இந்து மதம் பெண்களை மிருகங்களை விடக் கேவலமாக சித்தரிதே வருகிறது. அது புராணங்களிலும் சரி, நடைமுறை வாழ்விலும் சரி இன்று வரை நீடித்துக்கொண்டே தான் உள்ளது.
இந்து திருமண முறையில் பெண்கள் எப்படி சித்தரிக்கப்படுகின்றார்கள் என்று சான்றுகளோடு பார்ப்போம்.
திருமணங்களில் சொல்லப்படும் மந்திரங்கள் சமஸ்கிருத்தத்திலேயே உள்ளது. அந்த மொழியை பார்ப்பனர்களை தவிர வேறு யாரும் கற்க கூடாது என்பது இந்து விதி.
தனக்குத் தெரியாத ஒரு மொழியில் ஒருவர் எதையாவது நம்மிடம் கூறினால், இவர் என்ன சொல்கிறார் என்று புரிந்துகொண்டே பதில் கூறுவது தான் உலக வழக்கம். ஒருவர் நமக்கு தெரியாத மொழியில் ஒரு வேண்டுகோள் விடுத்தாலும், இவர் என்ன செய்ய சொல்கிறார் என்று அர்த்தத்தை புரிந்து கொண்டுதான் செய்வார்கள.
ஆனால் நாமோ பிறப்பில் இருந்து இறப்பு வரை இந்துமதத்தின் பெயரில் எமக்கு தெரியாத ஒரு மொழியிலேயே அனைத்து சடங்குகளையும் செய்து வருகிறோம்.
உண்மையில் இந்தச் சடங்குகளும், அதில் சொல்லப்படும் மந்திரங்களும் நம்மை இழிவுபடுத்துவதை நாம் உணர்ந்து கொள்வதும் இல்லை. உணர்ந்து கொள்ள விரும்புவதும் இல்லை.
திருமணத்தின் போது சொல்லப்படும் மந்திரங்களை பார்ப்போம்.
மந்திரம்: ஸோம ப்ரதமோ விவித கந்தர்வ விவிவத உத்தர!
த்ருதியோ அக்னிஷ்டே பதி துரியஸ்தே மநுஷ்ஐயா!!
ஸோமோ ததத் கந்தர்வாய கந்தர்வோ ததத் அக்னயே!
ரயிம்ச புக்ராம் சாசாத் அக்னிர் மஹ்யம் அதோ இமாம்
பொருள்: அதாவது மணப்பெண்ணை சோமன் முதலில் மனைவியாக அடைந்தான். பிறகு கந்தர்வன் அடைந்தான்.
இவளுடைய மூன்றாவது கணவன் அக்னி, நான்காவது கணவன் மனித சாதியில் பிறந்தவன். சோமன் உன்னை (மணப்பெண்ணை) கந்தர்வனுக்குக் கொடுத்தான்.
கந்தர்வன் அக்னிக்குக் கொடுத்தான். அக்னிதேவன் இவளுக்குச் செல்வத்தையும் குழந்தையையும் கொடுத்த பிறகு எனக்குத் தந்தான்…. என்பதே புரோகிதர் கூற அதை திருப்பி மணமகன் கூறும் மந்திரத்தின் பொருள்.
இம்மந்திரத்தின் வெளிப்படையான அர்த்தம் என்ன? இந்து மதப்படி திருமணம் செய்து கொள்கின்ற ஒருவரின் மனைவி பலரால் அனுபவிக்கப்பட்ட ஒரு பரத்தை (விபச்சாரி) என்றும், இந்த பெண் (மணப்பெண்) வேறொருவனிடம் குழந்தை பெற்றுக் கொண்டே அவனுக்கு மனைவியாகிறாள்
என்றும் இந்து மதம் கூறுகின்றது.
ஆதாரம்: காஞ்சி சங்கராச்சாரியார் எழுதிய தெய்வத்தின் குரல் – பாகம் 2 – பக்கம் 874
எனவே இந்துமதமுறைப்படி திருமணம் செய்துகொள்வது, உங்கள் மனைவியை நீங்களே விபச்சாரி என்று ஒத்துக்கொள்கிறீர்கள்..
No comments:
Post a Comment