Tuesday, July 31, 2018

பகுதி 15 - பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் கிளாஸ் எடுக்க முனிவர்கள் தேவை - இதுதான்...மகாபாரத....கதை

அஸ்தினாபுர அரண்மனைக்கு புல்லக்குட்டிகளோட வந்த குந்தி, பாண்டு இறந்த செய்திய சொல்றா. செய்திய கேட்ட பீஷ்மரு அழுகுறான். சத்தியவதி கிழவி மயங்கி விழுந்துட்டா. அன்னைக்கு அஸ்தினாபுரமே சோகத்துல இருந்திச்சி.

குந்திக்கு எல்லோரும் ஆறுதல் சொல்லிட்டு, பாண்டுவும், மாத்ரியும் செத்ததுக்கு பதினாறாவது நாள் காரியம் செயுறாங்க. அந்த சமயம் வியாசர்முனிவன் டொய்னு தோன்றி, அம்மா சத்தியவதி எனும் மச்சகந்திட்ட சொல்றான் "அம்மா.. இனி நடக்குறதெல்லாம் இங்க கேட்டதாவே நடக்கும். நீங்களும் என்னோட காட்டுக்கு வந்துருங்க"னு சொல்றான். சத்தியவதியும் மகன் சொல்றத கேட்டு ரெண்டு மருமகளான அம்பிகை, அம்பாலிகைய  கூட்டிகிட்டு முனிவனோட வனவாசம் போயிருறா.

பஞ்ச பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் 14, 15 வயசுதான் இருக்கும். கௌரவர்களான துரியோதனனுக்கு பஞ்சபாண்டவர்கள கண்டா ஆகுரதில்ல. அவன் பீமன எப்படியாவது ஒழிச்சிக்கட்டனும் னு குறியா இருந்தான். அதுக்காக பஞ்சபான்டவங்க அஞ்சி பெத்தையும் விளையாட கூப்புடுறான்.

ஆத்துல விளையாடண்டுட்டு எல்லோரும் களைப்பா இருக்காங்க. அப்போ பீமன் மட்டும் ஒரு போதருக்கு அடியில நல்லா தூங்குறான். இதுதான் சமயம் னு துரியோதனன் பீமனோட கையையும் காலையும் கட்டி ஆத்துக்குள்ள எறிஞ்சிருறான்.

"எவன்டா இத்துப்போன கயிற வச்சி கட்டுனது"னு தண்ணிய விட்டு வெளிய வந்துருறான் பீமன்.

"போட்ட திட்டம் பெயிலியர் ஆச்சே"னு தோரோட்டி மகன் கர்ணன பிரண்டா சேத்துகிட்டு, மறுநாளும் பஞ்சபாண்டவர்கள விளையாட கூப்புடுறான் துரியோதனன். இந்த டயம் மிஸ் ஆகா கூடாதுனு நல்லபாம்ப ஒரு நாள புடிச்சி போட்டு வரான். அந்த பாம்புகள பீமன் தூங்கும் போது கடிக்கவிடுறான். பீமன் மயங்கிட்டான். அவன அளேக்க தூக்கிட்டு போயி ஆத்துக்குள்ள போட்டுட்டான் துரியோதனன்.

தன்னிக்குள்ள போனவன் ரெம்ப ஆழத்துக்கு போயிட்டான். அங்க ஒரு பத்து கருநாகம் பீமன கடிக்குது. ஏற்கனவே அவன நல்லபாம்பு கடிச்சிருக்கு, இப்ப நாகப்பாம்பு கடிக்குது. மைநசும், மைநசும் பிளஸ் ஆகுற கதையா.. விசத்துக்கு விஷமே மருந்தாகி பொழைச்சிறுறான். அத வானத்துல இருந்து பாத்துட்டு இருந்த நாகலோகத்து இளவரசி வாசுகி பீமன புடிச்சிப்போயி அவன அலேக்கா தூக்கிட்டு வந்துருறா.

பிமா.. உனக்கு மட்டும் எப்படி இந்த சக்தி இருக்கு னு கேட்டு, உனக்கு நான் நாகப்பால் தாறேன் னு ஒரு அஞ்சி கொடம் பால தூக்கி பீமன் வாயில ஊத்துறா. பீமனும் எல்லாத்தையும் குடிச்சிட்டு போதை ஏறி, எட்டு நாளா தன்னிக்குள்ளயே தூங்கிட்டு கிடந்துருக்கான்.

