Tuesday, July 31, 2018

அறிமுகம் - இதுதான் மஹா..பாரத கதை... - எழுதி பரப்பியவர்களின் அறிமுகம்..

பராசர மகரிஷியின் பையானான வேத வியாசர், எப்படியாவது இந்த பூலோகத்துக்கு மஹாபாரத கதையை எழுதி பரப்பனமுன்னு பிரமன்ன வேண்டிருக்கான்.

பிரமனும் இவனுக்கு டொங்ய் னு காட்சி  தந்து, மஹாபாரதத்த எழுத உன்னால முடியாது, அது எழுதுர அளவுக்கு ஆளும், கோலும் விநாயகன்ட்ட தான் இருக்கு அவனை புடுச்சி எழுதிக்கோ னு சொல்லிடாப்புல.. 

உடனே வியாசர்.. சத்தி, சித்தி கூட சுகமா இருந்துட்டு இருந்த விநாயகரை தன்னோட தவத்தால டிஸ்டருப் பண்ணிருக்கான்.

இந்த நேரத்துல எவண்டா கதவ தட்டுனதுன்னு வியாசர்க்கு காட்சி தந்திருக்காப்புல.

மஹாபாரத்த எழுதுர கெப்பாசிட்டி உங்களுக்கு தான் இருக்குனு வியாசர் சொன்னதும். சரி நான் எழுத ஆரம்பிச்சா என்னோட கோலு நிக்காது அதனால நீ சொல்லிட்டே இரு, நான் எழுத்திட்டே இருக்கேன் னு விநாயகன் சொல்லிருக்கான். இப்படி எழுதி முடிச்சிருக்கானுக மஹாபாரத்தை.

எழுதி முடிச்சதும் அந்த பாரத கதைய தன்னோட மகன் சுகப்பிரம்ம ரிஷிக்கு சொல்லிருக்கான் வியாசர்.

அவன் மகன் கந்தவர்களுக்கும், ராட்சசதர்களுக்கும் சொல்லிருக்கான்.

தேவர்களுக்கு நாரதர் சொல்லிருக்கான்.

கடைசியா மனிதகுலத்துக்கு வியாசரோட சிசியப்புள்ள வைசம்பாயனர் சொல்லிருக்கான்.

இப்போ இந்த மஹாபாரத கதைய தெரியாதவங்களுக்கு நான் சொல்லஇருக்கேன்.

sunday ஆனதும் ஒருபக்கம் பைபிள தூக்கிட்டு ஓடுறானுக, ஒரு குரூப்பு யாருக்குடா நெத்தில பெரிய தழுப்பு இருக்குனு போட்டி போடுரானுக.
அதனால இந்து மக்களே, நீங்களும் உங்க நீதி நூலை பத்தி தெரிஞ்சிக்கோங்க.

உண்மையிலயே உங்களுக்கு சிந்திக்கிற திறம இருந்துச்சினா, படிச்சிட்டு கேள்வி கேளுங்க. அதோடு நிக்காம நாளு பேருக்கு இது அப்பட்டியிருக்கு.., அது இப்படி இருக்குனு பரப்புங்க. கோவப்பட்டு திட்டிரமட்டும் கூடாது.

படிச்சி முடிஞ்சதும், இன்னடா இது இவ்வளவு கேவலங்கெட்ட தனமா இருக்கு னு இத தூக்கி
சுமக்குர மத்த காவிகள தூக்கிப்போட்டு மிதிச்சாலும் சரி, இல்ல.., கடவுள் ங்கிற ஒன்னே இல்லடா னு மத்த ரெண்டு பக்கிகளை கூப்பிட்டு புத்திமதி சொன்னாலும் சரி. ரெண்டும் வரவேற்கதக்கது தான்.

தொடர தொடர்ந்து படிங்க இந்து சொந்தங்களே..

பகுதி 1 - கங்காதேவியை இன்னும் எத்தனை பேரு வச்சிருப்பாங்க..? - சாந்துனுவும் கங்காவும் - இதுதான்.. மகாபாரத,, கதை..

பிரதீபன் மன்னனின் நீண்டநாள் போராட்டத்திற்கு பிறகு சாந்துனு னு ஒரு பையன் பிறந்தான். சாந்துனு வளர்ந்து வாலிபம் ஆனதும் ஒரு தேவ மங்கையை கட்டுவானு ஜோதிட கட்டம் சொல்லுது.

