பாண்டவங்களோட குந்தைகளும் நல்லா வளருது. காண்டபிரஸ்த நாட்டு பார்டர்ல ஒரு கருவக்காடு அடர்ந்து கிடக்கு. அத அர்ஜுனன் அக்னீதேவன வச்சி அப்புற படுத்துறான். அந்த காட்டுக்குள்ள மயன் னு ஒரு அரக்கன் இருந்தான். அரக்கன் அர்ஜுனன பாத்து "இந்த காட்டுல மணிபண்டபம் ஒன்னு கட்டுனா நல்லாருக்கும். அத நானே கட்டி நானே மெய்ண்டன் பன்றேன்"னு சொல்றான்.
அர்ஜுனனும் "சரி நீ கட்டுற வேலைய பாரு"னு சொல்றான். மயன் ஒரு செமயான மந்திர மாயாஜால பில்டிங்க கட்டுறான். அருமையான ஓவியம், சிலைங்க, தங்கம் வைரத்த வச்சி கட்டிருக்கான். பாக்க ஒரிஜினல் மாதிரி இருக்கும் ஆனா அதெல்லாம் டூப்ளிகேட்.
அந்த மாய மண்டப திறப்பு விழாவுக்கு கிருஷ்ணனும், பலராமனும் வாரனுக. ரிப்பன கட் பண்ணிட்டு "தர்மா... நாம உடனே ராஜசுய யாகம் பண்ணனும்"னு கிருஷ்னன் சொல்றான். அதுக்கு தரம்மன் "எதுக்கு அந்த யாகத்த பண்ணனும்?"னு கேக்குறான்.
அதுக்கு கிருஷ்னன் "தர்மா... மகதநாட்டு அரசன், எங்ககூட போர் செஞ்சி, எங்கள செயிச்சி மதுராவ வளைச்சு போட்டுகிட்டான். அவன போர்ல வின் பண்ரதுக்குத்தான் இந்த யாகம். நீங்க அஞ்சி பேரும் மதுராவ மீட்டு தர ஹெல்ப் பண்ணுனீங்கனா, நான் உங்களுக்கு வருங்காலத்துல ஹெல்ப் பண்ணுவேன்"னு சொல்றான்.
அதுக்கு பாண்டவங்க "அந்த மதகநாட்டு அரசன் யாரு? அவன் என்ன அவ்வளவு பலசாலியா..?"னு கேக்குறானுக.
அதுக்கு கிருஷ்ணன் "அவன் பேரு ஜராசந்தன். அவன் பிளாஸ்பேக் சொல்றேன். பொறுமையா கேளுங்க"னு சொல்லி ஆரம்பிக்கிறான்.
ஜராசந்தன் பிளாஸ்பேக் @....
ம்கதநாட்ட பிருகத்ரதன் ஆட்சி செஞ்சி வந்தான். அவன், காசிராஜன்க்கு ரெட்டை குழந்தையா பொறந்து வளந்த ரெண்டு மகளயும் கட்டிக்கிட்டான். பிருகத்ரதன் தன்னோட ரெண்டு மனைவிக்கும் எது கொடுத்தாலும் சமமா பிரிச்சி கொடுப்பானாம். பாவம் இவங்களுக்கு 60 வயசாயியும் கொழந்தகுட்டி இல்ல.
என்னபண்ணலானு யோச்சிச பிருகத்ரதன், ரெண்டு பொண்டாட்டிகல கூப்பிட்டுகிட்டு வனவாசம் போயிருக்கான். கொஞ்சம் ஓய்வேடுக்காலாம் னு ஒரு மரத்துக்கு அடில உக்காறுறாங்க. அந்தநேரம் பாத்து பிருகத்ரதன் மடில ஒரு மாம்பழம் மேல இருந்து விழுகுது. எதா இருந்தாலும் தன்னோட பொண்டாட்டிகளுக்கு சரிசமமா பிரிச்சி கொடுக்குறவன், இந்த மாம்பழத்தையும் புள்ளிக்கு பப்பாதி சாப்புடுங்கடி னு கொடுக்கிறான்.
இந்த பழத்த சாப்பிட்ட ரெண்டு பொண்டாடிகளுக்கும் வயித்துல குழந்தை உண்டாகுது. ஒரு மாம்பழத்த பாதிபாதியா பொண்டாட்டிங்க சாப்புட்டதால குழந்தையும் பாதிபாதியா வளருது. ரெண்டுபேரும்க்கும் பாதி உடம்போடா குழந்தை பெறந்திருக்கு. "ரெம்ப வருஷம் கழிச்சி பொறக்குற குழந்தை இப்படியா பொறக்கனும்"னு யோசிச்சபடி பாதிபாதி உடம்புள்ள குழந்தைய ரெண்டு துண்டுல சுத்தி, குப்பதொட்டில போட்டுருறாங்க.
