Wednesday, May 26, 2021

பாரதி எனும் ஆரியவெறியன் - சுதந்திர போராட்ட வீரனாக சித்தரிக்கும் பார்ப்பனியம்..

வருச வருசம் பாரதி பிறந்த நாள் வந்துட்டால் போதும் விவேகானந்தா மெட்ரிகுலேஷன், பாரதி வித்யாலயா, சரஸ்வதி வித்தியாலயா னு ஒவ்வொரு பள்ளிகளிலும்  மீசை வரைச்சிக்கிட்டு முண்டாசு கட்டிக்கிட்டு நாலு பாரதியார் பாட்ட மனப்பாடம் பண்ணி குழந்தைகளை நடக்க வைக்குறத பார்த்திருப்போம். சுதந்திரம் வந்தாலும் இதே கூத்து தான் அரங்கேறும்.

தமிழ்நாட்டுல சுதந்திரதிற்காக உண்மையாக பாடுபட்டு உயிர கொடுத்தவுங்கள விட்டுட்டு தன் வாழ்நாளில் ஒரு போராட்டம் கூட பண்ணாத, போராட்டத்தில பங்கேற்க்காத  பாரதிய புடிச்சி ஏன் தொங்கிட்டு இருக்காங்க..?  பாரதி பாடல்கள் மூலம் விடுதலைக்காக புடுங்கி தள்ளிட்டாரு சொல்லுவாங்க. ஆனால் அவன் பாடல் எழுதுனது, கவிதை, கட்டுரை எழுதுனது எல்லாம் பார்ப்பனர்கள் அவுங்க நலனுக்காக நடத்துன பத்திரிகைல தான். அத தவிர அப்ப அப்போ காசுக்காக பார்ப்பன பயங்கள வாழ்த்தி வாழ்த்து கவிதை கூட எழுதிருக்காபல். ஆங்கிலேயர்களுக்கு மன்னிப்பு கடிதம் எழுதுறதுல சாவர்க்கர்க்கே முன்னோடி. சாவர்க்கராவது மண்டிதான் போடுவான் ஆனால் இவன் படுத்தேபுடுவான்.

பாரதியார் சுதந்திரத்திற்காக பாடுபட்டார் னு சொல்றது வேணுமுன்னே கட்டமைக்கப்பட்டது தான். பாரதி உயிருடன் இருக்கும் போது அவனோட பாடலை பற்றி யாருக்கும் அவ்வளவாக தெரியாது,  இறந்ததுக்கு அப்பறம் பாரதி குடும்பத்தாருக்கு ஊமந்தூரார் தலைமையில் காங்கிரஸ் பணத்திலிருந்து சுமார் ஆயிரம் ரூபாய் கொடுத்து பாரதி பாடல்களை  அச்சுப்போட்டு ஒத்துழையாமை இயக்கத் தின் மூலம் அதை விளம்பரப் படுத்தி ஒவ்வொருவரையும் அதை வாங்கும்படி செய்யப்பட்டது.

அந்தப் புத்தகம் சாதாரணமாய் இரண்டரையணா அல்லது மூன்று அணாவுக் விக்கக்கூடியத்தை ஒரு ரூபாய் வீதம் விலை போட்டு வித்து லாபம் பத்த வரலாறும் உள்ளது. இந்த வேலையில் விஸ்வநாத ஐயரின் பங்கு பெரியது.

அப்பிடி புத்தகம் போட்டு விக்கிற அளவுக்கு பாரதி பாடல்களில் நாட்டுப்பற்று இருக்கா என்று பார்த்தால் அது முழுவதும் ஆரிய பற்றும், வேத காலத்திற்கும், பார்ப்பன பெருமைக்கும் செம்பு தூக்குற விதமாதான் இருந்தது.

