வம்ச விருத்திக்காக சத்தியவதி தீவில தவம் செஞ்சிட்டு இருந்த தன்னோட மகன் வியாசர்முனிவர நினைச்சி வேண்டுறா. உடனே டொய்னு வியாசர்முனிவர், மெலிஞ்ச ஒடம்பு, தமிழிசை ஹேர் ஸ்டைல், பத்து வருசம் செரைக்காத தாடியோடு வந்து நின்னான். "உங்களுக்கு என்ன உதவி வேணும் தாயே, உங்களுக்கு உதவ நான் ரெடியா இருக்கேன்"னு சொல்றான்.
"மகனே நீ வந்ததுக்கு ரெம்ப மகிழ்ச்சி. உன்னோட தம்பி விசித்திரவீரியன் போர்ல செத்துட்டான். அவனுக்கு ரெண்டு பொண்ணுகல கல்யாணம் பண்ணிக்குடுத்தும் ஒரு புழுப்பூச்சி கூட இல்ல. அவனும் இப்ப செத்துட்டான். நம்ம வம்ச விருத்திக்காக உன்னோட தம்பி பொண்டாட்டிகல மேட்டர் பண்ணி நம்ம வம்சத்துக்கு வாரிச தரணும். அதனாலதான் உன்ன அவசரமா வரவச்சேன்."னு சொல்றா.
"தாயே நான் ஒரு முனிவர், இந்த மாதிரி காரியமெல்லாம் பண்ணக்கூடாது. இருந்தாலும் நீங்க நம்ம வம்ச வாரிசுக்காகனு கேக்குறீங்க. உங்க சொல்ல எப்பவுமே தட்டமாட்டேன். நான் ரெடி தாயே, நல்ல முகூர்த்த நேரமா பாத்து சொல்லுங்க, நம்ம வம்சத்துக்கு நூறு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் தாறேன்"னு சொல்லிட்டான்.
சத்தியவதி மருமக அம்பிகையோட அத்தபுரத்துல அவள பார்த்து "மருமகளே நம்ம வம்சவிரித்திக்காக இன்னைக்கு நைட் உங்கூட உடலுறவு பண்ண நம் உறவினர் ஒருவர் வருவார், அவர அனுசரிச்சி நடந்துக்கோடி."னு சொல்றா. அதுக்கு அம்பிகை " அத்தை நீங்க நம்ம வம்ச விருத்திக்காக னு சொல்றீங்க, அதுக்காக நான் இத பண்ண ஒத்துக்கிறேன் " னு சொல்லிட்டா.
அம்பிகைக்கு ஒரே சந்தோஷம், இன்னைக்கு நைட் நம்ம கூட பண்ணப்போறது பீஷ்மராதான் இருக்கும் னு தன்னோட பெட்ரூம் முழுவதும் அகில்புகை போட்டு, சந்தனம் மணம் கமல, பெட்டு நிறைய மல்லிகைப்பூ தூவி ரெடி பண்ணி வச்சிருந்தா.
வியாசர்முனிவன் வந்தத பாத்து அதிர்ச்சி ஆயிட்டா. தமிழிசை ஹர் ஸ்டைல், பத்து வருசமா செரைக்காத தாடி மீசை, (இப்படி வந்தா யாருக்கு தான் புடிக்கும்? ) இவனோட மேட்டர் பண்ண முடியாது னு அம்பிகை பயந்து கண்ண மூடிக்கிட்டா. வந்த முனிவர் மேட்டர பாத்துட்டு போயிட்டான்.
"மகனே.. வியாசர்முனிவா.. நைட் போனா காரியம் நல்லா நடந்துச்சா"னு சத்தியவதி முனிவன்ட்ட கேக்குறா. அதுக்கு வியாசர்முனிவன் "எங்க தாயே, உங்க மருமக அம்பிகை நான் பண்ணும் போது கண்ன மூடிக்கிட்டா. அதானால உங்க மருமகளுக்கு பிறக்குற குழந்தை குருடனாத்தான் பிறக்கும்"னு சொல்லிட்டான்.
பத்துமாசம் கழிச்சி அம்பிகை ஒரு குழந்தை கண்ன மூடுன மாறியே பொறக்குது. அந்த குழந்தைக்கு திருதராஷ்டிரன் னு பேரு வச்சி வளக்குறாங்க.
சத்தியவதி ரெம்ப மனஉலச்சலுக்கு ஆளாயிட்டா. "ஒரு குருட்டு வாரிசு எப்படி இவ்வளவு பெரிய ராஜியத்த ஆள முடியும் பீஷ்மா" னு மகன் பீஷ்மர்ட்ட சொல்லி அழுகுறா.
அதுக்கு பீஷ்மர் "சின்னம்மா கவலப்படாதீங்க, மறுபடியும் சகோததர் வியாசர்முனிவர கூப்பிட்டு அம்பிகை தங்கச்சி அம்பாலிகைகிட்ட விட்டு ட்ரை பண்ணலாம்"னு சத்யவதிக்கு சமாதானம் சொல்றான்.
சத்தியவதியும் அதுதான் சரி னு சொல்லிட்டு, தன்னோட மகனை நினைக்குறா " மகனே வியாசர்முனிவா, எனக்கு உன்னோட ஹெல்ப் தேவப்படுது. உடனே இங்கே வா.."னு வேண்டுறா...
- தொடரும்
No comments:
Post a Comment