Wednesday, May 26, 2021

மீனாட்சிபுரம்... முஸ்லிம்களாய் மாறிய கிராமம் - மண்டைக்காடு கலவரம் - தமிழ்நாட்டில் RSSன் நுழைவு...

இந்தியா சுதந்திரத்தின் போதும், அதன் பின்பும் இந்து முஸ்லிம் கலவரம், காந்தி படுகொலை, பாபர் மசூதி இடிப்பு என்று RSS இந்துத்துவா வெறியர்களின் செயல்பாடுகள் வடநாட்டில் மட்டுமே நிகழ்ந்ததே தவிர தமிழ்நாட்டில் மதகலவங்கள் என்று ஒன்றும் நடந்ததில்லை. இதற்கு பெரியாரின் பிரச்சாரங்களே முக்கிய காரணம்.  

இங்கு மதப்பிரச்சினை, கலவரம் இல்லை என்றாலும் சாதி பிரச்சினை அதிகமாகவே இருந்துவருக்கிறது. ஆதிக்க சாதியினர் இப்போவரைக்கும் தாழ்த்தப்பட்ட மக்களின் மீது வன்முறைகளை நிகழ்த்திகொண்டே தான் இருக்கின்றனர். இப்போதுள்ள நிலையில் தமிழ்நாட்டில் ஆதிக்க சாதிவெறியர்களால் சாதி கலவரம், கவுரவகொலைகள், ஆதிக்கம், சிலை உடைப்பு என்று நகழ்த்தப்பட்டு வருக்கிறதென்றால் 50 வருடத்திற்கு முன்பு நிலை என்னவாக இருக்கும்?

1981ல் ஆதிக்க சாதிவெறியர்களின் தீண்டாமை கொடுமை தாங்க முடியாமல் தமிழகத்தில் ஒரு கிராமமே இந்து மதத்தை விட்டு இஸ்லாம் மதத்திற்கு மாறியது. இந்த நிகழ்வு டில்லி வரை பேசப்பட்டது. இந்துத்துவா அமைப்புகளான இந்துமகா சபா, RSS க்கும், அதன் கட்சியான பிஜேபிக்கும் பயத்தை உண்டுபண்ணியதோடு, இந்துத்துவாவின் வர்ணாசிரமம் ஆட்டம் கண்டது.

அந்த நிகழ்வு, திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கின்ற மீனாட்சிபுர கிராம மக்கள் ஒட்டு மொத்தமாக இஸ்லாம் மதத்திற்கு மாறியதுதான். அந்த கிராமத்தில் 300 குடும்பங்கள் 1300 மக்கள் என்று அனைவரும் தலித் பள்ளர் சமுதாய மக்களாகவே மக்களாக இருந்தனர். கல்வி நிலையிலும் மற்ற கிராமங்களை காட்டிலும் மீனாட்சிபுரத்தில் படித்த இளைஞர்கள் அதிகமாக இருந்தனர். பெரும்பாலான தலித் மக்கள் சொந்த நிலம் வைத்துதிருந்தனர், விவசாயம் செய்துவந்தார். மிகச்சிறியளவு மக்களே பாக்கத்து ஊரில் உள்ள ஆதிக்க சாதி காட்டில் கூலி வேலைசெய்தனர்.

இவர்கள் அப்பிடி ஒட்டுமொத்தமாக மாறியதற்கு காரணம் அவர்கள் அனுபவித்த தீண்டாமை பிரச்சனைகளே.. மீனாட்சிபுரத்தின் சுற்றியுள்ள கிராமங்களில் எல்லாம் உயர்சாதி இந்துக்கள் அதிகமா வாழ்றாங்க, குறிப்பாக தேவர் சாதியினர் ஆதிக்கமே அதிகமாக இருந்தது. ஒரு தலித் ஆதிக்கசாதி தெரு பக்கம் சட்டை போட்டு போகக்கூடாது, கிழிச்சு அனுப்புவாங்க, செருப்ப கையில் எடுத்துட்டுதான் போகணும், டீ கடையில் இவர்களுக்கென்று ஒரு இய்யா டம்ளர் தொங்கவிடப்பட்டிருக்கும், பஸ்சில் சீட்டில் உக்கார கூடாது, கீழே தான்.

