Wednesday, May 26, 2021

வ.வெ.சுப்பிரமணிய ஐயர் எனும் பார்ப்பன சாதி வெறியன் - இவன் சுதந்திர போராட்ட தியாகியா..?

வ.வெ.சுப்ரமணிய ஐயர் ஒரு விடுதலை போராட்ட வீரர் னு பார்ப்பனர்கள் மட்டுமே சொல்லிட்டு திரியுவானுக. இதை பரப்ப RSSன் கிளையான இந்து முன்னணி, கேந்திர வித்யாலயா பள்ளி, விவேகானந்தா மெட்ரிகுலேஷன், தினமலர், தினமணி, ஹிந்து பத்திரிகை னு சுப்ரமணிய ஐயர ஏதோ பெரிய புடுங்கி மாதிரி சித்தரிச்சி வரலாறுங்கிற பேர்ல மாணவர்களிடமும், நடுத்தர மக்களிடமும் சொல்லி  மூளை சலவை செஞ்சிட்டு இருக்காங்க.

ஆனால் உண்மை என்னனா சுப்ரமணிய ஐயர் இந்திய விடுதலைக்காக ஒரு சின்ன துரும்ப கூட எடுத்து போடங்கறது தான் நிஜம். வடக்கில் எப்பிடி சாவர்க்கர் இந்துத்துவா வெறியனோ அதே மாதிரி தமிழ்நாட்டுல சுப்ரமணிய ஐயரும் ஒரு தீவிர இந்துத்துவா வெறியன். 

இவனோட வரலாற பார்ப்போம்..

திருச்சி தூய வளனார் கல்லூரியில் பி.ஏ.பட்டம் முடிச்சி, பிளீடர் முடிச்சி வக்கீலானான். இவனுடைய உறவினர் பசுபதி ஐயர் பர்மாவில் ரங்கூனில் இருக்க, பர்மாக்கு சென்று வக்கீலாகப் பணியாற்றினான். அங்கு மருத்துவத் தொழில் புரிந்து வந்தவருமான தி.சே.செளந்தரராஜன் என்பவரின் நட்பு கிடைத்தது. 

இவர் உதவியோடு பாரிஸ்டர் பட்டம் படிக்க இங்கிலாந்துக்குச் சென்ற ஐயர் அங்கிருந்த இந்தியா ஹவுஸ் எனுமிடத்தில் தங்கினார். அங்குதான் இந்துத்துவா வெறியனான சாவர்க்காருடைய நட்பு கிடைத்தது. அங்கேயே இந்து ராஷ்டிரத்துக்கான திட்டங்களை தீட்டினார்கள். இந்துத்துவா கருத்தை முக்கியமான இங்கிலாந்து நபர்களிடம் இந்திய சுதந்திரம் ங்கிற பேர்ல விவரிக்கவே இதை கவனித்த பிரிட்டிஷ் அரசு இவர்களை விசாரணை செய்ய தேடினர்.

பாரிஸ்டர் படிப்பு படிக்க வந்த ஐயர் சாவர்க்கர் கூட சேர்ந்து முழு சங்கியாக மாறிட்டான். படிப்பும் போச்சி வெளியில் சுத்துனா போலீஸ் புடிச்சிரும் னு லண்டன் போயி தலைமறைவாக இருந்தாங்க. இதுகிடையில் சாவர்க்கரின் நண்பனான மதன்லால் திங்க்கிர ஆங்கில அதிகாரியை கொலை செய்யவே லண்டன் போலீஸ் மதன்லால் மற்றும் சாவர்க்கரோடு அவன் கூட்டத்தையும் தேடிட்டு இருந்தது.

லண்டனில் சாவர்க்கரை கைது செஞ்சி சிறையில் அடைத்தது. சாவர்க்கரை சுப்ரமணிய ஐயர் சிறையில் சந்திக்க, லண்டன் போலீஸ் ஐயரை கைது செய்ய தேடுது. ஒரு வழியா கள்ள கப்பல் ஏறி கடலூரில் இறங்கின ஐயர் பாண்டிச்சேரியில் பதிங்கிட்டான்.

1911ல் இவன் பாண்டிச்சேரியில் இருக்குற செய்தி தெரிஞ்ச வாஞ்சிநாதன், ஆஷ்துரையை கொல்ல உதவிக்கெட்டு பாண்டிச்சேரிக்கு தன்னோட பார்ப்பன நண்பர்களோடு போறான். இங்கே தான் வ.வெ.சுப்ரமணிய ஐயர் வாஞ்சிநாதனுக்கும், நீலகண்ட பிரம்மச்சாரிக்கும் துப்பாக்கி சுடும் பயிற்சியும், வெடிகுண்டு செய்யும் பயிற்சியும் கற்று கொடுத்தான். 

