலைக்கு போகணும். அவன் குடுக்குற கூலில தான் குடும்பதுக்கு கஞ்சி ங்கிற சூழ்நிலை. 

அப்பிடி இருந்த மக்களையும் "நீங்க இல்லனா அவன்தான்டா பொழைக்க முடியாது.. உன்னை ஏமாத்தி பொழைக்குறான்.. நம்மளோட உரிமையை கேட்போம்" னு 70, 80 வருசத்துக்கு முன்னாடி இருந்த மக்கள ஒன்னு சேர்த்து போராடுறதுங்கிறது எவ்வளவு சிரமமான ஒன்னு?

நமக்கு இப்போ அந்த மாதிரி சிரமம்மெல்லாம் இல்ல. எளிதா மக்கள்ட்ட தொடர்பு கொள்ளலாம்.. படம் போட்டு கூட புரிய வைக்கலாம். வேகமா ஒன்னு சேர்த்து போராடலாம். இதெல்லாம் மக்களோட எதார்த்த நிலைய புரிஞ்சு அதுக்கேத்த மாதிரி விழிப்புணர்வு கொடுத்தாமட்டும் தான் முடியும்.

அரசு மக்களுக்கு எதிரா எந்த திட்டம் போட்டாலும், சட்டம் போட்டாலும், முதலில் மக்களுக்கு என்னனு புரிய வைப்போம், ஒன்னு சேத்து போராடுவோம். அதவிட்டுட்டு எச்ச "இந்த மாதிரி" சொல்லிட்டான், sv சேகர் "அந்த மாதிரி" சொல்லிட்டான் னு சொம்பு தூக்குறவனுக்கெல்லாம் எதிரா ஆர்ப்பாட்டம் பண்றோம், கண்டனம் தெரிவிக்குறோம் னு முற்போக்கு இயக்கங்கள் கருப்புசட்ட,  நீலசட்ட, சிகப்புசட்ட ஊர்வலம் போனா.... இது மக்களுக்கு விழிப்புணர்வு கொடுக்குற மாதிரி இருக்கா..? இல்ல இயக்கத்த சட்டபோட்டு விளம்பர படுத்துற மாதிரி இருக்கா..? 

பெரியாரும், அண்ணலும் மக்கள்ட்ட பிரச்சாரம் பண்ணும் போது காந்தி, காங்கிரஸ் பார்ப்பானுக, சங்கிக, ராஜகோபாலு னு எதையாவது இப்போ இருக்குற எச்ச, sv மாதிரி சொல்லிட்டே தான் இருப்பாங்க. "நீங்க கத்திட்டே கெடங்கடா.. எங்களுக்கு வேலை இருக்கு" னு மக்கள் பிரச்சாரத்த மும்மரமா கையில எடுத்து, ஒன்னு சேத்து போராடுனாதால தான் நமக்கு இப்போ வழிகாட்டியா இருக்காங்க என்பதை மறந்துற வேண்டாம். நாம பிரச்சினை வரும்போது மட்டும் அரசியல் பேசாம., தொடர்ந்து மக்கள்ட்ட பிரச்சாரம், விழிப்புணர்வு னு பண்ணுனா மக்கள் அறிவார்ந்த சமுதாயமா மாறுவாங்க ங்கிறதுல எந்த சந்தேகமும் இல்ல..

எந்தவொரு செயல்திட்டமும் இல்லாமல் மக்களை கைதட்ட தட்ட சொல்லி, விளக்கு புடிக்க வைத்து, பைத்தியக்கார்களாக ஆகிய RSS மோடி அரசு, இப்போது மக்களிடம் இருக்குற தங்க நகைகளை புடுங்க திட்டம் போட்டுக்கொண்டிருக்கிறது..

நாம் இவ்வளவு காலம் கட்டிய வரிகள் எங்கே போனது? மதவெறியை வைத்து ஆட்சி செய்கையில் நாம் ஏன் ஒற்றுமைக்காக விளக்கு புடிக்க வேண்டும்?

அப்படி இந்த மோடி அரசு மக்களுக்கு செஞ்சி கிழ்ச்சது என்ன...?

