Tuesday, July 31, 2018

பகுதி 16 - வீரவிளையாட்டு போட்டிகள் - பாஞ்சாலி பிறப்பு - இதுதான்...மகாபாரத...கதை..

துரோணர் பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் எல்லா வித்தையும் கத்துக்குடுக்கான். இவங்களோட சேர்ந்து கரன்னனும் துரோணர் மகன் அஸ்வத்தாமனும் வித்தைய கத்துக்குறாங்க. ஏகலவன் னு ஒருத்தன் அந்த பக்கமா டெய்லி ஆடு மெச்சிட்டு  இருக்கான். துரோணர் அர்ஜுனனக்கு கத்துத்தந்தத பாத்து ஏகலெவனும் யாருக்கும் தெரியாம கத்துக்குறான்.

ஏகலெவன பாத்த துரோணர் அவன கூப்புட்டு "ஆடு மேக்குறவன் எல்லாம் வித்த கத்துக்க கூடாது, இந்த வில் வித்தை சத்திரியரான அர்ஜுனன்க்கு மட்டும் தான் தெரியனும்"னு அவனோட கட்ட விரல காணிக்கையா கேக்கான். அவனும் வெட்டி கொடுத்துருறான். இனிமே நான் மட்டும்தான் வில்லுல பெரிய வித்துவான் னு அர்ஜுனன் பெருமபேசிட்டு திரியுறான்.

பசங்களும் பெரிசா ஆயிட்டங்க. துரோணர் "எல்லா பயலுகளும் வாங்கடா" னு கூப்புட்டு, நான் இவ்வளவு நாளா உங்களுக்கு வித்த கத்துக்குடுத்ததுக்கு நீங்க எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனும். னு சொல்றான். எல்லா பசங்களும் "என்ன ஹெல்ப் வேணுமுனாலும் பண்றோம்"னு சொல்றாங்க.

அதுக்கு துரோணர், அவன் பிரண்டு துருபதன் அவன ஏமாத்துன கதைய சொல்லி, அவன் நாட்டு மேல போர் செஞ்சி, அவன் அலேக்கா இங்க தூக்கிட்டு வர சொல்றான். துரியோதனனும் பீமனும் போயி துரோணர் பிரண்டுகூட சண்ட போட்டு செயிச்சி அவன் கொண்டு வந்து துரோணர் முன்னாடி போடுறாங்க. துரோணர் அவன் நாட்ட பாதிய புடிங்கீட்டு அனுப்பிருறான்.

அந்தசமயத்துல கிருபச்சாரியார், வித்த கத்துக்கிட்ட எல்லோருக்கும் ஒரு போட்டி நடத்துறான். பெரிய கிரோண்டுல நாட்டு மக்கள் கூடியிருக்க, போட்டி நடக்குது. அர்ஜுனன் வில்ல வச்சி பலானபல வித்தை செஞ்சி காட்டுறான். அடுத்தது கர்ணன் வரான் "டே.. அர்ஜூனா உனக்கு மட்டும்தான் வித்த தெரியுமா..? நீ செஞ்சத்துக்கு மேல நான் வித்த செஞ்சி காட்டுவேன். உனக்கு தைரியம் இருந்தா ஒண்டிக்கு ஒண்டி வாரியாடா"னு கூப்புடுறான்.

இந்த பிரச்சினைய பாத்த கிருபச்சாரியார், "கர்ணா.. நீ அரசகுல பையன்ட்ட மோதுரதா இருந்தா, நீயும் ஒரு அரசரா இருக்கணும். நீ யாரு...? சாதாரண தேரோட்டி மகன். உன்னோட பிறப்பு தாழ்ந்து இருக்குறதால, நீ போட்டி மேடய விட்டு வெளிய போ.."னு கர்ணன ரெம்ப அசிங்க படித்திருறான்.

என்னோட பிரண்ட எவன்டா அசிங்கப்படுத்துறது னு கோவமாயிட்ட துரியோதனன். "டே.. கிருபச்சாரி.. கர்ணன் தேரோட்டி மகனா இருக்குறது உனக்கு கேவலமா தெரியுதா..? அப்போ உன்னோட பொறப்பு என்ன..? உங்கப்பன் பாயில ஒழுக விட்டதில பொறந்த நீ கர்ணன பத்தி பேசக்கூடாது. எங்க மாஸ்டர் துரோணர் கூட குடத்துல இருந்துதான் பொராந்திருக்கான். இங்க பாண்டவங்க பொறந்த கதைய சொன்னா ஒவ்வொருத்தனும் நாறிருவான்"னு கர்ணனுக்கு சப்போட் பண்ணி பேசுறேன்.

