தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி ஊரவலம் ஒரு 15 வருசமாத்தான் பெரியளவில கொண்டாடபடுது. அதுக்கு முன்னாடி கிராமத்துல பிள்ளையார் குருபூஜை னு கோயிலுல பொங்கலும், சுண்டாலும் குடுத்துட்டு.., டிவி டெக் வாடைக்கு எடுத்தோ, இல்ல தெருவில திரை கட்டியோ "வெற்றி விநாயகர், பிரகலாதன், திருவிளையாடல்" னு ஏதோ படத்த போட்டு காட்டிட்டு" அவ்வளவு தான் விநாயகர் சதுர்த்தி முடிஞ்சது.. போயி பொழப்பு பாருங்க.. ங்கிற மாதிரிதான் தமிழ்நாட்டுல விநாயகர் சதுர்த்தி நடந்துட்டு இருந்தது. சென்னை கோவை போன்ற மாநகராட்சில ஏதோ ஒன்னு ரெண்டு எடத்துல சிலை வைச்சிட்டு விழா முடிச்சதும் கடலுலயோ, ஆத்துலயோ விநாயகர தூக்கி அமைக்கிட்டு அடுத்த பாடு சோலிய பாக்குற மாதிரிதான் இருந்து.
போன வருசம் விநாயகர் சதுர்த்தி பாத்திங்கனா... கிராம் கிராமமா பிளாஸ்மா புள்ளயார் சிலைய வச்சி வாரக்கணக்குள கும்புடுட ஆரம்பிச்சுட்டாங்க. கிராமத்தில இப்பட்டினா சென்னை, மதுர, கோவை, திருச்சி, திருப்பூர் னு ஒவ்வொரு சந்துக்குன்னு சிலைய வைச்சி, வாரக்கணக்குள பூஜய போட்டு ஆத்துல, கடலுல தூக்கி போட ஸ்பெஷல் பெர்மிஷன், ஊருக்குள்ள இருந்து வண்டி புடிச்சி காவி துண்ட கையில புடிச்சி ஆட்டிக்கிட்டு கத்திட்டே போக ஸ்பெஷல் பெர்மிஷன் னு வட இந்தியா ரேஞ்சுக்கு கொண்டுவந்துட்டாங்க.
புள்ளையார் சிலை வாங்க 10000, 15000 னு ரெடி பண்ண, தெரு தெருவா 50,100னு வசூல் செஞ்சி விழா முடிஞ்சதும் கடல்லயோ இல்ல ஆத்துலயோ தூக்கி போடுறதுல மக்களுக்கு அப்படி என்ன கிடைக்குது அதுல? பத்து பைசாவுக்கு பிரயோசன படாத ஒரு விசயத்த மக்கள் ஏன் கொண்டாடனும். இதனால லாபம் யாருக்கு இருக்கு.? புதுசா எங்க இருந்து இந்த மாதிரி முட்டாத்தனமான பழக்கம் வந்துச்சி..? எதுக்கு இவ்வளவு காவல்துறை பாதுக்காப்பு..? எதுக்கு கலவர பயம்? யாருக்காக விழா கொண்டாடுறீங்க?
மஹாராஷ்டிரா பேசுவாக்கள் (பார்ப்பனர்கள்) ஐயர் குடும்பம் மட்டும் கொண்டாடுற வழிபாடுதான் இந்த விநாயகர் சதுர்த்தி, அதும் வீட்டுக்குள்ளேயே நாலு விளக்க மட்டும் ஏத்தி கொண்டாடி முடிச்சிருவாங்க. பிரிட்டிசு ஆட்சிக்கு எதிரா பம்பாய் விநாயகர் சதுர்த்திய பிரபலப்படுத்தனமுனு இந்துமத வெறியனான பலகங்காதர திலகர் பண்ணுனா அரசியலுக்கு அப்றம் தான் நாடு பூராம் விநாயகர் சதுர்த்தி கொண்டாட ஆரம்பிச்சாங்க.
