Wednesday, May 26, 2021

பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ வச்சி பொழப்பு நடத்துறத தவிர வேற என்ன பண்ணப்போறாங்க...

எத்தனை நாளைக்கு அந்தாள வச்சி பொழப்ப ஓட்டுவாங்க? அந்தாளு சாக போற காலத்துலயும் களத்துல இறங்கி போராடி செத்தாரு அதுதான் போராட்டம். இப்போ இவனுகளோட புரட்சி ங்கிறது ஒரு கல்யாண மண்டபமோ, அல்லது ஏர் கூலர்  வசதியுள்ள இண்டூர்லயோ முற்போக்கு, நாத்திகம் னு பேசி முடியுது? அப்படி இல்லனா 2 டிவி சேனல்கள்ட்ட முற்போக்கு, நாத்திகம் னு பேசி முடியுது.

எத்தனை நாளைக்கு அவர சொல்லிட்டு போலி புரட்சி பண்ணுவாங்க? அவருக்கு அடுத்து நீங்க என்ன செஞ்சீங்க? இப்படி ஒரு கேள்வி கேட்டா கூட நாங்க 70, 80 களில் தான் ஆறம்பிப்பாங்க. ஒரு சாதி கலவரமோ, மதப்பிரச்னையோ நடந்து முடிச்சதுக்கு அப்றம் "இது இந்துத்துவாவின் மனித வேட்டை, தமிழகத்தில் இந்த அமைப்புகளை முழுவதும் துடைத்தெரியாமல் இங்கு சமத்துவமான சமுதாயம் படைக்க முடியாது" 

இத சொல்றதுக்கு ஒரு இயக்கம் தேவையா? 80களுக்கு அப்றம் சாதி ஒழிப்பிற்கு என்ன நடவடிக்கை எடுத்தாங்க? சிலையை காப்பாத்துரதிரத்திலேயே இவங்க புரட்சி முடிச்சிருது. அப்படி இல்லனா ரெண்டு கல்யாணம் பண்ணி வைக்கறதுல முடிச்சிருது. 80 அப்றம்மும் நீர்த்துபோகம அதே களைப்பணிய மக்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில செஞ்சிருந்தா இங்க எப்படி RSS, இந்துமுன்னணி, சீமான், திருமுருகன் காந்தி, மயிரு மட்ட னு வளர்ந்து வந்துருக்கும்?

வன்முறையை எப்போதும் ஏற்காத பெரியார் கூட குலகல்வி திட்டத்த ராஜாஜி கொண்டுவரும் போது வன்முறையை அனைத்து இளைஞர்களும் கையில் எடுங்கள் னு தமிழகம் முழுவதும் அறிக்கை விட்டாரே அது ஏன் னு கூட இங்க புரிதல் இல்லாமலா இயக்கம் நடத்திட்டு இருக்காங்க. நீட் தேர்வுனால இங்க ஒரு புள்ள சாகும் போதும் கூட ஒரே ரீயாக்ஸன் தான். ரெண்டு tv சேனலை கூப்பிட்டு ஏதாவது மண்டபத்த வாடகைக்கு புடிச்சி பேசுறது. களத்துல இறங்கி எப்போ வேல பாப்பாங்க? எங்க ஊர் பக்கம் எல்லாம் திராவிட கட்சி னா இப்போ இருக்குறவுங்களுக்கு யாருக்கும் தெரியாது. அங்க உறுப்பினரும் யாருமில்ல, கிராம பக்கம் வந்தாதான தெரியும். உறுப்பினர புராம் பாரின்காரன், பணக்காரனத்தான் சேக்கான்.

