உடல் என்பது அறிவியல்.. ஆனால் இங்க இருக்குற இருப்பாலினத்தாருக்கும் உடலியல் பற்றிய அறிவு சுத்தமா இல்லன்னு சொல்லலாம். இங்க நாம, நம்ம உடலுறுப்புக்கள அசிங்கமாவே பாத்து பழக்கிட்டோம். இந்த சமுதாயம் நம்ம அப்பிடியே பழக்கப்படுத்துது.
ஒரு கோவம் வந்து திட்டுணுமுனா கூட இங்க கொச்சை சொற்களாக நாம பிறரோடு உடல, உடலுருப்பதான் குறிப்பிட்டு திட்டுறோம். ஓத்தா.. கொம்மா.. பு... சு... னு ஒவ்வொரு ஏரியாவுலயும் வேற வேற மாதிரி அவுங்களுக்கே உரித்தான ஸ்லாங்ல திட்டுறாங்க.
இங்க அதிகமா திட்டப்படுறது பெண்களோட உடலை பற்றிய வசவுகள்தான். இரண்டு பேருக்கும் நடக்குற பிரச்சினைல திட்டும் போது., அவுங்க அம்மாவயோ, அவுங்க அக்காவயோ, தங்கையயோ, மகளையோ, மனைவியோ னு நீண்டுகிட்டேப்போது உடலுறுப்பை வச்சி திட்டுறது.
பெண்கள, பெண்களோட உறுப்புகள ஏன் இங்க அதிகமா குறிப்பிட்டு திட்டுறங்கனா.. இங்க பெண்களுக்கு கற்பு, ஒழுக்கம் னு பல பிற்போக்கான விஷங்க மதத்தால, அதோட தர்மத்தால காலங்காலமா போதிக்கப்பட்டு வருது.
இங்க திட்டும்போது கூட அந்த கொச்சை சொர்கள்ல ஆண் ங்கிற ஆணாதிக்கம் கலந்து வரும். "நீ என்ன பெரிய சு... யா?"னு திட்டுவாங்க. இதே பெண்னுறுப்ப திட்டும் போது "நீ ஒரு லூசு பு...... டா" இங்க திட்டுறதுல கூட எந்த விஷங்களுக்கு எந்த வார்த்தய பயன்படுத்துறாங்க னு இருக்கு.
இப்படி திட்டுறத வச்சே சொல்லிபுடலாம் நம்மளோட யோக்கியத்த.. பெண் உடலையும், உறுப்புகளையும் வச்சி திட்டுற இதே சமூகம் தான் பெண்கள புனிதமா நினைக்குமாம், பெண்களை போற்றுமாம், பெண்களை கொண்டாடுமாம்.
எவ்வளவு கீழ்த்தரமான சமுதாயத்தில நாம வாழ்ந்துட்டு இருக்கோம்.?
பெண்களை இங்க யாரும் புனித மயிரா மதிக்கவேண்டாம், கொண்டாட வேண்டாம். ஆண்களுக்கு சரியா பெண்களை நினைங்க போதும். இங்க இருக்குற ஆண்களால அது ஒருபோதும் முடியாது. சோறு சாப்பிட்டா கூட தட்ட கழுவ மாட்டாணுக, இங்கயெங்க சரி சமமா நினைக்குறது.?
பெண்கள் இல்லாம ஆண்கள் செக்ஸ் வச்சுக்கலாம், குழந்தையும் ஆண்களே பெத்துக்கிலாம் இருந்திருந்தால், நியோன்ட்ரோதல் இனம் அழிஞ்ச மாதிரி கற்காலத்திலேயே பெண்கள் இனம் அழிக்கப்பட்டிருக்கும்.
இந்த சமுதாயம்... பண்பாடு, கலாச்சாரம் னு பெண்களை இந்த நவீன காலத்துலயும் மிரட்டி, குடும்பம், கவுரவம், சாதி, மதம் னு அடைக்கியே வச்சிருக்கு. அவுங்க என்ன டிரஸ் போடணும் னு கூட இங்க ஆணாதிக்க சமூகம் தான் முடிவு பண்ணுது.
ஒரு பொண்ணு இங்க ஜீன்ஸ், டவுசர், லிப்டிக் போட்டுற கூடாது.. பாத்த உடனேயே ஐட்டம் னு முடிவு பண்ணி ஒரு டாப்பிக் பேச ஆரம்பிருவாங்க. ஏன்னா இங்க பன்பாட்டு உடை தான் போடனுமாம், அப்போதுதான் இவங்க சுத்தமான தமிழ் பொண்ணுங்களாம்.
உடை னு பாத்தா தமிழர்களுக்கு னு எந்த பண்பாட்டு உடையும் இல்ல, ரெம்ப எல்லாம் போக வேண்டாம், உங்க பாட்டியிடம் கேளுங்க அவுங்க குமரி பொண்ணா இருக்கும்போது எத்தனை மொலம் துணிய வச்சி உடம்ப மறைச்சாங்க னு தெரியும். சேலை தான் நம்ம கலாச்சார ட்ரஸ் னா.. பாட்டி காலத்துல ஜாக்கெட் கிடையாது. அந்த கலாச்சார உடையையே உங்க மனைவி மகளுக்கு போட்டு பாருங்களேன்.
