முனிவர் விட்ட சாபத்தால ரெம்ப பலிங்கா இருந்த பாண்டு, அவனோட ரெண்டு பொண்டாட்டிகலயும் கூப்புடுறான். குந்தியும், மாத்ரியும் என்னங்க னு வராங்க. "அருமையான பொண்டாட்டிகளே.. முனிவர் விட்ட சாபத்தால நான் ரெம்ப சங்கடப்பட்டு கெடக்கேன். நீங்க ரெண்டு பேரும் அரண்மனைக்கு போயி இங்க நடந்தத எல்லாம் சொல்லுங்க. நான் இங்கேயே துறவி வாழ்க்கை வாழ போறேன்"னு சொல்றான்.
அதுக்கு பொண்டாட்டிக "உங்கள விட்டு நாங்க சந்தோசம இருக்க முடியாது, நாங்களும் உங்களுக்கு துணையா உங்களோடவே இருக்கோம்."னு சொல்லிட்டாளுக. பாண்டு தன்னோட வேலக்காரங்கள கூப்பிட்டு, இங்க நடந்த விசயத்த அரண்மனைக்கு சொல்ல சொல்லி எல்லாத்தையும் அனுப்பிட்டு. அவனும் அவன் பொண்டாட்டிக மட்டும் காட்டுக்குள்ள துறவு வாழ்க்கை நடத்துராங்க.
காட்டுக்குள்ள பாண்டுக்கு ரெம்ப முனிவர்க பழக்கம் ஆகுது. ஒருசமயம் ஒரு ரிஷிக கூட்டம் அந்த பக்கமா நடந்து போறாங்க. அத பாத்த பாண்டு "நீங்க எல்லாம் எங்க போறீங்க"னு கேக்கான். அதுக்கு அந்த கூட்டத்தில இருந்த ஒரு ரிஷி " நாங்க சொர்க்கத்துக்கு போறோம்"னு சொல்றான். அதுக்கு பாண்டு "நானும் வரட்டுமா?"னு கேக்குறான். அதுக்கு ரிஷி "புள்ளகுட்டி இருக்குரவனுக்கு தான் சொர்க்கம் கிடக்கும். உனக்கு குழந்தை இல்லாததால உனக்கு சொர்க்கம் கிடைக்காது"னு சொல்லிட்டான்.
ரிஷி சொன்னத கேட்ட பாண்டு ரெம்ப பீலிங்க நடந்துவரும் போது ஒரு முனிவன் கூப்புடுறான். முனிவன்ட்ட போன பாண்டு ரிஷி சொன்னத சொல்லி அழுகுறான். "பீல் பண்ணாத பாண்டு உனக்கு பஞ்சபாண்டவர்கள் னு அஞ்சு குழந்தைக பொறக்கும். அதுக்கு அப்பறம் உனக்கு சொர்க்கம் கிடைக்கும்"னு முனிவன் சொல்றான்.
"முனிவன் விட்ட சாபம் இருக்கும் போது எனக்கு எப்படி அஞ்சு குழந்தை பொறக்கும்?"னு பாண்டு கேக்குறான். அதுக்கு முனிவன் "பாண்டு நீ ஒரு மண்டு. உனக்கு இந்துதர்மமான மனுதர்மம் பத்தி தெரியாதா.? இந்துதர்ம படி நடந்துக்கோ, உனக்கு சொர்க்கம் கிடைக்கும்"னு சொல்றான். "ரெம்ப தாங்ஸ் முனிவரே"னு சொல்லிட்டு பாண்டு பொண்டாட்டிககிட்ட போறான்.
அருமையான பொண்டாட்டிகளா இங்க வாங்க. எனக்கும் சொர்க்கம் கிடைக்கும் னு ரெண்டு பேருட்டையும் சொல்றான். எப்படி?னு அவன் பொண்டாட்டிக கேக்க, அதுக்கு பாண்டு சொல்றான் "ரெண்டு பேரும் நான் சொல்றத பண்ணுனா எனக்கு சொர்க்கம் கிடைக்கும்" "என்ன பண்ணனும்"னு பொண்டாட்டிக கேக்க, அதுக்கு பாண்டு "இந்துதர்மப்படி குழந்தை பாக்கியம் இல்லாதவங்க, அவங்க பொண்டாட்டிய ஒரு ஐயர்ட்ட கூட்டிக்குடுத்து, ஐயர் பாத்த மேட்டர் மூலமா பொறக்குற குழந்தைய தன்னோட வாரிசு னு ஏத்துக்கலாம். அவங்களுக்கும் புத்திர பாக்கியம் கிடைச்சீரும்"னு பொண்டாட்டிககிட்ட இந்துதர்மத்த பத்தி கிளாஸ் எடுக்கான்.
பொண்டாட்டிக ரெண்டு பேரும் பாண்டுவ பாத்து "அதுக்கு நாங்க இப்ப என்ன பண்ணனும்?"னு கேக்குறாளுக..
- தொடரும்
No comments:
Post a Comment