பீமன் அரக்கன கொன்ன விசயம் ஊருபூறா பரவிருச்சினா, துரியோதனன் நம்மல கொல்ல இங்க வந்துருவான். அதனால நாம வேற நாட்டுக்கு போயி தலைமறைவா இருப்போம் னு பாண்டவர்கள் எல்லாம் பக்கத்து நாடான துருபதநாட்டுக்கு போறாங்க. அங்க மண்பானை செய்யுறவர் வீட்டுல தங்குறாங்க.
அந்தசமயம் அந்த நாட்டோட மன்னன் துருபதன், சுயவர போட்டி நடத்துறான். அத கேள்விப்பட்ட ஒரு ஐயரு பாண்டவர்கள்ட்ட சொல்றான் "அஞ்சு பேரும் நன்னா கேளுங்க ஓய்.. இந்த நாட்டு துருபதமகாராஜன் அவன் பொண்ணுக்கு சுயவரம் நடத்துறான். பொண்ணு பாக்க, அதிரூபசொப்பன சுந்தரி மாதிரி அழகா இருப்பாள். அவாள் பேரு திரௌபதி. நீங்கோ அரசன் வைக்கிற போட்டில செயிச்சீங்கோன்னா.. அந்த பொண்ணு உங்களுக்குத்தான். போட்டில யாருவேனாலும் கலந்துக்கலாம், நீங்க போகும் போது உங்கள யாருக்கும் தெரியாம இருக்க, பிராமினாள் வேசம் போட்டு போங்கோ"னு சொல்றான்.
ஐயர் சொல்றத கேட்டு அஞ்சி பேரும் சுயவர போட்டில காலத்துக்க கெளம்பிட்டானுக. போட்டி நடக்குற கிரோண்டுல திரௌபதி சகோதரன் திருஷ்டதூமன் போட்டிக்கான விதிமுறைகள வாசிக்கிறேன். "போட்டிக்கு வந்துருக்குறவுங்க எல்லோரும் நல்லா கேட்டுக்கோங்கப்பா... போட்டி மேடைக்கு நடூல ஒரு மீனு தலக்குப்பர தொங்கிக்கிட்டு சுத்திக்கிட்டுக் கெடக்கும். அதுக்கு கீழ ரவுண்டா சக்கரம் சுத்திட்டி இருக்கும். இந்த சுத்துர சக்கரத்துக்கு உள்ளக்கூடி அந்த மீன குறி பாத்து வில்ல வச்சி அடிக்கணும். அப்படி குறிபாத்து அடிக்கிற ஆளுக்குத்தான் என் தங்கச்சி திரௌபதிய கட்டிக் கொடுப்போம்."னு சொல்றான்.
விதிமுறைய கேட்ட அர்ஜுனன் போட்டிக்கு ரெடி ஆகுறான். எல்லா நாட்டு மன்னர்களும் போட்டிக்கு வந்தாச்சு. பஸ்ட் துரியோதனன் போறான். அவன் வச்சிருந்த வில்லுல கயிறு மாட்ட முடியாம திரும்பி வந்துட்டான். அப்பறம் கர்ணன் போறான். வில்லுல கயிற மாட்டுறான். அத பாத்த திரௌபதிக்கு கர்ணன் மேல ஒரு அட்றாக்சன் ஆகுது. கர்ணன் சுத்திட்டு இருக்குற சக்கரத்துக்குள்ளகூடி மீன குறிவச்சி அடிக்கான். ஆனா அம்பு சக்கரத்துல பட்டு மிஸ் ஆயிருது. அப்பறம் ரெம்ப நாட்டு மன்னங்க வந்து ட்ரை பண்ணியும் முடியல.
"இத குறிபாத்து அடிக்குற ஆளுக யாரும் இல்லயாப்பா"னு திஷ்டதூமன் அனோன்ஸ் பன்றான். அந்த நேரம் அர்ஜுனன் ஐயர் வேசத்துல வரான். "மணியாடீட்டு கெடக்குறவன் எல்லாம் குச்சிய தூக்கிட்டு குறிப்பாக்க வந்துட்டானுக"னு அங்க இருக்குற மன்னர்க எல்லா கேலி பேசுறாங்க.
அர்ஜுனன் வில்லுல கயிற மாட்டி மீன கண்ண மூடிக்கிட்டு குருட்டடியா அடிக்கான். அம்பு பட்டு மீனு கீழ விழுந்துருது. எல்லோரும் கைதட்டி வாழ்த்துறாங்க. அங்க போட்டிக்கு கலந்துக்க வந்த மன்னர்கள் எல்லாம் கோவப்பட்டாங்க. "என்னய்யா போட்டி நடத்துர.. ஒரு ஐயர் பய அடிச்சி ஜெயிக்குறான். அப்ப என்ன மயிருக்கு எங்கள போட்டில கலந்துக்க கூப்புடுறீங்க."னு எல்லா மன்னரும் பொங்குறாங்க.
"எங்கடா இருக்கான் அந்த ஐயர் னு ஒரு கடம்த்த தூக்கிட்டிட்டு துரியோதனன், ஐயர் வேசத்துல இருந்த அர்ஜுனன அடிக்க அடிக்க ஓடுறான். அர்ஜுனனும் "சண்டபோட நானும் ரெடி வாங்கடா"னு வில்லயும் அம்பயும் தூங்குறான். இவனுக சண்டைய எப்படிடா தீத்துவிடுறது னு எல்லோரும் யோசிசிட்டு இருக்கும் போது.. டொய்னு ப்ளூ கலர்ல கிருஷ்னன் னு ஒருத்தன் வாரான்.