1-பெட்ரோல் / டீசல் வரி 200% உயர்வு
2-நீட் தேர்வு 
3- தூத்துக்குடி துப்பாக்கி சூடு
4- CAA \ NRC
5.1.70 லட்சம் கோடி கார்ப்பரேட்களுக்கு கடன் தள்ளுபடி
6-ரயில் கட்டண விலை உயர்வு
7-கேஸ் விலை உயர்வு
8-ரூ.500/1000 தடை மற்றும் வேலை இழப்புகள்
9- GST அதிக வரிகள்
10- அதானிக்கு புரோக்கர் வேலை பார்க்கமோடி வெளிநாட்டு பயணங்கள்
11- காஷ்மீர் படுகொலைகள்
12- ராணுவ வீரர் ஓய்வூதிய திட்ட தாமதம்
13- உதய் மின்திட்டம்
14- தமிழ்நாடு வறட்சி நிவாரணம் குறைப்பு
15- தபால் துறை வழியாக கங்கை நீர் விநியோகம்
16- காஷ்மீர் தேர்தல் 8% வாக்குப்பதிவு
17- அருணாசல பிரதேச ஆட்சி கலைப்பு
18- ராணுவத்திற்காண உணவில் முறைகேடு
19- மாட்டை வைத்து முஸ்லிம்கள், தலித்துகள் படுகொலை
20- ஆசிபா வன்புணர்வு படுகொலை
21- இட ஒதுக்கீடு நீக்கம் பற்றிய பேச்சுகள்
22- பென்சன் வட்டி விகிதம் குறைப்பு மற்றும் விதிமுறை மாற்றங்கள்
23- மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பல ஆயிரம் கோடி ஊதியம் தாமதம்
24-ஜி.டி.பி குளறுபடி
25-புதிய வங்கி கட்டணங்கள்-ஆதார்
26-அந்நிய நேரடி முதலீடு
27-தூய்மை இந்தியா திட்டம் என்று மோசடி
28-மேக் இன் இந்தியா என்று மோசடி
29-டிஜிட்டல் இந்திய திட்டம் என்று மோசடி
30-அணு உலை 
31-புல்லட் ரயில் மோசடி
31-நில கையகப்படுத்தும் மசோதா
33-ஸ்மார்ட் சிட்டி போலியாக ஏமாற்றியது
34-ஹிந்தி திணிப்பு
35-காவேரி நீர்மேலாண்மை ஆணையம் தாமதம்
36-நீதிபதிகள் நியமனம் தாமதம்
37- இந்துத்துவா பட்டேலுக்கு182 மீ சிலை
38-சரிந்து வரும் வேலை வாய்ப்புகள்
39-IT ஊழியர்கள் பணி நீக்கம்
40-காஷ்மீர் தொடர் கிளர்ச்சி – பெல்லட் குண்டு
41-கல்புர்கி கொலை
42-ரோஹித் வெமுலா
43-ஜவாஹர்லால் பல்கலைக்கழகம் சர்ச்சைகள்
44-வருண் காந்தி – ராணுவ ராணுவ ரகசியங்கள்
45- பாபர் மசூதி மதவெறி அரசியல்
46-ஜல்லிக்கட்டுக்கு தடை
47- கெளரி லங்கேஷ் படுகொலை
48-எல்லை தாண்டிய தாக்குதல். உண்மையா பொய்யா ? தொடர் ராணுவ வீரர்கள் பலி
49-ஜியோ சிம் விளம்பரம்
50-லலித் மோடி மோசடி
51-வியாபம் ஊழல்
52-கிரண் ரிஜ்ஜு 450 கோடி ஊழல்
53-சுரங்க ஊழல் – மகாராஷ்டிரா & கர்நாடகா
54-தனி விமானம் 2000 கோடி
55-பிரான்ஸ் – பழைய போர் விமானம் அதிக விலை
56-15 லட்சம் மோடி ஆடை
57-பாகிஸ்தான் திடீர் வருகை & அதானி தொழில் வாய்ப்புகள்
