பண்டிநாட்டு மன்னன் மகளுக்கு பிறந்த குழந்தைய அவன்கட்டையே வளக்க கொடுத்துட்டு திரும்பவும் அர்ஜுனன் வனவாசம் கிளம்பிட்டான். ஒரு ஆத்தங்கர வழியா போயிட்டு இருக்கும்போது முதலை உருவத்துல இருந்த அஞ்சி பொண்ணுங்கல ஆபத்தில இருந்து காப்பத்துறான். அப்றம் பொடிநடையா துவாரகா நாட்டு பக்கம் போறான். அங்கதான் கிருஷ்ணன் ஆட்சி செஞ்சிட்டு இருக்கான். அர்ஜுனன் வந்தத கேள்விப்பட்ட கிருஷ்ணன், அர்ஜுனன சாப்பாட்டுக்கு கூப்புடுறான். அப்போ கிருஷ்ணன் தங்கச்சி சுபத்திரை சாப்பாடு பரிமாறுறா. சுபத்திரைய பாத்த அர்ஜுனன் "இவள எப்படியாவது கரெட் பண்ணிரோனோம்"னு கொக்கிய போடுறான்.
சுபத்திரைய கரெட் பண்ணிட்டு அவ அண்ணன் கிருஷ்ணன்கிட்ட பொண்ணு கேக்குறான். அதுக்கு கிருஷ்ணன் "டே.. நீ வந்த எடத்துல கையையும், காலையும் வச்சிட்டு சும்மா இருக்குறது கிடையாதா. அவள உனக்கு கட்டிக்குடுக்க நான் சம்மதிச்சாலும், இங்க இருக்குற பெருசுங்க சம்மதிக்கமாட்டானுக. அதனால நான் உனக்கு ஒரு ஐடியா சொல்றேன், நல்லா கேட்டுக்கோ. பொழுது சாயுற நேரமா பாத்து என் தங்கச்சிய கூட்டி வாரேன், நீயும் அவள கூட்டிட்டு ஓடிரு"னு சொல்றான்.
அர்ஜுனனும் சரினு சொல்லிட்டு வெயிட் பன்ரான். சாயந்தரம் கிருஷ்ணன் அவன் தங்கச்சிய கூட்டிக்கொடுக்க, ரெண்டு பேரும் துவாரகாநாட்டுல இருந்து எஸ்கேப் ஆயிருறாங்க. ஊருக்குள்ள 'அர்ஜுனன் சுமித்திரைய தூக்கிட்டு போயிட்டானு சாடமாடயா பேசிக்கிறாங்க.
அர்ஜுனன் சுபத்திரைய கூட்டிக்கிட்டு தன்னோட காண்டபிரஸ்த நாட்டுக்கு கிளமிட்டான். போற வழியில கிருஷ்னன் மாப்பிள்ளைக்கு வேண்டிய சீர கொடுத்து அனுப்புறான். நாட்டு பாடர் பக்கம் போனதும் அர்ஜுனன் சுபத்திரைய பாத்து "சுபத்திர செல்லக்குட்டி... பாஞ்சாலி ஒரு பொறாமை புடிச்சவ. உன்ன பாத்தா சாமியாடிருவா. அதனால ஊருக்குள்ள முதல நான் போயி நிலவரம் எப்பிடி இருக்குனு பாத்துட்டு, எங்க அம்மாட்ட நைசா நம்ம மேட்டர பத்தி எடுத்து சொல்லிட்டு, அப்பரமா உன்ன எங்க அரண்மனைக்கு கூட்டிட்டு போறேன்"னு சொல்றான். சுபத்திரை செல்லகுட்டியும் சரி னு மண்டைய ஆட்டுது.
அர்ஜுனன் அவங்க அம்மா குந்திட்ட மேட்டர எடுத்து சொல்லி சுபத்திரைய அரண்மைக்கு கூட்டி வந்துட்டான். "வாம்மா ராசாத்தி"னு குந்தியும், பாஞ்சாலியும் ஆராத்தி எடுத்து சுபத்திரைய வரவேற்க்குறாங்க. கொஞ்ச நாளுல அர்ஜுனனுக்கும் , சுபத்திரைக்கும் ஒரு ஆம்பள குழந்தை பொறக்கு. அதுக்கு 'அபிமன்யு'னு பேரு வச்சி வளக்குறாங்க.
நீங்க மட்டும்தான் குழந்தை பெத்துபீங்களா... எங்களுக்கு பொரக்காதா னு யுதிஷ்டிரன் பாஞ்சாலிய பாத்த மேட்டர்ல பாஞ்சாலிக்கு ஒரு ஆம்பள குழந்தை பொறக்கு. அதுக்கு 'பிரதிவித்தியந்தன்' னு பேரு வைகுறாங்க.
அப்பறம் பாஞ்சாலிக்கு பீமன் பாத்த மேட்டர் மூலமா ஒரு ஆம்பள குழந்தை பொறக்கு. அதுக்கு 'சுதாசோமன்' னு பேர் வச்சி வளக்காங்க.
அதுக்கு அடுத்த வருசம் பாஞ்சாலிக்கு அர்ஜுனன் மேட்டர் பாத்தது மூலமா ஒரு ஆம்பள குழந்தை பொறக்கு. அதுக்கு 'சிருவவர்மா' னு பேர் வச்சி வளக்காங்க.
அப்றம் பாஞ்சாலிக்கு நகுலன் மேட்டர் பாத்தது மூலமா ஒரு ஆம்பள குழந்தை பொறக்கு. அதுக்கு 'சதாந்தன்' னு பேர் வச்சி வளக்காங்க.
அதுக்கு அடுத்த வருசம் பாஞ்சாலிய சாகாதேவன் மேட்டர் பாத்தது மூலமா ஒரு ஆம்பள குழந்தை பொறக்கு. அதுக்கு 'சிருதசேனன்' னு பேர் வச்சி வளக்காங்க.
பாண்டவங்க வாரிசயெல்லாம் UKG வயசுலயே படிக்க போடணும் னு தௌமியமுனிவர் நடத்துர மடத்துபள்ளி கிளாஸ்ல சேத்து விடுறாங்க. முனிவரும், பாண்டவ பயபுள்ளகளுக்கு கலை, போர் பயிற்சி, வில்வித்த னு எல்லாத்தையும் சொல்லிக்கொடுக்கான்.
-தொடரும்...
No comments:
Post a Comment