கிருஷ்ணன் குந்திய பாத்து "கர்ணன் உன்னோட மகன்தானே...? ஏன் உண்மைய மறைக்கிற.."னு கேக்கான்.
அதுக்கு குந்தி "அத உன்கிட்ட சொல்றதுக்கென்னப்பா.. நான் பாண்டுவ கல்யாணம் பண்றதுக்கு முன்னாடியே, சூரியபகவான்ட்ட மேட்டர பாத்தேன். அதுல பிறந்தவன்தான் கர்ணன். இப்போ அவன் அவனோட தம்பிக பாண்டவங்களையே வெட்டுவேன், குத்துவேன், கொள்ளுவேன் னு திரியுறான். இப்ப இந்த பிரச்சினைய முடிக்க நீ தாம்ப்பா எனக்கு ஹெல்ப் பண்ணனும்"சொல்றா.
அதுக்கு கிருஷ்ணன் "நீ போயி கர்ணன்ட்ட என்னோட அஞ்சி மகனையும் கொல்லாத னு சத்தியம் வாங்கிட்டு வா. மேட்டர் சால்வ் ஆயிரும்"னு சொல்றான்.
குந்தியும் கர்ணன் தனியா இருக்குற டயமா பாத்து "கர்னா... நான் தான் உங்கொம்மா..."னு பிளாஸ்பேக் புராத்தையும் சொல்றா. அதுக்கு கர்ணன் "சந்தோஷம்மா.. அதுக்கு இப்ப என்ன வேணும்"னு கேக்குறான். அதுக்கு குந்தி "நீயே உன்னோட தம்பிகள கொல்லலாமாடா...? எனக்கு உன்னோட தம்பிகள கொல்லமாட்டேன் பிராமிஸ் பண்ணு"னு கேக்குறா.
அதுக்கு கர்ணன் "அர்ஜுனன தவற மித்த நாளு பேரயும் விட்டுருறேன். ஒன்னு அர்ஜுனன் உயிரோட இருப்பான், இல்ல நான் உயிரோட இருப்பேன். என் நண்பனுக்காக நான் இத செஞ்சியே ஆகணும்"னு சொல்றான்.
"நாலயாவது விட்டுவைக்குறேன் னு சொல்றானே"னு சரி நான் கெளம்புரென் னு சொல்லிட்டு, நடந்ததையெல்லாம் கிருஷ்ணனுக்கு சொல்லி அனுப்புறா.
இந்த மேட்டர தெரிச்சிக்கிட்ட பாஞ்சாலி, கர்ணன்ட்ட ஆசவார்த்த பேசி நம்ம அஞ்சி புருசங்களையும் காப்பத்துவோம் னு கர்ணன பாக்க போறா.
கர்ணன தனியா சந்திச்சி "கர்னா.. நீயும் எங்க அத்தையோட முத்த மகன்தாணு எனக்கு இப்பதான் தெரியும். எனக்கு அந்த அஞ்சி பேர விட உன்மேல தான் ஆசஅதிகம். நீ அன்னைக்கு வில்லு போட்டியில செயிச்சிருந்தா... இப்ப நான் உங்கூட சந்தோசமா இருந்திருப்பேன். எனக்கு இந்த அஞ்சி பேர விட்டா வேற நாதியில்ல. எனக்காக நீ அவங்க கூட சண்ட போடாத"னு சொல்றா..
அதுக்கு கர்ணன் "உன்ன எப்போ பாத்தாலும் எனக்கு ஒரு பீலிங்கும் வந்தது இல்ல. குந்தியம்மாட்ட சொன்னத தான் இப்ப உனக்கும் சொல்றேன். கெளம்பிரு"னு சொல்றான்.
"இவன்ட்ட எப்படி பேசியும் நம்ம வழிக்கு இவன் வரமாட்டிக்கானே னு பொலம்பிக்கிட்டே விராடன் நாட்டுக்கு திரும்பி போறா.
போருக்கு பாண்டங்கலும் கௌரவங்களும் ரெடி ஆயிட்டாங்க. பீஷ்மர் யார்யாரு எங்க இருந்து தாக்கணும் னு துரியோதனன்ட்ட சொல்றான். அந்த டயம் கர்ணன் வந்து "நான் எங்க இருந்து யார அடிக்கணும்"னு பீஷ்மர்ட்ட கேக்கான்.
அதுக்கு பீஷ்மர் "எல்லாம் பிரச்சினையும் உன்னாலதாண்டா வந்துச்சி.. ஒவ்வொரு டயமும் துரியோதனன உசுப்பேத்தி விட்டு இப்ப போர் வரைக்கும் கொண்டு வந்துட்ட"னு கோவமா பேசுறான்.
அதுக்கு கர்ணன் துரியோதனன பாத்து "நண்பா.. உனக்காகதான் இந்த கிழட்டுநாய சும்மா விடுறேன். இந்த நாயி எப்ப பாத்தாலும் பாண்டவங்களுக்கு சப்போர்ட்டாவே பேசிட்டு இருக்கு. இந்த நாயி இருக்குற வர நான் போர்க்கு வரமாட்டேன்"னு சொல்லிட்டு கோவதுல போறான்.
- தொடரும்...
No comments:
Post a Comment