ஒருநாள் சாந்தனு ஆத்தோரமா நடந்து போகும் போது கண்ணுல ஒரு பொண்ணு படுது. பாத்த உடனே அவனுக்கு மூடு வந்து, அவட்ட போயி கட்டுனா உன்னாத்தான் கட்டுவேன் இல்ல ஒத்தகாலுல நிப்பேன் னு சொல்லிட்டான். அவளும் நான் கட்டிக்கிறேன், ஆனா நான் என்ன பண்ணாலும் நீ கண்டுக்க கூடாதுனு ஸ்டிட்டா ஆர்டர் போட்டாள். இவனும் சரின்னு கட்டிக்கிட்டான்.

கொஞ்சநாள் போராட்டத்துக்கு பிறகு ஒரு குழந்தை பிறந்ததிருக்கு. சாந்தனு சந்தோசத்துல துள்ளி குதிக்கிறான். ஆனா பிறந்த குழந்தையை தூக்கிக்கிட்டு போயி கங்கை ஆத்துல வீசிட்டா. அவ எது பண்ணுனாலும் கேள்வி கேட்க கூடாது னு ஆர்டர் போட்டதால இவனும் பாத்துட்டு கம்முனு இருந்துட்டான்.

குழந்தை பிறக்க பிறக்க வரிசையா ஏழு குழந்தைகள ஆத்துல வீசிபுட்டா. ஒவ்வொரு டயமும் சாந்தனு பார்த்துட்டு கோவத்த அடக்கிட்டு கம்முன்னு இருந்துட்டான். அப்பறம் ஒரு குழந்தை பிறக்குது.

அதையும் ஆத்துல வீச கிளம்பிட்டா. இந்த முறை விடுறதா இல்ல. ஏய்.. கிறுக்கு ............. உனக்கு மனசாட்சி னு ஒன்னு இல்லையா. பிறக்குற குழந்தைகள எல்லாம் இப்படி ஆத்துல போட்டு கொல்லற... னு கோவமா திட்டி. ஆத்துல போட போன குழந்தைய அவட்ட இருந்து புடிக்கிட்டான்.

அவளுக்கும் கோவம் வந்துருச்சு. நான் என்ன செஞ்சாலும் கேள்வி கேட்க கூடாதுன்னு நீ வாக்கு கொடுத்தது மறந்துருச்சாடா மக்குப் பயலே னு திட்டிட்டு.. நீ முதல நான் யாருன்னு தெரிஞ்சிக்கோ. நான்தான் தேவர்கள், முனிவர்கள் போற்றும் கங்காதேவி.

ஒரு மகாமுனிவர் விட்ட சாபத்தால 7 குழந்தைகள பெத்து ஆத்துல வீசிருக்கேன். அதெல்லாம் முனிவர்களா மாறி ஆதத்துக்குள்ள தவம் செஞ்சுக்கிட்டு கிடக்கு. இந்த எட்டாவது பிள்ளையையும் ஆத்துல போடும் போது நீ தடுத்துட்ட. அதனால உனக்கு இனி என்னை போடுற பாக்கியம் இல்ல.

உனக்கு மேட்டர் ஆசை போயி குழந்தை ஆசை வந்துருச்சி, இனி உன்கூட சேர்ந்து வாழ முடியாது. இந்த எட்டாவது குழந்தைய தேவிவிருதன் னு பேரு வச்சி கொஞ்ச காலம் நான் வளக்குறேன். இவன் வருங்காலத்தில பீஷ்மன் னு போற்ற படுவான் னு சொல்லிட்டு குழந்தைய புடிக்கிட்டு மறைஞ்சுட்டா.

சாந்தனு மன்னன் சோகமா.. " இந்த கிறுக்கு............ட இவளவு நாளா நம்மல எம்மாத்திட்டா "லேனு அரண்மனை திரும்பிட்டான்.

- தொடரும்........

குறிப்பு :-
                 இந்த கங்காதேவி தான் சிவனின் இரண்டாவது பொண்டாட்டி, பார்வதியோட சக்கலாத்தி. இந்து புரணாத்துல பொண்டாட்டிய மாத்தி மாத்தி விட்டுருவாங்க போல.. இந்து கடவுள் பத்தின புராண நெடுகிலும் இதே கதைகளாதான் இருக்கு ..

பகுதி 2 - மச்சகந்தி எனும் சத்தியவதி, மீனின் மகள் - சாந்தனுவின் 2வது பொண்ட்டாடி - இதுதான்.. மகாபார ,, கதை..

