Wednesday, May 26, 2021

தாலி என்பது பெண்களுக்கு தேவையில்லாத ஆணி - தாலி பற்றி பேசினால் ஆண்களுக்கே அதிக ஆத்திரம் வருவதேன்..?

இதெல்லாம் புனிதம், பெண்மைக்குரியவை னு இந்த சமுதாயம் பெண்களுக்கு மட்டும் ஸ்பெஷலா வைச்சிருக்கும் போதே ஒவ்வொரு பெண்களும் உஷாரா அத சந்தேகப்படனும், "ஏண்டா.. எங்களுக்கு மட்டும் ஸ்பெஷல்..?"னு கேள்வி கேக்கணும். அப்பிடி ஸ்பெஷல் ஐட்டத்தில ஒரு ஐட்டம் தான் தாலி. தாலி தேவையானு பொண்ணுங்கட்ட கேக்கும் போது ஆண்களுக்கு எதுக்கு கோவம் வருது? ஏன்னா அது பெண்களுக்கும் ஆண்களுக்கும் சமமான குறியீடு இல்ல, பெண்களை அடிமையாக்க போடப்பட்ட அடிமை சின்னம்.

ஆணாதிக்க சமுதாயம் தாலி ங்கிறத புனிதம்னு சொல்லி, தொடர்ச்சியாகப் போதிக்கப்பட்டு வருவதால சமூகத்தில் பலரும் ‘தொட்டுத் தாலிகட்டிய புருஷனையே எதிர்த்துப் பேசலாமா? என்பதைப் போன்ற அடிமைச் சிந்தனைகளை தான் பரப்பி வராங்க. ஆண்களை எதித்து பேசுனா எப்பிடி? பெண்கள் கலாச்சாரத்த காப்பாத்தனும், அடங்கி நடந்துகனும்.

தாலியில் குங்கும் வைத்து வழிபட்டால் புருஷன் நீடூழி வாழ்வான் னு சொல்லுவாங்க, சுமங்கலி பூஜை நடத்த சொல்லுவாங்க, இதுதான்  நம்ம கலாச்சாரம் னு சொல்லுவாங்க. இந்த சமுதாயத்தில மனைவி நீடூழி வாழ எந்த பூசையும் ஆண்கள் செய்ய தேவையில்லை. 

தாலி ங்கிறது பெண்களின் உயிர். கணவர் மீது பெண்கள் வைத்திருக்கும் நம்பிக்கை, அடையாளம் னு கிளாஸ் எடுப்பாங்க. தாலி இல்லாம வாழ்றவங்க கணவனுக்கு நம்பிக்கையோட வாழ முடியாது ங்கிற தான் இவுங்க வாதம். பெண்களுக்கு தாலிதான் ஒழுக்கம், அப்பிடி ஒரு ஒழுக்கம் ஆண்களுக்கு இல்லயா னு கேக்க கூடாது.

தாலிதான் பொண்ணுங்களுக்கு வேலி. தாலி போடலானா பொண்ணுங்கள மேஞ்சிருவாங்களா..? இதுதான் இந்த சமூகம்.

ஆயிரம் பேர் மத்தியில மந்திரம் சொல்லி கட்டுற தாலிக்கு எப்படி அர்த்தம் இல்லாம போகும் னு கிளாஸ் எடுப்பாங்க. அது என்ன அர்த்தம்? மந்திரத்திற்கு என்ன அர்த்தம் னு கேக்க கூடாது. ஏன்னா தாலி புனிதம் அவளதான் சொல்லுவோம்.

பெண்களுக்கு தாலி என்பது மந்திர சக்தி மிக்கது. கழற்றினால் புருசனுக்கு சிரமம் ஏற்படும். ஏன்னா தாலி புனிதம். என்ன மந்திர சக்தி னு கேக்க கூடாது.