அப்போ பாரதி "செந்தமிழ் நாடெனும் போதினிலே யின்பத்
தேன்வந்து பாயுது காதினிலே" தமிழ்நாட்ட பத்தி, தமிழ் மொழியை பத்தி எழுதலையா னு நீங்க கேட்கலாம். “யாமறிந்த மொழிகளிலே” னு படிச்ச உடனே தமிழுக்காக அறுத்து தள்ளிட்டாரு கூட நினைக்கலாம். அதெல்லாம் காசுக்காக கவிதை போட்டியில புகழ்ந்து எழுதுனதே தவிர பாரதி சுயநினைவோட எழுதுனதில்லை. அத விட  யாமறிந்த மொழிகளிலே தமிழ் னு சொல்லாம வேற மொழிய சொல்லியிருந்தா அந்த காலத்துலயே செருப்படி விழும் னு பாரதிக்கு தெரிஞ்சிருக்கும். அந்த பாடலுக்கு மதுரைத் தமிழ்ச் சங்கம் பரிசாக ரூ.100 வழங்கியது.

ஆனால் அதே வருசம் தனிப்பட்ட முறையில் “சுதேச கீதங்கள்”ங்கிற தலைப்பில் தமிழ்த்தாய் கூறுவதாக எழுதின பாட்டில்..

“ஆதிசிவன் பெற்றுவிட்டான் - என்னை
ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்
வேதியன் கண்டு மகிழ்ந்து - நிறை
மேவும் இலக்கணம் செய்து கொடுத்தான்
மூன்று குலத்தமிழ் மன்னர் - என்னை
மூண்ட நல்அன்பொடு நித்தம் வளர்த்தார்;
ஆன்ற மொழிகளினுள்ளே - உயர்
ஆரியத்திற்கு நிகரென வாழ்ந்தேன்” 

இதில பாரதி என்ன சொல்லறான.. "தமிழுக்கு இலக்கணம் இல்ல, ஆரியப் பார்ப்பனர்கள் தான் இலக்கணம் வகுத்துக் கொடுத்திருக்காங்க, ஆரியம் தான் உயர்ந்த மொழி என்று கூறுகின்றான். தமிழ்த்தாய் பற்றி எழுத வந்த பாரதிக்கு தமிழ்மொழி உயர்ந்த மொழினு சொல்ல மனசில்ல. ஏன்னா அவ்வளவு ஆரிய சமஸ்கிருத பற்று பாரதிக்கு.

அவன் பாடலை ஆராய்ந்து பார்த்தால் முழுக்க முழுக்க பார்ப்பன இனப்பற்றும், ஆரிய மொழி பற்றுமே இருக்கும். இந்தியாவின் பொதுமொழியாக இந்திதான் வரவேண்டும் என்று முதன்முதலில் சொன்னவன் பாரதி தான். 15.12.1906 இந்தியா வார ஏட்டில், ‘இந்தி பாஷைப் பக்கம்’ எனும் தலைப்பில் இவன் எழுதுனது “தமிழர்களாகிய நாம் ஹிந்தி பாஷையிலே பயிற்சி பெறுதல் மிகவும் அவசியமாகும்" அந்த காலத்திலேயே இந்தி கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று இந்தி திணிப்பை முன்மொழிந்தவன்.

அடுத்து திலகரிலோட பேச்சை கேட்டு சமசுகிருதம்தான் இந்தியாவுக்கும் பொது மொழியாக வேண்டும் என்று சுதேசமித்திரன் (11.1.1920) இதழில் ‘ஒளிர்மணிக் கோவை’ என்னும் தலைப்பில் பாரதி எழுதுறான். இவனுக்கு ஆரியப்பற்றும், இனப்பற்றும்தவிர தமிழ் பற்று சுத்தமா இல்ல.

ஒருமுறை எட்டயபுரம் பள்ளியில் திருக்குறளைப் பற்றிப் பேச பாரதிய கூப்டுருக்காங்க, அங்க பேசுன பாரதி ‘உலகத்து நாயகியே எங்கள் முத்துமாரி’னு மாரியைப் பற்றியே இருபது நிமிசம் ராம்தேவ் மாதிரி கைய கால ஆட்டிட்டு பாட்டு பாடியிருக்கான். தலைமை வகித்தவர் திருக்குறளைக் குறித்துப் பேசு சொன்னதும்  “நான் குறள் படித்து வெகுகாலம் ஆகிவிட்டது. அது வெகு நல்ல நூல். இரண்டொரு அடி நினைப்பிருக்கிறது. பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லையாம். ஆகா எவ்வளவு உண்மை”னு பேச்ச நிறுத்திட்டு கெளம்பிட்டான்.