1900 ல இந்தியல பிளாக் வைரஸ் நோய் (இப்போ வந்துருக்குற கொரோனா மாதிரியான வைரஸ்) பரவி பம்பாய் மாகாணத்தில அதிக மக்களுக்கு மேல செத்துட்டு இருந்தாங்க. இந்த நோய கட்டுப்படுத்த நினைச்ச ஆங்கிலய அரசு, இந்த நோய் எலிகள் மூலமா பரவுதுன்னு நாட்டுல இருக்குற எலிகளை எல்லாம் கொல்ல சொன்னது.
பிளேக் நோய்க்குக் காரணமான எலிகளை கொல்ரவுங்களுக்கு சன்மானம் அறிவச்சது ஆங்கிலேய அரசு. ஆனால பால கங்காதர திலகரோ "எலிகள் விநாயகனின் வாகனம்" அத அழிக்க ஆங்கிலேய அரசு முயற்சி பண்ணுதுன்னு இந்து மக்கள்ட்ட பிரச்சாரம் பண்ணி, போராட்டம் பண்ணுனான். ஆங்கிலேயரும் "எப்படியோ செத்து தொலைங்கடா"..னு அந்தத் திட்டத்த கைவிட்டுருச்சி. அப்போ பம்பாய் மாகாணத்தில மட்டும் பிளேக் நோயால 1,80,000 மக்களுக்கும் மேல இறந்துட்டாங்க.
இப்பெல்லாம் நம்ம வீட்டுல எலி தொல்ல இருந்தா நோய் வரும் னு தெரிஞ்சி எலி புடிக்குற கூண்ட வச்சி எலிய புடிச்சி அடிக்கிறோம் இல்ல எலி மருந்து வச்சி கொல்றோம். இப்போ ஏவானாவது நம்மட்ட வந்து "எலி விநாயகர் வாகனம் ஜீ.. அத கொள்ளக்கூடாது ஜீ.. சோறு போட்டு வளங்க ஜீ.. னு சொன்ன... எந்தவொரு இந்துவா இருந்தாலும், அவன பொத்துனாப்புல கூப்பிட்டு "அப்பிடியா ஜீ..."னு பொடனிலேயே நாளு போடு போட்டு அனுப்புவாங்க.. அந்தமாதிரி திலகர பொடனில நாலு போட்டு அடிச்சி பத்தாமா, 1,80,000 மக்கள் நோயினால சாகுறத வேடிக்கை பாத்துட்டு இருந்திருக்காங்க.. திலகரயும் ஒரு சுதந்திர போராட்ட சொம்பு னு மரியாதை செஞ்சிட்டு இருக்காங்க. என்ன பண்றது.. நம்ம எச் ராஜா, நாராயணன், சோ, மதுவந்தியோட முன்னோர்கள்னா அறிவாளியாதானே இருந்துருக்கணும்.
இந்த எலிக்கு விநாயகன பயன்படுத்தி திலகரால செய்யப்பட்ட முதல் விநாயகர் அரசியல் அதுதான். "இது விநாயகனுக்கு கிடைச்ச வெற்றி"னு அதுக்குபிறகு விநாயகர் சதுர்த்தி விழாவ மும்பை முழுக்க கொண்டாடனும் னு விளம்பர படுத்தினாங்க. இப்படித்தான் விநாயகர் சதுர்த்திய ஊருக்குள்ள பரப்பிவிட்டாங்க.
அதுக்கு பிறகு பிரிட்டிசாரை வீழ்த்தி இந்து ராஜ்ஜியம் அமைக்கணும் னு விரும்பிய ஒருத்தன், இந்துமக்கள ஒண்ணுசேத்து விநாயாகர் ஊர்வல அரசியல நடத்த மதகலவரம் பண்ண ஆரம்பிச்சான். அவன் வேற யாருமில்ல, சிவசேனா இந்து இயக்கத்த ஆரம்பிச்ச பால் தாக்கரே தான். ஊர்வலம் நடக்கும்போதெல்லாம் கொலைகள், கலவரங்கள் பண்றது, குண்டு வைக்கிறது, இசுலாமியர்கள் மற்றும் பட்டியல் இனத்தவர்கள தாக்குறது, தாராவி தமிழ் மக்களை கொல்றதுன்னு எல்லாம் வன்முறையும் நடத்தி மகாராஷ்டிரால ஆட்சிய புடிச்சிட்டிட்டான்.
