Wednesday, May 26, 2021

அம்பேத்கர் கருத்துகளுக்கு கொல்லி வைக்கும் செயல் - நாயக வழிபாடு தேவையா..? - அடையாள வெறியர்கள்..

"அரசியல் பக்தி அல்லது நாயக வழிபாடு என்பது நிச்சயம் சீரழிவுக்கான பாதையாக அமைந்து, இறுதியில் சர்வாதிகாரத்திற்கு வழிவகுக்கும்" சொன்னவர் அண்ணல் அம்பேத்கர்.

"கடவுளையோ, மகான்களையோ சார்ந்திருக்க வேண்டாம். எளிய மனிதனாகிய என்னைக் கடவுளாக்க முற்படுகிறார்கள். அது தவறு. தலைமை வழிபாட்டு எண்ணத்தை முளையிலேயே கிள்ளியெறிய தவறுவீர்களாயின், அது உங்கள் அழிவுக்கே வழிவகுக்கும்" னு ரெம்ப தெளிவா சொல்லியிருக்காரு நம்ம அண்ணல்.

ஆனால் ஒரு முப்பது வருசமாவே அவர கடவுளாக்கும் முயற்சிகள் தலித் மக்களின் அறியாமை யின் வெளிப்பாடாய், சாதி அடையாளத்தின் திமிராகவும், சாதிய சுயவிளம்பரமாகவும் அது அம்பேத்கரின் விருப்பத்துக்கு மாறா நடந்து வருது.

வேற எந்த தலைவருக்கும் இல்லாத அளவுக்கு சிலைகள் அவருக்கு இருக்கு. உலகம் முழுவதும் எடுத்துட்டா கூடா அண்ணல் அவர்களுக்கு தான் அதிக சிலைகள் இருக்குனு பெரும பேசுற  தலித் மக்கள் ஒரு முப்பது வருசமாவே மெல்ல மெல்ல சிலை நிறுவுதலை ஒரு வழிபாட்டுச் சடங்காக மாற்ற வச்சதுமில்லாமல், அண்ணல் சிலைக்கு பொங்கல் வைக்குறது.. மொட்ட போடுறது.. தேர் இழுத்து ஊரவளம் போகுறது னு அவரை கடவுளாக்கவே மாத்துறாங்க.

அவர தலைவராகவும், மக்களின் வழி காட்டியாகவும் நாம ஏத்துகிட்டா அவரோட கருத்துக்களை நாம பின்பற்றனும், அவர் சொன்ன வழியில நடக்கணும்.. எதுக்கு இவ்வளவு சிரமம்..?  அவர கடவுளாக்கி, சிலை வழிபாடு நடத்திட்டா போதும் வருசத்துக்கு ரெண்டு முறை பொங்கல் வச்சி, நிகழ்ச்சி நடத்தி, ரெண்டு வணக்கத்த வச்சிட்டு கெளம்பிரலாம் ங்கற மனநிலை தான் இங்க நிறைய பாக்க முடியுது.

இந்த மாதிரி இருந்தா நாம இப்படியே தான் இருக்கமுடியும், நம்மட்ட இருக் கின்ற மூடப்பழக்கங்கள தொலைக்க வேண்டிய அவசியமில்ல, கற்பி, ஒன்று சேர், புரட்சி ங்கிறதுக்கு வேலை இல்லயில..? இதத்தான் BJP காரனும் பண்ணிட்டு இருக்கான். அண்ணல் பத்தி படிச்சிற கூடாது, அறிவா வளர்ந்திற கூடாது னு அண்ணலயே கையில் எடுத்து அவன் கும்புட ஆரம்பிச்சிட்டான். இங்க அவனுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்..? கடவுள் வழிபாடு, நாயக வழிபாடு பண்றத்தான் நாமளும் பண்றோம் அவனும் பண்றான்.

நாயக வழிபாடு, தலைவர் வழிபாடு நம்ம மக்கள் புத்தியில  ஊறிக்கிடக்கிற ஒன்னு. அரசன் கடவுளின் பிரதிநிதி, பிராமணன் கடவுளின் பிரதிநிதி னு சொல்லி சத்திரிய வகுப்பை உருவாக்கி விட்டதிலிருந்தே இந்தமாதிரியான மனநிலை வரலாறு நெடுகிலும் நம்மள தொத்திட்டு இருக்கு. 