ஊருக்குள் போனா 60 வயது பெரியவரை 15 வயது ஆதிக்க சாதி சின்னபயன் வாடா, போடா, வா, போ னு தான்  கூப்புடுவான், பேரு சொல்லி யாரும் கூப்பிடமாட்டாங்க, திட்டமாட்டாங்க "பள்ளப்பபயலே" னு தான் கூப்புடுவாங்க, படித்த தலித் இளைஞர்களுக்கும் இதே நிலைமைதான். தலித்கள் கோவில் கோடை நடத்த முடியாது, குளத்தில் தண்ணி எடுக்க முடியாது, படித்தவர்கள் கேள்வி கேட்க முடியாது, எதிர்த்து பேசினால் கட்டிவைத்து அடிப்பாங்க. இதில தலித் பொண்ணுங்களாலோட நிலைமை ரெம்ப  மோசமாவே இருந்தது.

இந்த தீண்டாமை ஒடுக்குமுறைகளில் இருந்து வெளியே வரத்தான் 210 குடும்பங்கள் (19.02.1981) ஒரே நாளில் இந்துமதத்தை விட்டு இஸ்லாம் மதத்திற்கு மாறினார்கள். 

வர்ணாசிரமத்தை தூக்கிப்பிடிக்கும் இந்துத்துவா RSSக்கும், பிஜேபிக்கும் இந்த மதமாற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கடுமையாக எதிர்த்தனர். RSS தலைவர்கள், பிஜேபி வாஜ்பாய், சுப்பிரமனிய சுவாமி என்று. எல்லோரும் மீனாட்சிபுரதுக்கு வந்தனர். 

தலித் மக்களை சந்தித்து உங்களுடைய கோரிக்கைகள் எதுவானாலும் ஏற்கப்படும் மதம் மாறுவது தவறு நீங்கள் இந்து மதத்திற்கு திரும்பிவிடுங்கள், உங்களுக்கு பூணுல் அந்தஸ்து கூட கொடுகின்றோம் என்று பிஜேபி வாஜ்பாய்யும், RSS தலைவர்களும் தலித் மக்களை கெஞ்சி பார்த்தார்கள். ஆனால் தலித்கள் எதற்கும் ஏமாற தயாராக இல்லை. இந்துமதத்தில் மரியாதை இல்லை, எங்களுக்கு அரசுசலுகைகளும் வேண்டாம் உங்கள் இந்துமதமும் வேண்டாம், நாங்கள் மரியாதையோடு வாழ விரும்புகிறோம் என்று அழுத்தமாக கூறிவிட்டனர்.

தலித்கள் மதம் மாறுவதை BJP, RSS இந்துத்துவா அமைப்புகள் எதிர்த்தது போலவே சில இஸ்லாமியர்களும் எதிர்த்தனர். எட்டனாவுக்கும் 'புளுக்க' வேலை செய்பவனெல்லாம் தொப்பி போட்டு 'துளுக்கனாக' ஆகிவிட்டால் என்ன செய்வதென்ற சுய நலத்தோடும்,  ஆதிக்க சாதியினரின் கோபத்திற்காளகி விடுவோமென்ற பய உணர்வோடும் தலித்களை மத மாற்றம் செய்ய மறுத்தனர்.

அதனால் மதம் மாற நிணைத்த தலித்கள் பாளையங்கோட்டையிலுள்ள தென் இந்திய இஷா-அத்துல் சபையை அனுகினர்.  தங்களை முஸ்லிம் சமுதாயமாக மாற்றி இப்போது மரியாதையுடன் வாழ்ந்து வருகிறார்கள். மதம் மாறிய தலித்களை தீட்டு கழிக்காமல் பரிகாரம் செய்யாமல் ஏற்றுக்கொண்டதோடு.. தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோயில், அச்சன்புதூர், வடகரை பகுதிகளில் வாழும் முஸ்லிம்கள் பாரபட்சம் காட்டாமல் இவர்களிடம் பெண் குடுத்து பெண் எடுத்து, திருமண உறவுகள் வைத்துவருகிறார்கள்.

மீனாட்சிபுரம் தலித் மக்களின் மதமாற்றம் நிகழ்வு RSS இந்துத்துவா அமைப்பிற்கு அதிக எரிச்சலூட்டியதால், தமிழகத்தில் இந்துத்துவாவின் மதவெறி செயல்பாடுகளை செய்திட செயல்திட்டம் தீட்டினர். அதன்தொடர்ச்சியாக நாகர்கோவிலில் RSS முதல் கூட்டம் நடைபெற்றது. RSSன் முதல் செயல்திட்டமாக மண்டைக்காடு கலவரத்தை தூண்டிவிட்டது.