58-பள்ளி பாட புத்தகங்கள் வரலாறு திரிப்பு
59-முக்கிய பிரச்சனைகளில் மௌனம்
60-பல்வேறு பா.ஜ.க உறுப்பினர்களின் வெடி தயாரிப்பு செயல்பாடுகள்
61-ஓரினச்சேர்க்கை, பலாத்காரம், பெண்கள் பற்றி கலாச்சாரத்திற்கு முரணான கருத்துக்கள்.
62-சஹாரா நிறுவன லஞ்சம் – மோடி முதலமைச்சராக இருந்த போது
62-தனியார் நிறுவன விளம்பரம் – JIO & PAYTM
64-குஜராத் தொழிலதிபர் மகேஷ் ஷா வாக்குமூலம்
65-பதில் இல்லாத தகவல் அறியும் சட்டம் – மோடி கல்வி தகுதி
66-மத்திய மந்திரி நடிகையுமான ஸ்மிருதி இராணியின் கல்வி தகுதி சர்ச்சை
67-தேச பக்தி நாடகங்கள்
68-மேகாலயா கவர்னர் காம லீலை
69-ஜக்கி ஈஷா யோகா நிகழ்ச்சி
70-பாபா ராம்தேவ் – நில ஒதுக்கீடு
71-சமஸ்கிருதம் திணிப்பு
72-புதிய கல்வி கொள்கை
73-பொது சிவில் சட்டம்
74-கங்கை சுத்தப்படுத்தும் திட்டம் – 20,000 கோடி வீண்
75-மாட்டு கறி தடை
76-மாட்டு கறி கொலைகள் – அக்லாக், உனா(குஜராத்)
77-ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் மாநாடு – பசுமை தீர்ப்பாயம் அபராதம்
78-அயோத்தி ராமர் கோவில்
79-அமைச்சர்களின் வெறுப்பு பேச்சு
80-கட்டாய சூரிய வணக்கம் / யோகா
81-காவிரி நதி நீர் மேலாண்மை வாரியம், தீர்ப்பு & வன்முறை
82-டெல்லி விவசாயிகள் நிர்வான போராட்டம்
83-அதானிக்கு மட்டும் 72,000 கோடி கடன்
84-SBI மினிமம் பேலன்ஸ் 5000
85- சிறுபான்மையினர் விரோத போக்கு
86-மாட்டு அரசியல்
87- சிறுபான்மையினரும் தலித்துகளும் சங் பரிவாரங்களால் உயிருடன் அடித்து கொல்லப்பட்ட சம்பவங்கள்
88-நீட் தேர்வு
89-ரேஷன் மானியம் நிறுத்தம் .
_90 ஆதார் அட்டை குழா்படிகள்-
மருந்து பொருள் விலை உயர்வு
91- தேர்தல் வாக்குறுதி ஏமாற்று
92-குழக்கல்வி அமல்
93- தொழிலாளர்கள் வைப்பு நிதி சுரண்டல்
94-பெரு முதலாளிகளின் வாராக்கடன்
95-வெளிநாட்டு கருப்பு பண முதலீட்டாளர்கள் பெயர் வெளியிட மறுத்தல்
96- பதஞ்சலி மார்க்கெட்டிங்
97-வேதத்தில் அறிவியல் என்று பொய் பிரச்சாரம்
98- வைரஸ் ஒழிக்க கைதட்டு, விளக்கு ஏத்து
99- வைரஸ் பரவுவதை முஸ்லிம்கள் மீது பழி போடுவது
100. வைரஸ் அதிகம் பாதித்த தமிழகத்திற்கு குறைந்த நிதி ஒதுக்கீடு
101- கொரோனா தாக்குகின்ற நேரத்திலும் மக்களை காப்பாற்றாமல் அயோத்தியில் கோயில் கட்டுவது
102- பிரதமர் வைப்பு நிதி கணக்கு இருக்க, தவறான வங்கி கணக்கு தொடங்கி மோசடி