ஒரு சமயம் இவங்க குடும்பம் வியாபாரத்தில நட்டமாகி பாரதி அப்பன் வேலைக்கு போற நிலைமை வந்துச்சு. அப்போ "கனவு"ங்கிற தலைப்புல ஒரு பாட்டு எழுதுறான்..
"பார்ப்பனக் குலம் கெட்டழிவு எய்திய
பாழடைந்த கலியுகம் ஆதலால்
வேர்ப்ப வேர்ப்ப பொருள் செய்வதொன்றையே
மேன்மை கொண்ட தொழில் எனக்கொண்டனன்" என்று
-அதாவது பார்ப்பனர்கள் உடல் வியர்க்க வேலை செய்யக்கூடாது என்பது மனு தர்மத்தின் விதி. இந்தப் பாழாய்ப் போன கலியுகத்தில் என்னோட தந்தை வியர்வை சிந்திப் உழைக்கிற நிலைமை வந்திருச்சேனு சாதி புத்திய காட்டுறான்.

அடுத்து..
"வேதம் அறிந்தவன் பார்ப்பான் - பல
வித்தை தெரிந்தவன் பார்ப்பான்
நீதி நிலை தவறாமல் - தண்ட
நேமங்கள் செய்பவன் நாய்க்கன்
பண்டங்கள் விற்பவன் செட்டி
பிறர் பட்டினி தீர்ப்பவன் செட்டி
நாலு வகுப்புமிங்கு ஒன்றே - இந்த
நான்கினில் ஒன்று குறைந்தால்
வேலை தவறிச் சிதைந்தே - செத்து
வீழ்ந்திடும் மானிடச் சாதி" 
- ஆதாவது பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் முதலிய நால்வருணங்கள் இருக்க வேண்டும். நால்வருணம் அழிந்தால் மனித இனமே அழிந்து விடும்னு சொல்லறான். "

அடுத்து"குலத்தளவே ஆகுமாம் குணம்" என்றும் "அம்பட்டன் பிள்ளை தானாகவே சிரைக்கக் கற்றுக் கொள்கிறது. சாதி இப்போது இருக்கும் நிலையில் அதை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை"னு சொல்றான்.

பொதுவா பாரதி ஒரு சாதி எதிர்பாளன் னு சொல்லுவாங்க அதை சொல்றதுக்கு  பாரதி ஆதித்திராவிடருக்குப் பூணூல் மாட்டி விட்ட கதைய சொல்லுவாங்க. இது ஒரு ஏமாத்து கதை தான், இந்து மதத்தைக் காப்பதற்காக பார்ப்பனர்கள் மற்றவர்களுக்குப் பூணூல் வழக்கமா நடந்துட்டு வராது தான்.  இதையே தான் பாரதி செய்திருக்கான். உண்மையில் இவன் சாதி எதிர்பாளனா மனுசாஸ்திரத்த எரிச்சில்ல இருக்கணும் ஆனால் இவன் தன் வாழ்நாள் புல்லாம் அத புகழ்ந்து தானே பாடியிருக்கான். சாஸ்திரம் சொல்ற வழியில் தானே நடந்திருக்கான்.

பாரதி கடையத்தில் வாழ்ந்த காலத்தில் ஒருநாள் பாரதியும், நாராயணப் பிள்ளையும் கலப்புத் திருமணம் பற்றிப் பேசிட்டுந்துருக்காங்க. சாதி மாத்தி கல்யாணம் பண்ணுனா சாதி ஒழியும்னு நினைச்ச நாராயணப் பிள்ளை "யப்பா பாரதி.. நாம ரெண்டுபேரும் வித்தியாசமும்  இல்லாம பழகிகுறோம். உன்னாட மகள் சகுந்தலாவ என் மகனுக்குக் கல்யாணம் செய்து வைத்தால் என்ன?"னு கேட்டுருக்கப்பல, 

இத கேட்டு கோவமான பாரதி "கலப்பு மணத்தை மனப்பூர்வமாக ஆதரிக்கும் எண்ணம் உங்களுக்கு இருக்குனா., முதலில் உங்கள் மகனுக்கு ஒரு பறை அல்லது சக்கிலியப் பெண்ணைத் தேடித் திருமணம் செய்து வையும்"னு இடத்தை காலிபண்ணிட்டு போயிட்டான்.

