Tuesday, July 31, 2018

தொடர் 4 - காஷ்மீரிகள் ஏன் கல்லெறிகிறார்கள்.? -மன்னர் “ஆய்” போன கதை - ரன்பீர் சிங் ஆட்சி (1885 - 1925 )..

மூன்றாவது டோக்ரா மன்னரான பிரதாப் சிங்கின் ஆட்சிக்காலத்தில் மன்னர் கக்கூசு போன வகையில் ஏராளமாக செலவாகியிருக்கிறது.

மன்னருக்கு ஆயி வந்தவுடன் மூன்று பணியாளர்கள் தயாராகி விடுவார்கள். அதில் இரண்டு பணியாளர்கள் விலை உயர்ந்த முப்பத்தாறாம் நெம்பர் மஸ்லின் துணியைச் (chatees ki malmal) சுருட்டித் தயாராக வைத்துக் கொள்வார்கள். மன்னர் முக்கி வெளிக்கிப் போனவுடன் இரண்டு பணியாளர்களும், மன்னருக்கு புட்டத்தின் பின்னும் முன்னும் நின்றபடி, மஸ்லின் துணியை மன்னரின் கனமான துடைகளுக்கு இடையே, மிகவும் ஜாக்கிரதையான முறையில் ரம்பம் இழுப்பது போன்ற முறையில் மென்மையாக அசைத்து மலத் துவாரத்தைத் துடைக்க வேண்டும்.

டைமிங் மிகவும் முக்கியம். மூன்றாவது பணியாளர் வெள்ளி லோட்டாவில் “மிகச் சரியான இலக்கில்” தண்ணீரை ஊற்ற வேண்டும். தாமதமாகி புட்டத்திலும் விரைக் கொட்டைகளிலும் பீ அப்பி விட்டால்…? வேறென்ன, கடுமையான தண்டனைதான்.

முக்கி மலத்தை வெளியே வரவைப்பது, அதில் வெற்றி பெற்றபின், தண்ணீர் படுவதற்கு ஏற்ற முறையில் முன்புறம் குனிந்துக் கொள்வது போன்ற கடினமான பணிகளை மாட்சிமை தங்கிய மன்னரே செய்து கொள்வார்.

மேற்படி மஸ்லின் துணி மிகவும் விலை உயர்ந்தது என்பதால், அது பீ துடைத்தத் துணியாக இருந்தபோதிலும், அதனை ராஜ சன்மானமாக பணியாளர்கள் தங்களுக்குள் பங்கிட்டு எடுத்துக்கொள்ள வேண்டும்.
பீ துடைக்க இறக்குமதி செய்யப்பட்ட மஸ்லின் துணிகளை அப்போதைய தலைமை அமைச்சர் மன்னருக்கே தெரியாமல் ஆட்டையப் போட்டுள்ளார்.

திருடிய துணியை அவர் என்ன செய்தார் என்று தெரியவில்லை. நிச்சயமாக சட்டை தைத்துப் போட்டிருக்க முடியாது. மன்னர் கண்டுபிடித்து விடுவார். மன்னரைப் போல் அதைப் பயன்படுத்தும் உரிமை அமைச்சருக்கு இருக்க வாய்ப்பில்லை. கருவாட்டைக் களவாண்ட பாப்பாத்தியின் கதைதான்.

மன்னர் அடிக்கடி ஆய் போனால்தானே நிறைய மஸ்லின் துணிகளை ஆட்டையப் போட முடியும்? இதற்காகவே தலைமை அமைச்சர் ஒரு திட்டம் தீட்டியிருக்கிறார். மன்னர் குடிக்கும் பாலில் கொப்பறை விதைப் பொடியைக் கலந்து விடுவாராம். அது கடுமையாக பேதியைத் தூண்டக் கூடியது.

மன்னர் எந்த நேரமும் கக்கூசிலேயே கழிக்கும் நிலை ஏற்பட்டதால் அரசாங்கம் நிறைய மஸ்லின் துணிகளை வாங்கி ஸ்டாக் வைத்துள்ளது. ஒருபக்கம் பயன்படுத்தப்படாத மஸ்லின் துணிகளை அமைச்சர் பிளாக்கில் ஓட்டிக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் பீ துடைத்த துணிகளோடு பணியாளர்கள் திருப்திப்பட்டுக் கொள்ள வேண்டியிருந்தது.

தொடரும்....

No comments:

Post a Comment