புள்ளய காணோமே னு பதறிப்போயி, குந்தி அங்கிட்டும் இங்கிட்டும் தேடுறா. துரியோதனன் தான் கொண்ணுறுப்பான் னு குந்தி மகன்க சொல்ல, காந்தாரி கூட சண்டைய போட்டு கிடக்காங்க. இவங்க சண்டைய விளக்கிவிட வேண்டியதே பீஷ்மர் வேலையா போச்சி. எட்டு நாளுக்கு அப்பறம் போதை தெளிஞ்சி வரான் பீமன். ஒருவழியா பிரச்சனை ஓஞ்சது.

"இனிமே உங்களுக்கு விளையாட்டு மயிருரெல்லாம் வேண்டாம். ஒழுங்கா கிலாஸ்க்கு போங்க" னு பீஷ்மர், கௌரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் கிளாஸ் எடுக்க கிருபச்சாரியார வாத்தியார அப்பாய்ண்ட் பண்ணுனான்.

இந்த கிருபச்சாரியார் யாருனா...?
(பிளாஸ்பேக் @)...

கௌதமமுனிவர்க்கு சாரத்துவான் னு ஒரு பையன் இருந்தான். அந்த சாரத்துவான் வில்வித்தைல பெரிய ஆளு. உலகத்துலயே நான்தான் பெரிய வித்தவானா ஆகணுமுனு, வானத்துல இருக்குற தேவர்கள நினைச்சி தவம் பன்ரான். இவன் தவத்த களைக்கனமுனு வானத்துல இருக்குற ரிஷிங்க "ஜானமதி"னு ஒரு லேடீஸ அனுப்பி வைக்கிறாங்க.

சாரத்துவான் தவம் செஞ்சிட்டு இருக்கும் போது  ஜானமதி வந்து ஒவ்வொரு ட்ரெஸ்ஸா கழட்டி போட்டுகிட்டே டான்ஸ் ஆடுறா. இத பாத்த சாரத்துவானுக்கு மூடாகி, லீக் ஆகி அவன் உக்காந்து இருக்குற பாயிலயே ஒழுகிருச்சி. இவனுக்கு தவம் களைஞ்சி போச்சி. அவளுக்கும் "நாம வந்த வேல் முடிஞ்சிபோச்சி"னு கெலம்பிருறா.

பாயில ஒழுகுன விந்து ரெண்டா விரிஞ்சி, அதுல ரெண்டு குழந்தை உண்டாகுது. ஒன்னு ஆணு இன்னொன்னு பொண்ணு. அந்த பக்கமா வேட்டைக்கு வந்த சேகவன், அந்த ரெண்டு குழந்தையயும் தூக்கிட்டுப்போயி அந்தநாட்டு மன்னர்ட்ட குடுக்கான். அந்த மன்னனும் இந்த ரெண்டு குழந்தையயும் வளக்கான். மன்னன் கிருபையால அந்த குழந்தைக வளந்ததனால அதுகளுக்கு "கிருபா" "கிருபி" னு பேர் வச்சிட்டாங்க. கிருபா கலை, வேள்வி, வேத, ஆச்சாரங்க னு படிச்சதால "கிருபச்சாரியார்" னு எல்லோரும் கூப்பிட ஆரம்பிச்சுட்டாங்க.
                            ****************

இந்த கிருபச்சாரியார் முனிவர வச்சி தான் பீஷ்மர் தன்னோட பேரக்புல்லகளுக்கு கிளாஸ் எடுக்க சொன்னான். முனிவனும் நல்லா கிளாஸ் எடுத்துட்டு தான் வந்தான். இருந்தும் இதவிட ஒரு பெட்டர் முனிவர கிளாஸ் எடுக்கவிட்டா பசங்க நல்லா கத்துக்குவாங்க னு யோசிச்ச பீஷ்மர் இன்னொரு முனிவர தேடுறான். துரோணர் னு ஒரு முனிவர அப்பாய்ண்ட் பன்றான்.

இந்த துரோணர் யாருனா....?
(பிளாஸ்பேக் @)

பரத்வாஜ் னு ஒரு முனிவர் கங்கைக்கரைல சின்னதா ஒரு ஆசிரமம் வச்சி நடத்திட்டுருந்துருக்கான். அவன் ரெகுளரா விடிஞ்சதும் காலைல கங்கை நதியில குளிப்பான். எப்பவும் போல ஒருநாள் குளிக்க போகும்போது, நதிக்கரையில ஒரு பதினெட்டு வயசு பொண்ணு டிரஸ் இல்லாம அம்மணக்கட்டையா குளிச்சிட்டு இருக்க. அத பாத்த பரத்வாஜ் முனிவருக்கு மூடாகி வந்து லீக்காயிருச்சி.