மறுநாள் காலையில் பாரதி "என்னகிட்ட நாராயணப்பிள்ளை கேக்குறானே" பொலம்பிட்டு உக்காந்திருக்கான்.  நாராயணப்பிள்ளை வசதியானவர் மனைவியை இழந்த இவர், ஊர்க்கோவில் அர்ச்சகரான ஒரு ஐயர் மனைவியை வச்சிருக்கார். அந்த அர்ச்சகரும் நிர்ப்பந்தம், லாபம் இரண்டையும் கருத்தில்கொண்டு அந்த மேட்டர பெருசா எடுக்காமல் விட்டுட்டான்.

ஏற்க்கனவே பாரதி திண்ணையில் தூண்ட போட்டு பொலம்பிட்டு உக்காந்திருக்க, அந்தசமயம் அந்த அர்ச்சகர் தெரு வழியே போறத பாரதி பாத்துட்டான். உடனே  திண்ணையிலிருந்து குதிச்சி அர்ச்சகரோட கழுத்த புடிச்சி “உன்ன மாதிரி மானங்கெட்ட ஐயர் செய்கையால் தானே கீழ்சாதியான  நாராயணப் பிள்ளை என்னைப் பார்த்து அந்தகேள்வி கேட்க்கான்" அடி அடி அடிச்சிருக்கான்.

அடிவாங்க அர்ச்சகர் நேரா நடந்தத நாராயணப் பிள்ளையிடம் சொல்ல, கோபமான நாராயணப் பிள்ளை ஒரு வேலையாள அனுப்பி பாரதியின் மைத்துனர் அப்பாத்துரையை வரச் சொல்லி, "அப்பாத்துரை இன்னைக்கு இரவுக்குள் பாரதியை கடையத்தை விட்டு துரத்தலனா, ஆட்களை ஏவி அவனை அடிச்சி கொன்றுவேன்"னு மிரட்ட, அன்று இரவே பாரதியையும் அவர் குடும்பத்தையும் சென்னைக்கு அனுப்பி வச்சிடாங்க. (பாரதியின் வாழ்க்கை வரலாற்றை ஆதாரப்பூர்வமாக எழுதியுள்ள ரா.அ.பத்மநாபன் கூறியுள்ளார்) பயந்துட்டு ஓடுன பாரதிய என்னோமோ அரசியலில் ஈடுபட தான் சென்னைக்கு போனதா பார்ப்பன பயக எழுதி வச்சிருப்பாங்க. ஆனால் அவன் பார்ப்பன பெண்ணை கீழ்சாதிகாரனுக்கு குடுக்ககூடாது னு தெளிவா இருந்துருக்கான்.

பெண்கள் விடுதலை பற்றி பாரதி எழுதியிருக்காரே பல பேர் நினைக்கலாம். பாரதி பெண்கள் போற்றி தான் எழுதியிருக்கான் அதும் சாஸ்திர சம்பிரதாயம் மீறாமல் எப்பிடி இருக்குமோ அப்பிடிதான் எழுதியிருப்பான். இததான் RSS காரங்களே பண்றாங்களே பாரத தாய், பாரத் மாத்தாகி னு. அந்த அளவுதான் பாரதியும் பெண்களை போற்றி எழுதியிருப்பான்.

ஒரு சமயம் பாரதி தன் மகளை கடயத்தில் உள்ள சாமியாரை பார்க்க கூட்டி போறான். மகள் வரமுடியாது என அடம்பிடிக்கவே முகத்தில் பளார் பளார் னு அடிச்சி இழுத்துட்டு போறான். இதுதான் பாரதியின் பெண்களை பற்றிய  மதிப்பு. பாரதிக்கு சாமியாருடன் சேர்ந்து கஞ்சா அடிக்கும் பழக்கமும் இருந்தது. பாரதியின் போக்குகூட ஒன்றுக்கு ஒன்று முரணாகவே இருந்தது.

