Wednesday, May 26, 2021

எங்கே எனது விளையாட்டு...?

பாதையோர காலைக்கடன்
பாவக் கூத்து ஆரம்பம்
கதை சொன்னேன் தம்பிக்கு
கல்லு பொம்மை விளையாட்டு

விடிந்ததும் தேடினேன்
பம்பரக் கயிற்றை
அரையான் கயிற்றிலும் சுற்றும்
என் ராஜா பம்பரம்..

கயிறு வண்டி விளையாட
பார்ம் பார்ம் ஒலிச்சத்தம்
ஏறுங்க ஏறுங்க டிக்கெட் டிக்கெட்
எங்க ஊருல மெட்ராஸ் கன்னியாகுமரி..

கல்லுமேல கல்லடிக்கு 
இது நம்ம ஊரு புள்ளையாரு
புள்ளாயாரல பந்த ஏறிஞ்சா 
பாகுறவன ஏறி
நம்ம விளையாட்டுல ஆத்திகம் நாத்திகம்

கால்சட்டை நிரம்பியது 
குண்டுகளின் எண்ணிக்கை
ஜான் மொலம் பாகம் வாங்கரை அளவு
செத்தெலி என்னெலி மலைய பேரு மல்ட்ட
நான் விளையாடும் மாவு குண்டு 
செயிப்பதில்ல உடைப்பதே நோக்கம்..

மழையுமில்ல தண்ணியுமில்ல 
மழை கஞ்சி எடுப்போம்
கூலு கம்பு நெல்லுச்சோறு
எங்களுக்கு கூட்டான்ச்சோறு
எங்க காட்டுல மழை..

மழை விட்டது விடுவோம்
கத்தி கப்பல் காகித கப்பல்
ஒரு மணி நேர துறைமுகம்
எங்க ஊரு வாருகாலு..

கம்மா நிறைஞ்சது 
மழையில..
தொட்டுப் பிடிச்சி ஆடலாம் 
தண்ணிலில..
வறண்டு போச்சு - இப்ப 
கம்மாய் குளியல்..

கட்டணும் நிஜ பாலம்
பேருந்து நிலையம்
செங்கலோ செவ்வக கல்லோ
நம்ம கல்லு வண்டிக்கி..

கொடை வருது கோயில் கட்டணும் 
பொங்க வைக்கணும் பூச பண்ணனும்
சாமிக்கு பொங்கல் தேங்காய் செரட்டையில
சாமியோட பொங்கலையும் நாமதான் திங்கனும்.

ஆட்டு உரலு.. அம்மி கல்லு..
மாட்டுவண்டி ராட்டினம்
சாமி சிலை சமையல் சாமான்
கல்யாணத்துக்கு ரேடியோ செட்
கலையை கற்க சிலைகளை வடித்தேன்
களிமண் பொம்மையில்..

கடை கடையாய் தேடினேன்
செதுக்குக்கல் விளையாட
வட்டதுனுள் வட்டமாய்
சோடா டப்பி சிங்கி..

தாண்டு குதிரை
காவியம் மணிக்காவியம் சொல்லி
தாண்டவில்லையே தோல்வி
வாழ்க்கையிலும் தான்

பாண்டியாட்டம் 
நொண்டி விளையாட்டு
ஒரு கால் இல்லாதவர்களும் ஆடலாம்
பாரபட்சமில்லை விளையாட்டில்..

வயசுக்கு வந்தா ஆரம்பமாகும்
பல்லாங்குழி விளையாட்டு
ஒரு குழியை விட்டு 
ஒரு குழியை நக்கினால்
நமக்கு முத்து பிள்ளை..

கண்ணங் கண்ண பூசாரியோ
எத்தனை முட்டை இட்ட
இவங்கள எங்கனு கண்டுபுடிக்க
ஒருத்தன் மூளைல பாய சுத்தி ஒளிஞ்சிருக்கான்
கண்ணாமூச்சி ரேரே.. கண்டுபுடி யாரே..

பேர் சொல்லி விளையாட்டு
ஒரு குழு இன்னொரு குழு
கண்ண மூடி கொட்டினால்
யாரென்று கண்டுபிடி
மனோதத்துவம் வளரும்
காலாட்டுமணி கையாட்டுமணி..

ஒரு கம்புக்குச்சி ரெண்டு கொட்டாங்குச்சி
ரெடி ஆயிருச்சி தாரசு
வாங்க கடை வைக்கலாம்
கடன் வைக்க கூடாது..

ஒன்னாங்கல்லா ரெண்டாங்கல்லா..?
ஒன்னா மேல போட்டு
கீழ எடுத்து மேல புடிக்கணும்
தட்டாண்கல் விளையாட்டு..

புளி முத்து ஜோவி உருட்ட
வெட்ட வேண்டும் காயயும் நாயயும்
ஒரு தாயம்.. 
ரெண்டு தாயம்..

நீள குழி ஒரு குச்சி பெரிய குச்சி
கிண்டுனா பறக்கும் கிட்டிபுல்ல
அடித்து செயிச்சா பாடவேண்டும்
கபடி கபடி.. கபோஸ் கபோஸ்..
இளைக்குடா முடியல..

அம்மா அப்பா ரெண்டு பிள்ளைகள்
வேலைக்கு போயிட்டு வந்தாச்சி
சோறு வச்சி குழம்பு வச்சி
வாங்க சாப்பிட்டு தூங்கலாம்
அம்மா அப்பா விளையாட்டு..

விடிந்ததும் வண்டியை எடுத்தேன்
சிந்தாமல் பால்வாங்கி வந்தேன்
பந்தயத்தில் செயிக்கும் வண்டி
என்னோட டயரு வண்டி...

ராஜா ராணி மந்திரி
திருடன் போலீஸ் கழுதை
சீட்ட குலுக்கி போட
இதுல யாரு கழுதை..?

கொளை கொளையா முந்திரிக்காய்
கூட்டமா கொண்டாட்டம்
துண்ட சுத்திட்டு ஓடு
வட்ட ரிலே ரேஸ்..

கார்த்திகை வந்தாச்சி
விளக்கு வைக்கணும்
தேங்காய் சேரட்டைனுள் மெழுகுவர்த்தி
ஊர்வலமாய் கார்த்திகை..

சோளப் பொறி சொங்கப் பொறி
அகத்தி குச்சி கங்குல
பொறிப் பொறியா போய்விடும்
வருடத்தில் கார்த்திகை..

மரத்து மேல ஏறி
மரக்குரங்கு விளையாட்டு
குரங்கிலிருந்து மனிதன் சரிதான்
நானும் விளையாடினேன் மரக்குரங்கு..

- டக்ளஸ் முத்துக்குமார்

(விளையாட்டு எதாவது விடுப்பட்டுருந்தா சொல்லுங்க)

No comments:

Post a Comment