இவனுங்க இப்படி இருக்க இங்க கம்யூனிஸ்ட் அதைவிட ரெம்ப மோசம். எதுக்கு போராட்டம் நடத்தனும், நடத்த கூடாது னு தெளிவில்லாமா இருக்காங்க. சரி குழுவா விவாதிச்சி கண்டனம் ஆர்ப்பாட்டம் நடத்தாலனு கூட்டம் போட்டு ஒருவழியா எல்லோரும் சரி போராட்டம் நடத்துவோம் னு போனா அந்த இஸ்ஸு முடிஞ்சி ரெண்டு வாரம் ஆகி, அடுத்து அதவிட பெரிய பிரச்சினை போயிட்டு இருக்க, "என்னடா பண்ணலாமுன்னு, மறுபடியும் ஒரு கூட்டத்த போடு னு இப்படியே போயிடுது.

பாவம் நம்ம பசங்க "நம்ம மேல் மட்டத்தில இருக்குறவுங்க பெரிய புரட்சியா பண்ணி இந்த நாட்ட கம்யூனிஸ்ட் நாடா மாத்திருவாங்க"னு ஆர்ட் காலேஜ், லா காலேஜ் னு கிளாஸ கட்டடிச்சாவது மக்கள் பிரச்சினைய மக்களுக்கு புரிய வைக்கனுமூனு.. புதிய மாணவர்கள், புதிய ஜனநாயகம், புரட்சிக்கு ஏங்கும் காலம் னு புத்தக்கத்தையும், உண்டியலையும் குழிக்கிட்டு பஸ்ஸுக்குள்ளயும், ட்ரெயின்க்குள்ளயும் போயி காட்டு கத்து கத்தி மக்களை விழிப்புணர்வு செய்ய பிரசாரம் பண்ணி ஒரு புதிய ஜனநாயக நாட்ட கனவு கண்டா.. இயக்கத்தில மேல இருக்குறவுங்க நமக்கென்ன னு வண்டிய ஓட்டிட்டு இருப்பாங்க.

இயக்கத்தில இருக்குற மாணவர்கள் யாராவது எதுக்குயா இப்படி இடிச்ச புளி மாதிரி இருக்கீங்க, நாம ஏதாவது பெருசா பண்ணுவோம் னு இறங்குனா கூட அமைதியா உக்காருடா ஆர்வக்கோளார் னு அமுக்கி புடுவாங்க. அதையும் மீறி மார்க்ஸீஸ்யம் இப்பிடித்தான் சொல்லுதா னு கேள்விய கேட்டுப்புட்டா  போதும் இயக்கத்தவிட்டு வெளிய போக சொல்லுவாங்க. 

முதலாளித்துவத்த ஒழிக்கணும், சாதிய ஒழிக்கணும் னு இளைய தலைமுறைக போராட்டம் பண்ணிட்டு இருந்தா, இந்த போராட்டம் பண்ணுற கம்யூனிஸ்ட் கட்சியோட மேல்மட்ட தலைவர் ஒரு பார்ப்பணனா இருப்பான் இல்ல பெரிய பெரிய முதலாளிகளுக்கு சொந்தபந்தமா இருப்பான். இவனுங்க எப்படி முதலாளித்துவத்த ஒழிக்க முடியும்,  சாதிய ஒழிக்க முடியும்? இவனுங்க ஒழுங்கா செயல்பட்டுருந்தா எதுக்கு கம்யூனிஸ்ட்குள்ள இவ்வளோ பிரிவு. 

இவனுகள நம்பி எந்த பயனுமில்லனு ஸ்டாலின் ஸ்டைலுல நாமக்கு நாமே ங்கிற மாதிரி சாதிய ஒழிக்க,ஆதிக்க சாதிய எதிர்த்து போராட தாழ்த்தப்பட்ட சாதியில உருவான தலைவன் பின்னாடி போனா.. "அம்பேத்கர் என்ன சொன்னாரு.. கற்பி ஒன்று சேர் புரட்சி செய் னு பேசிட்டு, பின்னாடியே நீ தாழ்த்தப்பட்டவன் இல்ல பல்லவர் வம்சம், வீர சாம்பவன் னு முறுக்கி விடுவானுக. 

