பாண்டு அவனோட ரெண்டு பொண்டாட்டிக, அஞ்சி புள்ளகுட்டிகளோட காட்டுல துறவு வாழ்க்கை வாழுறான். தன்னோட அஞ்சி பசங்களையும் சுக்கிராச்சாரியார்கிட்ட டியூசன் சேத்து விடுறான்.
சுக்கிராச்சாரியார் பாண்டவர்களுக்கு பல கலைகளை பத்தி கிளாஸ் எடுக்கான். கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் சொல்லித்தாறான். இந்த கிளாஸ நல்லா கவனிச்ச அஞ்சிபேருல, யுதிஷ்டிரன் நல்லா ஈட்டி எறிய கத்துக்கிறான். பீமன் கதத்த வச்சி பிராக்டீஸ் பன்றான். அர்ஜுனன் வில்வித்தை கத்துக்கிறான். நகுலனும், சகாதேவனும் நல்லா வாள சுழட்டிட்டு கெடக்காணுக.
காட்டுக்குள்ள இப்ப வசந்தகால சீசன். பறவைக எல்லாம் குயியாம் முய்யா னு கத்தி பாட்டு பாடுது, மயிலு அதுக்கு டான்ஸ போடுது, காடு புல்லாம் கலர்க்கலரா பூக்கள் பூக்குது, பூவோட வாசனை எல்லா சைடும் பரவுது...
இந்த ரம்மியமான சுச்சுவேசன்ல பாண்டுக்கு ரெம்ப மூடாயிருது. பாண்டு கூடாரத்துக்கு போறான். அந்த நேரம் குந்தி அஞ்சி மகன்கள கூப்பிட்டு ஆத்தங்கரைக்கு துணித்துவைக்க போயிருறா. மாத்ரி மட்டும் தனியா இருக்கா. புல் மூடோட வந்த பாண்டு, மாத்ரிய கட்டிப்பிடிக்குறான்.
அதுக்கு மாத்ரி "முனிவர் சொன்ன சாபம் மறந்துபோச்சா மூதேவி"னு பாண்டுவ திட்டி, விலகி நிக்கிறா. மூட கட்டுப்படுத்த முடியாம பாண்டு "முனிவர் சாபமெல்லாம் என்ன ஒன்னும் பண்ணாதுடி"னு மாத்ரிய கட்டிப்புடிச்சி கட்டுலுல தூக்கி போடுறான்.
ரெண்டு பேரும் நல்லா பண்ணிட்டு இருக்கும்போது, பாண்டு பாதிலேயே நெஞ்ச புடுச்சி கீழ விழுந்து செத்துருறான். மாத்ரி பாத்துட்டு "என்னங்க................"னு ஒப்பாரி வைச்சி அழுகுறா. "என்னடா நம்ம வீட்டுல அழுக சத்தம் கேக்கு"னு வீட்டுக்கு வந்த குந்தி, பாண்டு செத்தத பாத்து மயங்கி விழுந்துட்டா.
பாண்டு செத்தத பாக்க வானத்துல இருந்து தேவர்க, முனிவங்க எல்லாம் வாரங்க. மயங்கி கிடந்த குந்தி முகத்துல ஒரு முனிவன் தண்ணி தெளிச்சி எழுப்பி விடுறான். எழுந்த குந்தி "இந்த "மாதிரி ஆகிப்போச்சே"னு முனிவர பாத்து அழுகுறா. முனிவர்களும் "ஆனது ஆகிபோச்சி.. ஆகவேண்டிய காரியத்த பார்ப்போம்"னு சொல்றாங்க.
அதுல ஒரு முனிவன் "இவன் செத்தத அஸ்தினாபுரக்கு சொல்லி அனுப்புங்க. அவுங்க வந்தாதான், இவன தூக்கி கொண்டுபோயி எரிக்க முடியும்"னு சொல்றான். அதுக்கு இன்னொரு முனிவன் சொல்றான் "தகவல் சொல்லி, அவனுக வரதுக்குள்ள இங்க பொணம் நாறிரும்ய்யா" இத கேட்ட இன்னொரு முனிவன் "ஆளாளுக்கு ஒன்னு பேசாதீங்கயா.. செத்துப்போனவனோட வாரிசுக இங்கதானே இருக்காங்க? அவங்கள வச்சி சட்டுப்புட்டுனு எல்லா காரியமும் செஞ்சி, ஆகவேண்டிய காரியத்த பாருங்கய்யா"னு சொல்றான்.
முனிவர் சொன்னமாதிரி அஞ்சி மகன்கள வச்சி முறைபிரகாரம் பண்ணவேண்டியதெல்லாம் பண்ணி, எரிகிறதுக்கு பாண்டுவ தூக்கிட்டு எல்லோரும் "கோவிந்தா, கோவிந்தா.. கோவிந்தா, கோவிந்தா.."னு சத்தம் போட்டே போறாங்க.
கட்டய எல்லாம் ஒண்ணு மேல ஒண்ணா அடுக்கி, அதுமேல பாண்டு பொணதை வாக்குறாங்க. "யாருப்பா இவனுக்கு மூத்த மகன்"னு யுதிஷ்டிரன கொள்ளிபோட கூப்புடுறாங்க. அந்த நேரம் பாண்டு பொண்டாட்டி மாத்ரி "இவன் செத்ததுல எனக்கும் பங்கு இருக்கு, அதனால நானும் இவன்கூடயே உடன்கட்டை ஏறி செத்துருறேன்"னு சொல்றா.
உடன்கட்டை ஏறுறது இந்துதர்மப் படி நல்லதுதானே னு, பாண்டுவ எரிக்கும் போது குதிக்க சொல்லி அவளையும் எறிச்சிருறாங்க. எல்லா காரியம் முடிஞ்சதும் முனிவங்களும், தேவர்களும் வானத்த நோக்கி அவனவனுக இடத்துக்கு போயிட்டாங்க.
இவங்களுக்கு ஒத்தாசையா ஒரு முனிவர் மட்டும் கூட இருக்கான். "இனிமே இந்த காட்டுக்குள்ள நீங்க இருக்குறது சரிப்பாடாது, அதனால நீங்க எல்லாம் அஸ்தினாபுரத்துக்கு போங்க"னு முனிவர் சொல்றான்.
குந்தியும் சரி னு அஞ்சி பசங்களையும், முனிவரையும் கூட்டிட்டு அஸ்தினாபுர அரண்மனைக்கு போறா...
- தொடரும்..
ஆதாரம் :-
(மஹாபாரதம் ஆதிபருவம் பகுதி 127)
No comments:
Post a Comment