அஸ்தினாபுரத்துக்கு திருப்பி வந்த துரியோதனன், தன்ன பாத்து சிரிச்ச பாஞ்சாலி மேலயும், அவ புருசங்க பாண்டவங்க மேலயும் செம காண்டுல இருந்தான். அந்த நேரம் துரியோதனனோட மாமா சகுனி அங்க வாரான். "என்ன மாப்பல.. மூடவுட்டாகி உக்காந்து இருக்கிறீரு.. போனா காரியம் என்னாச்சி",னு கேக்குறான்.
அதுக்கு துரியோதனன் "ரெம்ப அசிங்கப்பட்டேன் மாமா. பாஞ்சாலி சிரிக்கிபுள்ளயயும், அந்த அஞ்சி பேரையும், நான் சும்மா விடமாட்டேன் மாமா"னு அங்க அசிங்கப்பட்டத சகுனிட்ட சொல்றான்.
அதுக்கு சகுனி "டே.. மாப்பில.. அவனுகல பழிவாங்க என்கிட்ட ஒரு ஐடியா இருக்குடா"னு சொல்றான். "அது என்ன ஐடியா மாமா"னு துரியோதனன் கேக்க, சகுனி சொல்றான் "நல்லா.. கேட்டுக்கோ மாப்பள.. தர்மனுக்கு செஸ் விளையாட்டுனா ரெம்ப புடிக்கும். ஆனா அந்த கூமுட்டபயலுக்கு ஒரு எழவும் விளையாட தெரியாது. அதனால அந்த விளையாட்ட நடத்தி, அந்த தர்ம்ம பயல அதுல கலந்துக்க வைப்போம். விளையாட்டுல நாட வச்சி விளையாட சொன்னா, அந்த நாடு நமக்குத்தானே.. எப்படி மாப்பள நம்ம ஐடியா" ங்கிறான்.
அதுக்கு துரியோதனன் "செம மாமா.. ஆனா எனக்கு செக்ஸ் விளையாட தெரியாதே"னு சொல்றான். அதுக்கு சகுனி சிரிச்சிக்கிட்டு "மாப்பள.. அது செக்ஸ் இல்ல. செஸ்.. செஸ்னு சொல்லுங்க"னு சொல்றான். "மாமா.. அது எந்த எழவோ.. அதுல செயிச்சி அவங்க மூஞ்சில கரிய பூசனும்"னு சொல்றான் துரியோதனன். "சரி மாப்பள, நீ விளையாடு உனக்கு பதிலா நான் காய் நகத்துறேன்"னு சொல்றான் சகுனி.
அதுக்கு துரியோதனன் "மாமா.. இந்த விளையாட்டுக்கு, பீஷ்மர் கிழவனும், எங்க அப்பன் திருதராஷ்டிரனும் பெர்மிஷன் கொடுத்தாதானே போட்டி நடத்த முடியும்"னு சொல்றான். அதுக்கு சகுனி "டே.. மாப்பள, அந்த கவலைய என்கிட்ட விடு. நான் உங்கப்பன்ட்ட பெர்மிஷன் வாங்குறேன்"னு சொல்லிட்டு, பீஷ்மர்ட்டயும், திருதராஷ்டிரன்ட்டயும் பெர்மிஷன் வாங்குறான் சகுனி.
துரியோதனன் விருதன கூப்புட்டு "சித்தப்பா.. பீஷ்மரும் , எங்க அப்பனும் இங்க ஒரு செஸ் போட்டி வைக்கலானு பிளான் போட்டுருக்காங்க, அதனால நீங்க போயி போட்டில கலந்துக்க பாண்டவங்கல கூட்டிட்டு வாங்க"னு சொல்றான். அதுக்கு விருதன் "டே.. துரியோதனா.. அண்ணன் தம்பிககுள்ள சண்ட வேண்டாம், நீங்கெல்லாம் ஒத்துமையா இருக்கணும்டா. அதனால இந்த செஸ் போட்டி, கிஸ் போட்டி எல்லாம் நாம நடத்த வேண்டாம்"னு சொல்றான். அதுக்கு கர்ணன் "யோவ் பெருசு... இந்த ஈரவெங்காயமெல்லாம் எங்களுக்கும் தெரியும், செஸ் போட்டி இந்த அரண்மனைலயே நடக்கணும். இது பீஷ்மர் ஆர்டர். நீரு போயி.. பாண்டவ பயகல மட்டும் கூட்டிக்கிட்டு வாரும்"னு விருதன பாத்து சொல்றான்.
விருதன் காண்டபிரஸ்த நாட்டுக்கு போயி பாண்டவங்ககிட்ட மேட்டர சொல்றான். தர்மன தவிர்த்து "போடடிக்கெல்லாம் நாங்க வரமுடியாது"னு நாளுபேரும் சொல்லிட்டாங்க. தர்மன் மட்டும் ஆர்வக்கோளாறுல "சித்தப்பா.. நாங்க போட்டிக்கு வாறோம். செஸ் நான் விளையாடுவேன் னு அவன்கிட்ட சொல்லுங்க. நாளைக்கு அஸ்தினாபுரம் வாறோம்"னு விருதன்ட்ட சொல்லி அனுப்புறான்.
அஸ்தினாபுர அரண்மனைல செஸ் போட்டி அரம்பிச்சாச்சி.. கௌரவர்கள் சைடு துரியோதனன் விளையாடுறான் சகுனி காய் நகட்டுறான். பாண்டவங்க சைடு தர்மன் விளையாடுறான்.
