Wednesday, May 26, 2021

நடிகர்களை வைத்து சாதிப் பெருமை - குழந்தைகளை பிஞ்சிலேயே சீரழிக்கும் சாதிவெறியர்கள்...

ஆரம்ப காலகட்டத்துல நாடகத்த எல்லா சாதிக்காரனும் ஒன்னா சேர்ந்து பாக்கமுடியாத சாதிய கட்டமைப்பு தீவிரமா இருந்த சூழல்ல வெள்ளைக்காரன் கண்டுப்புச்ச சினிமா, சாதி மதம் பாகுபாடு பாக்காம எல்லாம் மக்களும் ஒன்னா உக்காந்து சினிமா பாக்க வழி செஞ்சது. ஆரம்பத்துல கதாபாத்திரத்த ரசிச்சோம், கதாநாயகன ரசிச்சோம், இதுல மெல்ல மெல்ல நகர்ந்து நம்மாளுக்கான கதைய, கதாநாயகன தேடி ரசிச்சோம், அப்பிடி ரசிச்சத்தோட விளைவு தான் சினிமா காரன் ஆட்சிய புடிச்சது. அப்போ கூட அரசிலயலுக்காகவும் ரசனைக்கவும் எம்ஜிஆர், ஜிவாஜி னு ரசிச்ச கூட்டம் மெல்ல நகர்ந்து நாயக வழிபாட்டுக்கு வந்தது.

நாயக வழிப்பட்டுல ரஜினி பெரியவனா.. கமல் பெரியவனா னு போட்டி போட்டு முட்டிட்டு கிடந்த கூட்டம் கூட எல்லா சாதி ஜனத்துக்குள்ளேயும் இருந்துச்சி. ஒரே சாதி மக்கள் இருக்குற ஏரியாகுள்ளயே கமலு, ரஜினி னு முட்டிட்டு கெடந்தாங்க. தமிழ்நாட்டில இருக்குற எல்லா கிராமம், டவுன், சிட்டி னு இதே கூத்து தான் நடந்துட்டு இருந்தது. அண்ணானும் தம்பியும் கூட கமல் ரஜினி னு அடிச்சிக்கிட்டு கெடந்துருக்காங்க..

நல்ல நடிச்சிருந்தா ரசிகிங்க, கதை நல்லருந்துச்சினா பாராட்டுங்க அதவிட்டு, வீட்டு வரைக்கும் நடிகனை கொண்டுபோறது, தெருவுக்குள்ள ரஜினி கமல் னு அடிச்சிக்கிறது, பொண்டாட்டி தாலிய அடமானம் வச்சி ரசிகர் சோ பாக்குறதெல்லாம் எவ்வளோ முட்டாத்தனம் னு 80ஸ் காலத்து லூசு பயகள திருத்தரத்துக்குள்ள....

பார்ப்பனப்பய எப்போ தேவர்மகன் னு வெளிப்படையா படமெடுக்க ஆரம்பிச்சானோ அப்போவே இந்த நாயக வழிபாடு போயி, சாதி நாயக வழிபாடு வந்துருச்சு. அடுத்தடுத்து கவுண்டரு, தேவரு, படையாட்சி னு டைட்டல் வச்சி படமெடுக்க ஆரம்பிச்சுட்டாங்க. இப்போ சாதிக்கு ஒரு நடிகர்னு தூக்கி வச்சிட்டு இருக்கானுக.

20 வருசத்துக்கு முன்னாடி கிராமத்துல கோவில் கொடை, வீட்டு விசேசம் னு வந்தா தெருவுல திரை கட்டி படம் போடுவாங்க. தேவர் தெருவுக்கு போனா சக்கரை தேவன், மறவன், அமரன்.. இல்லனா ஜிவாஜி படம் போடுவாங்க.. அப்படியே பக்கத்துல இருக்குற வேற சமூகத்து காரங்க திருவிழாக்கு திரைபடம் பாக்க போனா மலையூர் மம்பட்டியான், வைகாசி பொறந்தாட்சி னு ஓடிட்டு இருக்கும்.. இவனுங்க தான் இப்படினா நாடார் தெருபக்கம் போனா சிம்ம ராசி, சூரியன், மூவேந்தர் னு ஓட்டிட்டு இருப்பானுக.. ஈரோடு, பழனி கோயம்புத்தூர், பொள்ளாச்சி பக்கம் சின்னகவுண்டர், நாட்டாமை, சூரியவம்சம் னு போட்டுட்டு இருப்பாங்க"ஏண்டா.. போட்ட படத்தையே வருசம் பூராம் போடுறீங்க..?"னு யோசிச்சா.. அப்ப புரியல.