அத்திரிகை என்ற பெண்ணுக்கு ஒரு முனிவர் சாபம் விட்டதுனால மீனாக பிறந்து கங்கை ஆத்துல நீஙதீட்டு கிடக்கா. இதை பாத்த அந்த பக்கா வந்த ஒரு முனிவர், அந்த மீன மேட்டர் பண்ணிட்டான். அப்போ பிறந்தது தான் இந்த மச்சகந்தி எனும் சத்தியவதி. அவள தூக்கிட்டு போயி ஒரு பரிசல் ஓட்டுறவன் வளக்குறான். மீனுக்கு பொறந்ததால மச்சகந்தி மேலயும் எப்போவுமே மீன் வாட அடிக்குமாம்.

ஒரு டயம் மச்சகந்தி பரிசலுல ஆத்துல போயிட்டு இருக்கும் போது அந்த பக்கமா வந்த பராசரமுனிவர் " எம்மா.. என்னை அந்த கரையில இறக்கிவிட்டுருமானு " பரிசல்ல ஏறுறான். ஏறுனவன் சும்மா இல்லாம " எம்மா.. நீ ரெம்ப அழகா இருக்க, உன்ன ஒரு தடவ எரிக்கவா... ( i mean இங்கேயே காந்தர்வணம் பண்ணிக்கிலாமா)" னு கேக்குறான். " நான் வேணா உன்மேல அடிக்கிற மீன் வாடைய, சென்ட் வாசனையா மாத்துர வரம் தாறேன் "னு சொல்றான்.

அதுக்கு இவ " குழந்தை உண்டானா என்ன பண்றதுன்னு" கேக்க.?  பிறக்கிற குழந்தைய கால்பித்தீவில் விட்டுவிடு மறுபடியும் கன்னி பெண்ணா மாறுற வரம் தாரேணு சொல்லிட்டு, பரிசல்ல ஏறுனவன் அவ மேல ஏறிட்டான். அவளுக்கும் மீன் வாட போயி, சென்ட் வாசனை கிடைச்சது. பிறந்த குழைந்தய தீவில விடும்போது அந்த குழந்தை சொல்லிச்சி " நீ எப்ப என்ன நினைச்சி கூப்பிட்டாலும் நான் உன் வந்து நிப்பேன் தாயே" னு.

சில நாட்களுக்கு பிறகு....

சாந்தனு மன்னன் ஆத்தோரமா போகும்போது சென்ட் வாசனை வருது. இவனும் எங்கயிருத்துடா வருதுன்னு மோப்பம் புடிச்சிட்டே போறான். ஒரு பரிசலுல மச்சகந்தி உகந்திருக்கிறத பாத்துட்டான். பாத்தவுடனே அவ அழகுல மயங்கி, மூடாகி "கட்டுனா உன்னத்தான் கட்டுவேன்" னு அவட்ட சொல்லிருக்கான். அதுக்கு அவ " என்னை கட்டணுமுனா எங்க அப்பன்ட்ட போயி பொண்ணு கேளு னு சொல்லிட்டா.

இவனும் அவ அப்பன்ட்ட பொண்ண கேக்க. அவ அப்பன் ஒரு ஆர்டர் போடுறான், " என் மகள கட்டிக்கோ, ஆனா உங்க ரெண்டு பேருக்கும் பிறக்குற குழந்தைதான் இந்த நாட்ட ஆளனும்"னு சொல்றான்.

இத கேட்டு அதிர்ச்சி ஆயிட்டான் சாந்தனு. ஏற்கனவே கங்காதேவிக்கு பிறந்த குழந்தை தேவிவிரதன் இருக்கும் போது எப்பிடி மச்சகந்திக்கு பிறக்குற குழந்தைய மன்னன் ஆக்குவது னு குழம்பி போயிட்டான். இருந்தாலும் மச்சகந்தி மேல இருக்குற மூடு குறையல.. "என் மகன்ட்ட கேட்டு சொல்றேன்" னு நேரா அரண்மனைக்கு போயிட்டான்.

நடந்ததை எல்லாம் மகனான தேவவிரதன்ட்ட சொல்ல, நம்ம அப்பன் ரெம்ப காஞ்சுபோயி கிடக்கான் அவனுக்காக இந்த தியாகத்த பண்ணிதொலைப்போம் னு, "அப்பா நீ கவலைப்படாத உனக்காக நான் போயி பொண்ணு கேக்குறேன்" னு மச்சகந்தி வீட்டுக்கு கிளமிட்டான்.

மச்சகந்தி அப்பன்ட்ட போயி " என் அப்பனுக்கு உன் பொண்ண புடிச்சிபோச்சி, உங்க பொண்ணும் கண்ணிபொன்னா இருக்கா, எங்க அப்பனும் காஞ்சிபோயி திரியுறான் அதானால உன்னோட dealக்கு எனக்கு ok, எங்க அப்பனுக்கு உன் பொண்ண கட்டிவச்சிரு" னு சொல்லிட்டான்.