ஒரு அடிமை இன்னொரு அடிமைக்கு தலைவராக முடியாது. அண்ணல் அடிமைங்கிற விஷயத்த உடைச்சிதான் வெளிய வந்தார். நீங்களும் அதை உடைக்கணுமுன்னு பேசுனாரு. இங்க தலைவன் இல்லனா எதுவும் நடக்காது னு ங்கிற நிலைக்கு எதிரான ஜனநாயக நிலையை சமூகத்திலும், அரசியலிலும் கொண்டு வந்தார்.

தன்னை வணங்குவதையும், தன் காலில் விழுவதையும் அவர் ஒரு போதும் விரும்பியதில்ல. ஆனால் இன்று அவர் "வழிபாட்டுக்குரிய' தலைவராக மாற்றப்பட்டிருக்கிறார். இதோட இன்னொரு கேவலம், அறியாமையினால தலித்துகள் அம்பேத்கரை இந்துவாக்கவும் முயன்று வருகிறார்கள். இதைதான் இந்துத்துவாவும் பண்ணிட்டு இருக்கு.

முதுகில நாலஞ்சி ஊக்கால குத்தி ஓட்டைய போட்டு கிரேன்ல மாட்டி, அதுல தொங்கிட்டு போயி அம்பேத்கர் சிலைக்கு மாலை போடுறது என்ன மனநிலை..? அறிவில்லாம பணறாங்க னு இத கூட விட்டுறலாம். ஆனால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த செயலை ஆதரிச்சி ஜெய் பீம்.. ஜெய் பீம்..னு கத்துறாங்களே.. இது என்ன மாதிரி மனநிலை..?

தொங்கிகிட்டு மாலை போட்டவன கூட சரி செஞ்சிறலாம், ஆனா தொங்கவிட்டு வேடிக்கை பாக்குற கூட்டத்த எப்படி சரிசெய்ய முடியும்..? இது அம்பேத்கருக்கு செய்யும் எவ்வளவு பெரிய துரோகம்..? மோசடி..? இதுதான் "கற்பி ஒன்றுசேர் புரட்சிசெய்"ங்கிறத இங்க விளங்கிகிட்டதா..?

எங்கயோ மூளையில நடக்குறத சொல்றேன் னு நினைக்க வேண்டாம். இது மாதிரி கேவலமான புத்தி நமக்குள்ளேயும் இருக்கு. அம்பேத்கர் கருத்துக்கள புறக்கணிச்சி அவர் உருவத்தை மட்டும் வழிப்படுற கேவலகேட்ட புத்தி நம்மகிட்டயும் ஊறி கெடக்கு.

ஊருல மாரியம்ம்மா, காலியம்மா, சிவராத்திரி, பாரிவேட்டை னு எந்த திருவிழாவானாலும் அம்பேத்கராத்த தான் கடவுளுக்கு விளம்பர போர்டா வைக்கிறான். சோப்பு விளம்பரத்துக்கு வர்ற கதாநாயகி மாதிரி. "நான் சாகும் போது ஒரு இந்துவாக சாகமாட்டேன்"னு சொன்ன மனிதர உங்க மூடத்தனத்துக்கும், உங்க சாதி அடையாளத்துக்குமா அவரை அடையாளப்படுத்துறது..? அவர் எழுதிய ஏராளமான கட்டுரைகள், ஆராய்ச்சிகள், புத்தகங்கள், போராட்டங்கள் எல்லாம் இதுக்குதானா..?

திருவிழாகளிலே சினிமா நடிகர் படங்கள் எப்படி பயன்படுத்த படுகிறதோ.., அப்பிடி அண்ணல் படங்களும், பேனர்களும் பயன்படுத்தப்படுகிறது. அண்ணல் கருத்துக்களை மறைச்சி சாதிக்கு, மதத்துக்கு அடையாளப்படுத்துரதால இங்க விரிசல் தான் ஏற்படும். "அது அழிவை நோக்கித்தான் போகும்"னு அண்ணல்லே சொல்லியிருக்கிறார். அதும் ஒரு சைடு வளர்ந்துட்டு இருக்கு.

அம்பேத்கர் அனைவருக்குமான தலைவர். உங்களுக்கு பகுத்தறிவு இல்லனாலும் பரவாயில்ல, தயவுசெஞ்சி இந்த மாதிரி கேவலங்கெட்ட பணியில் இனிமேல் ஈடுபடவேண்டாம் னு சொல்ல விரும்புறேன். அவ்வளவு தான் சொல்லவும் முடியும்..

ஜெய் பீம்... #HBDஅண்ணல்அம்பேத்கர்

No comments:

Post a Comment