"என்னடா.. மனுசபய வாட அடிக்கு"னு அந்தபக்கமா வந்த ஒரு அரக்கி, குப்பதொட்டில இருக்குற ரெண்டு பீஸயும் எடுக்கா. அரக்கி அத ஒண்ணா எடுக்கவும், ரெண்டு பிஸ்சும் ஒட்டி, ஒரு முழு குழந்தையா ஆச்சி. அத தூக்கிட்டு போயி அரக்கி, "இது உங்க குழந்தை தான் மன்னரே"னு மதகநாட்டு மன்னன் பிருகத்ரதன்ட்ட குடுக்கா. சந்தோஷபட்ட மன்னன் அந்த குழந்தைக்கு ஜராசந்தன் னு பேரு வச்சி வளக்கான். அவங்க அப்பன் செத்துப்போக இப்ப ஜராசந்தன் பெரியவனா ஆகி மதகநாட்ட ஆட்சி செய்யுறான்.
***********************
"அவனத்தான் இப்ப அழிக்க போறோம். அதுக்குத்தான் இந்த யாகம்"னு சொல்றான்.
பாண்டவர்களும் சரி னு கிருஷ்ணன் கூட முனிவர் வேசம் போட்டு மகதநாட்டுக்கு போறாங்க. வழக்கம் போல முனிவங்கள வரவேற்குற மாதிரி ஜராசந்தன் இவங்கள அரண்மனைக்கு கூப்புட்டு விருந்து வைக்கான்.
ஜராசந்தன் "என்ன விசயமா வந்திருக்கீங்க முனிவர்களே?"னு கேக்க, அதுக்கு அர்ஜுனன் "உங்கூட போர் செய்ய வந்துருக்கோம்"னு சொல்றான். இத கேட்டு கெக்கபுக்க னு சிரிச்ச ஜராசந்தன் "போர் நல்லா செய்யலாம்"னு பாண்டவங்களயும், கிருஷ்ணனயும் போட்டு வெளுவெளு னு போட்டு வெளுக்கான். அடித்தாங்க முடியசாத அர்ஜுனன் "டே.. ஜராசந்தனா.. நீ தைரியமான ஆம்பளனா இருந்தா என் அண்ணன் பீமன்ட்ட மோதுடா"னு சொல்றான்.
அதுக்கு ஜராசந்தன், சிரிச்சிகிட்டே "பீமன் பெரிய வெண்ணயாடா.. அவன எங்கடா..?"னு பீமன புடிச்சி அடிஅடினு அடிச்சி பிரிச்சிபுட்டான்.
கொஞ்சம் துதாரிச்சிகிட்ட பீமன் ஒரு பெரிய கோடாலிய தூக்கிக்கிட்டு ஜராசந்தன ரெண்டா வெட்டிப்புட்டான். "என்ன அடி அடிக்குறான்..நாசமத்துப்போனவன். ஒழிஞ்சான் போ.."னு பீமன், கிருஷ்ணனயும், பாண்டவர்களை பாத்து "வந்த வேல முடிச்சிருச்சி வாங்க போலாம்"னு சொல்றான். அந்தநேரம் ஜராசந்தனோட வெட்டுன உடம்பு ஒன்னு சேருது. அத பாத்த பீமன் மிரண்டு போயி "யோவ்.. கிருஷ்ணா.. என்னய்யா, வெட்டுன உடம்பு ஒன்னு சேந்து மறுபடியும் எந்திச்சி வாரான்"னு கிருஷ்ணன்ட்ட கேக்கான்.
அதுக்கு கிருஷ்ணன் "டே.. பீமா. இவன் பொறக்கும் போதே ரெண்டா பொறந்ததால, இவனை நீ எப்படி வெட்டுனாலும் சாகமாட்டான். மறுபடியும் உடம்ப ஒட்டிக்கிட்டு சண்டைக்கு வருவான். நீதான் அவன எப்படியாவது சமாளிக்கணும்"னு சொல்றான்.
மறுபடியும் பீமனுக்கும், ஜராசந்தனுக்கும் 13 நாள் ஓய்வில்லாம சண்ட நடக்குது. இந்த பீமன் ஜராசந்தன வாள் வச்சி தலைல இருந்து ரெண்டா வெட்டுறான். மறுபடியும் உடம்பு ஒன்னு சேந்து வரான். "இவன என்னடா பண்றது"ன்னு சோசிச்ச பீமன், ஜராசந்தன நார்நாரா கிழிச்சி, இவனே ஜராசந்தன் உடம்ப தலைகீழா ஒட்டவச்சிடுறான். ஜராசந்தன் செத்துருறான்.
மகதநாட்ட சகாதேவனுக்கு எழுதிவச்சிருராணுக. ஜராசந்தனயே கொன்னுடாங்க..ங்கிற சேதி எல்லாம் நாட்டுக்கும் பரவுது.
பாண்டவங்க கட்டியிருக்குற மாயாஜால் பில்டிங்க பாக்க எல்லாம் நாட்டு அரசர்களும் வாராங்க. துரியோதனனும் வந்து சுத்தி பாக்கான். அங்க நீச்சல் குலத்த 3D டிசைன்ல தரையில வரைஞ்சிருக்குறது தெரியாமா. நெசம் னு நெனைச்ச துரியோதனன். குதிக்கேன் னு சொல்லிட்டு தரையில விழுந்துருறான். "நல்லவேல யாரும் பாக்கல"னு எந்திச்சப்போ, பாஞ்சாலி பாத்து சிரிக்குறா...
-தொடரும்...
No comments:
Post a Comment