பிரதீபன் மன்னனின் நீண்டநாள் போராட்டத்திற்கு பிறகு சாந்துனு னு ஒரு பையன் பிறந்தான். சாந்துனு வளர்ந்து வாலிபம் ஆனதும் ஒரு தேவ மங்கையை கட்டுவானு ஜோதிட கட்டம் சொல்லுது.
ஒருநாள் சாந்தனு ஆத்தோரமா நடந்து போகும் போது கண்ணுல ஒரு பொண்ணு படுது. பாத்த உடனே அவனுக்கு மூடு வந்து, அவட்ட போயி கட்டுனா உன்னாத்தான் கட்டுவேன் இல்ல ஒத்தகாலுல நிப்பேன் னு சொல்லிட்டான். அவளும் நான் கட்டிக்கிறேன், ஆனா நான் என்ன பண்ணாலும் நீ கண்டுக்க கூடாதுனு ஸ்டிட்டா ஆர்டர் போட்டாள். இவனும் சரின்னு கட்டிக்கிட்டான்.
கொஞ்சநாள் போராட்டத்துக்கு பிறகு ஒரு குழந்தை பிறந்ததிருக்கு. சாந்தனு சந்தோசத்துல துள்ளி குதிக்கிறான். ஆனா பிறந்த குழந்தையை தூக்கிக்கிட்டு போயி கங்கை ஆத்துல வீசிட்டா. அவ எது பண்ணுனாலும் கேள்வி கேட்க கூடாது னு ஆர்டர் போட்டதால இவனும் பாத்துட்டு கம்முனு இருந்துட்டான்.
குழந்தை பிறக்க பிறக்க வரிசையா ஏழு குழந்தைகள ஆத்துல வீசிபுட்டா. ஒவ்வொரு டயமும் சாந்தனு பார்த்துட்டு கோவத்த அடக்கிட்டு கம்முன்னு இருந்துட்டான். அப்பறம் ஒரு குழந்தை பிறக்குது.
அதையும் ஆத்துல வீச கிளம்பிட்டா. இந்த முறை விடுறதா இல்ல. ஏய்.. கிறுக்கு ............. உனக்கு மனசாட்சி னு ஒன்னு இல்லையா. பிறக்குற குழந்தைகள எல்லாம் இப்படி ஆத்துல போட்டு கொல்லற... னு கோவமா திட்டி. ஆத்துல போட போன குழந்தைய அவட்ட இருந்து புடிக்கிட்டான்.
அவளுக்கும் கோவம் வந்துருச்சு. நான் என்ன செஞ்சாலும் கேள்வி கேட்க கூடாதுன்னு நீ வாக்கு கொடுத்தது மறந்துருச்சாடா மக்குப் பயலே னு திட்டிட்டு.. நீ முதல நான் யாருன்னு தெரிஞ்சிக்கோ. நான்தான் தேவர்கள், முனிவர்கள் போற்றும் கங்காதேவி.
ஒரு மகாமுனிவர் விட்ட சாபத்தால 7 குழந்தைகள பெத்து ஆத்துல வீசிருக்கேன். அதெல்லாம் முனிவர்களா மாறி ஆதத்துக்குள்ள தவம் செஞ்சுக்கிட்டு கிடக்கு. இந்த எட்டாவது பிள்ளையையும் ஆத்துல போடும் போது நீ தடுத்துட்ட. அதனால உனக்கு இனி என்னை போடுற பாக்கியம் இல்ல.
உனக்கு மேட்டர் ஆசை போயி குழந்தை ஆசை வந்துருச்சி, இனி உன்கூட சேர்ந்து வாழ முடியாது. இந்த எட்டாவது குழந்தைய தேவிவிருதன் னு பேரு வச்சி கொஞ்ச காலம் நான் வளக்குறேன். இவன் வருங்காலத்தில பீஷ்மன் னு போற்ற படுவான் னு சொல்லிட்டு குழந்தைய புடிக்கிட்டு மறைஞ்சுட்டா.
சாந்தனு மன்னன் சோகமா.. " இந்த கிறுக்கு............ட இவளவு நாளா நம்மல எம்மாத்திட்டா "லேனு அரண்மனை திரும்பிட்டான்.
- தொடரும்........
குறிப்பு :-
இந்த கங்காதேவி தான் சிவனின் இரண்டாவது பொண்டாட்டி, பார்வதியோட சக்கலாத்தி. இந்து புரணாத்துல பொண்டாட்டிய மாத்தி மாத்தி விட்டுருவாங்க போல.. இந்து கடவுள் பத்தின புராண நெடுகிலும் இதே கதைகளாதான் இருக்கு ..
No comments:
Post a Comment