அதுக்கு மச்சகந்தி அப்பன் " நான் பொண்ண கொடுக்கிறேன். ஆனால் உனக்கு கல்யாணம் முடிஞ்சி உன்னோட வாரிசுங்க சொத்த கேட்டா என்ன பண்றது? ஆகையால் நீ கல்யாணமே பண்ணிக்காம தன் கையே தனக்குதவி னு காலம்புராம் ஒண்டிக்கட்டையாவே வாளனும் னு சத்தியம் வாங்கிட்டான்.

அப்பறம் என்ன? தேவவிரதன்,, அவன் அப்பன் சாந்தனுக்கும் மச்சகந்திக்கும் கல்யாணம் பண்ணி வச்சிட்டான்...

இதெல்லாம் வானத்துல இருந்து பாத்துட்டு இருந்த தேவர்களும், முனிவர்களும் தேவவிரதன பாராட்டி "பீஷ்மர்.. பீஷ்மர்.. பீஷ்மர் னு கோசம் போட்டு பூமாரி பொலின்ச்சங்களாம்.. அடத்தூ.... அதிலருந்து இவனை எல்லோரும் பீஷ்மர் கூப்பிட ஆரம்பிச்சட்டாங்க..

- தொடரும்...

ஆதாரம் - மஹாபாரதம் ஆதிபர்வம் பகுதி 63

குறிப்பு:-
              அப்பனுக்கு மாமா வேலை பாக்குற மகனுக்கு கொடுக்குற பட்டம்தான் "பீஷ்மர்"

பகுதி 3 - பீஷ்மர் அவன் தம்பிக்காக தூக்கிய பெண்கள் - இதுதான்.. மஹாபாரத,, கதை.

பீஷ்மர் மச்சகந்திய தன்னோட அப்பனுக்கு கூட்டிக்கொடுத்ததால அவங்க ரெண்டுபேருக்கும் சித்ராங்கதன், விசித்திரிவீரியன் னு ரெண்டு குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்து 5 வருஷத்துல பீஷ்மர் அப்பன் சாந்தனு இறந்துட்டான்.

பீஷ்மர் தன்னோட தம்பிகள வளர்த்து, சித்ராங்கதனுக்கு மன்னனா முடிசூட்டுறான். பக்கத்து நாட்டு கந்தர்வராஜ மன்னன்ட்ட போர் செய்யும் போது தம்பி சித்ராங்கதன் செத்து போயிட்டான். பீஷ்மர் அடுத்ததா விசித்திரவீரியனுக்கு மன்னனா முடிசூட்டுறான்.

விசித்திரவீரியனுக்கு வாலிப வயசு வந்ததால பீஷ்மர் தன்னோட தம்பிக்கு பொண்ணு தேட ஆரம்பிச்சுட்டான். அப்போ அஸ்தினாபுரத்து காசிராஜன் மன்னன் தன்னோட மூணு பொண்ணுகளான அம்பை, அம்பிகை, அம்பாலிகைக்கு சுயவர போட்டி ஒன்னு நடத்தினான். அந்த போட்டில தன்னோட தம்பிக்காக கலந்துக்கிட்டான் பீஷ்மர்.

போட்டில செவிச்சி மூணு பொண்ணுகளையும் கூட்டிட்டு தன்னோட தம்பிக்கு கல்யாணம் பண்ணிவைக்க தேர்ல கெளம்பிட்டான். அப்போ. பாதி வழியில அம்பையோட காதலன் சால்வ நாட்டு மன்னன் பீஷ்மர்ட்ட போர் சென்சான். அவன சமாளிச்சி ஒருவழியா தம்பிட்ட வந்துசேந்துட்டான்.

உனக்காக மூணு பொண்ணுகள தூக்கிட்டு வந்திருக்கேன். மூணயும் வச்சி சந்தோசமா இரு னு தம்பிட்ட சொல்லும் போது, மூணுல அம்பை ங்கிற பொண்ணு " நான் சால்வநாட்டு மன்னனை லவ் பன்றேன் அவனத்தான் கல்யாணம் முடிப்பேன் னு சொல்லிட்டு சால்வநாட்டு மன்னட்ட போயிட்டா. "ஒன்னு போனா என்ன? மீதி ரெண்டு இருக்கு.. ரெண்டையும் வாச்சிகோ தம்பி"னு சொல்றான் பீஷ்மர்.