கொஞ்ச வருசத்துக்கு முன்னடித்தான் புரிஞ்சது.. இந்த சாதி வெறி புடிச்ச நாயிக அப்பவே சினிமாவ முடிச்சிட்டாங்கனு. எல்லா சாதி மக்களை ஒண்ணா உக்காந்து பாக்க வச்ச சினிமாவ ஒன்னுமில்லாம ஒழிச்சி ஓராம்கட்டிட்டாங்க. 

இப்போ கிராமத்தில சினிமாவோட நிலமை தேவர் கோட்டை, தேவேந்திர மள்ளர் கோட்டை, பறையர் கோட்டை, படையாச்சி கோட்டை, நாடார் கோட்டை னு தெருவுக்கு தெரு போர்டு வச்சி..  ,"எவண்டா.. நம்மாளு நடிகர்?"னு  தேடி கண்டுபடிச்சி போர்டுல மாட்டி வச்சிக்குறானுக. நடிகர்கள சாதிகாரனா அடையாளப்படுதடுத்தி தெரு முனையில போர்டு வைக்கிறது, போஸ்டர் அடிக்கிறது னு முதல்ல ஆரம்பிச்சி வைச்சது தேவர்சாதி தான்.

முத்துராமன், கார்த்திக் போட்டோ வைக்க தொடங்கி பிரபு, அருண்பாண்டியன், அஜித், கருணாஸ் னு இப்போ கவுதம் கார்த்தி, எஸ்.ஜே.சூர்யா வரைக்கும் வைக்க ஆரம்பிச்சி இந்த தலைமுறைல பள்ளிக்கூடம் போற பயசங்க மனசுலயும் சாதி வெறிய வளர்க்க ஆரம்பிச்சுட்டாங்க. கமல்ஹாசன் தேவர் மகன், விருமாண்டி னு தேவர் படத்துல நடிச்சத்தால கமல்ஹாசனையும் தேவராக்கிட்டாங்க. ஊர் திருவிழா, தேவர் ஜெயந்தி னு சாதிய வெளிப்படுத்துர இடத்துல கமல், அஜித் பேனர்க முத்துராமலிங்க தேவர கும்புட்ட மாதிரி இருக்குற தென்மாவட்டங்களுக்கு போனா பாக்கலாம்.

எவனுக்கும் குறைஞ்சவுங்க நாங்க இல்ல னு நாடார் சாதி வெறியர்கள் சரத்குமார போர்டுல ஏத்திட்டாங்க. மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி மாவட்டங்களோட பகுதியில தேவர் சாதிக்கும் பள்ளர் சாதிக்கும் நடந்த கலவரத்துக்கு பிறகு தலித்துகளில சாதிய வளர்க்க  பிரசாந்த்யும், தியாகராஜனயும் போர்டுல, ப்ளஸ் பேனர்ல வச்சவனுக இப்போ விக்ரம், விக்ரம் மகன் வரைக்கு வந்துட்டாங்க.   

நெப்போலியன ரெட்டியாரும், இயக்குனர் விக்ரமனையும் பிள்ளையும், தியாகராஜ பாகவதர், பார்த்திபன விஷ்வ கர்மாவும், விஜயகாந்த நாயக்கர்களோட போஸ்டர்களிலயும் பார்க்கலாம். 

