அட்சய திருதியை நாள்ல தங்கம் வாங்கி சேர்த்தா வருசம் பூராம் தங்கம் வளரும், மேலும் மேலும் வாங்கிட்டே இருக்கலாம், லட்சுமி புள்ள வீட்டுள்ளயே வந்து உக்காந்திருக்கும் னு தின, வார பத்திரிகையும், மீடியாவும் கார்ப்பரேட் கொடுத்த விளம்பரத்த பல லட்ச ரூபாய அவன்கிட்ட வாங்கிட்டு அதுக்கு ஒரு புராண கதைய ரெடி பண்ணி மக்கள ஏமாத்த பப்ளிஸ் பண்ணுது.
நீங்களும் அது உண்மை னு இன்னைக்கு வாங்குனா வருசம் பூராம் தங்கம் வங்கலாம் னு உழைச்ச பணத்த கார்ப்பரேட் காரண்ட்ட அள்ளி கொடுக்கீங்க. இந்து மக்களே உங்களுக்கு உண்மையாவே அறிவு இருந்தா சிந்திங்க..? இந்த நாளுள தங்கம் வாங்குனா பெருகும் னு நெனைச்சா முதல தங்கத்த கார்ப்பரேட்காரன் தானே வாங்கி வைக்கணும்..? அவன் வாங்காம இருக்குற தங்கத்த எதுக்கு உங்ககிட்ட விக்கணும்?
தங்கம் விக்கிறதுக்கு ஒரு பொய்யான கதையா சொல்லி உங்க தலைல காட்டுனா.., அத நம்பி ஏமாறலாமா..? உங்க இந்து புராணத்தில எங்கயும் இந்த நாளில தங்கம் வாங்கி சேர்கிறதா எந்த புராணமும் சொன்னதில்ல. அட்சய திருதியைனா தானம் கொடுக்குறதான் போட்டுருக்காணுக.
உங்களுக்கு உண்மையா அறிவு இருந்தா "தானம் குடுக்குறது தான் அட்சய திருதியை"னு புராண கதையோட விளம்பரம் பண்ணுன தங்கமயில், ஜோய் ஆலுகாஸ், ஜாஸ் ஆலுகாஸ், ஜியோ ஸ்மார்ட் கிட்ட கேளுங்க.
அட்சய திருதியை பத்தி உங்க புராணம், இதிகாசத்துல நோண்டி பாத்தா அதுல தங்கம் வாங்குற பத்தியே இல்ல. "அட்சயம்"னா அரிசி.. அந்த புராண கதை கூட நீங்க நினைக்குற மாதிரி தெய்வீக கதை இல்ல, அது மஹாபாரதத்துல வர்ர சோத்து சட்டி கதை அவ்வளவு தான்.
ஒரு டையம் துர்வாச முனிவன் ஒரு படையோட பாண்டவர்கள் வீட்டுக்கு விருந்துக்கு போறான். அதுக்கு முன்னாடியே தர்மன் தவம் பண்ணி ரிஷிங்ககிட்ட ஒரு அச்சயபாத்திரம்ங்கற ஒரு குண்டாசட்டிய வாங்கி பாஞ்சாலிட்ட குடுத்து வச்சிருக்கான்.
அந்த அட்சயகுண்டாசட்டில எவ்வளவு வேனுமானாலும் சோறு குழம்பு ஒரே டயமுல ரெடி ஆகும். அப்படி ஒரு ரெம்ப பவர்புல்லான மந்திரச்சட்டி அது. அதுலயும் ஒரு கண்டிசன் இருக்கு. சாப்பாட்ட ரெடி பண்ணி சாப்பிட்டு முடிசத்துக்கு அப்றம் அந்த சட்டிய கழிவி கவித்திட்டா, மறுபடியும் சோறு ரெடி பண்ணமுடியாது. அந்த மந்திரசட்டியோட பவர் அடுத்த நாள்தான் வேலசெய்யும்.
விருந்துக்கு வந்த முனிவன் "யப்பா தர்மா.. நாங்க குளிச்சிட்டு வாறோம், நீ சாப்பாடு ரெடி பண்ணி வையி" னு தர்மன்ட்ட சொல்லிட்டு ஆத்துக்கு குளிக்க போயிருறான். தரம்மனும் பாஞ்சாலிய கூப்பிட்டு "அடியே இன்னைக்கு துர்வாசமுனிவன் நம்ம வீட்டுக்கு சோறு திங்க வாரான். அவன் ரெம்ப கோவகாரன். நீ போயி அந்த மந்திர சட்டில நெறைய சாப்பாட்ட ரெடி பண்ணி எடுத்து வை"னு சொல்றான்.
அதுக்கு பாஞ்சாலி "என்னங்க.. நான் இப்பதான் சட்டிய கழுவி கவித்தி வச்சிட்டேன். அதுல சோறு நாளைக்குத்தான் ரெடியாகும். இப்ப என்னங்க பண்றது..?"னு தர்மன்ட்ட சொல்றா. அதுக்கு தரம்மன் "ஏன்டி அப்பிடி பண்ணுன.. முனிவன் வந்ததும் சோறு னு நிப்பான்டி.. நீ என்னமோ பண்ணி ரெடி பண்ணு"னு சொல்லிட்டு கெளம்பிருறான்.
