குலாப் சிங்கின் ஆட்சி 1846-ல் இருந்து 57 வரை நடந்தது. அதன் பின் ரன்பீர் சிங் (1857-1885) இவன் ஆட்சியை பார்ப்போம்.
பிரிட்டிஷார் குலாப் சிங்குடன் ஓர் உடன்படிக்கை செய்து கொண்டனர். அதில் மூன்று கூறுகள் இருந்தன.
மூன்றாவதான கூறு, “பிரிட்டிஷ் அரசு கை மாற்றித்தரும் இந்த நிலப்பகுதியின் சுயாட்சி அதிகார உரிமை, குலாப் சிங் மற்றும் அவருடைய ஆண் வாரிசுகளுக்கு மட்டுமே உரியது” என்பதே ஆகும்.
இருப்பினும் பிரிட்டிஷாரின் தலையீடு அதிகரித்தது. மேலும் தன் தம்பிகளின் வாரிசுகள் அதிகாரத்தில் பங்கு கேட்கக்கூடும் என்ற அச்சமும் இருந்தது. எனவே தன் ஒரே மகன் ரன்பீர் சிங்கை, 1856இல் காஷ்மீரின் மகாராஜாவாக ஆக்கினான்.
இவன் மக்களைத் துன்புறுத்திய நேரம் போக
வினோதமான பொழுதுபோக்குகளில் ஈடுபடுவது இவன் வழக்கம்.
சமஸ்தான மன்னர்களின் வாழ்க்கை எந்த அளவுக்கு அருவெறுப்பானது என்பதற்கு ஜூனாகட் மன்னன் மகபத்கான் ரசூலுக்கு நாய்களின் மீதிருந்த காதலை உதாரணமாகச் சொல்வார்கள். இவனும் 800 நாய்களை வைத்திருந்தான். அவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக பணியாளர்களை நியமித்து சம்பளம் கொடுத்திருக்கிறான். நாய்களுக்காக மிகுந்த பொருட்செலவில் திருமணங்கள் நடத்திருக்கிறான்.
காஷ்மீரின் டோக்ராக்கள் மற்றைய சமஸ்தானாதிபதிகளைத் தூக்கிச் சாப்பிடும் வகையில் பெருவாழ்வு வாழ்ந்துள்ளனர்
இச்சூழலில் இந்தியாவில் சுதேச மன்னர்களும் மக்களும் 1857 மே திங்களில் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராகப் போர் தொடுத்தனர். எதிர்ப்பைச் சமாளிக்க வேண்டி, பிரிட்டிஷார் குலாப் சிங் உதவியை நாடினர். அவனும் படையை அனுப்ப ஒப்புக்கொண்டான். ஆனால் 1857 ஆகத்தில் அவன் இறந்துவிட்டதால், படையை அனுப்பிட ரன்பீர் சிங்கால் முடியவில்லை.
ரன்பீர் சிங் 1860இல் கில்கிட் பகுதியையும், அடுத்த பத்தாண்டுகளில் அண்டைப் பகுதிகளான சிலாஸ், போனியல், யாசின், டாரல், ஹூன்சா, நாகர் போன்றவற்றையும் இணைத்துக் கொண்டான்.
1877-79இல் காஷ்மீரில் பஞ்சம் தலைவிரித்து ஆடியது.
தன் மூன்று மகன்களில் கடைசி மகனான அமர்சிங் என்பவனை மன்னராக அறிவிக்க ரன்பீர் சிங் முயன்றான்.தீய பழக்கங்கள் உள்ளவனாக இருந்தாலும் முதலாவது மகன் பிரதாப் சிங் தான் மன்னராக ஆக்கப்பட வேண்டும் என்று பிரிட்டிஷார் கூறித் தலையிட்டனர்.
விரைவில் ரன்பீர் சிங் மறைந்தான். பிரதாப் சிங் மன்னர் ஆனான்.
No comments:
Post a Comment