பின்பு தேசபக்தன் என்ற பத்திரிக்கையில் ஆசிரியராக ஐயர் வேலை பாத்தான். அப்பறம் காசி, ஹரித்வார் னு போயி சாமியார்கூட இருந்துருக்கான். 

1922ல் திருநெல்வேலி சேரன்மாதேவியில் 'பரத்வாஜ் ஆசிரமம்'ங்கிற பேர்ல ஒரு ஆசிரமம் அமைச்சு முழுநேர சாமியாராக மாறிட்டான். அந்த ஆசிரமத்தில் தமிழ் வழியில் குலகல்வி கற்க ஒரு பாடசாலை ஆரம்பிச்சான்.

இந்த ஆசிரமத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ரூ.10,000 நிதி அளித்திருந்தது. பொதுமக்கள் சார்பிலும் நிதியுதவி அளிக்கப்பட்டது. பல்வேறு காங்கிரஸ் தலைவர்களின் பிள்ளைகள், இந்தக் குருகுலத்தில் தங்கிப் படித்து வந்தனர். அவர்களில், முன்னாள் முதலமைச்சர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரின் மகனும் ஒருவர்.

இந்த குருகுலத்தில் பார்ப்பன மாணவர்களுக்கு நல்ல வகை வகையான உணவும், பிரமணரல்லாத மாணவர்களுக்கு சாதாரண உணவும் போட்டுருக்கான் சுப்ரமணிய ஐயர். தண்ணீர்ப் பானையைகூட பார்ப்பன மாணவர்கள் குடிக்கவும், கீழ்சாதி மாணவர்கள் குடிக்கவும் தனித்தனியாக பிரித்து வைத்திருந்தான்.

ஒருநாள், ஓமந்தூராரின் மகன் பிராமணர்களுக்கென ஒதுக்கப்பட்டிருந்த பானையில் தண்ணீர் அருந்தியதைக் கண்ட வ.வே.சு ஐயர், அவனை அடித்து அப்புறப் படித்தியுள்ளான்.  பாதிக்கப்பட்ட மாணவன் அவனோட அப்பா  ஓமந்தூராரிடம் சொல்ல, அவனை அழைத்துக்கொண்டு போய் ஈரோட்டில் பெரியாரிடம் விவரத்தை கூறியுள்ளார். 

இதை கேட்டு கோபமான பெரியார், இது குறித்து விசாரிக்க 1925-ம் ஆண்டு ஜனவரி 17-ம் நாள், காங்கிரஸ் செயற்குழுவைக் கூட்டினார். குருகுலத்தில் அனைவருக்கும் சமமான உணவு, மற்றும் மரியாதை வழங்கப்படவில்லை என்றால் காங்கிரஸ் கமிட்டியில் இருந்து 10000 ரூபாய் எதுக்கு தரவேண்டும். இனிமேல் இதுபோன்று ஆசிரமத்தில் நடக்க கூடாது எனக் கமிட்டி கூட்டத்தில் தீர்மானம் போட்டார்.

ஆனால், இதை ஏற்க மறுத்துவிட்ட வ.வே.சு ஐயர், “இங்கு இப்படித்தான் நடக்கும்” என்று சாதி ஆணவத்துடன் பதிலளித்தார். இந்த தகவல் காந்தி வரை கொண்டுசெல்லப்பட்டது. ஆனால் பழைய சங்கி இராஜாஜியோ “குருகுலத்து நிர்வாகத்தில் நாம் தலையிடக்கூடாது” னு சொன்னான்.
 
இறுதியில் கமிட்டியில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு பெரியார் கோரிக்கை வென்றது. ஆனால் வ.வே.சு ஐயர் சரிசமமாக நடத்த முடியாது என்று கூறவே  காங்கிரஸில் இருந்து கொடுக்கப்பட்ட நிதியுதவி நிறுத்தப்பட்டது. ஒருநாள் குருகுல மாணவர்களுடன் பாபநாசம் சென்ற வ.வே.சு ஐயர், அருவியில் தவறி விழுந்து இறந்தும் போனான். அத்தோட குருகுலம் மூடப்பட்டது.

இந்தளவுக்கு பார்ப்பன சாதி வெறிப்பிடித்தவன் தான் வ.வே.சு ஐயர். ஆனால் இவனை தான் சுத்தமான சுதந்திர போராட்ட தியாகி என்று பார்ப்பன ஏடுகளிலும், பள்ளி புத்தகங்களிலும் குப்பிட்டுட்டுள்ளார்கள். இந்திய விடுதலை போராட்டத்தில் தமிழக வரலாற்றை எடுத்துக்கொண்டால் 80% சதவீதம் சுதந்திரத்திற்கு போராடியது பார்ப்பனர்களாகவே இருப்பார்கள். அந்தளவுக்கு வரலாற்றை திரித்து எழுதியிருக்கிறார்கள் பார்ப்பன சங்கிகள்..

No comments:

Post a Comment