"போட்டிக்கு வந்த இடத்துல யாரும் சண்ட போடக்கூடாது. இந்த போட்டில யாரு வேணாலும் கலந்துக்கலானு விதிமுறை சொல்லப்பட்டுருக்கு. இப்ப ஒரு ஐயர் செயிச்சி இருக்கான். அதனால திரௌபதிய அந்த ஐயர்க்கு கல்யாணம் பண்ணி குடுங்குறது தான் முறை. இங்க யாரும் சண்ட போடாம கலஞ்சி போங்க"னு கிருஷ்ணன் சொல்றான். "இது எங்களுக்கு தெரியாதா...? இந்த ஐயர்க்கு வக்காலத்து வாங்கி பேசவந்துட்டான் ப்ளூ கலர்ல"னு முனுமுனுத்துட்டே எல்லா கலஞ்சி போறாங்க.
அர்ஜுனன் திரௌபதிய கல்யாணம் சென்ச்சி கூட்டு வீட்டுக்கு போறான். "அம்மா இன்னைக்கு போட்டில செயிச்சி என்ன கொண்டுவந்திருக்கேன் னு பாருங்க"னு சொல்றான். அதுக்கு குந்தி "எது கொண்டுவந்தா என்னடா... அஞ்சி பேரு பகிகிந்துகோங்கடா"னு எப்பவும் சொல்ற மாதிரி சொல்லிட்டா. வெளில வந்து பாக்குறா திரௌபதி பொண்ணு நிக்கி. "அய்யோ.. வாய் தவறி சொல்லிட்டமே"னு "டே.. அர்ஜூனா அம்மா வாய் தவறி அஞ்சி பேரும் பகிர்ந்துகோங்க னு சொல்லிட்டேன். அம்மா வாக்கு பொய்யாக வேண்டாம். இவள அஞ்சி பேருமே வச்சிக்கோங்க''னு சொல்லிட்டா. சரி னு அஞ்சி பேரும் சொல்றானுக. அப்போ இவங்கள வாழ்த்த டொய் னு வியாசமுனிவன் அங்க வாரான். அவங்க ஆறு பேரு மேலயும் பூவ போட்டு "நீங்க அஞ்சி பேரும் திரௌபதிய கட்டிக்கிட்டு புள்ளிக்கி 16ரா 90 புள்ளைகள பெத்து, பெரு வாழ்வு வாழுங்க"னு வாழ்த்துறான்.
அதுக்கு யுதிஷ்டிரன் "அஞ்சி பேரு ஒரு பொண்ண கெட்டுறது தப்பில்லயா முனிவரே..?"னு கேக்கான். அதுக்கு வியாசமுனிவன் "அதுல ஒன்னும் தப்பில்ல னு இந்துதர்மம் சொல்லுதுடா. இப்படித்தான் ஒரு ரிஷி மக வார்கஷீ னு ஒரு பொண்ணு பத்து முனிவன்களுக்கு பொண்டாட்டியா இருந்தா.. அத விட நீங்க கட்டுன இந்த திரௌபதி பொண்ணு, போன ஜெம்மத்துல நல்லா மேட்டர் பண்ணாம ஏங்கி போயி, சிவன்ட்ட அஞ்சி தடவ வேண்டிருக்கா. சிவனும் அப்படியே ஆகட்டும் னு வரம் குடுத்துட்டான். இவ அஞ்சு தடவ வேண்டுன பெனிப்பிட்டு தான் இப்ப உங்க அஞ்சி பேர கல்யாணம் முடிச்சிருக்கா."னு சொல்றான். நீங்க சொன்னா சரியாதான் இருக்கும் முனிவரே னு அர்ஜுனன் சொல்றான்.
அதுக்கு வியாசமுனிவன் "டே.. அஞ்சி பேரும் ஒரு பொண்ண கல்யாணம் பண்னுனதுசரி, ஒருத்தன் மேட்டர் பாத்துட்டு இருக்கும் போது இன்னொருத்தன் என்ன பண்ணுராங்க னு எட்டி பாக்குற வேலைய வச்சிக்காதீங்க. அது இந்துதர்மத்துக்கு எதிரானது. நான் சொல்றத அப்படியே பாலோ பண்ணுங்கடா. அதவிட இந்த திரௌபதி பொண்ண இனி எல்லோரும் பாஞ்சாலி னு பாசத்தோடா கூப்புடுவாங்க"னு சொல்லிட்டு மறைஞ்சுருறான். அப்ப வானந்துல இருந்து மணமக்களை வாழ்த்தி தேவர்களும், ரிஷிங்களும் பூமாரி பொலியுறாங்க.
இவனுகளும், ஒருத்தன் மேட்டர் பாக்கும் போது மீதி நாளு பெரும் வெளிய போயிருரானுக..
துருபதன் மன்னன் தன்னோட மகன் திருஷ்டதூமன கூப்பிட்டு, "மகனே.. உன் தங்கச்சிய யாரு கட்டிட்டு போனாங்க, அவங்க இப்ப எங்க வாழுறாங்க னு பாத்துட்டு வா" னு சொல்றான். திருஷ்டதூமனும் தங்கச்சிய பாக்க போறான். அன்னிக்கு ஐயர் வேசத்துல கல்யாணம் பண்ணுனது அர்ஜுனன்தான்னு தெரிஞ்சிக்கிட்டுவந்து அவன் அப்பன்ட்ட சொல்றான்.
ரெம்ப சந்தோசம்டா மகனே.. நாம பஞ்சபாண்டவங்கல நம்ம கூட சேத்துக்கிட்டு துரோணர பழிவாங்க இதுதான் சரியான டயம் னு பிளான போடுறான்.
- தொடரும்
No comments:
Post a Comment