Wednesday, May 26, 2021

தேவிகா என்ற 17 வயசு சிறுமி பாலியல் வன்புணர்வு செய்து படுகொலை - பாட்டிலால் குத்தி கிளிக்கப்பட்ட உடல் - பெண்கள் வர்க்கமாக எழுந்து உடலரசியல் பேசாமல் இதற்கு தீர்வு இல்லை.

தெலுங்கானா கொத்தகுடம் பகுதில் 17 வயது பழங்குடியின  சிறுமி தேவிகா பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். பாலியல் வன்புணர்வில் ஈடுபட்ட மிருங்கங்கள் சிறுமியின் உடல் நிர்வாணமாக ரயிவே டிராக்கில் வீசியுள்ளனர். வன்புணர்வுக்கு ஆளாகப்பட்ட சிறுமி பழங்குடி இனத்தை சேர்ந்ததால் இந்த பாலியல் படுகொலையை எந்த மீடியாவும் வெளியில் சொல்லவில்லை என்பது வேதனை.

என்டர் முடித்துவிட்டு கல்லூரி படிப்புக்காக காத்திருந்த சிறுமி இந்த மாதம் 22 அன்று இரவு தூங்கும் போது காணாமல் போயுள்ளார். அவளை தேடிய அந்த சிறுமியின் அம்மா போலீசில் புகார் கூறியுள்ளார். மறுநாள் 23 அன்று கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து சிறுமியின் உடல் மற்றும் பெண்ணுறுப்பு பாட்டிலால் கீரப்பட்டும், கிழிக்கப்பட்டும் படுகொலை செய்யப்பட்டு ரயில்வே டிராக்கில் நிறுவாணமாக கிடைப்பதை பாத்தவர்கள் தெரிவித்துள்ளனர். சிறுமியை சடலமாக பார்த்து கதறி அழும் தாய்க்கு இங்க என்ன நீதி கிடைத்திட போகுது. ஆயிரத்துக்கு மேற்பட்ட பாலியல் குற்ற வழக்குகள் நீதிபதிகள் மீதும், வழக்கறிஞர் மீதும் நிலுவையில் உள்ள நிலையில் இந்த ஆணாதிக்க சமூகம் என்ன நீதி வழங்கிற போகுது.

இந்த கோர பாலியல் படுகொலை 23ஆம் தேதி நடந்தும், எந்த நியூஸ் சேனாலும், பத்திரிக்கைகளும் செய்தியை வெளியிட மறுத்துள்ளது. செய்தியே வெளிய தெரியாத போது காவல்துறை பணி அங்கு எந்த லட்சணத்தில் இருக்கும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள். உடற்கூறு ஆய்வில் கூட்டு பலாத்காரம் செய்து கொல்லப்பட்டதாக அறிக்கை வந்துள்ளது. ஐந்து நாட்களாக வெளிவராத சம்பவம் சமூக வலைத்தளங்கள் மூலமும், Youtube மூலமும் #justicefordevika என்ற கேஷ்டேக் வெளிவந்து பாலியல் வன்புணர்வு படுகொலைக்கு நீதி கேட்டுகிறார்கள்.

குற்றம் என தெரிந்தும் ஒவ்வொரு நீதியை நாம் போராடியே தான் பெறவேண்டியுள்ளது. வழக்கம் போல "பொண்ணுக்கு நடுராதிரியில என்ன வேலை" என்று கலாச்சார காவளவர் கத்திக்கொண்டிருக்கிறார்கள். பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கி கொல்லப்பட்ட சிறுமி ஒரு பழங்குடி ST வகுப்பை சார்ந்த சிறுமி என்பதால் அரசே இதை மூடி மறைக்க பார்க்கிறது. நிர்பயா பாலியல் படுகொலைக்கு கொதித்தெழுந்த எந்த உயர் வகுப்பு மனிதர்களும் இந்த பழங்குடி சிறுமிக்கு நீதி வேண்டும் என்று கொதித்தெழவில்லை.

அய்யர் பொண்ணுங்கள் என்றால் மனிதாபிமானம் உடனே வரும் மத்த வேற்று வகுப்பு மக்கள் என்றால் ஒவ்வொரு நீதியும் போராடித்தான் பெறவேண்டும். பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை குற்றங்கள் இந்தியா முழுவதும் கொடூரமாக நடந்தேறி வருகிறது. 

தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய, அரியலூர் நந்தினி என்ற 15 வயது சிறுமியை இந்து முன்னணியைச் சேர்ந்த பொறுக்கி, பாலியல் வன்கொடுமை செய்து அவளின் பிறப்புறுப்பை சிதைத்து, அவளின் வயிற்றிலிருந்த சிசுவை வெளியே எடுத்து எரித்து கொலை செய்தார். 

ஆசிஃபா இந்த பெயரை யாராலும் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது. ரோஜா போன்ற அந்த குழந்தையை பி.ஜே.பி.யைச் சேர்ந்த கோவில் பூசாரி, 17 வயது சிறுவன், அந்த குழந்தையைத்  தேடிச் சென்ற காவல் துறை அதிகாரி என எட்டு பேர் சேர்ந்த கும்பல் மயக்க மருந்து கொடுத்து கோயில் கருவறையிலே வைத்து பாலியல் பலாத்காரம் செய்து குற்றுயிரும், கொலையுயிருமாக இருந்த அக்குழந்தையைக் கல்லை போட்டு படுகொலை செய்து காட்டில் வீசிவிட்டார்கள். நாடே ஆஷிபா படுகொலைக்கு நீதிகேட்டு வீதியில் இறங்கி போராடும் போது, BJP கட்சி குற்றவாளிகளை காப்பாற்ற போராட்டம் செய்தது.

இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள், அயனாவரத்தில் 11 வயது சிறுமியை பல பேர் கும்பல் ஏழு மாதமாக பாலியல் வல்லுறவு செய்துள்ளனர். 

இத்தனைக்கும் பெண்களுக்கு, குழந்தைகளுக்கான பாதுகாப்பு சட்டங்கள் அதிகம் உள்ள இந்த நாட்டில் தான் பாலியல் வன்முறைகள், படுகொலைகள் அதிகமா நடக்கின்றன. பிறந்த குழந்தையா, பள்ளி படிக்கும் சிறுமியா, வயது வந்த குமரியா, மனைவியா, குழந்தை பெற்ற தாயா, கூன் விழுந்த பாட்டியா என்ற எந்த வயது வித்தியாசமில்லாமல், பெண்கள் மீது நடத்தப்படும்  கொடூரங்களால்  பெண்கள் எப்போதும் ‘தான் ஒரு பெண்’ என்கிற எச்சரிக்கை உணர்வோடு பள்ளி, கல்லூரி, வேலை பார்க்கும் இடங்கள், பேருந்து, ரயில் என எங்கு சென்றாலும் பயத்துடனே போய் வருகின்றனர். இந்த அச்சம் அவர்களின் சொந்த வீட்டிலும் பின்தொடர்கிறது என்பது கொடூரம்.

இப்படி அச்சத்தோடும், பயத்தோடும் பெண்கள் வாழவே தகுதியற்ற நாட்டில் தான் பாதிக்கப்பட்ட பெண்ணையே குற்றவாளியாக்கி, உடை சரியில்லை, இரவு நேரத்தில் அங்கு என்ன வேலை, என அவள் நடத்தையின் மீதே சந்தேகப்பட்டு குற்றம் சாட்டுவது இச்சமூகத்தின் பொதுப்புத்தியாக உள்ளது. இதற்குக் காரணம்  பார்ப்பனியப் பண்பாடும், அது ஊட்டி வளர்க்கும் ஆணாதிக்கமும் தானே தவிற வேற ஏதுவுமில்லை. இந்த மதம் சார்ந்த ஆணாதிக்க மனநிலை தான் பெண் உறுப்புகளை அனுபவிக்க கூடிய பொருளாக மட்டும் பார்க்கும் மனநிலையை ஒரு மனிதனுக்கு ஏற்படுத்துகிறது. 

எந்த ஒரு மிருகமும் கூட்டு பாலியல் வல்லுறவில் ஈடுபடுவதில்லை. அவற்றை விடவும் மோசமானவனாக மனிதன் தாழ்ந்து போகக் காரணம் என்ன? 20 வயது கூட நிரம்பாத இளைஞனும், 80 வயதைத் தாண்டிய கிழவனும் பலாத்காரத்தில் ஈடுபடுகின்றனர். இவர்களை மனிதத்தன்மை அற்றவர்களாக மாற்றியது எது? இந்தக் கேள்விகளுக்கு பதில் தேடாமல், குழந்தைகளையும், பெற்றோர்களையும் எச்சரிக்கையாக இருக்கச் சொல்லி விளம்பரம் போடுவது பெரிய அயோக்கியத்தனம்.

முற்போக்கு, பகுத்தறிவு, பெண்ணியம் பேசும் பெண்கள் சிலர் அதிமேதாவி தனமாக "பெண்கள் என்றால் பாலியல் சுரண்டல், வல்லுறவு, பாலியல் சுதந்திரம் னு இதை மட்டும்தான் பேசனுமா..? பெண்கள் பொது அரசியல் பேசக்கூடாதா..?" என்று கேட்பார்கள். இந்தியா பெண்கள் பாதுகாப்பில் மிக மோசமான பட்டியலில் உள்ள நாடு. இங்கு பெண்கள் உடலியல், உடல் அரசியல் பேசுவது கட்டாயம் அது கடமையும் கூட. இதையெல்லாம் பேசாமல் நீங்கள் என்னதான் முற்போக்கு அரசியல் பேசினாலும் அது BJP பெண் வேட்பாளர் பேசும் அரசியல் மாதிரி தான் இருக்கும். சொல்றதுக்கு ஒன்னுமில்ல.

கோவிலுக்குள் வைத்து வல்லுறவு செய்யும் இந்துமத வெறியர்கள், பாவமன்னிப்பு கேட்கச் செல்லும் பெண்ணைச் சீரழிக்கும் பாதிரியார்கள், ஒடுக்கப்பட்ட பெண்களைச் சூறையாடும் ஆதிக்கச் சாதிவெறிக் கும்பல் என ஆணாதிக்க, காமவெறி நிரம்பி வழியும் மூளைகளைத்தான் சாதி, மதங்கள் உருவாக்கி வருகின்றன. இந்த சிந்தனைதான் பெண்களை ரத்தமும் சதையும் கொண்ட எல்லா உணர்வுகள் உள்ள சக மனுசியாக மதிக்காமல், பெண் என்றாலே அனுபவிக்கக் கூடியவள் என்ற மனநிலையை உருவாக்குறது.

பெண்களுக்கு என்று மதத்தால், சாதிய கட்டமைப்பால் தனியாக போதிக்கப்படும் ஒழுக்கம், கலாச்சாரம், பெருமை, புனிதம், மயிரு, மட்ட என்கிற இதையெல்லாம் உடைச்சேரிந்து வர்க்கமாக இணைந்து உடல் அரசியலை பேசாத வரை தேவிகா போன்று இன்னும் பல பாலியல் வன்புணர்வு படுகொலைகள் நடந்துகொண்டே தான் இருக்கும்.

#Justicefordevika

Douglas Muthukumar

No comments:

Post a Comment