தன்னோட லவ்வ நாசமாக்கின பீஷ்மர எப்படியாவது கொல்லனும் னு பல நாட்டு மன்னர்களிட்ட போயி நியாயம் கேட்டுருக்கா, எல்லோரும் முடியாது னு சொல்லிட்டாங்க. கடைசியா துருபதநாட்டு மன்னன்ட்ட பீஷ்மர கொல்ல டீல் பேசிருக்கா, அவனும் பயந்துட்டு முடியாதுன்னு சொல்லிட்டான்.
அப்றம் சிவன் மகன் கந்தன நினைச்சி தவம் பண்றா. கந்தன் அவளுக்கு வரமா ஒரு படிகமாலைய குடுக்காத்துட்டு " யார் இந்த மாலைய போட்டு பீஷ்மர்ட்ட சண்ட போடுறங்களோ அவனாலதான் பீஷ்மர கொல்ல முடியும்"னு சொல்லிட்டு டொய்ங் னு மறைஞ்சிருறான்.
அம்பை அந்த மாலைய கொண்டு போயி பல மன்னர்ட்ட குடுத்து பீஷ்மர கொல்ல சொல்றா. எல்லாம் மன்னரும் முடியாதுன்னு கைய விரிச்சிட்டாங்க. என்னடா ஒரு பையலும் பீஷ்மர கொல்ல வரமாட்டிக்காங்களே னு மாலைய அவவீட்டு கூர மேல மாட்டிவச்சிட்டு வனவாசம் போயிட்டா.
காட்டுல பரசுராமர் ங்கிற ஒரு முனிவர் கூட அம்பைக்கு பழக்கம் ஆகுது. முனிவர்ட்ட அவளோட கதைய சொல்லி, "பீஷ்மர எப்படியாவது சொலிய முடிக்கணும் அதுக்கு நீங்க எனக்கு உதவனும்"னு கேக்குறா. பரசுராம முனிவர் சரினு சொல்லிட்டு பீஷ்மர்ட்ட சன்டைக்கு போறான்.
ரெண்டுபேரும் சரிவீதமா சண்டை போடுராணுக, யாரும் செயிச்சபாடுயில்ல. முனிவர் அம்பைட்ட "இவன சண்ட போட்டு செயிக்க முடியாது. நீ சிவன நினைச்சி தவம் இரு" னு சொல்லிட்டான்.
இவளும் சிவன நினைச்சி தவம் கிடக்க இமயமலைக்கு போறப்பட்டா. கடும் தவம் செயின்ச்சிட்டு இருக்கும் போது, சிவன் காட்சி தந்து "நீ மறுபிறவி எடுத்தாதான் பீஷ்மரை கொல்ல முடியும் னு சொல்லிட்டு மறைஞ்சிட்டான். செத்தாதானே மறுபிறவி எடுக்கமுடியும் னு நெருப்புல விழுந்து செத்துருரா.
சிலநாள் கழிச்சி துருபத ராஜாக்கு மகளா பிறக்கிறாள். சிகண்டனி னு பேரு வச்சி நல்லா வளக்குராங்க. அவ இளைம பருவம் ஆனதும் பீஷ்மர கொல்ல ரெடி ஆயிட்டா. அவ அப்பன் துருபத மாகராஜட்ட சொல்றா. "பீஷ்மர்ட்ட சண்ட போடமுடியாது னு ஓங்கி சிகண்டனி செவுலுள அடிச்சி வனவாசம் போ" னு அவள அரண்மனைய விட்டு விரட்டிட்டான்.
காட்டுக்கு போன சிகண்டனி அங்க கந்தர்வன் ங்கிற ஒரு முனிவர்ட்ட பழக்கமாகி, நடந்தத சொல்றா. அதுக்கு அந்த முனிவர் " நீ ஆம்பளயா மாறுனாத்தான் பீஷ்மரை கொல்ல முடியும் அதனால நம்ம ரெண்டு பேரு உடம்ப எக்சேஞ்ச் பண்ணிக்குவோம். பீஷ்மரை கொல்லற வரைக்கும் நீ ஆணா என் உடம்ப யூஸ் பண்ணிக்கோ. எல்லாம் முடிச்சதும் நாம பழைய மாதிரி உடம்ப மாத்திக்கலாம்"னு சொல்லுறான்.
இவளும் சரினு சொல்லி முனிவர் உடம்புல பூந்து ஆம்பளயா மாறிட்டா. முனிவன் சிகண்டனி உடம்புல பூந்து லேடீஸ் ஆகிட்டான். ஆணா மாறின சிகண்டனி, தன்னோட பேர சிகண்டி னு மாத்தி பீஷ்மர கொல்ல புறப்படுறா...
- தொடரும்....
No comments:
Post a Comment