30 வருசத்துக்கு முன்னாடி வரை ஜாக்கெட்குள்ள பிரா போட்டா இந்த சமூகம் அந்த பெண்ணை தேவிடியா னு பாத்துச்சி. ஆதாரம் வேணும் னா உங்க அம்மா அல்லது உங்க அம்மா வயதுள்ள பெண்களிடம் கேளுங்கள். அவுங்க அனுபவிச்ச மோசமான நிகழ்வ சொல்லுவாங்க. மார்புக்கு மேல ஆடை அணியாம இருந்த பெண்கள் சமூகமும் தமிழ்பண்பாட்டுல இருந்திருக்கு.
பெண்கள் கற்பழிக்கப்படுவதற்கு காரணம் அவுங்க உடுத்துற ஆடை தான் னு தமிழ்நாட்டுல நெறைய ஆண்கள் சொல்லிட்டு திரியுறானுக. ஆபாசமா பெண்கள் ஆடை அணியக்கூடாது னு பேஸ்புக், வாட்சப் னு பொலம்பிட்டு கெடக்காணுக. இவனுங்க எத ஆபாசம் சொல்றாங்க னு விளங்கல..
இங்க ரெண்டு வயசு குழந்தை போடுற டிரஸ் ல நாம என்ன ஆபாசம் பாக்கமுடியும்? 2 வயசு குழந்தை பாலியல் பலாத்காரம் பண்ணி கொல்லப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டுல ஊருக்கு ஒன்னாவது நடந்திருக்கும். அவ்வளவு கேஸ் நீதிமன்றத்துல குழந்தைகள், சிறுமிகள் மீதான பாலியல் பலாத்காரம் வழக்கு னு நிறைய இருக்கு. இதுவும் தமிழர் பண்பாடா..? கலாச்சாரமா?
இந்த யோக்கிய மயிருள இருந்துகிட்டு பெண்களுக்கு ஆடை கட்டுப்பாடு போடறதுக்கு, ஆடை கட்டுப்பாடு பத்தி பேசுரதுக்கு நமக்கு என்ன தகுதி இருக்கு..?
ஒரு நாலு வருசத்துக்கு முன்னாடி பொண்ணுங்க இப்போ போட்டுட்டு இருக்குற லெகீன்ஸ் பேண்ட எப்பிடியெல்லாம் படம் புடிச்சி facebook, whatapp, twitter னு போட்டாங்க.. "நல்ல குடும்பத்துல பொறந்த பொண்ணு இப்படி போட்டு திரியுமா"? "பச்சை தேவிடியாதான் இப்படி டிரஸ் போட்டு திரிவா"... "இது ஐட்டம் மச்சி" னு இப்படியெல்லாம் சமூக வலைத்தளங்களில photo போட்டு பதிவு போட்டாங்க னு நம்ம எல்லோருக்கும் நல்லாவே தெரியம்.
அதே லெகீன்ஸ் பேண்ட்ட தான் இப்போ உங்க வீட்டுல உங்க மனைவி, மக னு போட்டுட்டு இருக்காங்க.. இப்போ அந்த மாதிரி பேசமுடியாது. ஏன்னா நீங்க உங்க பார்வையை மாத்திக்கிட்டீங்க. மாற்றம் எப்போவுமே ஆண்களிடம் தான் வேண்டும். வரணும்.
இப்போ சமீபத்தில நடந்த பொள்ளாச்சி விஷயம் கூட ஒரு பெண்ணோட அழுகுரல், அண்ணன் ங்கிற சத்தம் மட்டும் தான் உங்களை யோசிக்க வச்சிருக்கும். உணர்ச்சில ரெம்ப பேரு, இந்த மாதிரி பண்றவுங்கள வெட்டனும், உறுப்ப அறுத்து போடணும் னு சமூக வலைத்தளங்களிலும், வீதி போராட்டத்துலயும் உணர்ச்சி பொங்க குதிச்சிருப்போம். இந்த மாதிரி கத்துறதாலயோ, பேசுரதாலயோ எந்த பயனும் இல்ல, இந்த சமுதாயமும் ஒரே நாலுல மாறிறப்போறதும் இல்ல.
ஒருவேளை அண்ணா னு கத்துற வீடியோ வெளிவரமா அந்த பசங்க எடுத்து வச்ச 1000 க்கும் மேற்பட்ட வீடியோ வெளில வந்திருந்தா...? ஆ.. னு வாய்ப்பொழந்து மொபைல் ல வீடியோ பாத்துட்டு கையுல புடிச்சிட்டு ஆட்டிட்டு கிடந்திருப்போம். இதுதான் சமுதாயத்தின் உண்மை முகம். நீங்க பெருமை பேசி கட்டிகாக்க நினைச்ச கலாச்சாரம் இதுதான்.