துரியோதனன் தர்மன பாத்து சொல்றான் "டே தர்மா போட்டில பெட் க்கு என்ன வச்சி ஆடலாம்"னு கேக்கான். அதுக்கு தர்மன் "பஸ்ட் நான் என் சிப்பாய் வச்சி ஆடுறேன்டா"னு சொல்றான். அதுக்கு துரியோதனன் "டே.. தர்மா சிப்பாய நீ தோத்துட்டா உன் நாட்டு சிப்பாய் பூராம் எனக்கு அடிமைடா"னு சொல்றான். "ரெம்ப வாய் பேசாதடா.. பஸ்ட் செயிக்கிற வழிய பாரு"னு தர்மன் சொல்றான்.
சகுனி அருமையா காயநகட்டுறான். தர்மன் சிப்பாய பூரம் தோத்துட்டான். எல்லோரும் சிரிக்குறாங்க... கோவமான தர்மன் "டே.. எனக்கு சிப்பாய் தானே போச்சி.. நான் இப்ப யானை படையயும், குதுரை படையயும் பெட் கட்டுறேன். நீ விளையாட ரெடியாடா.."னு துரியோதனன பாத்து கூப்புடுறான்.
துரியோதனன் சிரிச்சிட்டே விளையாட சகுனி காய் நகத்துறான். இந்த டயமும் தர்மன் தோத்துருறான்.
தர்மனுக்கு ரெம்ப சங்கடமாயிருது. "சிப்பாய்யும், யானை, குதிரை படை இல்லாம எப்பிடிடா ஒரு நாட்ட மெய்ன்டேன் பண்றது"னு யோசிச்ச தர்மன் அவனோட காண்டபிரஸ்த நாட்ட வச்சி ஆடுறான். மறுபடியும் தோத்துட்டான். கர்ணன் சிரிச்சிகிட்டே "என்னடா.. தர்மா.. உங்க காண்டம் இப்ப கண்டமாயிருச்சா.."னு கேக்குறான்
கடுப்பாயி போன தர்மனோட நாளு தம்பிகளும், "உனக்குத்தான் விளையாட்டு மயிரு தெரியலையே... அப்றம் என்ன மயிருக்கு மறுபடி மறுபடி பெட்டு கட்டி தோத்து போற... சரி ஆனது ஆயிப்போச்சி, அவனுக நம்ம கோமனத்த உருவரதுகுள்ளயும் நாம நாட்டு பாத்து போயிரலாம்"னு தர்மன கூப்பிடுறாங்க.
அதுக்கு தரும்மன் "ரெம்ப நம்மள அவமான படுத்திபுட்டாங்கடா தம்பிகளா... எனக்கு ஒரு சான்ஸ் குடுங்கடா. நான் விட்டதயெல்லாம் புடிக்கிறேன்"னு சொல்லிட்டு துரியோதனன கோவமா பாக்குறான் "டே துரியோதனா.. எனக்கு சிங்ககுட்டிக மாதிரி என்னோட தம்பிக இருக்காங்கடா.. இப்ப நான் அவங்கல பெட்டா வச்சி ஆடுறேன். னு சொல்லிட்டு விளையாட தொடங்கிட்டான்.
இந்த டயமும் படுதோல்வி. கர்ணன் தர்மன பாத்து சொல்றான் "டே.. தர்மா உன்னோட நாளு சிங்ககுட்டியும் இனி என் நண்பன் துரியோதனனுக்கு அடிமை"னு சொல்லி சிரிக்கிறான்.
துரியோதனன் தர்மன பாத்து "டே.. தர்மா உனக்கு வச்சி ஆட வேற பொருள் இருக்கா"னு கேக்குறான். அதுக்கு தர்மன் "டே.. நான் என்னயவே பெட்ட வச்சி ஆடி தம்பிய மீக்குறேன்டா.."னு சொல்றான். அதுக்கு பீமன் "நீ கிழிச்சடா.. இப்படியே டயலாக் பேசி பேசி எல்லாத்தையும் தோத்துட்டயடா"னு கோவமா பேசுறான்.
இந்த டயம் தர்மன் அவனயே தோத்துட்டான்.. சகுனி சிரிச்சிட்டே "பாண்டவங்களா நீங்கெல்லாம் எங்க அடிமைங்கடா.. நாளைல இருந்து எங்க மாட்டு தொழுவத்துல வந்து சாணி அள்ளுங்கடா"னு சொல்றான்.
துரியோதனன் தர்மன பாத்து "டே.. தர்மா உனக்கு நான் லாஸ்ட்டா ஒரு சான்ஸ் தாறேன். உன்கிட்ட இருக்குற ஏதாவது பொருள வச்சி ஆடு, நீ செயிட்டனா.. நீ இப்ப வரைக்கும் தோத்த எல்லாத்தையும் உனக்கு திருப்பி கொடுத்துருறேன்"னு சொல்றான். அதுக்கு தர்மன் "என்கிட்ட என்னடா பொருள் இருக்கு..? எல்லாத்தையும்தான் புடிக்கிட்டீங்களேடா"னு சொல்றான். அதுக்கு கர்ணன் "இவன் பொய் சொல்றான் துரியோதனா.. இவனுக்கு நாளு சிங்ககுட்டி தம்பிக இருக்குற மாதிரி, ஒரு லட்டுகுட்டி பொண்டாடியும் இருக்கு"னு சொல்றான். "சரி அத வச்சி ஆடி எல்லாத்தையும் மீட்டுக்கோ" னு தர்மன்ட்ட சொல்றான்.
- தொடரும்..
No comments:
Post a Comment