அதுக்கு துரோணர் ''டே.. துரியோதனா.. கொஞ்சம் அமைதியா உக்காருடா. முனிவர் என்ன தப்பா சொல்லிட்டாரு.. ஒரு அரசன் இன்னொரு அரசன் கூட மோதுறது தாண்டா முறை"னு சொல்றான்.

அதுக்கு துரியோதனன் "நீங்க சொல்றது சரி மாஸ்டரே.  டே.. பஞ்சாயத்து பண்ற பெரியமனுசங்களா..நல்லா கேட்டுக்கோங்கடா..கர்ணன் என்னோட பிரண்டு. நான் அவனுக்கு என் நாட்டுல சில ஊர்கள குடுத்து அரசனாக்குறேன்."னு சொல்லிட்டு அங்கேயே கர்ணனுக்கு முடிசூட்டுறான்.

அங்க என்ன பிரச்சனை னு பாக்க வந்த குந்தி கர்ணன் கவசகுண்டலத்தோடா இருக்குறத பாத்து தன்னோட மகன் தான் னு அடையாளம் கண்டுபுடிச்சிருறா. அப்பிடியே கமுக்கமா யாருட்டயும் சொல்லாம இருந்துருறா. ஒருவழியா பிரச்சினை முடிஞ்சி எல்லாம் கலஞ்சி போயிருறாங்க. கரன்னனும் துரியோதனனுக்கு "நன்றி நண்பா.. என் உயிர் இருக்குற வரைக்கும் உங்கூடயே இருப்பேன்"னு சொல்லிட்டு கெளம்புறாங்க.

கொஞ்சநாளுக்கு அப்புறம் திருதராஷ்டிரன் யுதிஷ்டிரனுக்கு அஸ்தினாபுர இலவரசனா பட்டம் சூட்டுறான். துரியோதனனுக்கு கோவம் வந்து கண்ணு சேவைக்கு, விரல்ல இருந்து ஒரு நரம்பு மட்டும் கைவழியா ஏறி அவன் போடதில பொடச்சிட்டு நிக்கி.

துரியோதனன் இந்த பாண்டவ பயலுகள எப்படியாவது ஒழிச்சிக்கட்டி நாட்டவிட்டு தொரத்தனும் னு பிளான் போடுறான். பாண்டவர்கள அவுட்டவுஸ்ல தங்க வச்சி, அதுக்கு தீ வச்சி அவனுக சொலிய முடிக்க பாக்கான். ஆனா பாண்டவங்க சொரங்க பாத தோண்டி நேக்கா எஸ்கேப் ஆயி துரியோதனனுக்கு பயந்து காட்டுக்குள்ள தலைமறைவா வாழுறாங்க.

ஆனா ஊருக்குள்ள பாண்டவங்க தீயில கருகி செத்துத்துட்டாங்க னு யாரோ ஒரு பொறழிய கேளப்பி விட்டுடானுக.

இந்த சமயத்தில துரோணர்முனிவன் நம்மல அடிச்சி நாட்ட புடிக்கிட்டானு துருபதன் மன்னன் ஒருபக்கம் நிறையா ஐயர கூப்பிட்டு துரோணர கொல்ல யாகம் நடத்துறான். ஐயர் ஓமாகுண்டத்த சுத்தி உக்காந்து தீய போட்டு மந்திரம் ஓதுராங்க. திடீர்னு நெருப்புக்குள்ள இருந்து ஒரு பொண்ணு வறா. பாக்குறதுக்கு ரெம்ப சிவப்பா, அழகா இருக்கா. அந்தபக்கமா இருந்து ஒரு அசரீரி கேக்குது "இவள்தான் பாஞ்சாலி, இனி எல்லாம் கெட்டகாலம் தான்"னு.

அதுக்கு அப்புறம் ஒரு ஒன் ஹவரு கழிச்சி அதே நெருப்புக்குள்ள இருந்து ஒரு பையன் வரான். மறுபடியும் அந்தபக்கமா இருந்து ஒரு அசரீரி கேக்குது "இவன்தான் திருஷ்டதூமன், இவனாலதான் துரோணர் சாவான்"னு.

அதை கேட்டு துருபதன் ரெம்ப சந்தோச படுறான். பொண்ணுக்கு திரௌபதி னு பேரு வச்சி வளக்கான்.

தொடரும்..

குறிப்பு:-
        (நண்பர்களே... தொடர் போரடிக்குற மாதிரி இருந்தாலும் சொல்லிருங்க)

No comments:

Post a Comment