Wednesday, May 26, 2021

ஈஷா மையத்தின் மர்மம் - அடிக்கடி ஆம்புலன்ஸ் அமரர் ஊர்தி - தகவல் வெளியிட மறுக்கும் ஜக்கி - நடவடிக்கை எடுக்காத அரசு..

தமிழ்நாட்டில் கொரோனாவின் பாதிப்பு 800 மேல கடந்து போயி.. மூணாங்கட்டத்துக்கு வந்துருச்சு னு சொல்ற பீலா கணக்குல, ஈஷா மையத்தில 150 மேல வெளி நாட்டுகாரங்க தனிமைப்படுத்தபட்டு இருக்காங்களே.. அவுங்க கணக்கு எல்லாம் ஏன் வெளில வரமாட்டிக்குது.?. ஈஷா மையத்தின் எந்த தகவலும் வெளியில் வராதபடி  ரகசியமாக மக்களை ஏன் பராமரிக்கனும்?.

ஈஷா மையத்தில 150க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர்கள் தனிமைப்படுத்தப்பட்டு,  அந்த வளாகத்தில் இருக்குற மருத்துவமனையிலும், அறைகளிலும் தங்கவைத்து ஈஷாவில் உள்ள மருத்துவர்களால் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர்களில் எத்தனைப் பேருக்கு கொரோனா தொற்று உள்ளது, இல்லை, இறப்பு இருக்கிறதா? என்பதை பற்றிய எந்த விவரமும் இல்ல. சமீபகாலமாக ஈஷா யோகா மையத்தில் ஆம்புலன்ஸ்களும் அமரர் ஊர்திகளும் சுற்றித் திரிகின்றன என்கிறார்கள் அந்தப் பகுதியைச் சேர்ந்த மலைவாழ் மக்கள். 

ஈஷா மையத்தில் சுடுகாடு ஒன்று இருக்கிறது. அந்த மையத்தில் இறப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை வெளிஉலகுக்கு தெரியாமல், அங்கேயே உரிய முறையில் இறுதிச்சடங்கு நடத்தி முடித்துவிட ஜக்கி வாசுதேவால் முடியும். இதுவரை எந்த தகவலும் அரசுக்கும், மக்களும் தெரியாதபடி அனைத்தையும் ஜக்கி வாசுதேவ் தலைமையில் ஈஷா மையமே கவனித்துக்கொள்கிறது. 

இது சம்பந்தமா ஈஷா மையத்தில கேட்டா.. அவுங்க சொல்ற பதில் "மலேசியா, சிங்கப்பூர் போன்ற கொரோனா பாதித்த கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து யாரையும் நாங்கள் வரவழைக்கவில்லை. நாங்க கொரோனா பற்றி முன்னதாகவே தெரிந்திருந்ததால் கோரோனா தொற்று பரவுகின்ற நாட்டு மக்கள் ஈஷா மையத்திற்கு வர அனுமதிக்கபடவில்லை"னு

சிவராத்திரிக்காக வந்த வெளி நாட்டவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டு ஈஷாவின் கட்டிடங்களுக்குள்ளேயே தனிமைப்படுத்தப் பட்டிருப்பதாக செய்திகள் பரவிய நிலையில முதல்வர் எடப்பாடி "ஈஷாவுக்குள் இருக்கும் ஒவ்வொரு வரையும் பரிசோதனை செய்ய வேண்டும். அப்படி கொரோனா அறிகுறி இருந்தால் ஈஷா கூட்டத்தில் பங்கேற்றவர்களையும் சோதனைக்கு உட்படுத்துவோம்"னு அறிக்கை விடுறாப்புல. 01.04.2020ல்

அதுக்கு ஜக்கி பேட்டி கொடுக்கிறான் "இங்கே மஹா சிவராத்திரிக்காக வந்த வெளி நாட்டவர்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் படுவதற்கு முன்பே எல்லோரும் ஈஷாவை விட்டு தங்கள் நாடுகளுக்கு கிளம்பி விட்டார்கள் . ஒருவர்கூட வெளி நாட்டவர்கள் இங்கே இல்லை. எங்கள் ஈஷா மருத்துவர்களை வைத்து பரிசோதனை செய்ததில் இங்கே தங்கி உள்ள வாலண்ட்ரீஸ் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று இல்லை. அதனால் யாரும் பரிசோதனை செய்ய வேண்டிய அவசியமில்லை"  னு 

ஈஷா மையத்தில் என்னதான் நடக்கிறது என்று கோவை மாவட்ட கலெக்டர் ராஜா மணியிடம் நக்கீரன் டீம் கேட்டபோது, கலெக்டர் கூறியது "அரசின் ஊரடங்கு உத்தரவு வந்த பிறகு நான் அந்த மையத்தை மூடவைத்தேன்.அங்கிருந்த 153 வெளி நாட்டினர்களைத் தனிமைப்படுத்தினேன். அவர்களில் பலருக்கு அங்கு தனிமைப்படுத்துதலில் உட்படுத்தும் காலக்கட்டம் முடிந்து விட்டது. அவர்களுக்கு மருத்துவப் பரி சோதனைகள் செய்யப்பட்டன. அதில் ஒருவருக்குக் கூட கொரோனா நோய்க்கான அறிகுறிகள் இல்லை. ஈஷா மையத்தில் இருந்து மலேசியா நாட்டைச் சேர்ந்தவர்களை நாங்கள் விமானத்தில் ஏற்றி அனுப்பினோம்" என்று
 
ஈஷா மையம் வெளிநாட்டுகாரங்க யாரும் இங்க இல்ல னு சொன்னது. கோவை கலெக்டர் 153 பேர பரிசோதனை பண்ணுனோம் னு சொல்றாரு..

