திருச்சிக்குப் பக்கத்தில சிறீரங்க கோயில்ல துலாபாரம் நடத்துருக்கு.. செஞ்ச பாவத்துக்கு ஏத்த மாதிரி எடைக்கு எடை பொருள கடவுளுக்கு குடுக்கப்படுறதா சொல்லிட்டு, ஐயர்ங்க ஆட்டய போடுற நிகழ்ச்சி, துலாபரம் கொடுத்தவர் யார் தெரியும்களா?
அது சுந்தர பாண்டியன். இப்படி சொன்னா நம்ம ஆளுகளுக்குத் தெரியாது. மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் னு சொன்னா தெரியும். நம்மாள்களுக்கு சினிமாவோடு லிங்க் பண்ணிதான் தெரிய வைக்கணும்
அந்த மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் ஒரிசா வரைக்கும் படைஎடுத்துக்கொண்டு போனான். தெற்கே இலங்கை வரைக்கும் படை எடுத்துப் போனான். இந்த நாடு முழுவதையும் அவனுடைய ஆட்சியின் கீழ கொண்டுவந்து பெரிய பேரரசாக சக்கரவர்த்தியாக ஆண்டான் னு வரலாறு சொல்லுது.
ஒரு ஐயர் சுந்தரபாண்டிய மன்னனிடம் "நீ பல போர்களை செய்திருக்கிற, பல உயிர்களைக் கொன்றிருக்கிற.. அந்தப் பாவத்தைப் போக்கத் துலாபாரம் செய்ய செய்யணும்" னு சொல்லிருக்குறான். மன்னனும் "சரி செஞ்சிட்டா போச்சி.. துலாபாரம் எங்கே செய்யலாம்?" னு கேக்க., "சிறிரங்கத்தில போயி பெருமாளுக்கு செய்வோம்"னு பூணுல் போட்ட ஐயர் சொல்ல, மன்னனும் "சரி.. அப்படியே பண்ணிறலாம்"னு சொல்லிட்டான்.
சுந்தரபாண்டியன் துலாபரம் கொடுக்குற மேட்டர கோயிலுள இருக்குற ஐயர்ங்கிட்ட சொல்ல.. ஐயர்ங்க கோயிலில தராசு கட்டி துலாபரத்துக்கு ரெடி பண்றாங்க
சுந்தரபாண்டியன் பட்டுச் சட்டை வேட்டியோடு துண்டை எல்லாம் போட்டு கோயிலுல இருக்குற ஜனங்களுக்கு ஒரு கும்புட போட்டு தராசில் உட்காரப் போனான். அப்போ.. ஒரு பட்டர் கேக்குறான் "மன்னா.. எடைக்கு எடை என்ன தரப் போகிறீர்"னு
(எடைக்கு எடை சாக்குப்பை நிறையா வெள்ளரிக்காய் தாறேன், கத்தரிக்காய் தாறேன், தக்காளி தாறேன், பழம் தாறேன் னு சொன்னா.. ஐயர்பயலுக மூடிட்டு வாங்கிட்டு வீட்டுக்கு போயிருப்பாங்க...)
ஆனா.. சுந்தரபாண்டியன் சொன்னது"நான் எடைக்கு தங்கம், பொருள்கள் தரப் போகிறேன்" னு
இவன் இப்படி சொன்னதும் பார்ப்பன மூளை வேலை செய்ய ஆரம்பிச்சிருச்சி.. "எடைக்கு எடை தங்கம், வைரம் எல்லாம் கொடுக்கப் போறாான். எல்லாம் நம்மவாளுக்குத்தான் கிடைக்க போது, இவன் பட்டு வேட்டி சட்டையோட தாரசுல உட்காரக் கூடாது" னு ஒரு ஐயர் ஆரம்பிக்கான் "மன்னா.. நீங்கள் எதற்காக துலாபாரம் செய்கிறீர்கள்?"னு கேக்க, மன்னன்"போர்க்களத்திலே பெற்ற வெற்றிக்காகவும், அங்கே செய்யப்பட்ட படுகொலைக்கு பாவ சாந்திக்காகவும் தான்"னு சொல்ல,
"ரொம்ப மகிழ்ச்சி. நீங்க துலாபாரம் செய்யுங்கள். அந்தத் தங்கத்தை எல்லாம் கொடுங்க.. ஆனால் ஒன்று. நீங்கள் போர்க் களத்திற்கு எப்படி போனீர்களோ அந்த மாதிரி உடை, பொருள்களை அணிந்து கொண்டு உட்காருங்கள்"னு ஒரு ஐயர் சொல்றான்.
