தமிழ்நாட்டில பெரும்பாலான மக்கள் விளக்கு ஏத்துனத பாத்துட்டு..., இவ்வளவு சங்கிகளா..? இவனுகல திருத்தவே முடியாது.. இங்க இப்படி இருக்க நாம வடக்கன்ஸ குறை சொல்றோம்.. உங்களுக்கும் இனி மோடித்தான் பிரதமர்...முட்டாள் கூட்டம் னு சலிப்புல மக்கள நாம குறை சொல்லிட்டு இருப்போம்.
மக்கள் மேல எந்த தவறும் இல்ல. இந்த அரசு கொரோணா வந்தா செத்துருவோம் னு பயத்த மட்டும் காட்டிட்டு, முறையான விழிப்புணர்வு கொடுக்காம, மக்கள வீட்ட விட்டு வெளிய வரக்கூடாது னு ஊரடங்கு போட்டுட்டு... நியூஸ்ல இன்னைக்கு அங்க 700 பேரு செத்துட்டான்.. இங்க 2300 பேரு ஆஸ்பத்திரியில இருக்காங்க, அந்த மாவட்டத்தில இதனை பேரு, இந்த மாவட்டத்தில இத்தனை பேரு, முஸ்லீம் வேணுமுன்னே பரப்புறாங்க னு டிவில காட்டிட்டு இருந்தா மக்களோட மனநிலை என்னவா இருக்கோம்..?
குடும்பம் னு இருந்தா அதுல இருக்குற புருஷன், பொண்டாட்டி, குழந்தை, குட்டிங்க, அம்மா அப்பா, தாத்தா பாட்டி னு எல்லோரு மேலயும் அக்கரை இருக்கத்தான் செய்யும். ஒருபக்கம் மீடியா பயம் காட்டுதுனா, இன்னொரு பக்கம் சங்கிகள் தவறான செய்திய பரப்புறாங்க. எதையும் கண்டுக்காத அரசு சிறுபான்மை முஸ்லிம் மக்களை எதிரியா காட்டுதுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்குது. மக்களும் என்ன செய்யுறது னு தெரியாமதான் மஞ்சள கரைச்சி குளிக்கிறது, வேப்பல கட்றது, கை தட்டுறது, விளக்கு புடக்குறதுன்னு பண்றாங்க.
மக்களுக்கு பயம் மட்டும்தான் இருக்கு. ஒரு கடைக்கு போனா கூட 20, 30 பிஸ்கட் பாக்கட்ட மொத்தமா வாங்கி போடணுமுன்னு தோணுது. ஊருக்குள்ள எவனும் வரக்கூடாது னு ஹேட்ட போட தோணுது. இங்க நோய்னா என்னனு சொல்லாம மாஸ்க் போடு, கை கழுவு னு மட்டும் சொன்னா நோய பாத்து பயம் மட்டும்தான் வருமே தவிற எப்பிடி எதிர்கொள்றது னு சிந்திக்கதோனாது.
மக்கள் அறிவாதான் இருக்காங்க. குடும்பத்துல யாருக்காவது வியாதினா, ஆஸ்பத்திரிக்குத்தான் கூட்டிட்டு போறாங்களே தவிற இப்ப யாரும் கோயிலுக்கு கூட்டிட்டுப்போறதில்லை. அதனால மக்கள் முட்டாள்தனமா விளக்கு ஏத்துறாங்களே னு நாம பயபட வேண்டாம். விழிப்புணர்வு சரியா கொடுக்கலங்கிறது தான் உண்மை.
நேத்து எங்க கிழவி கால் பண்ணி நலம் விசாரிச்சிட்டு.. "நைட் 9 மணிக்கு வெளக்கு போடனுமுனு சொல்லுதாக.. நீயும் வெளக்கு பொறுத்துலே.." னு சொல்லுது. நானும் "அதெல்லாம் ஒன்னுமில்ல.. நான் பாத்துகிறேன்.. நீ வையி" னு சொன்னா.. "கூறு இல்லா பேசாதலே.. தம்பி இப்போதான் வாச்சாத்து செல்ல பாத்துட்டு சொல்லுதான்.. நைட் வையி என்னே.."னு சொல்லிட்டு போன வைச்சிடுச்சி.. அவங்களுக்கு எந்த மாதிரி மோடி அரசியல புரிய வைக்கிறது? நெறைய மக்களோட எதார்த்தம் இப்பிடித்தான் இருக்கு.