இவ்வளவு மோசடிகள், கொள்ளைகள், படுகொலைகள், பலாத்காரங்கள், மதகலவரங்களென செய்ததை தவிர மோடி அரசு மக்களுக்கு செய்த நல்ல திட்டங்கள் என்ன?

யார் இந்த ஜக்கி வாசுதேவ்..? கொலைகள், கற்பழிப்பு, மோசடி, நில ஆக்கிரமிப்பு - மோடி அரசு கொடுத்த "பத்ம பூஷன்" விருது..

40 வருடத்திற்கு முன்பு கோவைல இருக்குற ப்ரூபாண்ட் ரோடு மேம்பாலத்து கீழே கஞ்சா வித்துட்டு இருந்தவன்தான் ‘கிட்டு’ என்கிற ‘கிருஷ்ண மூர்த்தி’ என்கிற  ‘ஜாவா வாசுதேவன்’ என்கிற  “ஜக்கி வாசுதேவ்” இவனுக்கு இன்னொரு பெயரும் இருக்கு “கார்போரேட் சாமியார்”.

கஞ்சா வியாபாரம் செய்யும்போது இவனுக்கும் பிரபல ரவுடி ‘ரிச்சர்ட்டுக்கும் பழக்கம் ஏற்பட, இரண்டு பேரும் சேர்ந்தே கஞ்சா வியாபாரம் செய்துள்ளனர். பகலில் கஞ்சா விற்பனை இரவில் விபச்சார பெண்களுடன் உறவு என்று இருந்த இவர்களுக்கு, தொழிலில் பிரச்சினை வர ரிச்சர்ட்டை கொலை கொலை செய்திருக்கிறான் ஜக்கி.

அதேபோல ஜக்கியின் மனைவியை இவனே கொலை செய்து விட்டான் என்ற வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நிலுவை யில் உள்ளது, பல ஆண்டுகளுக்கு முன்பே மத்திய புலனாய்வுத் துறை மூலமாக தேடப்படும் குற்றவாளி என்று ஜக்கியை அறிவிக்கப்பட்டது.

தமிழகத்திலிருந்து தலைமறைவான கிருஷ்ணமூர்த்தி என்ற ஜக்கி மைசூரில் பதுங்கினான். மைசூர் அருகாமையில் அமைந்துள்ள கெம்மட்ட கிரி பகுதியில் ‘ரிஷி சம்ஸ்கிருதி வித்யா கேந்திரா’ என்ற யோகா பயிற்சி மையத்தில் எடுபுடியாக இருந்த ஜக்கிக்கு யோகா குருவான ரிஷி பிரபாகரிடம் நெருக்கம் ஏற்பட்டது. பின்னாளில் ரிஷி பிரபாகர் கோவையில் தன் நிறுவனத்தின் கிளையை ஜக்கி வாசுதேவ் மூலம் தொடங்க ஏற்பாடு செய்து அனுப்பி வைத்தான். 

இப்படி கோவையில் ஆரம்பித்த கிளையில் தன்னை ஜக்கி என்று அடையாளப்படுத்திக்கொண்டான். இவன் வளர்ச்சிக்கு இந்துத்துவா பிராமணர்களின் பத்திரிகைகளான தினமலர், தினமணி, ஆனந்த விகடன் போன்றவைகள் பெரிதும் உதவியது. மக்களிடம் இவனுடைய செய்திகளை பரப்பியது. முதலில் இது யோகா மையம் மட்டும்தான்,  நான் எந்த மதமும் இல்லை என்று அறிவித்த ஜக்கி பின்பு RSSயுடன் சேர்ந்து இந்துத்துவாவை பரப்பினான்.

1994 இல் இடத்தைப் பதிவு செய்து ஈஷா யோக மையத்தை 400 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து நிறுவிய ஜக்கி, 1996 இல் இந்திய ஹாக்கி குழுவினருக்கெனப் பிரத்தியேகமாக யோகா வகுப்பு, 1997 இல் அமெரிக்காவில் வகுப்புகள், 1998 இல் தமிழ்நாட்டு சிறைகளின் ஆயுள் கைதிகளுக்கு யோகா வகுப்பு என அடுத்தடுத்து ஜக்கியின் செயல்பாடுகள் விரிவடைந்தது.