தாலி கட்டியிருக்கும் பெண்களை சமுதாயத்தில் ஆண்கள் மரியாதையாக பார்ப்பார்கள். கல்யாணம் ஆகலனா பிகரு, ஆச்சினா ஆண்டி, ஆண்டி செம, ஆண்டிதான் ரெம்ப புடிக்கும். இதுதான் மரியாதை.

தாலியால ஏதாவது பயன் இருக்கா, பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கான்னு கேட்டா இல்லைன்னுதான் சொல்லுவாங்க. தாலி போட்டிருக்கும் பெண்களை மட்டும் பொறுக்கிகள் விட்டிருவாங்களா..? அண்ணன் னு கையெடுத்து கும்புட்டாலே பாலியல் வன்புணர்வு பண்ற கூட்டம்.

பொதுவா  பெண்கள்கிட்ட கேட்டா தாலியால் விசேசமான பாதுகாப்பு இல்லனு தான் சொல்லுவாங்க. பாதிக்கு மேற்பட்ட பெண்கள் தாலி அணிவது அவுங்கவுங்க விருப்பம் சார்ந்தது, கட்டாயப்படுத்த யாருக்கும் உரிமையில்லனு சொல்லுவாங்க. சில பெண்கள் தாலி தேவையில்ல, தாலி மாட்டிதான் ஒழுக்கத்த நிறுப்பிக்கணும் னு அவசியம் இல்லன்னு சொல்லுவாங்க.

தாலி புனிதமா, பண்பாடா, மரபா, இது தேவையா கேட்டா பாதிக்கும் மேல குழப்பமாதான் பதில் சொல்லுவாங்க. வேறு வழியில்ல அத ஏத்துகிட்டு தான் ஆகணும் னு அப்பாவியா சொல்லுவாங்க. ஆகமொத்தம் தாலிங்கறது பெண்களை தனக்கு உறிய பொருளா ஆண்கள் அடிமைப்படுத்தவும், புருஷன் செத்ததும் தாலிய அறுத்து முண்டச்சி னு பெண்களை இழிவுபடுத்தவும்தான். இதில என்ன புனிதம் கண்டுட்டாங்க னு தெரியல.

தாலி பத்தி பேசினாலே "தாலியின் புனிதம் தெரியுமானு செம்ப தூக்கிட்டு வந்துருவாங்க. இவனுங்க சொல்ற புனிதம், மகத்துவம் என்னன்னா..? "மாங்கல்யத்தில் நான் போடும் முதல் முடிச்சி நீ தெய்வத்திற்கும் மனசாட்சிக்கும் கட்டுப்பட்டவள் என்பதை காட்டட்டும். இரண்டாவது முடிச்சி குலபெருமையை நீ பாதுகாப்பாய் என்பதை காட்டட்டும் மூன்றாவது முடிச்சி குலவாரிசுகளை முன்னின்று காப்பவள் நீயென்று காட்டட்டும்"னு அடிமைத்தனத்தை தான் இவ்வளவு பவ்வியமா விளக்கம் கொடுப்பாங்க. ஆண்களுக்கு இந்த மாதிரி கட்டுப்பாடுகள் ஏதும் கிடையாது.

சில ஆன்மிக நாயிக தாலிக்கு சாஸ்திர விளக்கம் கொடுக்கும் "மாங்கல்யம் என்பது புனிதம், ஒன்பது தாத்பரியம் கொண்டது. தாலி கட்டுவது பெண்கள் தூய்மை, தன்னடக்கம், தொண்டு, பணிவு, தெய்வீக நோக்கம், உத்தம குணம், நம்பிக்கை, புரிந்து நடந்துகொள்ளுதல், மேன்மை என ஒன்பது தாத்பரியங்களும் கொண்டு ஒழுக்கம் தவறாமல் நடப்பதே ஆகும்"னு எல்லாம் பெண்களை எப்பிடி எப்படி அடிக்கி ஒடுக்கி வைக்கணுமோ அதுக்கு ஏத்த மாதிரியே தாலியின் மகத்துவத்த விளக்குவானுக. இதுல என்ன மகத்துவம் இருக்கு.? அடிமையா இருக்கணும் அவளதான னு கேட்டா..? எங்கள் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை, அப்பவே எல்லாம் சைன்டிஸ்ட் னு தாலிக்கு அறிவியல் விளக்கம் கொடுப்பாங்க பாருங்க..