பாஞ்சாலி என்ன பண்ணலானு முழிச்சிட்டு இருந்தப்போ ஒரு யோசனை வருது. உடனே கிருஷ்ணன நெனைக்கா. கிருஷ்ணனும் இவ முன்னாடி வந்து டொய்ங் னு நின்னுட்டு "என்ன பாஞ்சாலி ஏதும் குழந்த கிழந்த வேணுமா"னு கேக்கான். அதுக்கு பாஞ்சாலி "அதுஒன்னும் இப்ப வேண்டாம். நாங்க சாப்பாடு பண்ணுற மந்திரசட்டிய கழிவி கவித்தி வச்சிட்டேன். இந்த முனிவ பயவேற சோறு னு வந்து நிப்பான். எனக்கு சாப்பாடு பண்ண ஏதாவது ஹெல்ப் பண்ணு"னு சொல்றா.
அதுக்கு கிருஷ்ணன் "நீ உன்னோட சட்டிய இங்க எடுத்துட்டு வா பாஞ்சாலி"னு சொல்றான். அதுக்கு பாஞ்சாலி "அத நான் கழிவி கவித்திட்டேன். அதுல நாளைக்குத்தான் சோறு ரெடி பண்ணமுடியும்"னு சொல்றா. அதுக்கு கிருஷ்ணன் "சொல்றத பண்ணுடி"னு அனுப்புறான். அவளும் சட்டி எடுத்துட்டு வந்து கிருஷ்ணன்கிட்ட கொடுக்க. சட்டிய பாத்த கிருஷ்ணன், சட்டிக்குள்ள ஓரமா ஒரு சோத்து பருக்க ஒட்டிக்கிட்டு இருந்தத பாஞ்சாலிட்ட காட்டுறான்.
அத பாத்து குஷியான பாஞ்சாலி "எப்பிடி கிருஷ்னா இத கண்டுபிடிச்ச"னு கேக்குறா. அதுக்கு கிருஷ்ணன் "உன்னோட கழுவுமானம் தான் ஊருக்கே தெரியுமே"னு சொல்றான். அந்தநேரம் அங்க வந்த தர்மன் "சரியா சொன்னீரு கிருஸ்ணா... இவ எந்த சாமனையும் சரியா கழுவி வைக்கிறதில்ல. இப்ப உமக்கும் இந்த மேட்டர் தெரிஞ்சி போச்சா" னு சிரிக்கிறான்.
அப்போ கிருஷ்ணன், அந்த ஒட்டிக்கிட்டு கிடந்த ஒத்த சோத்து பருக்கையையும் எடுத்து சாப்புடுருறான். அத பாத்து கோவமான பாஞ்சாலி "உன்ன ஹெல்ப்க்கு கூப்பிட்டா.. இதையும் எடுத்து சாப்பிட்ட. இப்ப நான் எப்பிடி சோறு ரெடி பண்றது"னு கேக்கா.
அதுக்கு கிருஷ்ணன் "நான் சாப்டா.. அந்த முனிவங்க சாப்பிட்ட மாதிரி"னு சொல்லிட்டு மறைஞ்சிருறான். முனிவங்களுக்கும் வயிறு மந்தமா இருக்க. பாஞ்சாலி வீட்டுக்கு வந்த முனிவர் "இன்னைக்கு விருந்து கேன்சல்"னு சொல்லிட்டு கெளம்பிருறான்.
இவ்வளவு தாங்க அட்சய திருதியை கதை.. இது எங்க தங்கம் வருது? வந்தவுங்களுக்கு சோறு போடணும் னு வருது. அதுவும் இந்த பார்ப்பன புளித்திக மேலு வலையாம சோறு திங்கறதுக்கு எழுதி வச்சிருக்கானுக.
இந்த நாளுலதான் கிருதியாயுகம் பொறந்தது கதை விடுவான், சொக்கநாதன் மீனாட்சி கல்யாணம் னு சொல்லுவான், குசேலன் கதை, சிவனோட பிரம்மஹத்தி சாபம் போன கதை னு அளந்துவிடுவாங்க. ஆனா இந்த நாளில ஒரு குன்றிமணி அளவுக்கு நகை வாங்கினால்.., குண்டா குண்டாவா பெருகுமாம் னு எங்கேயும் சொல்லல.
இந்து மக்களே நீங்க பேப்பர்காரன் போடுற ஆன்மீகமலர் புத்தகத்த படிச்சி இனியும் ஏமாற வேண்டாம். அவுங்க சொல்ற மாதிரி நடந்தா.., போன வருசம், அதுக்கு முந்துன வருசம் னு அட்சய திருதியை நாளுள நகை வாங்கின அத்தனைப் பேரு வீட்டுலயும் குண்டா குண்டாவா தங்கம் பெருகியிருக்க வேண்டாமா..?
அட்சய திருதியை நாளுல தங்க வாங்குனா ஒரு மயிரும் பெருக்காது, அதுக்குமாறா நகைக் கடைக்காரங்களுக்கும், கார்ப்பரேட்காரனுக்கும் கொள்ளை வியாபாரமும், வருமானமும் பெருகும் இதுதான் தான் உண்மை.
இப்ப கூட ரிலையன்ஸ் கம்பெனிகாரன் மக்கள் லாக்டௌன்ல நகை வாங்க முடியாது னு ஜியோ ஸ்மார்ட் வெப்சைட்ல 20% கேஸ்பேக் னு வியாபாரம் பண்ணிட்டு இருக்கான். இதெல்லாம் உங்கள முட்டாளாக்கத்தானே தவிர இதுல உங்களுக்கு கிடைக்க போறது ஒன்னுமில்ல. ஏற்கனே அட்சய திருதியைக்கு வாங்குற நகைகள்ல கலப்படம் இருக்கு னு கோர்ட்டில கேஸ் போயிட்டு இருக்கு.
அறிவ இருந்து யோசிங்க மக்களே.. அவனுக அளந்துவிடுற கதைகளை நம்பி ஏமாற வேண்டாம்.
No comments:
Post a Comment