அடுத்து “ஞானத்தின் பிரம்மாண்டம்” என்று லிங்கம் குறித்துக் கட்டுரை எழுத தொடங்கினான். அடுத்து லிங்க பைரவியின் அருமை பெருமைகளை அவிழ்த்துவிட்டான். லிங்க பைரவி வீட்டில் இருந்தால் செல்வமும் ஆனந்தமும் பெருகும் என்று பக்தர்களுக்கு ஆவலை தூண்டி, லிங்க பைரவிக்குக் கோவில் கட்டப் போகிறேன் நிதி வேண்டும் என்றான். 4.5 கோடி செலவில் லிங்கபைரவிக்குக் கோவில் கட்டும் திட்டத்தை அறிவித்த ஜக்கிக்கு  20 கோடி கிடைத்து. 

கடவுள் உருவாவதாய் கூறி பக்தர்களுக்குக் கட்டணமாக ரூபாய் 7 ஆயிரம்,10 ஆயிரம், 50 ஆயிரம் என்று ஆரம்பித்து 10 லட்சம் வரை வசூலித்தான். 50 ஆயிரத்தில் கட்டணம் செலுத்துபவர்கள் ஜக்கியின் அருகில் இருந்து கடவுள் உருவாவதை காணலாம். 10 லட்சம் செலுத்துபவர்கள் பிரகாரத்தின் உள்ளேயே அதாவது லிங்கபைரவி அருகில் இருந்தே கடவுள் உருவாவதை காணலாம். நமக்கு இது வேடிக்கையாகத் தெரியலாம் ஆனால் ஈஸாவில் இது தான் வாடிக்கை. இந்த நேரத்தில் பாஜக அரசு ஜக்கிக்கு விருது கொடுத்துப் பிரபலப்படுத்துகிறது. இதுவரை யோகா மாஸ்டராக இருந்தவன். இப்போது ஆன்மீகத் தலைவராக அவதரித்துவிட்டான். 

ஜக்கி பல கொலைகள், கொள்ளை, கற்பழிப்பு, குற்றவாளிகளை மறைத்து வைத்து என்று பல இல்லீகள் வேலைகளையும் செய்தான். ஜக்கியின் சீடர்கள் இன்று ஆண்களும் பெண்களுமாக 4000 பேர் இருக்கின்றனர். இவர்களில் பலர் தங்கள் சொத்துகளை ஜக்கியிடம் ஒப்படைத்து விட்டு துறவிகளாக ஜக்கியின் சேவகர்களாக வாழ்கின்றனர். தங்கள் குழந்தைகளை ஜக்கியிடம் பறிகொடுத்துவிட்டு தவிக்கும் பெற்றோர்கள் ஏராளம். 

நல்ல வேலையில் இருக்கும் பெண்களை இன்று மொட்டை போட்டு காவி உடை அணிவித்து தான் நடத்தும் கார்ப்ரேட் ஆன்மீக சாம்ராஜ்ஜியத்துக்குச் சேவை செய்ய வைத்துள்ளான். பெண்களை வசியம் செய்து கற்பப்பையை நீக்கி விடுகிவிடுவது, ஆசிரம கொலைகள், குழந்தைகளை பெற்றோர்கள் பார்க்க அனுமதி இல்லை, பக்தர்கள் தற்கொலை என்று ஏராளமான வழக்குகள் ஜக்கி மேல் பதியப்பட்டுள்ளது. மதவாத கும்பல் ஆட்சி செய்வதால் எந்த வழக்கிற்கும் நீதி கிடைக்கவில்லை.

ஈஷா யோகா மையத்தில் நீராடுவதற்கு ஆண்களுக்கு ஒன்று பெண்களுக்கு ஒன்று என இரண்டு குளங்கள் இருக்கிறது. இரண்டிலும் பாதரசத்தால் செய்யப் பட்ட லிங்கம் நீருக்குள் மூழ்கிய நிலையில் இருக்கும் . பாதரசத்தை இப்படிப் பொதுவெளியில் பயன்படுத்தக் கூடாது, அது ஆபத்தானது. சுவாச பிரச்சனையை ஏற்படுத்தக் கூடியது. சமீபத்தில் அந்தக் குளத்தில் குளித்த மாணவர் ஒருவர் எந்த விபத்தும் இன்றி இறந்து போனது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் அதுகுறித்து நடவடிக்கை எடுக்க அதிகார வர்க்கம் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அதிகார வர்க்கம் தான் நடவடிக்கை எடுக்கவில்லை அரசு என்ன செய்தது என்று கேள்வி எழலாம். மத்திய அரசு (2017 ஆம் ஆண்டு ) நாட்டின் உயர்ந்த விருதான `பத்ம விபூஷண்` வழங்கி கவுரவித்தது. 