அங்க இருக்குற எல்லா ஐயர் பயபுள்ளைகளும் கணக்கு போட ஆரம்பிச்சுட்டாங்க "போர்க்களத்திற்குப் பட்டு வேட்டியையும் துண்டையுமா கட்டிக் கொண்டு போவான்? போர்க்களத்திற்கு எப்படி போவான்? பெரிய இரும்பு உடைவாள், ஈட்டி, கேடயம் இரும்புக் கவசம், தலைப்பாகை இதை எல்லாத்தையும் கொண்டு போவான்.. இதுவே ஒரு 50 கிலோக்கு சேரும், அப்றம் சுந்தரபாண்டியன் ஒல்லியான ஆள் இல்ல,. நல்ல குண்டான ஆள். இந்த உடைகளைப் எல்லாம் போட்டால் இன்னும் 50 கிலோ வைரம் எக்ஸ்ட்ரா வரும்" னு பிளான்ன போட்டு... "சுந்தரபாண்டிய மன்னா.. நீங்க போருக்கு எப்படி போனீங்களோ.. அத மாதிரி தராசுல உக்காருங்க,.. அப்போதான் நீங்க செஞ்ச பாவம் போகும்"னு ஐயர்ங்க சொல்ல ஆரம்பிட்டாங்க.
போரில எதிரிகள பாத்து நடுங்காத சுந்தரபாண்டியன் இந்த ஐயர், பட்டர் பயக கோரஸ்ஸா சொன்னத பாத்து நடிங்கிட்டான். உடனே தளபதிய கூப்ட்டு.., உடைவாள், கவசம், ஈட்டி எல்லாம் எடுத்துட்டு வர சொல்லி, போருக்கு போன மாதிரியே தராசில் உட்காரப் போறான்.
"கொஞ்சம் பொறுங்க மன்னா" னு இன்னொரு பூணுல் போட்ட பெரிய பட்டர் கேக்குறான் "நீ எதற்காக துலாபாரம் இப்படி செய்யப் போகிறாய்?"னு கேக்க.., இப்ப யாரு.. னு பாத்த மன்னன் "போர்க் களத்திலே பெற்ற வெற்றிக்காக அங்கே செய்யப் பட்ட படுகொலை பாவங்களைப் போக்குவதற்காக செய்கிறேன்"னு சொல்ல,
அதுக்கு பட்டர் "சரி, நல்லா பண்ணுங்கோ... திவ்யமா பண்ணுங்கோ... ஆனா ஒன்னு, போர்க்களத்திற்கு எதன்மீது போனீர்கள்" என்று கேட்டவன் "போர்க்களத்திற்கு யானை மீது தானே போனாய்?"
(யானையோட, ஒவ்வொரு தந்தமும் மட்டும் 20 கிலோ எடை இருக்கும். மன்னனோட யானை டன் கணக்குல வெய்ட் இருக்கும்) இத கணக்குபோட்ட பட்டர் "யானையோடு வந்து மன்னன் சுந்தர பாண்டியன் உட்கார வேண்டும். யானையோடு மட்டுமல்ல, யானை மீது உட்கார்ந்திருந்த அம்பாரியோடு உக்காரவேண்டும்"னு சொல்ல அங்க இருக்குற ஜனங்க, பொண்டு பொடுசுக எல்லா சிரிச்சிட்டாங்க.
பக்கத்திலே இருந்த ஐயர்ங்க எல்லாம் கோரஸா.."ஆமா மன்னா.. நீங்கள் அவர் சொல்லுகிற மாதிரி யானைமீது வாருங்கள்"னு சொல்ல ஆரம்பிக்க.. அங்க இன்னோரு ஐயர் குருப்பு "இப்ப எப்படி இவன் துலாபாரம் கொடுக்கிறான்னு பார்ப்போம். அதும் யானை மீது அம்பாரி கொடுக்கிற அளவுக்கு"னு பேசி சிரிக்க ஆரம்பிச்சுட்டாங்க.
சுந்தரபாண்டியன் சிரிக்கல "யானைக்கு எடையா எதுல வச்சி கொடுக்க, தாரசு இல்லயே ?"னு கேக்க, அதுக்கு ஐயர் பயக "அத நாங்க பாத்துக்குறோம்.. நீங்க யானையோட வந்தா மட்டும் போதும்"னு சொல்லிட்டு தாரசு ரெடி பண்ண ஆத்தங்கர மண்டபத்திற்குப் போனாங்க, காவிரியில நிறையத் தண்ணீ ஓடுனது வசதியா போனதால.., இரண்டு பரிசலைப் யானையயும், பொருளயும் வைக்கிற மாதிரி பெருசா செஞ்சி.., ரெண்டையும் ஆத்துல மிதக்க விட்டுடாங்க.
அப்றம் சுந்தரபாண்டியன யானையோட ஒரு பரிசல்ல நிக்க வச்சிட்டு, இன்னொரு பரிசல்ல பொருள்கள கொட்ட சொன்னானுக. சுந்தரபாண்டியனும் தங்கம், அரண்மனல இருக்குற பொருள எல்லாம் கொட்டி சிறிரங்க கோயிலுக்கு துலாபரம் கொடுத்தான். அதற்கப்புறம் சுந்தரபாண்டியன பார்ப்பனர்கள் மேளதாளத்துடன் கூட்டிப் போக பெரிய திருவிழா மாதிரி கொண்டாடியிருக்காணுக.