குமரி மாவட்டத்தில் கடற்கரையோரமா இருக்கின்ற ஊர்  மண்டைக்காடு. இந்துக்கள், கிறித்தவர்கள் ஆகிய இரு மதத்தினரும் சம அளவில் வாழ்ந்து வருகின்றனர். அங்கே உள்ள பகவதி அம்மன் கோயில் மாசித் திருவிழா பெரியளவில் கொண்டாடப்படும். அதேபோல குருசடி சார்பிலும் தேவாலயங்கள் சார்பிலும் நடைபெறும் விழாக்களை கிறிஸ்தவர்கள், இந்துகளென்று அனைத்து மக்களாலும் கொண்டாடினர்.. மத வேறுபாடு இன்றி மக்கள் அங்கு மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். இந்துக்கள் கிருஸ்துவர்களின் மதஒற்றுமையை பொறுத்துக் கொள்ள RSS மதவெறியர்கள், ஒற்றுமையை குழைக்க 1981 முதல் சூழ்ச்சிகளை செய்ய தொடங்கினது.

மண்டைக்காடு பக்கத்தில் உள்ள மாடத்தட்டுவிளை என்னும் ஊரில் வைக்கப்பட்டிருந்த சிலுவை ஒன்று காணாமல் போனது. அது தொடர்பாக இரு மதத்தினருக்கும் இடையில் சிறு சிறு மோதல்கள் வந்தன. பேச்சளவில் அது நின்றது. மக்களிடையே பழைய ஒற்றுமை நிலை மாற தொடங்கியது. 

அடுத்து, அந்தப் பகுதி கிறித்துவர்கள், உலக ஜெப வாரம் கொண்டாடினர். பல ஊர்களிலிருந்தும் கிறித்துவ மக்கள் நாகர்கோயில் நோக்கி ஊர்வலமாக வந்தனர். அங்கு ஒரு சிலுவையையும் வைத்தார்கள். ஆனால் அந்தச் சிலுவை சில நாள்களில் காணாமல் போனதுடன், அங்கு ஒரு பிள்ளையார் சிலையும் RSS மதவெறியர்களால் வைக்கப்பட்டது. அப்போது கலவரம் ஏதும் நடக்கவில்லை. 

RSS அமைப்பினர் மதக்கலவரத்தை உருவாக்க தீவிரமாக செயல்பட்டார்கள். 1982ஆம் ஆண்டு பிப் 13, 14 ஆம் நாள்களில், நாகர்கோயிலில் இந்து எழுச்சி மாநாடு நடத்தப்பட்டு இந்து மக்கள் மனதில் மதவெறியை புகுத்தினார்கள்.

பகவதி அம்மன் மாசி விழாவிற்கு வந்த இந்துப் பெண்களைக் கிறித்துவ இளைஞர்கள் கேலி செய்கிறார்கள் என்று போலி செய்திகளை ஊருக்குள் பரப்பிவிட்டு கலவரத்தை ஏற்படுத்திவிட்டார்கள். காவல்துறை முதலில் தடியடி நடத்தியது. பிறகு துப்பாக்கி சூடு நடத்தியது. 6 பேர் அந்த இடத்த்திலேயே சுட்டு கொன்றது. இந்த கலவரம் பக்கத்து ஊர்களுக்கும் பரவியது. அடுத்த சில நாள்களில் மேலும் மூவர் பலியானார்கள். நூற்றுக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டது. கிறித்துவ மீனவர்களும், நாடார்களும் ஒற்றுமையாக இருந்தவர்கள், இந்துத்துவா மதவெறியர்களால் எதிரிகளாய் ஆக்கப்பட்டார்கள். அந்த பகுதி மக்களிடம் மதவெறி அதிமாக வளர தொடங்கியது.

இந்த நிகழ்வுக்கு பின்னர் RSS, இந்து முன்னணி இயக்கம் அந்த மாவட்டம் முழுவதும் வளர தொடங்கி, தற்போது தமிழ்நாட்டின் BJP தொகுதியாக கன்னியாகுமரி மாவட்டம் மாறியிருக்கிறது.

- Douglas Muthukumar

No comments:

Post a Comment