பிரதமர் மோடி நேரில் வருகை தந்து ஆதியோகி சிலையை திறந்துவைத்தார். சிலை அமைக்கப்பட்ட  இடம் மொத்தம் 44 ஏக்கர் அளவைக் கொண்டது. இந்த நிலம் அச்சு சாமி கவுண்டர் என்பவர் வினோபாவேயின் பூமிதான இயக்கத்திடம் ஒப்படைத்து, அது அச்சுசாமி கவுண்டரிடம் பண்ணை ஆட்களாக இருந்த இருளர் சமூகத்தைச் சேர்ந்த 13 குடும்பங்களுக்குப் பிரித்துக் கொடுக்கப்பட்டது. 

இன்று அந்த நிலங்கள் அபகரிக்கப்பட்டு ஜக்கியிடம் இருக்கிறது. அங்கு தான் ஆதியோகி சிலை தியான நிலையில் அமர்த்தப்பட்டுள்ளது. இந்த நிலத்தை மீட்டு தர ராஜ்குமார் என்ற இளைஞர் முயன்றார். அப்போது எதிர்கட்சி தலைவராக இருந்த செல்வி. ஜெயலலிதாவை (21-1-2008) நேரில் சந்தித்துப் புகார் அளித்து உதவுமாறு கோருகிறார். புகார் கொடுத்த ஐந்து நாட்களில் (26-1-2008) ராஜ்குமார் கொலை செய்யப்பட்டார். வழக்கு ஒன்னுமில்லாமல் போனது. இந்த நிலம் வனத்துறைக்கு சொந்தமானது. இதனால் சட்டவிரோதமாக நிலத்தை ஆக்கிரமித்து கட்டியுள்ள கட்டிடத்தை இடிக்கும்படி தமிழக அரசு 2012-ம் ஆண்டு நோட்டீசு அனுப்பியது. சட்டத்தால் ஜக்கியை ஒன்னும் செய்யமுடியவில்லை.

அடுத்து, ஆசிரமத்தில் இருக்கும் லதா மற்றும் கீதா ஆகியோர்களின் பெற்றோர்களான காமராஜ், சத்தியஜோதி தம்பதிகள் முன்வைத்திருக்கும் முக்கிய குற்றச்சாட்டுகள் தங்கள் மகள்களை ஜக்கி ஏமாற்றி வலுக்கட்டாயமாக அடைத்து வைத்திருக்கின்றார் என்பது மட்டும் அல்ல. தங்கள் பெண்களுக்குக் கருப்பை நீக்கம் செய்திருக்கின்றார்கள் என்பது போன்ற பயங்கரமான குற்றச்சாட்டுகளையும் முன்வைத்து இருக்கின்றார்கள். எந்த நீதிமன்றமும் இவ்வழக்கை கண்டுகொள்ளவில்லை. இப்போது பெற்றோருக்கு மகள்களை பார்க்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இப்படி இந்தப் பொறுக்கியின் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. தேர்தல் நேரம் திருப்பூர் அருகில் பிடிபட்ட கண்டைனர் பணமும் இவன் ஆஸ்ரமத்திற்கு சொந்தமானதுதான். மோடியால் அது மறைக்கப்பட்டுவிட்டது.

இதையெல்லாம் அறிந்த பத்திரிகை நிருபர்கள் நேரம் வரும் போது ஜக்கியிடம் இதுபற்றி கேள்வி கேட்க வேண்டும் என இருந்த நிலையில்... கோவை வ.உ.சி. மைதானத்தில் ஆனந்த அலை மகா சத் சங் நிகழ்ச்சியில் சுமார் 25 பத்திரிகையாளர்கள் கலந்து கொண்ட அந்தச் சந்திப்பில் மாதம் இரு முறை வெளிவரும்‘ஆயுதம்’ இதழின் செய்தியாளராக பணியாற்றி வந்த மூத்த பத்திரிகை யாளர் எஸ். பூபதி கண்ணன் என்பவர் ஜக்கியைப் பார்த்து கீழ் வரும் கேள்விகளை சரமாரியாக கேட்கத் துவங்கினார்..