இவனுகளும் சாதி ஒழிப்பு பத்தி பேசுறத மறந்துட்டு நாங்க வீர பறையண்டோய், மள்ளர்டோய், தேவேந்திர குலம்டோய், ஒண்டிவீரன் பரம்பரைடோய் னு கத்திட்டு கெடந்தா.. நாங்க வீர வன்னியங்கடோய், அக்கினி சட்டிடோய் னு சாதி சண்ட தான் வரும். இந்த வாக்கு அரசியலுக்கு சாதி சண்டைங்கிறது கண்டிப்பா தேவை. அவன் அத வச்சி தான் அரசியல் பண்ணமுடியும். பண்ணிய விட கேவலமா கூட ஏறங்குவாங்க. வாழ்நாள் முழுக்க இந்துத்துவா எதிர்த்து போராடி, நான் சாகும்போது ஒரு இந்துவா சாகமாட்டேன் னு சொன்ன அண்ணல்லோட கருத்துக்களை பேசிட்டே வாக்கு அரசியலுக்காக பட்டைய போட்டு இந்து சாமியை கும்புடுற ஈனப்பிறவியாக மாறுவாங்க, அல்லது இந்துத்துவா கட்சி கூடயே கூட்டணியை போட்டுட்டு நம்மட்ட சாதிய ஒழிக்க வந்த போராளி னு ஸீன போடுவாங்க. அம்பேத்காரியல் அரசியல் இங்க எப்படி இருக்கு னு புரிச்சிக்கோங்க.

சாதிய ஒழிக்கணுமுன்னு ஒரு சாதில இருந்து ஒரு தலைவர் வந்தா... கருத்து முரண்பாடு னு ஒரு இயக்கத்தில இருந்து 5, 6 இயக்கம் பிரிஞ்சி ஒரே சாதிக்காவே ஆரம்பிக்காணுக. இவனுகளுக்கு சாதிய ஒழிக்கிறத தவிற வேற என்ன கருத்து இருக்க முடியும்..? எதுல முரண்படுறாங்க?

ஒரே சாதிக்கு போராடுரோம் னு முளைச்ச இயக்கங்கள், ஒன்னு ஆளுங்கட்சிக்கு சப்போர்ட்டா இருக்கு, இன்னொன்னு எதிர்க்கட்சிக்கு சப்போர்ட்டா இருக்கு மக்களை அம்பேத்கர், சாதி ஒழிப்பு னு சொல்லி ஏமாத்தி ஓட்டு வங்கியா மாத்தி பிஸினஸ் பாக்குறாங்க. 

இப்படி இருக்குறவுங்க சாதி சண்டை நடந்தா மட்டும் என்னத்த கிழிச்சிற போறாங்க, இதையும் பேசி பிசினஸ் தான் பாக்க போறாங்க. இதுக்கு என்ன முடிவு னு கேட்டா தேர்தல் ரிசல்ட் வரட்டும் இவனுகளுக்கு இருக்கு னு சொல்லி உங்களை சமாளிப்பாங்க. தேர்தல் ரிசல்ட் வந்தா இந்த பிரச்சினை மறந்தே போயிரும்.

அப்றம் சாதி ஒழிப்பு னு கேட்டு ரெம்ப நாள் ஆகுது.. இனிமேலாவது இவனுகள நம்பாம சாதிய ஒழிக்க முறையா கிராம கிராமமா பழையபடி பிரச்சாரம் பண்ணுனாத்தான் ஒரு முடிவுக்கு வரும். எவ்வளவு எதிர்ப்புகள் இருக்கு எவ்வளவு ஏற்புகள் இருக்குனு நாமளும் தெரிஞ்சிக்கலாம். தெரிஞ்சாதான் நமக்கு வலுவான ஆயுதம் கிடைக்கும். அதவிட்டு கல்யாண மண்டபம் புடிச்சி பேசுறது கதைக்காகாது.

No comments:

Post a Comment