ஜக்கி மலேசியா இருந்து யாரும் சிவராத்திரி நிகழ்ச்சிக்கு இங்க வரல னு சொல்றான்... கலெக்டர் மலேசியாவுக்கு பத்தரமா அனுப்பிச்சியாச்சி னு சொல்றாரு..

இதுல யாரு பிராடு தனம் பண்றாங்க.. ஈஷா மையமா..? அரசா..?

153 பேருக்கு பரிசோதனை பண்ணுனீங்க சொன்னா.. எந்த மருத்துவமனைல பண்ணுனீங்க? எப்போ பண்ணுனீங்க..? அதோட தகவல் எங்கே? 153 பேரு எந்த நாட்டை சேர்ந்தவுங்க? 
வெளிநாட்டுள பிளேட் கேன்சல் பண்ணிருக்கும் போது எப்போ, எந்த பிளேட் ல அனுப்புணீங்கா? 
மொத்தம் எத்தனை பேரு நிகழ்ச்சில கலந்துகிட்டது?
தமிழ்நாட்டில் எத்தனை பேரு?

ஏதாவது ஒரு தகவல் சொல்லமுடியுமா.. இந்த அரசால?

இந்த லச்சனைத்துல ஈஷா மையம் "நாங்கள் மக்களுக்கு சேவை செய்ய ஆம்புலன்ஸ்களை அனுப்பிவைக்கிறோம். ஈஷா மையத்தின் மீது தவறாக வதந்தியை கிளம்புகிறார்கள்" னு ஊடகத்தில பரப்பிட்டு இருக்கு.

கேரள கொல்லம் மாவட்டத்துல இருக்குற மாதா அமிர்தானந்தமயி மடத்தில மடத்தில் நிரந்தரமாக 600 வெளிநாட்டவர்கள் எப்பொழுதும் தங்கியிருப்பாங்க. மடத்தில் நூற்றுக்கணக்கான வெளிநாட்டினர்கள் தங்கியிருக்கிறார்கள் என்கிற தகவல் கேரள அரசுக்கு கிடைத்தது.கேரள அரசு உடனடியாகக் கொல்லம் மாவட்ட கலெக்டர் அப்துல் நாசரை அந்த ஆசிரமத்திற்கு அனுப்பியது. அப்துல் நாசர் ஆசிரம ரிக்கார்டுகளை உடனடியாக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தர விட்டார்.முதலில் மறுத்த மாதா அமிர்தானந்த மயி அடுத்து ரிக்கார்டுகளை குடுத்துருக்கு.

கணக்கு எடுத்ததில மொத்தம் 68 வெளிநாட்டினர்கள், அதுல 25 பேருக்கு இருமல், சளி போன்ற கரோனா அறிகுறிகள் இருந்ததால அவர்களை அங்கிருந்து அரசாங்க ஆஸ்பத்திரிக்கு கொண்டு போய் கரோனா சோதனை முழுமையாகச் செய்து முடித்தார்கள்.

இதையெல்லாம் முறையாக அறிக்கையாக எழுதி,கொல்லம் மாவட்ட கலெக்டர் அப்துல் நாசர் கேரள மாநிலத் தலைமைச் செயலாளருக்கு அனுப்பி வைத்தார்.அதன்பிறகு கேரள அரசு மாதா அமிர்தானந்தமயி மடத்திற்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்தியது.

இதுமாதிரி எந்த நடவடிக்கையும்  தமிழ்நாட்டு அரசு ஈஷா மையத்தில எடுத்துருக்கங்களா..? கொரோனா மொத்த கணக்கு சொல்லிட்டு முஸ்லிம்களுக்கு மட்டும் ஒரு கணக்கு சொல்லுற பீலா ராஜேஷ் அறிக்கையில ஈஷா பத்தின தகவல் ஏதும் வந்திருக்கா..? முதலில் ஈஷா மையத்துக்குள்ள போக காவல் துறைக்கு அனுமதி இருக்கா..? 

எந்த நியூஸ் சேனாலும் ஈஷா மையத்த பத்தி கேள்வி கேக்காம வேற எதையோ பிஜேபி காரங்கள உக்கார விவாதம் நடத்திக்கிட்டு இருக்கு.. உண்மைய எவ்வளவு நாள் மறைக்க முடியும்?

130 கோடி மக்கள் தொகை இருக்குற இந்திய நாட்டுல, 8000 கோடி பேருக்கு 5000 கோடி நிதி உதவி செஞ்சிட்டு இருக்கு பிஜேபி அரசு னு ஒரு பொம்பள சொல்லிட்டு இருக்குனா... நம்மள எவ்வளவு முட்டாளா நினைச்சிட்டுருப்பாங்க...

No comments:

Post a Comment