Tuesday, July 31, 2018

சென்னை ஐகோர்ட்டில் மனுநீதி காத்த சோழன் சிலை - பார்ப்பன மனுநீதி - இதன் மூலம் நீதிமன்றம் எதை எடுத்துரைக்கிறது?????

ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூர் நீதிமன்றத்தில் எப்படி மனுதர்மம் போதித்த மனு சிலை பார்ப்பன நீதிபதிகளால் திட்டமிட்டு வைக்கப்பட்டதே, அதே மாதிரியில் சென்னை ஐகோர்ட்டில் உள்ள மனுநீதி காத்த சோழன் நிலையும் வைக்கப்பட்டுள்ளது.

இந்த மனுநீதி காத்த சோழன் சிலை தமிழ் இலக்கியங்களின் நீதிக்கு சான்றாக வைக்கப்பட்டுள்ளது என்று பலர் வியக்கணம் பேசுகிறார்கள். அது எந்த எந்த மனுநீதி காத்த சோழன் என்பதில் இன்றுவரை எந்த இலக்கியவாதியும் உறுதிபட சொல்லவில்லை. ஒரு குழு இந்த மன்னன் எல்லாளன், இந்த மன்னனின் தகவல்கள் கிபி 4ஆம் நூற்றாண்டில் இலங்கையில் பாலி மொழியில் எழுதப்பட்ட மகாவம்ச நூலில் குறிப்பிடபட்டுள்ளது என்கிறார்கள்.

மற்றோரு குழு இந்த மன்னன் மனுநீதி கண்ட சோழன் கிபி 10 - 11 நூற்றாண்டில் வாழ்ந்தான். இந்த மன்னரின் தகவல்கள் சேக்கிழாரின் பெரியபுராணத்திலேயே மனுநீதிச் சோழன் கதை விரிவாகக் காணப்படுகிறது என்கிறார்கள்.

வேறொரு குழு மேற்கூறிய ரெண்டும் மன்னர்களும் ஒன்றுதான் என்று கூறுகிறார்கள்.

இவர்கள் எத்தனை ஆங்கிள்களில் குழப்பிகொண்டாலும் கதை ஒன்றுதான்.

"மனுநீதிச் சோழனோட மகன், தேரேறி ஊர் சுத்த கெளம்பிருக்கான். அவனயே அறியாம தேரோட டயர்ல ஒரு கண்ணுக்குட்டி விழுந்து செத்துருது. இத பாத்த பசுமாடு "என்னோட குடியையே அடிச்சி கொன்னுடயா.. உன்ன என்ன பணரேன்னு பாரு"னு மன்னன் பஞ்சாயத்து கூட்டுறதுக்காக தொங்க விட்டிருந்த மணிய, பசுமாடு கயித்த பிடிச்சி இழுத்து அடிக்குது. அரண்மனைல தூங்கிட்டு இருந்த மன்னன் "அங்க என்னம்மா.. சத்தம்.." னு கேட்டு எந்துச்சி, பசுமாடு பெல் அடிக்குறத பாக்குறான். அப்றம் பசுமாட்டுக்கு பஞ்சாயத்து பண்ணுன மன்னன், தன்னோட மகன் தவறு செஞ்ச குத்ததுக்காக, அதே தேர் டயர்ல மகன படுக்கப்போட்டு ஏத்தி கொல்றான். பசுமாடும், இதான் பெஸ்ட் தீர்ப்பு  னு டிங்கு,டிங்குனு மண்டைய ஆட்டிட்டு கெளம்பிருச்சி.."

இதுதான் மனுநீதி காத்த சோழனின் கதை.

அது எந்த சோழன் என்ற ஆய்வுகள் ஒருபுறம் இருக்க, ஒரு புதுவித ஆய்வை கூறுகிறேன்..

மனுநீதி காத்த சோழன் வேற யாருமில்லை, அது எங்கள் மறவர்குல பரம்பரையான ராஜராஜ சோழன் வம்சம் தான் என்று தேவர் சமுதாயத்தினர், பல ஆய்வுகளை நடத்தி ஆதாரமாக இராசராசசோழன் உலா, விக்கிரமசோழன் உலா, குலோத்துங்கசோழன் உலா போன்ற கதைகளை முன்வைக்கின்றனர்.

அப்போ நாங்க மட்டும் பேண்ட பரம்பரையா என்று வன்னியர் சமுதாயத்தினர், 42 ஆண்டு காலம் இலங்கையை ஆண்ட எல்லாளன் மன்னன் எங்கள் வன்னிய மரபை சேர்ந்தவர் என்று மார்த்தட்டிக்கொள்கின்றனர்.

அப்போ புதிய வெள்ளார்கள் அமையாக இருப்பார்களா...? அவர்களும் ஆராய்ச்சில் இறங்கி, அந்த மன்னர் பெயர் மல்லாளன் காலப்போக்கில் மருகி எல்லாளன் ஆகியது என்ற வாதத்தை முன்வைக்கிறார்கள்.