அப்போ அந்த ரெண்டு பொண்ணுகளும் " பீஷ்மர் தான் போட்டில செயிச்சாரு அதானால பீஷ்மரை தான் கட்டிக்குவோம் னு ரெண்டும் விசித்திரவீரியனுக்கு டிமிக்கி கொடுத்துருக்கு. உடனே பீஷ்மர் "நான் சாகும் வரைக்கும் தன்கையே தனக்குதவி னு சாகுரவரைக்கும் ஒண்டிக்கட்டையா வாழுறேன் னு என் சின்னம்மாவோட அப்பன்ட்ட சத்தியம் வாங்கிருக்கேன். அதானால என் தம்பியை கட்டிகோங்க" னு சொல்லி ரெண்டு பேரையும் தம்பிக்கு கட்டிவச்சிட்டான்.

அதேசமயம் அம்பை சால்வ நாட்டு மன்னன்ட்ட என்ன கட்டிக்கோ சொல்றா. உன்ன பீஷ்மர் செயிச்சி தூக்கிட்டு போயிட்டான். so உன்ன கட்டிக்கோ முடியாது. நீ பீஷ்மர்ட்டயே போ னு சொல்லிட்டான். அம்பை பீஷ்மர்ட்ட மறுபடியும் வந்துட்டா. ஆனா பீஷ்மர் தம்பி " வேற ஒருத்தன லவ் பண்ணுன பொண்ண நான் கட்டிக்க முடியாதுன்னு திருப்பி அனுப்பிச்சிட்டான்.

கோவமான அம்பை " இதுக்கெல்லாம் பீஷ்மர் தான் காரணம், லவ் பண்ணுணவட்டயும் poga விடாம, அவன் தம்பிட்டயும் போகவிடாம அவன மாதிரியே என்னையும் ஒண்டிக்கட்டையா ஆக்கிட்டான்.. அவனை சும்மா விடமாட்டேன்...

தொடரும்...

பகுதி 4 - பீஷ்மர அழிக்க ஆம்பளயா மாறின சிகண்டனி - இதுதான்.. மஹாபாரத,, கதை..

தன்னோட லவ்வ நாசமாக்கின பீஷ்மர எப்படியாவது கொல்லனும் னு பல நாட்டு மன்னர்களிட்ட போயி நியாயம் கேட்டுருக்கா, எல்லோரும் முடியாது னு சொல்லிட்டாங்க. கடைசியா துருபதநாட்டு மன்னன்ட்ட பீஷ்மர கொல்ல டீல் பேசிருக்கா, அவனும் பயந்துட்டு முடியாதுன்னு சொல்லிட்டான்.

அப்றம் சிவன் மகன் கந்தன நினைச்சி தவம் பண்றா. கந்தன் அவளுக்கு வரமா ஒரு படிகமாலைய குடுக்காத்துட்டு " யார் இந்த மாலைய  போட்டு பீஷ்மர்ட்ட சண்ட போடுறங்களோ அவனாலதான் பீஷ்மர கொல்ல முடியும்"னு சொல்லிட்டு டொய்ங் னு மறைஞ்சிருறான்.

அம்பை அந்த மாலைய கொண்டு போயி பல மன்னர்ட்ட குடுத்து பீஷ்மர கொல்ல சொல்றா. எல்லாம் மன்னரும் முடியாதுன்னு கைய விரிச்சிட்டாங்க. என்னடா ஒரு பையலும் பீஷ்மர கொல்ல வரமாட்டிக்காங்களே னு மாலைய அவவீட்டு கூர மேல மாட்டிவச்சிட்டு வனவாசம் போயிட்டா.

காட்டுல பரசுராமர் ங்கிற ஒரு முனிவர் கூட அம்பைக்கு பழக்கம் ஆகுது. முனிவர்ட்ட அவளோட கதைய சொல்லி, "பீஷ்மர எப்படியாவது சொலிய முடிக்கணும் அதுக்கு நீங்க எனக்கு உதவனும்"னு கேக்குறா. பரசுராம முனிவர் சரினு சொல்லிட்டு பீஷ்மர்ட்ட சன்டைக்கு போறான்.

ரெண்டுபேரும் சரிவீதமா சண்டை போடுராணுக, யாரும் செயிச்சபாடுயில்ல. முனிவர் அம்பைட்ட "இவன சண்ட போட்டு செயிக்க முடியாது. நீ சிவன நினைச்சி தவம் இரு" னு சொல்லிட்டான்.