நமக்கு மக்கள் மேல சலிப்பு எல்லாம் வேண்டாம். பெரும்பாலான மக்கள் மோடி சொல்லுற தான் செய்கிறாங்கனா இப்போது பிஜேபி தானே தமிழ்நாட்டில் ஆட்சிய புடிச்சிருக்கணும்..? இங்க மக்கள் ஒன்னும் முட்டாள் இல்ல, முட்டாளாக்கப்படுறாங்க.
இப்பயே இப்படினா.. 70, 80 வருசத்துக்கு முன்னாடி மக்கள் என்ன நிலையில இருந்திருப்பாங்க? அவுங்களுக்கு புரிய வைக்க எவ்வளவு சிரமப்பட்டுருப்பாங்க நம்மளோட வழிகாட்டி தலைவர்களான மகாத்மா பூலே, அண்ணல், பெரியார் னு.
அப்பயெல்லாம் மக்கள்ட்ட ஒரு செய்திய கொண்டுபோயி சேர்க்கிறது எவ்வளவு சிரமம்? ஒன்று திரட்டுறது எவ்வளவசிரமம்? அப்படியே ஒன்னா சேர்த்து போராடினாலும், மக்கள் எதிர்க்குறது அந்த ஏரியாவோட பெரிய சாதிக்கறான இருப்பான், பண்ணையாரா இருப்பான். இன்னைக்கு எதுத்துட்டு நாளைக்கு அவன் காட்டுக்கு தான் கூலி வேலைக்கு போகணும். அவன் குடுக்குற கூலில தான் குடும்பதுக்கு கஞ்சி ங்கிற சூழ்நிலை.
அப்பிடி இருந்த மக்களையும் "நீங்க இல்லனா அவன்தான்டா பொழைக்க முடியாது.. உன்னை ஏமாத்தி பொழைக்குறான்.. நம்மளோட உரிமையை கேட்போம்" னு 70, 80 வருசத்துக்கு முன்னாடி இருந்த மக்கள ஒன்னு சேர்த்து போராடுறதுங்கிறது எவ்வளவு சிரமமான ஒன்னு?
நமக்கு இப்போ அந்த மாதிரி சிரமம்மெல்லாம் இல்ல. எளிதா மக்கள்ட்ட தொடர்பு கொள்ளலாம்.. படம் போட்டு கூட புரிய வைக்கலாம். வேகமா ஒன்னு சேர்த்து போராடலாம். இதெல்லாம் மக்களோட எதார்த்த நிலைய புரிஞ்சு அதுக்கேத்த மாதிரி விழிப்புணர்வு கொடுத்தாமட்டும் தான் முடியும்.
அரசு மக்களுக்கு எதிரா எந்த திட்டம் போட்டாலும், சட்டம் போட்டாலும், முதலில் மக்களுக்கு என்னனு புரிய வைப்போம், ஒன்னு சேத்து போராடுவோம். அதவிட்டுட்டு எச்ச "இந்த மாதிரி" சொல்லிட்டான், sv சேகர் "அந்த மாதிரி" சொல்லிட்டான் னு சொம்பு தூக்குறவனுக்கெல்லாம் எதிரா ஆர்ப்பாட்டம் பண்றோம், கண்டனம் தெரிவிக்குறோம் னு முற்போக்கு இயக்கங்கள் கருப்புசட்ட, நீலசட்ட, சிகப்புசட்ட ஊர்வலம் போனா.... இது மக்களுக்கு விழிப்புணர்வு கொடுக்குற மாதிரி இருக்கா..? இல்ல இயக்கத்த சட்டபோட்டு விளம்பர படுத்துற மாதிரி இருக்கா..?
பெரியாரும், அண்ணலும் மக்கள்ட்ட பிரச்சாரம் பண்ணும் போது காந்தி, காங்கிரஸ் பார்ப்பானுக, சங்கிக, ராஜகோபாலு னு எதையாவது இப்போ இருக்குற எச்ச, sv மாதிரி சொல்லிட்டே தான் இருப்பாங்க. "நீங்க கத்திட்டே கெடங்கடா.. எங்களுக்கு வேலை இருக்கு" னு மக்கள் பிரச்சாரத்த மும்மரமா கையில எடுத்து, ஒன்னு சேத்து போராடுனாதால தான் நமக்கு இப்போ வழிகாட்டியா இருக்காங்க என்பதை மறந்துற வேண்டாம். நாம பிரச்சினை வரும்போது மட்டும் அரசியல் பேசாம., தொடர்ந்து மக்கள்ட்ட பிரச்சாரம், விழிப்புணர்வு னு பண்ணுனா மக்கள் அறிவார்ந்த சமுதாயமா மாறுவாங்க ங்கிறதுல எந்த சந்தேகமும் இல்ல..
No comments:
Post a Comment