சிவசேனா ஆட்சிக்கு வந்ததும் விநாயகர் சதுர்த்தி வன்முறைகள் இன்னும் அதிகமாச்சி. பிஜேபி இந்த ஊர்வலத்த பயன்படுத்தி நிறைய கலவரம் பண்ணி மக்கள்ட்ட மதவெறிய தூண்டி பிரச்சாரம் பண்ணிட்டு இருந்தது. பிஜேபி கட்சிய பிரபலப்படுத்த RSS செயல் திட்டம் போட்டுட்டு இருந்தது.
தமிழகத்தைப் பொறுத்தவரையில், இந்து சமயத்தில ஆரம்த்துல இருந்தே விநாயகர் வழிபாடுங்கிற ஒன்னு இல்லவே இல்ல. சங்ககால தமிழ் இலக்கியங்கள பொரட்டி பாத்தாலும் சரி, புராணத்த நோண்டி பாத்தாலும் சரி, எதிலயும் விநாயகர் குறித்த எந்த குறிப்புகளும் இல்ல, சதுர்த்தியும் இல்ல. 3 நூற்றாண்டுக்கு முன்னாடி எழுதுன பக்தி இலக்கியங்களில பிள்ளையார் பற்றிய குறிப்புகள் இருக்கு, ஆனால் அதுக்கும் வடநாட்டு விநாயகனுக்கும் எந்த சம்பந்தம் இல்ல. அங்க விநாயகனுக்கு சத்தி புத்தி னு ரெண்டு பொண்டாட்டிய சேர்த்து 11 வைப்பாட்டி இருந்தது, இங்க புள்ளையார் தன் கையே னு மொட்டபயலவே இருந்தான். அதனால இங்க விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படல.
எந்த செயல் செஞ்சாலும் புள்ளையார் சுழி போட்டு ஆரம்பிப்போம் னு "உ"னா கீழ ரெண்டு கொடு னு போடுற பழக்கம் மட்டும் இருந்துச்சி.
இங்க பெரியார் இருந்ததால விநாயகன பத்தின கன்ராவி கதைய எல்லாம் காறி துப்புற அளவுக்கு மக்கள் மத்தியில பிரச்சாரம் பண்ணி விநாயகன வச்சி உருட்டு உருட்டு னு உருடனதுமில்லாம "இது என்ன எழவுடா"னு தூக்கிப் போட்டு ஒடச்சேப்புட்டாப்ல. அதனால தமிழ்நாட்டுல வட இந்தியனால விநாயகர தூக்கிட்டு மத பிரச்சாரம் பண்ணி மதகலவரத்த தூண்டமுடியல.
1993 மேல RSSன் கிளை அமைப்பான இந்துமுன்னணி விநாயகர சதுர்த்திய தமிழ்நாட்டுல கோவை, கன்னியாகுமரி, சென்னை, சேலம் னு கொண்டாட ஆரம்பிக்குறாங்க, தமிழ்ல சினிமா படம் எடுத்து புள்ளையார் கதைய பேசி பரப்புறாங்க.
இந்து மதவெறியர்கள விட விநாயகர் சதுர்த்திய தமிழ்நாட்ல அதிக பிரபலப்படுத்துனது மெண்டல் பய ரஜனி தான். பாட்சா படத்துல விநாயகர் சதுர்த்திய "ஓபியாரே...ஓப்பியாரே..." னு பாத்த ரஜினி ரசிகர்கள் அடுத்த வருசமே ஆட்டோ ஸ்டான்ட்ல சிலைய வச்சி கொண்டாட ஆரம்பிச்சுட்டாங்க.