இவளும் சிவன நினைச்சி தவம் கிடக்க இமயமலைக்கு போறப்பட்டா. கடும் தவம் செயின்ச்சிட்டு இருக்கும் போது, சிவன் காட்சி தந்து "நீ மறுபிறவி எடுத்தாதான் பீஷ்மரை கொல்ல முடியும் னு சொல்லிட்டு மறைஞ்சிட்டான். செத்தாதானே மறுபிறவி எடுக்கமுடியும் னு நெருப்புல விழுந்து செத்துருரா.

சிலநாள் கழிச்சி துருபத ராஜாக்கு மகளா பிறக்கிறாள். சிகண்டனி னு பேரு வச்சி நல்லா வளக்குராங்க. அவ இளைம பருவம் ஆனதும் பீஷ்மர கொல்ல ரெடி ஆயிட்டா. அவ அப்பன் துருபத மாகராஜட்ட சொல்றா. "பீஷ்மர்ட்ட சண்ட போடமுடியாது னு ஓங்கி சிகண்டனி செவுலுள அடிச்சி வனவாசம் போ" னு அவள அரண்மனைய விட்டு விரட்டிட்டான்.

காட்டுக்கு போன சிகண்டனி அங்க கந்தர்வன் ங்கிற ஒரு முனிவர்ட்ட பழக்கமாகி, நடந்தத சொல்றா. அதுக்கு அந்த முனிவர் " நீ ஆம்பளயா மாறுனாத்தான் பீஷ்மரை கொல்ல முடியும் அதனால நம்ம ரெண்டு பேரு உடம்ப எக்சேஞ்ச் பண்ணிக்குவோம். பீஷ்மரை கொல்லற வரைக்கும் நீ ஆணா என் உடம்ப யூஸ் பண்ணிக்கோ. எல்லாம் முடிச்சதும் நாம பழைய மாதிரி உடம்ப மாத்திக்கலாம்"னு சொல்லுறான்.

இவளும் சரினு சொல்லி முனிவர் உடம்புல பூந்து ஆம்பளயா மாறிட்டா. முனிவன் சிகண்டனி உடம்புல பூந்து லேடீஸ் ஆகிட்டான். ஆணா மாறின சிகண்டனி, தன்னோட பேர சிகண்டி னு மாத்தி பீஷ்மர கொல்ல புறப்படுறா...

- தொடரும்....

பகுதி 5 - பீஷ்மரை தம்பி மனைவிகளிடம் உடலுறவு பண்ண சொன்ன சத்தியவதி - வம்ச விழுதுகள் - இதுதான்.. மகாபாரத.. கதை

பீஷ்மர் தன்னோட தம்பிக்கு அம்பிகை, அம்பாலிகைய கல்யாணம் பண்ணி வச்சி பல வருசம் ஆகியும் ஒரு புழுப்பூச்சி கூட உண்டாகல. ஒன்னுக்கு ரெண்டு வச்சிருந்தும், ஏன், தம்பி விசித்திரவீரியனுக்கு குழந்தை இல்லன்னு பீஷ்மர் யோசிச்சான். அந்த டயம்ல விசித்திரவீரியன் பக்கத்து நாட்டோட போர் செஞ்சி செத்துட்டான்.

என் மகன் ரெண்டு இளம் பொண்டாட்டிகள அனாதையா விட்டுட்டு செத்துட்டானே... என் வம்சம் தழைக்க இப்ப என்ன பண்றதுன்னு, மச்சகந்தி எனும் சத்தியவதி பீஷ்மர கூப்புடுறா. " பீஷ்மா உன் தம்பி இளம் பொண்டாட்டிய இப்படி நட்டாத்துல விட்டுட்டு போயிட்டான். நீதான் நம்ம வம்சம் கண்டினியூ ஆகுறதுக்கு உதவனும். நான் சொல்றபடி கேளு. உன் தம்பி பொண்டாட்டிகள நீ போட்டு நம்ம வம்சத்துக்கு நீ குழந்தைய குடு னு சொல்றா.

அதுக்கு பீஷ்மர் முடியாது னு சொல்ல " ஏன் பீஷ்மா உனக்கும் உன் தம்பிய மாதிரி எதும் வீக்னஸ் இருக்கா..? " அதுக்கு பீஷ்மர் "இல்ல சின்னம்மா, நான் வாழ்நாள் முழுவதும் தன் கையே தனக்குதவி னு ஒண்டிக்கட்டையா வாழ்வேனு எங்க அப்பன் உன்ன கட்டிக்கிறதுக்காக உங்க அப்பன்ட்ட சத்தியம் பண்ணிருக்கேன். ஆதனால என்னால இந்த ரெண்டு பொன்னுகளயும் மேட்டர் பண்ண முடியாது"னு சொல்லிட்டான்.

