பாண்டவர்கள் துரியோதனனுக்கு பயந்து ஒரு காட்டுக்குள்ள வாழுறாங்க. அந்த காடு இடும்பன், இடும்பி னு ஒரு அரக்கன் அரக்கியோட கட்டுப்பாட்டுல இருக்கு. காட்டுல மனுச வாட அடிக்குதே னு இடும்பன், இடும்பிய கூப்புடுறான். "தங்கச்சி.. இங்க யாரோ மனுச பயபுள்ளைங்க வந்த மாதிரி தெரியுது. அது யாரு பாத்து அவுங்கள தூக்கிட்டு வாம்மா.."னு சொல்றான். இடும்பியும் சரிண்ணே னு சொல்லிட்டு போறா.
ஒரு ஆலமரத்துக்கு அடியில குடுச போட்டு நைட் குந்தியும், அஞ்சி மகன்களும் நல்லா தூங்கிட்டு இருக்காங்க. இந்த பயபுல்லக எதுக்கு நம்ம காட்டுல தூங்குறாங்க னு இடும்பி பக்கத்துல போறா. அங்க பீமன் மட்டும் உறங்காம காவக்காத்திட்டு இருந்தான். இவங்க புடிச்சிட்டு போக வந்த அரக்கி, பீமன பாத்ததும் மூடாகி இவன எப்படியாவது வளைச்சு போட்டு மேட்டர் பாத்துறனும் னு செம பிகரா தன்னோட உருவத்த மாத்திக்கிறா.
பீமன்ட்ட போயி "பீமா உன்ன எனக்கு புடிச்சி போச்சி, நீ என்ன மேரேஜ் பண்ணிக்கிறயா"னு கேக்கா. யாருடா இவ நடுசாமத்துல வந்து லவ்வ சொல்றா னு பீமன் குந்திய உசுப்பி சொல்றான். குந்தி இடும்பிய பாத்து "எம்மா.. இவனுக்கு மூத்தவனுக்கு கல்யாணம் முடிக்காம, இவனுக்கு முடிச்சா நல்லா இருக்காது. அதனால இப்ப கல்யாணமெல்லாம் பண்ணிவக்க முடியாது"னு சொல்லிட்டா.
அதுக்கு இடும்பி "நான் ஆசைப்பட்டத அடையாம விடமாட்டேன். இங்க எங்க அண்ணன் பெரிய அரக்கானா இருக்கான். இந்த காடு அவன் கண்ரோல்ல தான் இருக்கு. அவன்கிட்ட இருந்து உங்கள காபத்துறேன், எனக்கும் பீமனுக்கும் மேரேஜ் பண்ணிவைங்க"னு சொல்றா. அதுக்கு பீமன் "உங்க அண்ணன அடிச்சி போட்டு வந்து உன்கிட்ட பேசுறேன்"னு சொல்லிட்டு பீமன் அரக்கன்கிட்ட சண்ட போட்டு செயிக்கிறான்.
இடும்பி குந்திய பாத்து "நீங்க நினைக்குற மாதிரி நான் அரக்கி இல்ல, நான் ஒரு தேவதை, ஒரு முனிவன் சாபம் விட்டதுனால இங்க வந்து கிடக்கேன். உன்னோட மகன கட்டிக்கிட்டு ஒரு குழந்தை பெத்துக்கிட்டா இந்த சாபம் போயிரும்"னு சொல்றா. அதுக்கு குந்தி "நான் என் மகன கட்டிவைக்கிறேன். ஆனா நீ ஒரு கண்டிசனுக்கு ஒத்துகிறனும்''னு சொல்றா.
அது என்ன கண்டிசன் னு இடும்பி கேக்க "நீ கல்யாணம் முடிச்சதும் என் மகன் கூட பகல்ல தான் மேட்டர் பண்ணனும். எத்தனை தடவவேணாலும் பண்ணிக்கலாம், ஆனா நைட் மட்டும் அவன எங்க கூட விட்டுறனும்"னு குந்து சொல்றா. இந்த டீலிங்கிக்கு இடும்பியும் சரி னு ஒத்துகிறா. காட்டுலயே கல்யாணம் முடியுது. பீமன் அவள பகல் டையம் மேட்டர் பாக்கான். அதுல ஒரு குழந்தை பொறக்கு.
அந்த குந்தைக்கு கடோத்கஜன் னு பேர் வைக்குறாங்க. குழந்தையா இருந்த கடோத்கஜன் "என்னோட பலம் ராவணனுக்கு சமமா இருக்கும். நீங்க எப்போ என்ன நினைச்சி கூப்புட்டாலும் வருவேன்"னு சொல்லிட்டு தன்னோட அம்மாவான இடும்பிய கூப்பிட்டுகிட்டு வானத்துல மறைஞ்சிபோயிருறான்.