லீக்க்கான விந்த கையில புடிச்சிட்டு போயி ஒரு பானைல போட்டு வளக்குறான். அதுல இருந்து பெறந்தவன் தான் துரோணர். ("துரோணர்"னா சமஸ்கிருதத்துல "பானை" னு அர்த்தமாம்)

துரோணர் எல்லா வித்தையயும் அவன் அப்பன்ட்ட இருந்தே கத்துக்கிறான். அதேசமயம்  வடபாஞ்சால நாட்டு மன்னன் மகன் துருபதனும் பரத்வாஜமுனிவர்ட்ட வித்த கத்துக்க வரான். துரோணரும், துருபதனும் ரெம்ப குளோஸ் பிரண்டா ஆகுறாங்க.

துருபதன் சொல்றான் "துரோணர் நண்பா.. நான், பெரியவனா ஆனதும் எந்நாட்டோட பாதி ஊர உனக்கு தாறேன்"னு சொல்றான். இவனும் சரிடா னு சொல்றான். கோர்ஸ் முடிஞ்சதும் ரெண்டுபேரும் பிரிஞ்சி போயிட்டாங்க.

துரோணர் எல்லா வித்தையும் கத்துக்கிட்டு பெரியாளா ஆயிட்டான். துரோணர்க்கு கிருபாச்சாரியார் தங்கச்சி, கிருபிய கல்யாணம் செஞ்சி வச்சிட்டாங்க. அந்த சமயத்தில துரோணர் குடும்பத்துல வறுமை தலவிரிச்சி ஆடுது. அப்போ துரோணர்க்கு அவன் கூட பழகுன நண்பன் யாபகத்துக்கு வறான். "சரி நம்ம நண்பண்ட்ட ஹெல்ப் கேட்கலாம்"னு வடபாஞ்சாலநாட்டு அரண்மனைக்கு போறான்.

அரண்மனைல துரோணர்க்கு செம விருந்து வைகுறாங்க. எல்லாம் முடிஞ்சி துரோணர் நண்பனான துருபதன்கிட்ட கேக்குறான் "நண்பா எனக்கு முன்னாடி ஒரு வாக்கு குடுத்தயே.. அதுப்பிரகாராம் உன் நாட்டுல பாதி ஊர எனக்கு குடுத்துரு"னு கேக்கான். அதுக்கு துருபதன் "கெக்கப்புக்க..."னு சிரிச்சிட்டே "என்னடா காமெடி பண்ற. சின்ன புல்லாயா இருக்கும் போது சொன்னத நம்பிட்டு, சொத்த கேக்குற? இன்னும் வேணுமுனா சாப்பாடு போடுறேன், சாப்புட்டு வந்தவழிய பாத்து கெளம்பிரு."னு சொல்லிட்டான். கோவமான துரோணர் "டே.. இத என் வாழ்நாளுல மறக்கமாட்டேன், உன் நாட்ட எப்படியாவது கைப்பத்துவேன்"னு சவால் விட்டுட்டு தங்கச்சி புருசனான கிருபச்சாரியார் வீட்டுக்கு போறான்.

கிருபச்சாரியார் கௌரவர்கள், பாண்டவர்களுக்கு கிளாஸ் எடுத்துட்டு இருக்கான். "வாழ்க்கை ரெம்ப போரா போகுதே"னு துரோணர்  ஒரு கிணத்துமேட்டுல உக்காருறான். அந்தநேரம் பாத்து ஒரு பந்து கிணத்துக்குள்ள விழுது. பந்து விளையாண்ட பாண்டவர்க பந்த எடுக்க வராங்க. எடுக்க ட்ரை பண்ணும் போது யுதிஷ்டிரன் மோதிரம் கிணத்தில விழுந்துருது.

இத எப்படி எடுக்கறது யோசிக்கும் போது, துரோணர்முனிவன் "இத நான் எடுத்துதாறேன். அதுக்கு பதிலா நீங்க என்னோட குடுபத்துக்கு சோறு போடுவீங்களா..?"னு கேக்குறான். யுதிஷ்டிரனு துரியோதனனும் சரி னு சொல்றாங்க. துரோணர் வித்தை செஞ்சி பந்தையும், மோதரத்தையும் எடுத்து குடுக்கான்.

இவன் காட்டுன வித்தைய பாத்து ஆச்சரியப்பட்டு இங்க நடத்ததெல்லாம் பீஷ்மர்ட்ட சொல்றாங்க. பீஷ்மரும் "நம்ம பேரபுல்லகளுக்கு கிளாஸ் எடுக்க இவன்தான் சரியான ஆளுன்னு துரோணர்முனிவன அப்பாய்ண்ட் பண்ணுறான்.

- தொடரும்..

No comments:

Post a Comment