அதுக்கு சத்தியவதி "எனக்காகதானே நீ சத்தியம் பண்ணுன, நானே அந்த சத்தியத்த கேன்சல் பண்ணிருறேன், நீ நம்ம வம்ச விருத்திக்காக உன் தம்பி பொண்டாட்டிககிட்ட போயிதான் ஆகணும்" னு ஆழுகுறா.

பீஷ்மர் அதுக்கு "சத்தியத்த மீறுறது தர்மத்துக்கு ஆகாது. இந்த மாதிரி சுச்சுவேசன்ல நாம ரிஷி அல்லது முனிவரை கூட்டிவந்து மேட்டர் பாக்கவிடுறதுதான் முறை, அதனால முனிவர் உதவிய நாடலாம்"னு இந்து தர்மத்த விளக்கி சின்னம்மாட்ட சொல்றான்.

அதுக்கு சின்னம்மா சத்தியவதி "உங்ககிட்டயெல்லாம் ஒரு ராகசியத்த இவ்வளவு நாளா மறைச்சி வச்சிருந்தேன், அத இப்ப சொல்ற கட்டாயம் வந்துருச்சி" நீ என்ன தப்பா நினைச்சாலும் பரவாயில்ல பீஷ்மா"னு பிளாஸ்பேக் சொல்ல ரெடியாயிட்டா..

சின்னம்மா அது என்ன ரகசியம் னு பீஷ்மர் கேக்க, சத்தியவதி சொல்ல ஆரம்பிக்குறா.. "உங்க அப்பன கட்டுறதுக்கு முன்னாடி, ஒருநாள் நான் பரிசலுல பாராசரமுனிவர அக்கரைக்கு கூட்டி போகும் போது, நாங்க  ரெண்டுபேரும் பரிசலுலயே மேட்டர் பண்ணிகிட்டோம் , i mean காந்தர்வணம் பண்ணிக்கிட்டோம். அதுல பிறந்த குழந்தைய கலாப்பதீவுல விட்டுட்டோம். இப்ப அந்த குழந்தை பெரியவனா ஆகி வியாசர்முனிவரா அங்க தவம் செஞ்சிட்டு கிடக்கான். உனக்கு அண்ணமுறை தான் வேணும் பீஷ்மா"னு சொல்ல,

பீஷ்மர் ஆச்சிரியப்பட்டு போனான். "சின்னம்மா நல்ல காரியம் பண்ணுனீங்க, அந்த வியாசர்முனிவர பத்தி நானும் கேள்விப்பட்டுருக்கேன். உடனே அந்த சகோதரர வரவச்சி, தம்பி பொண்டாட்டிககிட்ட  விடணும் சின்னம்மா. அவர எப்படி இங்க வரவைக்கிறது"னு கேக்குறான்.

பீஷ்மா நான் அவனை காட்டில் விடும் போது எனக்கு அவன் ஒரு வரம் தந்தான். "நீ எப்ப என்னய நினைச்சி கூப்பிட்டாலும் வருவேன் தாயே"னு இப்ப அவனை கூப்பிடலாமா பீஷ்மா..? ன்ட்டு,

மகனே... வியாசர்முனிவா, உன் தாய்க்கு உன்னோட ஹெல்ப் தேவப்படுது. உடனே இங்க வா மகனே...

- தொடரும்

பகுதி 6 - மருமகள முனிவருக்கு கூட்டிவிட்ட சத்தியவதி - திருதராஷ்டிரன் பிறப்பு - இதுதான்.. மஹாபாரத,, கதை...

வம்ச விருத்திக்காக சத்தியவதி தீவில தவம் செஞ்சிட்டு இருந்த தன்னோட மகன் வியாசர்முனிவர நினைச்சி வேண்டுறா. உடனே டொய்னு வியாசர்முனிவர், மெலிஞ்ச ஒடம்பு, தமிழிசை ஹேர் ஸ்டைல், பத்து வருசம் செரைக்காத தாடியோடு வந்து நின்னான். "உங்களுக்கு என்ன உதவி வேணும் தாயே, உங்களுக்கு உதவ நான் ரெடியா இருக்கேன்"னு சொல்றான்.