இந்த காட்டுக்குள்ளயே இருந்தா நம்ம நாட்ட புடிக்க முடியாது னு பிச்சைக்காரங்க வேசம் போட்டு பக்கத்து நாட்டுக்கு போறாங்க. அங்க ஒரு ஐயர் குடும்பம் இவங்களுக்கு அடைக்கலம் தருது. பஞ்சபாண்டவர்கள் காலையில ஊருக்குள்ள போயி பிச்சை எடுத்துட்டு கொண்டுவந்த சாப்பிட்ட நைட் குந்திட்ட குடுத்து பகிர்ந்து சாப்பிட்டு வந்தாங்க.
தீடீர் னு அந்த ஐயர் வீட்டுல அழுக சத்தம் கேக்குது. "யாருரா அழுகுரா" னு குந்தி பாக்கும் போது ஐயரும் அவன் பொண்டாட்டியும் அழுத்துட்டு கிடக்காங்க. எதுக்கு ஐயரே அழுகுர னு குந்தி கேக்குறா. அதுக்கு அந்த ஐயர் "நீங்க நினைக்குற மாதிரி இது சாதாரண நாடு இல்ல. இங்க கிழக்கு பக்கமா இருக்குற மலையில பராசுரன் னு பெரிய அரக்கன் இருக்கான். அவன் டெய்லி இங்க இருக்குறவங்க கூட சண்ட போட்டு மக்கள் கொன்னு தின்னுருவான். இந்த அரக்கன் ஊருக்குள்ள வராம இருக்குறக்காக, மக்கள் எல்லாம் சேந்து ஒரு பிளான் பண்ணுனாங்க. அரக்கன்ட்ட போயி இனி ஊரு பக்கம் வராத, உனக்கு ஒரு மாட்டு வண்டி சோறும், அத ஓட்டி வர ஒரு ஆளும் அனுப்புறோம். சோத்தையும் ஆளயும் நீ தின்னுக்கலாம் னு சொல்லி அந்த பராசுரன் அரக்கன் கூட அக்கிரிமெண்ட் போட்டாங்க.அரக்கணும் சரினு சொல்லிட்டு டெய்லி ஒரு வண்டி சோத்தயும், ஆளயும் தின்னுட்டு இருக்கான்."
"இன்னைக்கு எங்க வீட்டு முறை. எங்க வீட்டுல இருந்து யாராவது அரக்கனுக்கு வண்டி மாட்டிகட்டி சோத்த எடுத்துட்டு போகணும். நான் போனா என் குடும்பம் கு.........ய தூக்கிரும். எல்லாரும் சோறு தண்ணி இல்லாம சாகவேண்டியதான்."னு சொல்றான்.
அதுக்கு குந்தி "பயப்படாத ஐயரே.. என் மகன் பீமன் இருக்கான். அவன் அடிச்சா ஒன்றா டன் வெயிட்டு, அவன அரக்கன்ட்ட அனுப்புவோம்"னு சொல்றா. அதுக்கு ஐயரு சரினு சொல்றான். பீமனும் ஆஸ்திரேலியா கப்பல்ல டன் கணக்குல இருந்த மாதிரி, டன் கணக்குல சோத்த மாட்டு வண்டியில வச்சி எடுத்திட்டு அரக்கன் இருக்குற மலைக்கு போறான்.
அரக்கன் இடம் வந்ததும் மாட்ட ஒரு கருவமரத்துல கட்டிப்போட்டு, அரக்கணுக்கு எடுத்துதுட்ட வந்த சோற பீமன் திங்க ஆரம்பச்சிட்டான். இத பாத்துட்டு இருந்த அரக்கன், ஓடியே போயி பீமன் நெஞ்சில மிதிக்கான். கோவமான பீமன் அரக்கன கூட சண்ட போடுறான். அரக்கன் பக்கத்துல இருந்த புளியமரத்த புடுங்கி பீமன வெளுவெளு னு வெளுக்கான். பீமனும் அடித்தாங்க முடியாம ஒரு ஆலமர்த்த புடுங்கி அடிக்கான். கடைசில பீமன் அரக்கன் கால பிடிச்சி கிறுகிறுனு சுத்தி எறிஞ்சதுல ரெண்டு மல தாண்டி விழுந்து செத்துட்டான். பீமனும் வந்த வேல முடிஞ்சதின்னு ஐயர் வீட்டுக்கு போறான். பராசுரன் அரக்கனையே கொன்னுட்டானு ஊர் மக்கள் எல்லாம் சேந்து பீமன ஆராத்தி எடுக்குறாங்க
- தொடரும்..
No comments:
Post a Comment