சாதி பெருமை பேசுறது, சாதிவெறிய வளர்க்கறதுல நாங்க மட்டும் தக்காளி தொக்கா னு சாந்தனம் வரைக்கும் இழுத்துட்டு வந்து போடுல மாடிட்டாங்க. விஜய் யாரு..? கிருஸ்துவ பாவாடை, பிரண்டனன்ஸ், தாழ்த்தப்பட்டவன் னு எச் ராஜா ஆராச்சி பண்ணிட்டு இருக்கும் போது.. இங்கிட்டு ஒரு குரூப்பு "விஜய் எங்க ஆளுக.. அவர் வெள்ளாளர்"னு தூக்கி போர்டுல மாட்டிட்டானுக

இங்க எல்லா சாதிக்காரனும் அவனோட சாதிய இருப்ப தக்க வச்சிக்கிறதுதில உறுதியா இருக்கான். இதனால இந்த சாதி வெறயர்களுக்கு என்ன கிடைக்க போது?  நாங்க இன்ன சாதியைச் சேர்ந்தவன் னு  வெளிப்படையாக காட்டிக்கிறான், மத்த சாதிகராங்கள விட நாங்க ஒன்னும் சளச்சவுங்க இல்ல னு காட்டுறதுக்கு "இங்க பாருங்கடா... எங்களுக்கும் ஆள் இருக்கு... எங்க சாதி காரனும் ஒசத்தி தான்" னு பெருமை அடிக்குற ஒரு சில்லறை புத்தியே தவற.. இதுல எந்த மயிரும் இல்ல.. அவுங்க குடும்பத்துக்கும், குழந்தை குட்டிகள அறிவா வளக்குறதுக்கும் பத்து பைசாவுக்கு கூட பிரயோசனப்படாது. 

இப்போ இருக்குற பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் மத்தியில அஜித் எங்காளுக னு விஜய் எங்காளுக னு பேசுறது சாதாரணமாயிருச்சி. நான் ஒரு தேவர் அதனால அஜித்த புடிக்கும் னு வெளிப்படையா சொல்லுற வரைக்கு சாதிநாயக வழிபாடு வந்துருச்சு. UC ப்ரௌசர், Youtube ல அடிக்கடி வர்ற notificationல "இந்த நடிகரோட சாதி என்ன வென்று தெரியுமா..?" னு சாதாரணமா வந்துட்டு இருக்கு. இங்க பல பேரோட தேடல் இதுவாதான் இருக்கு.

இந்த நடிகர்கள சாதி பீத்த பெருமை பேசுற சாதிப்புத்தி எல்லாம் போர்டு வைகுக்றதோட முடிஞ்சிராது..., தியேட்டர், பஸ், ட்ரெயின், கக்கூஸ் னு எங்கபாத்தாலும் ‘நாடார் குல சிங்கம்’ தேவர் வாரிசு, தேவேந்திர கோட்டை, வீர  மறவன், வன்னியர்குல சிங்கம், கரடி, பன்னிகுட்டு னு கரிக்கட்டையால கண்ட எடத்துல சாதி நடிகர்களோட பேர கிறுக்கிற அளவுக்கு முத்திப்போயி திரிவானுக. 

இந்த பைத்தியாக்காரங்களால இப்போ இருக்குற தலைமுறை குழைந்தைகளோட எதிர் காலத்த நினைச்சாத்தான் வேதனையா இருக்கு.. எங்க இவனுகல மாதிரி சாதிவெறி புடிச்சி முட்டாத்தனமா வளர்ந்துருவங்களோனு.

குழந்தைகளை கல்வி, பொருளாதார முன்னேற்றம் னு அடுத்த லெவலுக்கு எடுத்துட்டு போகாம.., சாதிவெறிபுடிச்ச சில்லா தாயோலிக.., சில்லறை தனமா நடிகனை வச்சி சாதி பெருமை பேசுறதுல என்ன முன்னேற்றம் வந்துறப்போது. சாதி வெறியை தூண்டி மக்கள் மத்தியில பிரிவினைதான் உண்டுபண்னுமே தவற, அம்மஞ்சல்லிக்கு கூட பிரயோசனமில்ல..

1 comment:

  1. 1xbet korean - Online Sports Betting & Casino
    1xbet korean - Online Sports Betting & Casino - Find out how to withdraw winnings. Discover the best bonus codes for 1xbet kz sports betting, gambling and

    ReplyDelete