துருபத மன்னன் தன்னோட மக, பாண்டவங்க கூட தான் இருக்கானு தெரிஞ்சிக்கிட்டு, பாண்டவங்கல தன்னோட அரண்மனையில கூட்டிவந்து தங்க வச்சிருக்கான். இது தெரிஞ்ச துரியோதனன் குரூப் அவங்க நாட்டு மேல போர் செய்ய கெளம்பிட்டானுக.
போர் ஆரம்பமாச்சி. துரியோதனன் சைடு கர்ணன், துச்சாதனன், ஜெயத்தரன் நிக்கிறாங்க.பாண்டவங்க சைடு, திருஷ்டதூமன், சிகண்டி நிக்கிறாங்க. ரெண்டு குரூப்பும் சண்ட போட்டதுல பாண்டவங்க குரூப் வின் பண்ணிருராணுக. துரியோதனன் கோவதுல நாடு திரும்பிட்டான். இந்த சேதிய கேட்ட பீஷ்மர், துரியோதனன கூப்பிட்டு ஒருதாய் வயித்து புள்ளைங்க இப்படி சண்ட போடலமாடா. சொத்துல அவங்க பங்க குடுத்துருவோம்டா னு சொல்றான். அதுக்கு கர்ணனும், சகுனியும் முடியாது னு சொல்றாங்க. ஒருவழியா ரெம்பநேர விவாதத்துக்கு பிறகு திருதராஷ்டிரன் பாண்டவர்களுக்கு பங்க குடுக்க சரி னு சொல்றான்.
துருபத நாட்டுல இருக்குற பாண்டவர்கள பீஷ்மர் தன்னோட அஸ்தினாபுரத்துக்கு கூப்புடுறான். அவங்கள துருபத மன்னன் அனுப்பும்போது தன்னோட மகன் திருஷ்டதூமன பாதுக்காப்புக்கு அனுப்புறான். பாண்டவங்க அஸ்தினாபுரம் போனதும் திருதராஷ்டிரன் சொத்த பிரிச்சி கொடுக்க பாண்டவங்கல கூப்புடுறான் "பாண்டவங்களா உங்களுக்கு காண்டபிரஸ்த நாட்ட தாரோம். அந்த நாட்டுல ஒரு தலைநகர் ரெடி பண்ணி நீங்க ஆட்சி அமைச்சிக்கோங்க"னு நாட்ட பிரிச்சி கொடுத்துட்டான்.
பாண்டவங்க குந்தியும், பாஞ்சாலியயும் கூப்பிட்டுகிட்டு காண்டபிரஸ்த நாட்டுக்கு போயி ஒரு புது தலைநகர்கள் ரெடிபண்ராணுக. அந்த புது தலைநகர் கட்டுன பால்காச்சி விசேஷத்துக்கு கிருஸ்ணனும், நாரதரும் வாரனுக. ரிப்பன் வெட்டி திறப்பு விழா கொண்டாடிட்டு, சாப்பாட்டு பந்தி எல்லாம் முடிஞ்சதும், "நல்லா இருங்கடா பாண்டவங்களா"னு கிருஷ்னனும், நாரதரும் வாழ்த்துறாங்க.
அப்போ நாரதர் பாண்டவங்கல கூப்பிட்டு "டே.. பாண்டவங்களா நீங்க இப்படியே காலம்பூராம் ஒத்துமையா இருக்க ஒரு வழி சொல்லுறேன் கேட்டுக்கோங்க. நீங்க அஞ்சி பேரும் ஒரே பொண்ண கட்டியிருக்கீங்க, உங்களுக்கு கண்டிப்பா மேட்டர் பாக்குறதுல பிரச்சனை வரும். அந்த பிரச்சனைய தவிர்க்க, நீங்க ஒவ்வொருத்தனும் பாஞ்சாலி கூட ஒவ்வோரு வருஷம் அக்கிரமெண்ட் போட்டு குடும்பம் நடத்துங்க. உதாரணத்துக்கு... யுதிஷ்டிரன் ஒரு வருசம் மேட்டர் போட்டு குடும்பம் நடத்துனா, மீதி இருக்குற நாளு பேரும் ஒரு வருஷம் வெயிட் பண்ணனும், அதுக்கு அப்பறம் பீமன் ஒரு வருஷம், அப்பறம் அர்ஜுனன் ஒரு வருஷம் னு ரவுண்டுல வரும். ஒருத்தன் ஒருவருசம் பாஞ்சாலிட்ட குடும்பம் நடத்தி மேட்டர் போடும்போது, மீதி இருக்குற பயபுள்ளைக யாராவது எட்டி பாத்தீங்கனா.. அதுக்கு தண்டனையா ஒருவருசம் தன்கையே தனக்குதவி னு பிரமச்சாரியா வனவாசம் போயிரனும்."னு அட்வைஸ் பன்ரான்.