1. உங்கள் யோகா மையத்தில் வெளிநாட்டில் தேடப்பட்டு வரும் குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது உண்மையா?

2. மேலும் யோகா மையத்திற் குள்ளும் உங்கள் வளாகத்தைச் சுற்றி உள்ள ஒரு சில இடங்களி லும் வெளிப்புற மரங்களிலும் இரகசிய கேமிரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறதே உண்மையா?

3. உங்கள் பெயரை ஜாவா வாசுதேவ் என்பது எப்போது ஜக்கி வாசுதேவாக மாற்றிக் கொண்டீர்கள்?இதுவும் உண்மையா?

4. மேலும் 1970 ஆம் ஆண்டு கோவை அவிநாசி ரோடு மேம்பாலத்தின் கீழ் கஞ்சா விற்றதாக கோவை காட்டூர் பி3 காவல் நிலையத்தில் வழக்கு உள்ளதாக கூறப்படுகிறது உண்மையா? 

கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காமல் உடனே ஜக்கி செய்தியாளரைப் பார்த்து, “உனக்கு மனநிலை பாதிக்கப்ப்டடதுபோல உள்ளது. அதனால்தான் கேள்விகளை இப்படி கேட்கிறாய்” என்று கூற, சக பத்திரிகையாளர்கள் அதிர்ச்சியடைய – மீண்டும் ஜக்கியின் மனைவியின் சாவில் இருக்கும் கேள்விகளைக் கேட்டபோது, அருகில் இருந்த அவருடைய சீடர் களிடம் மௌனமாக ஜாடை காட்ட, 4 குண்டர்கள் செய்தியாளரை வெளியே தூக்கிக் கொண்டு வந்து ஒருவர் அவருடைய வலது கையை முறுக்கிக் கொண்டும், இன்னொருவர் அவருடைய பாக்கெட்டிற்குள் பத்திரிகையில் இவர் பணிபுரியும் அடையாள அட்டையைப் பறித்துக் கொண்டும் மற்றும் 2 பேர் தோள் பட்டை யில் சரமாரியாக தாக்கினார்கள். வலி தாங்க முடியாமல் கத்தியபோது, சக பத்திரிகை யாளர்கள் வெளியே வந்து பார்த்தவுடன் தாக்குதலை நிறுத்தினர்.

இது சம்பந்தமாக அன்று இரவே தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜே.பி.ஆர். மற்றும் சக நிர்வாகிகளுக்கும் தெரியப்படுத்தி மறுநாள் (14.2.2011) அன்று காலை சுமார்100க்கும் மேற்பட்ட நிருபர்கள் ஈஷா மையம் ஜக்கி மீது புகார் கொடுத்தனர்.

புகாரைப் பெற்றுக் கொண்ட கோவை மாநகர காவல்துறை ஆணையர் சைலேந்திரபாபு சம்பந்தப்பட்டவர்கள் மீது விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இதன் அடிப்படையில் அருகிலுள்ள பந்தைய சாலை பி4 காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாருக்கு காவல்நிலைய ஆய்வாளர் நகல் பிரதியை வழங்கினார். நகலின் பதிவு எண்.433/1808. இது இன்று வரை கிணற்றில் போட்ட கல் போல நன்றாக உறங்கிக் கொண்டிருக்கிறது.

இப்படிப்பட்ட ஏமாற்று, கற்பழிப்பு, கொலைகாரனுக்கு தான் மோடி "பத்ம பூஷன்"விருது வழங்கியிருக்கிறான். 

பல குற்றவழக்குகள்  ஜக்கி மீது இருப்பதால், இந்த விருதை அவனிடம் திருப்பி வாங்குகள் என்று போடப்பட்ட வழக்கு கூட இன்னும் விசாரிக்காமல் நிலுவையில் உள்ளது.