இடையில் திருவாளர்.சீமான் அவர்களும் "என் பாட்டன் ராஜராஜ சோழன் அந்த காலத்துலயே எல்லாத்தையும் புடுங்கி தள்ளிட்டார்" என்று மேடைக்கு மேடை தமிழக இளைஞர் மனதில் நச்சை பரப்புகிறார்.

இலக்கியவாதிகளும் சரி, முட்டாள்களான சாதியவாதிகளும் சரி "மனுநீதி கண்ட சோழன்" என்பதில் தெளிவாய் இருக்கிறார்கள். மனு சிலையவே நீதிமன்ற வளாக்கத்திலிருந்து அற்ற போராடும் போது, அந்த மனுநீதியை பேணிகாத்து ஆட்சி செய்த இந்த மன்னனோட நிலை நம் தமிழ்நாட்டு தலைநகரான சென்னை ஐகோர்ட் வளாகத்தில் இருக்கிறதென்றால், நமக்கு எவ்வளவு வெட்கக்கேடு...?

வர்ணம் கூறி கீழ்சாதி, மேல்சாதி என்று பிரித்து நம்மை ஏமாற்றும் பார்ப்பனர்களின் பிடியில்தான். நாம் இன்றளவும் இருந்துகொண்டிருக்கிறோம். நாம் மனுவை அகற்ற நினைத்தால் இந்த சாதிவெறிநாய்கள் சோழனை விடமாட்டார்கள். அந்தளவு நம் சமுதாயத்தில் பின்னி பிணைந்துள்ளது பார்பனின் மனுதர்மம் என்ற சதி..

நாம் என்னதான் எடுத்து சொன்னாலும். "சோழன் மன்னன் நல்ல தீர்ப்பு தானே சொல்லியிருக்கிறார்" என்று செம்ப தூக்கிக்கொண்டு வருவார்கள்.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ராஜஸ்தான் மாநிலத்தில், மாட்டுக்கறி சாப்பிட்டதற்காக ஒரு தலித்தை அடித்தே கொன்றுருக்கிறார்கள். அதே மாநிலத்தில் தான் ஒரு முசுலீம் வீட்டில் மாட்டுக்கறி இருப்பதாக கூறி ஒரு பெரியவரை அடித்தே கொன்றதுமில்லாமல் அவரின் கும்பத்தையும் பயங்கரமாக தாக்கியுள்ளனர். இத கொலையை விசாரித்த நீதிமன்றம், கொலைசெய்த குற்றவாளியை பசு பாதுகாவலர்கள் என கூறி விடுதலை செய்தது. இந்த மதவெறிகளின் வெறியாட்டம் பசுபாதுகாவலர்கள் என்ற பெயரில் இன்றுவரை தலித் மற்றும் முஸ்லிம் மக்கள் மீது வன்முறையை நிகழ்த்திக்கொண்டேதான் இருக்கிறார்கள்.

மனு காலம் என்றாலும் சரி, மனுநீதி காத்த சோழன் காலம் என்றாலும் சரி, தற்போதைய காலம் என்றாலும் சரி. பசுவுக்கு ஆபத்து என்றால் ஆட்களை கொள்ளலாம். இதுதான் நீதி. நீதிமன்ற வளாகத்தில் உள்ள மனு சிலையாலும், சோழன் சிலையானும் இந்த பார்ப்பன வருண நீதியை தான் உங்களுக்கு பறைசாற்றிக்கொண்டிருக்கும்.

ஒரு நீதிமன்றத்தில் சிலை வைக்கவேண்டுமென்றால், சட்ட தந்தை. அம்பேத்கர் அவர்களின் சிலையை வைக்கலாம், இல்லை சமூக சீர்திருத்தவாதி மகாத்மா ஜோதிராவ் பூலே சிலை வைக்கலாம். சுயமரியாதையோடு வாழ சமூகநீதி பேசிய தந்தை பெரியார் சிலை வைக்காலம். இவர்களை தவிர்த்து நீதிமன்றத்தில் மனு சிலையும், மனுநீதி காத்த சோழன் சிலையும் இருக்கிறதென்றால், இது நீதிமன்றமா இல்ல க்..................... மானுதான் கேக்கவேண்டியிருக்கு.....

1 comment:

  1. மனுநீதி சோழன் வாழ்ந்த ஆதாரங்கள்

    1. கி.மு 235ல் திருவாரூரை தலைநகரமாகக் கொண்டு அரசாண்ட மல்லாளன் என்ற சோழமன்னன் "எல்லா உயிர்களும் சட்டத்தின் முன் சமம்" என்ற மனுநீதியை உயிராக மதித்து அரசாண்டதால் அவன் மனுநீதி சோழன் என்று அழைக்கப்பட்டான் என்றும் தன் மகன் தேர்ச் சக்கரத்தை கன்று குட்டி மீது ஏற்றிக் கொன்றதற்கு நீதி கேட்டு வந்த தாய் பசுவிற்கு மனு நீதிப்படி அவன் நீதி வழங்கினான் என்றும் சோழ வரலாறு கூறுகிறது.