"தாலியை அறிவியலின் படி பார்த்தால் தாலி என்பது பெண்களின் இரத்த ஓட்டத்தை சரிசெய்கிறது. அதுமட்டுமல்லாது பெண்களின் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. இதனால் தான் தாலியை மறைத்து உடலோடு ஒட்டி உரசும்படி அணிய வேண்டும் என்று முன்னோர்கள் கூறினர்" னு அடிச்சி விடுவாங்க. பெண்கள் எல்லாத்துக்கும் என்ன ரத்த அழுத்த நோயா இருக்கு..? வெளிநாட்டு பெண்கள் தாலி போடலயே..? ஆண்களுக்கு இந்த மாதிரி ஏதும் இல்லையே..? விதவைகளும் பெண்கள் தானே..? அறிவியல் ஆதாரம் என்ன..? எதுக்கும் பதில் வராது.

சில தமிழ் சங்கிக "பெண்களுக்கு தாலி ஏன் அவசியம் என்று தெரியுமா.. பெண்களின் மார்பு பகுதியில் நரம்பு முடிச்சிகள் உள்ளது. அது ஆண்களுக்கு இல்லை. அது நேராக மூளைக்கு சென்று பெண்களை குழப்பமான மனநிலைக்கு ஆளாக்கும். அந்த நரம்பு செயல்களை கட்டுப்படுத்தவே தாலி அணியப்படுகிறது. இதை 12 நூற்றாண்டில் ஒரு ஞானி கண்டறிந்து ராஜராஜ சோழனிடம் சொன்னார். மன்னர் தாலி அணிவதை கட்டாயமாகினார்."னு கதை விடுவானுக. அந்த நரம்பு விதவைக்கு இருக்காது.? வெளிநாட்டு பெண்களுக்கு இருக்காது.?

இங்க தாலி புனிதம் னு பேசுரவுங்க நாயிக்கும் நாயிக்கும் தாலிகட்டுறப்ப, மனுஷனுக்கும் கழுதைக்கும் தாலிகட்டி கல்யாணம் பண்ணிவைக்கும் போது இவுங்க புனிதம் எங்க போச்சி னு தெரியல. காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவிச்சி Rss காரங்க நாயிக்கி தாலி கட்டி எதிர்ப்பு தெரிவிச்ச நிகழ்வுகள் வருச வருசம் நடந்துட்டுத்தான் இருக்கு.

ஒரு தலித் பையன் உயர்சாதி பொண்ண காதலிச்சி கோவிலுலயோ, பதிவு அலுவலகத்திலயோ திருமணம் பண்ணுனா, பொண்ணு வீட்டுக்காரன் பொண்ணு தாலிய அறுத்து போட்டு கூட்டி போயி, சொந்த சாதி பையனுக்கு கட்டிவைக்குறான். இங்க தாலியின் புனிதம் என்ன..? தாலி பொண்ணுக்கு வேலியா..? மகத்துவமா..? மயிரா..? இங்க சாதி தான் மனிதனுக்கு பெரியது. சாதிய நிலைய கட்டிக்காக்க பொண்ணுங்கள அடைக்கி அடிமைப்படுத்துற புனிதம் தாலி. இங்க சாதி தான் புனிதமே தவற தாலியில்ல.
வெளிநாடுகளில் பெண்களை வம்ச வாரிசுகளுக்காக மதத்தோட பேருல அடைக்கி வைச்சா.. இங்க வாரிசுக்காகவும், சாதிய கட்டிகாக்கவும் பெண்கள் அடங்கப்போக வேண்டியிருக்கு. இதுல தாலியின் புனிதம் என்ன? பெண்கள் எப்போதும் ஆண்களின் உடைமைகள் தான். உடைமைகள் கைமீறிப் போகும்போது கவுரவக் கொலைகள் கூட நடக்கும். இங்க பெண்கள் நடத்தை என்பது மதத்தின் பேருல ஒரு சாதிக்கு கட்டுப்பட்டு, சாதிய வெறியர்களை உற்பத்தி செஞ்சி, சாதிகளை வளர்க்கும் செயல்தான். இதுக்காகதான் தாலி. இதுல அடிமை ங்கிற அடையாளத்த தவிர புனிதம் ஒன்னுமில்ல. 