பொண்ணுங்க செக்ஸ்க்கு மட்டும்தான்னு நினைக்குற ஆண்கள் இந்த சமுதாயத்தில நிறைய இருக்காங்க.
பெண்களுக்கு நிறைய வேலை இருக்கு, கனவு இருக்கு, இங்க ஏதாவது பண்ணனும் ங்கிற லட்சியம் இருக்கு. பெண்கள் அதுக்கு மட்டும்தான் னு யோசிச்சா நீங்க மனநோயாளி.
பெண்களுக்கு கட்டுப்பாடு போடாதீங்க, போன வருஷம் நடந்த பொள்ளாச்சி சம்பவத்துல இருந்து பள்ளி, கல்லூரி, அலுவலக போற பொண்ணுகளுக்கு வீட்டுல ரெம்பவே அடவைஸ் பண்ணி அனுப்புறாங்க. அவங்க குடுக்குற அட்வைஸ் ல கூட ஆணாதிக்கமே நிறைந்து வழியும்.
பொண்ணுங்க பசங்க கூட பேசக்கூடாது,
முன்பின் தெரியாதவுங்ககிட்ட பேசவே கூடாது. அப்பிடி ஏதாவது பேசுறத பாத்தா இனி நீ ஸ்கூல், காலேஜ் போறத நிறுத்திருவோம் னு பெற்றோர்களால பொண்ணுங்கள பயமுறுத்தி, மிரட்டி வளக்கப்படுறாங்க. இது பெரிய தப்பு..
இங்க யாரும் யாருக்கும் கட்டுப்பாடு போடவேண்டாம். முறையான கல்வியை கொடுத்தா போதும். உடம்புனா என்ன? உடல் அறிவியல்ன்னா என்ன?னு ஆண்களுக்கும், பள்ளி மாணவ மாணவிகளுக்கு விளக்குங்க..
நாளு வருசம் MBBS படிச்சி முடிச்சி டாக்டரா வேலை பாக்கிற ஒரு ஆண் டாகர்கிட்ட உங்க மனைவி, அம்மா, மகளோட உடலை பரிசோனை பண்ண தையிரியமா ஆலோவ் பண்றோம். ஏன்னா.. அவருக்கு மருத்துவம் தெரியும், உடலோட அறிவியல் தெரியும்.
உடலைப்பற்றி அறிவியலா சொல்லப்படுறதுதான் செக்ஸ் கல்வி, அத இப்போ இருக்குற குழந்தைகளுக்கு கூல் ல இருந்து காலேஜ் வரைக்கும் பாடமா வச்சா நல்ல புரிதல் வரும். உடலுறவு வச்சாலும் கூட பாதுகாப்பு என்னனு செக்ஸ் கல்வி ஒரு புரிதல கொடுக்கும். இங்க செக்ஸ் கல்வி னு சொன்ன உடனே இங்க இருக்குறவுங்களுக்கு மேட்டர் பண்றதுதான் டக்குனு மண்டைல உதிக்கும், அது இந்தியாவில இருக்குறவுங்கலோட போதுப்புத்தி. அப்பிடியே வளர்ந்து வந்துட்டாங்க. செக்ஸ் எட்சிக்கேஷன், செஸுவல் எட்சிக்கேஷன் ங்கறது body science.. உடலியல் அறிவியல் னு புரிய கொஞ்சம் கஸ்டம் தான்.
இந்த சமுதாயத்துல பொண்ணுங்க பசங்க கூட பேசமா வேற்றுகிரகவாசிக கூடவா பேச போறாங்க. பொண்ணுங்கள அப்படி பண்ணக்கூடாது, இப்படி பண்ணக்கூடாது, இப்பிடித்தான் நடக்கணும் னு கட்டுப்பாடுகள போடுறத விட்டு இங்க இருக்குற ஆண் பெண் குழந்தைகளுக்கு உடல்னா என்ன? உடலோட அறிவியல் என்ன? சொல்லிக்கொடுங்க.
அப்படி இல்லனா.. ஒவ்வொரு 50 கிலோமீட்டர்க்கு ஒரு பிராஷ்டியூட் சென்டர் அமைக்கணுமுன்னு நம்ம அரச வலியுறுத்தலாம். குழந்தைகள் மீதான பாலியல் குற்றம் குறையும். இன்னும் பண்பாடு, கலாச்சாரம், மயிரு மட்ட னு போலியான வாழ்க்கை வாழ்ந்தா பொரக்குற எந்த பொம்பள குழந்தைகளுக்கும் இந்த நாட்டுல பாதுகாப்பு இல்லன்னு சொல்லலாம்.
ஏற்கனே பெண்களோட பாதுக்காப்புல இந்தியாவுக்கு 107 இடம்.. பெண்களுக்கான பாதுக்காப்புல ரெம்ப மோசமான பட்டியல இருக்கு இந்தியா.. இந்த கொரோனா ஊறடங்குளயும் பல பாலியல் வல்லுறவு, வன்கொடுமைகள் னு பெண்கள் மீது நடத்தப்பட்டுக்கிட்டுத்தான் இருக்கு..
No comments:
Post a Comment