    2. பெரிய புராணம், பதிணென் கீழ்க்கணக்கு நூல்களான பழமொழி நாநூறு, சிலப்பதிகாரம், புறநானூறு, கலிங்கத்து பரணி ஆகிய நூல்கள் மனுநீதி சோழனைப்பற்றி பேசுகின்றன.

    3. இக்கதையின் முழுவடிவம் பிற்காலச் சோழர்காலத்தில் உருவான பெரியபுராணம் என்றழைக்கப்படும் திருத்தொண்டர் புராணத்தில் இடம் பெற்றுள்ளது. இந்நூலின் தொடக்கப் பகுதியில் திருவாரூர் நகரில் சிறப்பைக் கூறும்போது மனுநீதிச்சோழன் கதை. திருவாரூர் நகரில் நடந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. மனுநீதி சோழன் அநாபயச் சோழன் (இரண்டாம் குலோத்துங்கச் சோழன் 1133 – 1146) என்ற சோழ மன்னனின் முன்னோன் என்றுகுறிப்பிடப்படுகிறார்.

    4. சேக்கிழாருக்கு முன்பே பதினென் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றாகிய ‘பழமொழி நானூறு’. சிலப்பதிகாரம் ஆகிய நூல்களில் மனுநீதிச் சோழனின் கதை இடம்பெற்றுள்ளது.

    ‘கறவைக் கன்று ஊர்ந்தானைத் தந்தையும் ஊர்ந்தான்’ என்று பழமொழி நானூறு (93) இக்கதையைக் குறிப்பிடுகிறது.

    5. தான் பிறந்த வளர்ந்த சோழ நாட்டின் நீதிநெறி வழுவாச் சிறப்பை, பாண்டிய மன்னனிடம் எடுத்துரைக்கும் போது

    ‘வாயிற் கடைமணி நடுநா நடுங்க
    ஆவின் கடைமணியுகுநீர்நெஞ்சுசுடத் தான்தன்

    அரும் பெற்ற புதல்வனை ஆழியின் மடித்தோன்’

    என்று கண்ணகி கூறுகிறாள் (சிலப் 20; 53 – 55).

    6. ‘கறவை முறை செய்தோன் (சிலப் 23 : 58) கறவை முறை செய்து காவலன் (சிலப் 29 : 20) என்றும் இந்நிகழ்வை இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார். சிலப்பதிகாரத்தில் இடம் பெறும் இச்செய்திகள் சோழமன்னர்களின் நீதிநெறி வழுவாத்தன்மையின் அடையாளமாக அமைகின்றன.

    7. இதே நோக்கில் சோழ மன்னர்களின் புகழ்பாடும் இராசராசசோழன் உலா, குலோத்துங்கச் சோழன் உலா, விக்கிரமச் சோழன் உலா ஆகியன மனுநீதிச் சோழன் கதையைக் குறிப்பிடுகின்றன.

    இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை
    முறைகாக்கும் முட்டாச் செயின்
    என்று மன்னனின் ‘செங்கோன்மை’ சிறப்பைக் கூறும் குறளுக்கு (547) உரை எழுதிய பரிமேலழகர் ‘மகனை முறை செய்தான் கண்ணும்’ என்று குறிப்பிடுகிறார்.

    8. திருவாரூர் தியாகராயர் கோவிலின் இரண்டாம் பிரகாரத்தில் வடக்குச் சுவரில் உள்ள விக்கிரமச் சோழன் கல்வெட்டில் (தெ.இ.க. 5; 456) மனுநீதிச் சோழன் கதை இடம்பெற்றுள்ளது. இக்கதையில் மனுநீதிச் சோழனின் அமைச்சனது பெயர், இங்கணாட்டு பாலையூருடையான் உபயகுலாமவன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    9. திருவாரூர் கோயிலின் இரண்டாவது பிராகாரத்தில் தென்புற மதிலில் ஒரு கல்வெட்டு இருக்கிறது. அது, கி.பி. 1123-ம் ஆண்டு விக்கிரம சோழனால் அமைக்கப்பட் டது. இங்கண் நாட்டைச் சேர்ந்த சந்திரசேகரன் ஆதிவிடங்கன் என்பவருக்கு திருவாரூரில் ஒரு மாளிகை கட்டிக் கொடுத்த விவரங்களை அந்தக் கல்வெட்டு சொல்கிறது.மனுநீதிச் சோழனின் அமைச்சராக இருந்த உபயகுலாமவனின் வம்சா வழி வந்தவர்தான் அந்த சந்திரசேகரன் ஆதிவிடங்கன். இங்கண் நாடு என்றால், தற்போதைய எண்கண்

    10. சோழர் காலக் கோவில் சிற்பங்களில் மனுநீதிச் சோழன் கதை நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

    11. செங்கல்பட்டு மாவட்டம் மப்பேடு கிராமத்து சிவன் கோவிலிலும், தஞ்சை மாவட்ட கடம்பவனேசுவரர் கோவிலிலும் மனுநீதிச் சோழன் கதைத் தொடர்பான சிற்பங்கள் உள்ளன

    ReplyDelete