எல்லாம் முடிச்சதும் ஏமாளியான சுந்தரபாண்டியன், அந்த கோயில் தலைமை பட்டரைப் பார்த்து "சாமி... எனக்கு ஒரு கோரிக்கை இருக்கிறது"னு கேக்கான்.
(சுந்தரபாண்டியன் யாரு..?.. மன்னாதி மன்னன். தென்னாட்டு சக்ரவர்த்தி, பேரரசன், அவனுடைய கண் அசைவுக்கும், கை அசைவுக்கும் மக்கள், மன்னர்கள், கைகட்டி காத்திருக்கின்றாங்க.. அவ்வளவு பெரிய இந்த சக்கரவர்த்தி.. பட்டரிடம் "சாமி, எனக்கு ஒரு கோரிக்கை இருக்கு.. இந்தக் கோவில் வளாகத்திற்குள்ளயே என்னுடைய சிலை ஒன்றை வைத்துக் கொள்கிறேன்" னு கேக்க..
அதுக்கு அந்த பட்டர் பய.."இல்ல, இல்ல.. ஆண்டவனுடைய ஆலயத்தில் சாதாரண மனிதனுடைய சிலை வைப்பதற்கு இடம் இல்லை"னு மறுத்துட்டான்.
சுந்தரபாண்டியன் நினைச்சிருந்தா இந்தக் கோவிலையே இடித்து தரைமட்டமா ஆக்கியிருக்கலாம். அவனுடைய ஆதிக்கத்தில தான் அந்த கோவிலும் இருக்கு. இந்த ஐயர், பட்டரெல்லாம் அவன் போடுற பிச்சையில உயிர் வாழ்ரவுங்க, அந்தப் பெருமாளும், கோயிலுமே அவன் போடுற பிச்சையில தான் வாழ்ற நிலைமை இருக்க, அவன் இவ்வளவு செல்வத்தைக் கொடுத்தும், ஒரு ஓராமா கூட அவனுடைய சிலைய வைக்க விடல.
அதுக்கு பிறகு ஒரு கட்டப்பஞ்சாயத்து நடத்தி,... "சிலையெல்லாம் வைக்க விடமாட்டோம், வேணுமுனா.. நீங்க பிறந்த நட்சத்திரத்தில உங்களுக்கு ஒரு பூஜைய போடுறோம், அர்ச்சனைய பண்றோம் னு பட்டர்கள் சுந்தரபாண்டியன்கிட்ட சொல்லியிருக்கானுக. அந்த அர்ச்சனை சிறிரங்கத்து கோயிலுல இன்னைக்கு வரைக்கும் நடந்துட்டு இருக்கு..
BJP காரன் போட்டோ சாப்புக்கு 2 ரூபாய் குடுக்குற மாதிரி, இந்த ஐயர் பயபுள்ளகளுக்கு தட்டுல 1 ரூபாயோ, 2 ரூபாயோ போட்டாலே போதும் அர்ச்சனைய பண்ண போராணுக.. மலைபோல செல்வத்தை கொடுத்துட்டு ஒரு அர்ச்சனைக்காக மன்னன் அங்கே கைகட்டி நின்னுருக்கானா.... எவ்வளவு பெரிய முட்டாளா இருப்பான் சுந்தரபாண்டியன்..?
நம் முன்னோர்கள் அப்பவே முட்டாள்தான் பாஸு...
நான் சொல்லுவதெல்லாம் கதை இல்ல. எல்லாமே சீறீரங்கம் கோயில் கல்வெட்டில் இருக்கிறது. யார் வேண்டுமானாலும் போய் பார்த்துக் கொள்ளலாம். அப்பிடியாவது உங்களுக்கு புத்தி வரட்டும் மக்களே..
இந்த பூணூல் பார்ப்பனர்கள் அந்த காத்துல இருந்து இப்போ வரைக்கும் நம்மள இப்படித்தான் ஏமாத்திட்டு வாரங்க.. இதுக்கு உதாரணமா நடைமுறைல இருக்குற.. பார்ப்பனர்களின் RSS இயக்கத்தால் வழிநடத்தப்படுற மோடி ஆட்சிய சொல்லலாம்.. மக்களோட வரிப் பணத்தையெல்லாம் பார்ப்பன முதலாளிகளுக்கும், பானியா முதலாளிகளுக்கும் வாரி கொடுத்துட்டு, இப்போ கொரோனா நிவாரண நிதிக்கு மக்கள்ட்டயே காசு கேக்குறாங்க.. ஏண்டா...எங்ககிட்ட பணமிருந்தா நாங்களே எங்கள பாத்துக்கமாட்டோம்..?
அது என்ன..மக்கள்ட்டயே நிதி வாங்கி மக்களுக்கே செலவு பண்றது..?
No comments:
Post a Comment