எல்லாம் முடிஞ்சி கிருஷ்ணனும், நாரதனும் "நாங்க கெளம்புறோம்''னு சொல்றாங்க. அப்ப குந்தி "கிருஸ்ணா.. இப்பதான் புது நாடு உருவாக்கியிருக்கோம். நீ அடிக்கடி வந்து போப்பா. எங்களுக்கும் ஒத்தாசயா இருக்கும்"னு சொல்லி வழியனுப்பி வைக்கா.
புதுநாடான காண்டபிரஸ்த நாட்டுல யுதிஷ்டிரன் அதாவது தர்ம்மன் தலைமையில நல்லா தான் பாண்டவங்க ஆட்சி போயிட்டு இருந்துச்சி.
ஒரு பிராமணன், என்னோட பசுமாட்ட யாரோ திருடிட்டாங்க னு அர்ஜுனன்கிட்ட பிராது கொடுக்கான். அவனுக்கு உதவி செய்ய தன்னோட வில்லையும் அம்பயும் எடுக்க ரூம்முக்குள்ள போன அர்ஜுனன், தரம்மனும் பாஞ்சாலியும் மேட்டர் போட்டுட்டு கிடந்தத பாத்துட்டான்.
தப்பு பண்ணிட்டமோ னு குந்திய கூப்பிட்டு "அம்மா.. நான் அண்ணன் தரம்மனும் பாஞ்சாலியும் மேட்டர் போட்டு கிடந்தத பாத்துட்டேன். அதனால இந்த பவத்த கழிக்க ஒரு வருசம் வனவாசம் போறேன்"னு சொல்றான். குந்தியும் சரினு சொல்லி அனுப்பி வைக்கா.
காட்டுக்குள்ள வனவாசம் போன அர்ஜுனன், கங்கைஆத்து கரையோரமா நடந்து போகும்போது, ஆத்துல அம்மணமா குளிச்சிட்டு இருந்த ஒரு பொண்ண பாத்து மூடேறி, அவட்ட கட்டிக்கிறாயா னு கேக்கான். அதுக்கு அவ "நான் யாருன்னு தெரியுமா...? நான்தான் நாகலோக தேவதை. என் பேரு 'உலூபி'"னு சொல்லிட்டு கட்டிக்க சம்மதம் சொல்றா.
இவங்க ரெண்டுபேரும் கல்யாணம் பண்ணி மேட்டர் பாத்ததுல ஒரு குழந்தை பிறக்கு, அதுக்கு அரவான் னு பேரு வச்சி உலூபி வளக்கா. அப்றம் அர்ஜுனன் அவள கழட்டிவிட்டுட்டு, சொட்டயன் மாதிரி இமயமலைக்கு பாதையாத்திர போறான். அங்க போயிட்டு திரும்பி வரும்போது பாண்டி நாட்டு வழியா வரான். அர்ஜுனன் வந்தத கேள்விப்பட்ட பாண்டி நாட்டு மன்னன், அர்ஜுனன கூப்பிட்டு விருந்து வைக்கான்.
அப்போ, பாண்டி நாட்டு மன்னனோட மகள கரேட் பண்ணி மேட்டர் பாத்துருறான். இத கேள்விப்பட்ட மன்னன், அவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணிவைக்கான். ஒரு குழந்தையும் போறக்கு...
-தொடரும்
No comments:
Post a Comment