சாதிக்கு ஒரு டிசைன் தாலி எதுக்கு.? நீங்க தாலி செய்ய குடுக்க, வாங்க நகைக்கடைக்கு போனா..  என்ன ஆளுக தான் கேட்டு தாலி கொடுப்பான். என் உங்க தாலி மட்டும் இந்த டிசைன்ல இருக்கு னு கேட்டா, "இது எங்க வழக்கம், நாங்க இப்பிடி தான் தாலி போடுவோம்"னு சொல்லுவாங்க. தாலி பெண்களோட அடிமைப்படுத்தும் அடையாளம் மட்டுமில்ல, அது ஒரு சாதிய குறியீடு.

இப்ப சொல்லுங்க உங்க தாலியின் புனிதத்த..?

பெண்கள் தாலியை வைச்சிதான் குடும்ப உறவில் துணைவனிடம் அன்பையும் உண்மையையும் காட்ட வேண்டியுமா.? அது இல்லாமலேயே அன்போடும் அறனோடும் இல்லறம் நடத்தலாம். குடும்ப அமைப்பில் சமமற்ற ஆணாதிக்க தன்மையை வலியுறுத்தும் தாலி வேண்டாம் என்று சொல்வதற்கு சனநாயக நாட்டில் எல்லாருக்கும் உரிமை இருக்கு.  இந்த நவீன காலகட்டத்தை விட்டுட்டு காட்டுமிராண்டி போல நாடோடி கால காட்டத்திற்கு பின்னோக்கி செல்ல வேண்டாம். தாலி நம்ம கலாச்சாரமா..? தாலியின் வரலாறு என்னனு எல்லாம் ஆராய வேண்டியதில்ல. ஆதனால என்ன யூஸ்..? எதுக்காக பெண்கள் மட்டும் கட்டிகனும் னு யோசிச்சா போதும்.

தாலி என்பது நிலவுடைமை சமூகத்தின் பெண்களது அடிமைத்தனத்தை நிலைநாட்டுகின்ற அடையாளம். அதை கருத்தாக, கதைகளாக, நீதிகளாக, சட்டமாக பார்ப்பனியம் பெண்கள் மீது ஒழுக்கம் ங்கிற பேரில திணிக்கிறது. பார்ப்பனியம் பெண்களுக்கு சொல்லுகிற கதைகளை காலத்துக்கு ஏற்றது போல இப்பவும் சொல்லுகிறது.  அதுதான் அக்சய திரிதியை என்ற பெயரில் தாலியும், பெண்ணடிமைத்தனமும். 

இந்த உலகத்தில் இருக்கிற எல்லா உயிர்களுக்கும் சுதந்திரமாக வாழ உரிமையுண்டு. ஆண்கள் மட்டும் அதிகாரமாக இருக்கவும், பெண்கள் வரையறுத்து நடத்தப்படுவதும் இயற்கைக்கு மாறானது. இதை பெண்கள் உணர்ந்து வர்க்கமாக இணைந்து பிற்போக்குகளையும், அடிமைப்படுத்துகிற புனிதங்களையும் உடைத்தெரியவேண்டும்.

No comments:

Post a Comment