இந்தியா’ இதழில் 1908 பிப்ரவரி முதல் வெளியிடப்பட்ட கட்டுரைகள், கவிதைகள், கருத்துப் படங்களை குறித்து தலைமைச் செயலருக்கு சென்னை நகரப் போலீஸ் கமிஷனர் ஒரு கடிதம் எழுதியிருக்கு. அதன்படி ‘இந்தியா’ இதழின் ஆசிரியரைக் கைது செய்ய வாரண்டுடன் காவல்துறை பத்திரிகை அலுவலகத்திற்கு வந்த விசாரித்தபோது பாரதி “இந்த பத்திரிகை ஆசிரியர் நானில்ல”னு சொல்லிருக்கான்.

சென்னைல இருந்தா போலீஸ் புடிச்சி சிறையில போட்டுருவாங்க னு நெனைச்சா பாரதி இரவோடு இரவாக இரகசியமாக யாருக்கும் தெரியாம தப்பி புதுச்சேரிக்குச் சென்று விட்டான். அதே சமயம்தான் எஸ்.என்.திருமலாச்சாரியும், வ. வே.சுப்ரமணிய ஐயரும் வந்தாங்க. அங்க இந்த மூன்று பார்ப்பனர்களும் பேசுறதே வேதம், சனாதன தர்மம் பற்றி தான்.

அப்போ தான் ஆஷ்துறை கொல்லனும் னு வாஞ்சிநாதனும், நீலகண்ட பிரம்மச்சாரியும் வ.வே.சுப்ரமணிய ஐயர சந்திக்க வாரங்க. வ.வெ. சு ஐயர் வாஞ்சிநாதனுக்கு துப்பாக்கி பயிற்சி கொடுத்து கொலை திட்டமும் போட்டு கொடுத்துருக்கான். அப்போ பாரதியும் கூட தான் இருந்துருக்கான்.

வாஞ்சிநாதன் ஆஷ்துரையைக் கொலை செய்ய முயன்றது பாரதிக்கும் தெரியும். வாஞ்சிக்கு பயிற்சி முடிஞ்சதும் நாற்பது பாரத மாதா சங்கத்த சேர்ந்த சங்கிக  ஒரு மரத்தடியில கூட  14.6.1911 அன்று காளி பூஜை போட்டுருக்காங்க. அதுல பாரதிதான் காளிப்பாட்டு பாடுறான். வாஞ்சிய அனுப்பி வைக்குறாங்க. ஆதாரம் - சுத்தானந்த பாரதி கூறியது. பாரதி ஆய்வாளர் தொ.மு.சி.ரகுநாதன் சுட்டிக் காட்டியது.

வாஞ்சிநாதன் ஆஷைக் கொலை செய்வது என்று துணிந்து விட்டதை நீலகண்டர் ஏற்கவில்லை. “இதனால் புதுவையில் நீலகண்டருக்கும் வாஞ்சிக்கும் பலத்த வாக்குவாதங்கள் ஏற்பட்டன. அப்போது பாரதியார் வாஞ்சியின் பக்கம் தான் ஆதரவைத் தெரிவித்தான்” என்று நீலகண்டரின் தம்பி லட்சுமி நாராயண சாஸ்திரி கூறியுள்ளார். 

7.6.1911 அன்று ஆஷ் துரையைக் கொலை செய்து விட்டுத் தன்னையே சுட்டுக்கொண்டு இறந்த வாஞ்சிநாதனின் சட்டைப்பையில் பாரதி எழுதி கொடுத்த மறவன் பாட்டும், ஒரு கடிதமும் இருந்தது. எனவே இக்கொலைக்கு பாரதியும் உடந்தை என அரசு குற்றம் சாட்டியது. (22) பாரதியைப் பிடித்துக் கொடுப்பவருக்கு ரூ.1000 பரிசு என அரசு அறிவித்தது.

பாரதி தமிழகம் வர சென்னை அரசுக்கு எழுதி, கேட்டுக் கொண்டு, 20.11.1918 அன்று புதுவை எல்லையைக் கடக்க சென்னை மாகாணப் போலீஸ் திருப்பாதிரிப்புலியூரில் பாரதிய கைது செய்து கடலூர் சிறையில் அடைத்துவிட்டனர்.