முதல பூஜை னு ஆரம்பிச்சவனுக மெல்ல மெல்ல ஊர்வலம் சிலை கரைப்பு னு வடநாட்டுல மாதிரி இங்கயும் கொண்டாட ஆரம்பிச்சுட்டாங்க. புள்ளையார் பொம்மைகளும் காமெடி பீஸ் மாதிரி வேடிக்கையா இருந்ததால அப்போ பொறந்த 90கிட்ஸ் வாண்டுகல நல்லா கவர் பண்ணிருச்சி. இப்போ பொறக்குற வாண்டுகளுக்கு புள்ளயார கார்டூன்ல சேனல்ல காட்டி கவர் பண்றாங்க..
இதுக்கு முன்னாடி அவுங்க அவுங்க கைகாச போட்டு புள்ளயார் சிலை வாங்கி ஆத்துல கரைச்சவனுகளுக்கு கடந்த 3 வருசமா இந்துத்துவா அமைப்பே சிலைகளை கொடுத்து கொண்டாட சொல்லிருக்காங்க. சென்னைல நான் இருக்குற ஏரியால போன வருசம் இந்துமுன்னணி பயபுள்ளைக தான் 30000 செலவு பண்ணி, சிலை வச்சி டெக்ரேஷன் பண்ணி ஒரு வாரத்துக்கு அப்றம் நீங்க டாட்டா ஏஸ் புடிச்சி கரைக்க வந்தா மட்டும் போதும் னு ஊரவல கூட்டத்துக்கு ஆள் செத்துட்டு இருந்தாங்க. இங்க இருக்குற இளவட்ட பசங்களும் வண்டில விசில போட்டு, துண்ட ஆட்டிட்டே போயி கறைச்சிட்டு வந்தாங்க.
இந்த மாதிரி இளைஞர்கள் பண்றதால என்ன கிடைக்க போகுது..? 30000 குடுத்து ஊர்வலதுக்கு ஆள் செக்குறானா.. அதனால RSS, இந்துமுன்னணி பயலுகளுக்கு லாபம் என்னனு இங்க எவனாவது யோசிக்கானா...? வடநாட்டில இருந்து வந்து இங்க இருக்குறவுங்களுக்கு இந்துவெறிய தூண்டிவிடுறானா... அவனுகளுக்கு எவ்வளவு அரசியல் லாபம் இருக்கும் னு இங்க இருக்குறவுங்க புரிச்சிக்க மாற்றாங்க. இந்த மாதிரி மதத்தை வச்சி அரசியல் பண்றதுனாலதான் மோடி மாதிரி மொக்கயெல்லாம் பிரதமர் ஆரான்.
உங்கள இந்துக்கள் னு மதவெறிய தூண்டி பிரச்சாரம் பண்ணுன எச்ச ராஜா கொரோனா நிவாரண நிதியா ஆளுக்கு மாசம் 10000 மணியாட்டுற பூணுலுக்கு குடுங்க னு தமிழ்நாடு அரசுட்ட கேக்கனே.. ஏன் உங்களுக்கு கேக்கல....? நீங்களும் இந்துதானே...? இதுதான் RSS, இந்துமுன்னணியோட மதவெறி அரசியல்.. புரிஞ்சிக்கோங்க மக்களே..
நல்லவேளை அரசே இந்த வருசம் தடை பண்ணிருக்கு. இந்த கொரோன நேரத்திலயும் எப்பிடிடா கலவரத்த தூண்டலாமுன்னு RSS, இந்துமுன்னணி காரங்க ஊர்வலம் நடத்துவோம் னு கம்பு சுத்துறாங்க. வழக்கம் போல இந்து மக்கள் மனம் புண்படும் புலித்திப்படும் னு ஆரம்பிக்குறாங்க. அவனுக பித்தலாட்ட வேலைகளை மக்கள் எல்லாரும் புரிஞ்சிக்கிட்டா சரி..
No comments:
Post a Comment