"மகனே நீ வந்ததுக்கு ரெம்ப மகிழ்ச்சி. உன்னோட தம்பி விசித்திரவீரியன் போர்ல செத்துட்டான். அவனுக்கு ரெண்டு பொண்ணுகல கல்யாணம் பண்ணிக்குடுத்தும் ஒரு புழுப்பூச்சி கூட இல்ல. அவனும் இப்ப செத்துட்டான். நம்ம வம்ச விருத்திக்காக உன்னோட தம்பி பொண்டாட்டிகல மேட்டர் பண்ணி நம்ம வம்சத்துக்கு வாரிச தரணும். அதனாலதான் உன்ன அவசரமா வரவச்சேன்."னு சொல்றா.

"தாயே நான் ஒரு முனிவர், இந்த மாதிரி காரியமெல்லாம் பண்ணக்கூடாது. இருந்தாலும் நீங்க நம்ம வம்ச வாரிசுக்காகனு கேக்குறீங்க. உங்க சொல்ல எப்பவுமே தட்டமாட்டேன். நான் ரெடி தாயே, நல்ல முகூர்த்த நேரமா பாத்து சொல்லுங்க, நம்ம வம்சத்துக்கு நூறு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் தாறேன்"னு சொல்லிட்டான்.

சத்தியவதி மருமக அம்பிகையோட அத்தபுரத்துல அவள பார்த்து "மருமகளே நம்ம வம்சவிரித்திக்காக இன்னைக்கு நைட் உங்கூட உடலுறவு பண்ண நம் உறவினர் ஒருவர் வருவார், அவர அனுசரிச்சி நடந்துக்கோடி."னு சொல்றா. அதுக்கு அம்பிகை " அத்தை நீங்க நம்ம வம்ச விருத்திக்காக னு சொல்றீங்க, அதுக்காக நான் இத பண்ண ஒத்துக்கிறேன் " னு சொல்லிட்டா.

அம்பிகைக்கு ஒரே சந்தோஷம், இன்னைக்கு நைட் நம்ம கூட பண்ணப்போறது பீஷ்மராதான் இருக்கும் னு தன்னோட பெட்ரூம் முழுவதும் அகில்புகை போட்டு, சந்தனம் மணம் கமல, பெட்டு நிறைய மல்லிகைப்பூ தூவி ரெடி பண்ணி வச்சிருந்தா.

வியாசர்முனிவன் வந்தத பாத்து அதிர்ச்சி ஆயிட்டா. தமிழிசை ஹர் ஸ்டைல், பத்து வருசமா செரைக்காத தாடி மீசை, (இப்படி வந்தா யாருக்கு தான் புடிக்கும்? ) இவனோட மேட்டர் பண்ண முடியாது னு அம்பிகை பயந்து கண்ண மூடிக்கிட்டா. வந்த முனிவர் மேட்டர பாத்துட்டு போயிட்டான்.

"மகனே.. வியாசர்முனிவா.. நைட் போனா காரியம் நல்லா நடந்துச்சா"னு சத்தியவதி முனிவன்ட்ட கேக்குறா. அதுக்கு வியாசர்முனிவன் "எங்க தாயே, உங்க மருமக அம்பிகை நான் பண்ணும் போது கண்ன மூடிக்கிட்டா. அதானால உங்க மருமகளுக்கு பிறக்குற குழந்தை குருடனாத்தான் பிறக்கும்"னு சொல்லிட்டான்.

பத்துமாசம் கழிச்சி அம்பிகை ஒரு குழந்தை கண்ன மூடுன மாறியே பொறக்குது. அந்த குழந்தைக்கு திருதராஷ்டிரன் னு பேரு வச்சி வளக்குறாங்க.

சத்தியவதி ரெம்ப மனஉலச்சலுக்கு ஆளாயிட்டா. "ஒரு குருட்டு வாரிசு எப்படி இவ்வளவு பெரிய ராஜியத்த ஆள முடியும் பீஷ்மா" னு மகன் பீஷ்மர்ட்ட சொல்லி அழுகுறா.

அதுக்கு பீஷ்மர் "சின்னம்மா கவலப்படாதீங்க, மறுபடியும் சகோததர் வியாசர்முனிவர கூப்பிட்டு அம்பிகை தங்கச்சி அம்பாலிகைகிட்ட விட்டு ட்ரை பண்ணலாம்"னு சத்யவதிக்கு சமாதானம் சொல்றான்.

சத்தியவதியும் அதுதான் சரி னு சொல்லிட்டு, தன்னோட மகனை நினைக்குறா " மகனே வியாசர்முனிவா, எனக்கு உன்னோட ஹெல்ப் தேவப்படுது. உடனே இங்கே வா.."னு வேண்டுறா...

- தொடரும்