கடலூர் சிறையில் இருந்தபடி எழுதிய 1918ஆம் வருசத்து மன்னிப்புக் கடிதத்துக்கு முன்னாடியே 1912,1913,1914 ஆகிய வருடங்களில் தொடர்ந்து பிரிட்டிஷார், தம்மிடம் இரக்கம் காட்ட வேண்டும், பிராமணர்களுக்கு சிறை வாசம் ஒத்துக்கொள்ளாது"னு  கெஞ்சியபடி புதுவையில் இருந்தே தொடர்ந்து கடிதங்களைப் பாரதி எழுதி இருக்கிறான்.

மன்னிப்புக் கடிதங்கள் எழுதிக் கொண்ட அதே 1914ஆம் ஆண்டு பாரதியார் ஒரு பாட்டும் எழுதுறான். அந்த பாட்டுதான்
"அச்சமில்லை. அச்சமில்லை அச்சமென்பதில்லையே....இச்சகத்துளோரெல்லாம் எதிர்த்து நின்றபோதிலும் ....உச்சி மீது வானிடிந்து வீழுகின்றபோதிலும் அச்சமில்லை. அச்சமில்லை அச்சமென்பதில்லையே" என்பதாகும். இங்கிட்டு கெஞ்சிட்டே பாட்டும் எழுதுற பெரிய நடிகனா இருந்திருக்கான்.

8/4/1914 இல் இங்கிலாந்து தொழிற்கட்சித் தலைவர் இராம்சே மக்டொனால்டுக்கு எழுதிய கடிதத்தில், "தன்னை ஆஷ் கொலை வழக்கில் சம்பந்தப்படுத்தித் தண்டித்து விடுவார்களோ எனும் பயத்தில், 'நான் புதுவை செல்வதற்கு முன்பே வாஞ்சி வந்துள்ளார். என்னை அவர் சந்திக்கவில்லை"னு ஒரு கடிதம் எழுதுறான்.

1912இல் சென்னை கவர்னராயிருந்த கார்மிக்கேலுக்கு ஒரு நீண்ட கடிதம் எழுதி  மண்டிபோட்டு கெஞ்சிருக்கான். அப்றம் கவர்னரான பெண்ட்லாண்டு பிரபுவுக்கும் தன்னிலையை விளக்கி ஒரு கெஞ்சல் கடிதம் எழுதியிருக்கிறான்.

1916 இல் சுதேசமித்திரன் பத்திரிகையில் "ஆங்கிலேயர்கள் இந்நாட்டை விட்டுப் போக வேண்டாம், இங்கேயே இருங்கள்" னு ஒரு கட்டுரை எழுதுறான்.

பாரதி சாவர்க்கர் மாதிரி மண்டிபோட்டு தன் வாழ்நாள் முழுவதும் மன்னிப்பு கடிதம் எழுதிட்டு தான் இருந்திருக்கான்.

இந்த நாட்டில் களத்தில் நின்னு உயிருள்ள வரை உண்மையான சமூகநீதி, சாதி ஒழிப்பு, பெண் விடுதலை பற்றிய பேசுன மகாத்மா ஜோதிராவ் பூலே, அம்பேத்கர், பெரியார் போன்றவர்கள் எல்லாம் அனைத்து மக்கள் மத்தியிலும் கொண்டாடபடாம, தன் வாழ்நாளில் ஒரு போராட்டத்தில கூட கலந்துக்காம நாலுவரி கவிதை மட்டும் எழுதுன பாரதிய தூக்கி புடிக்கிறாங்கனா இதுல எவ்வளவு பெரிய சாதி அரசியல் இருக்குனு நாம தான் புரிஞ்சிக்கணும்.

இங்க பாரதிய தூங்கி கொண்டாடுற எவனும் அம்பேத்கர் பெரியார் பத்தி பேசமாட்டான். அப்பவே நாம புரிஞ்சிக்கணும் பாரதி ங்கிறது பார்ப்பனர்களால் பரப்பப்பட்ட ஒரு பிம்பம். அவ்வளவுதான் பாரதி.

No comments:

Post a Comment