காவிரிப்பூம் பட்டினத்தில், வைசியர் குலத்தில் பிறந்த இயற்பகையார். 63 நாயன்மார்களில் இவனும் ஒருவன். சாமியார்கள் (ஐயர்) எதைக்கேட்டாலும் மறுக்காமல் கொடுத்து வருபவன். இவரது ஏமாளித்தனத்தை, புரிந்து கொண்ட சிவனடியார் ஒருவர் (ஐயர்) இயற்பகையாரிடம் வந்து ஒருமுறை, அவரது மனைவியைக் கேட்கிறார்.
(சிவனடியாருக்கு எதற்கு அவரது மனைவி? அப்படி அவர் கேட்பது நியாயமா? நல்லொழுக்கமா? என்றெல்லாம் வேள்வி கேட்ககூடாது.) சிவனடியார் (ஐயர்) உருவில் வந்து சிவனே கேட்டார் என்று இவரைப்பற்றி பெருமையுடன் கூறுகிறார்கள். அவ்வாறு முட்டாள் தமிழன் நம்பவைக்கப்பட்டுள்ளான்.
மானமும், ரோஷமும் உள்ள மனிதன் தனது மனைவியை கேட்டவனை என்ன செய்து இருப்பான்? அப்படியெல்லாம் இயற்பகையார் மானம், ரோசம், போன்ற பண்புகளோ, ஒழுக்கமோ பற்றி கவலைப்படவில்லை. சந்தோசமாக, "என்மனைவிதான் உங்களுக்கு வேண்டுமா? இதோ, எடுத்துகொள்ளுங்கள். அவளை உங்களுடனே கூட்டிக் கொண்டு போங்கள். என்று அனுப்பிவைக்கிறான்.
அவனுக்குதான் புத்தி இல்லை, ஒழுக்கம் இல்லை, சிவனடியாரான உனக்குமா அறிவில்லை? நீ எப்படி அவனது மனைவியைக் கேட்கலாம்? என்று அவனது உறவினர்கள், நல்லொழுக்கத்துடன் வாழ்ந்துவந்த தமிழர்கள் கோபப்படுகிறார்கள். இந்த அநீதியை, அக்கிரமத்தை தடுக்கிறார்கள்.
இதைபார்த்த இயற்பகையார், "ஐயர் உருவத்தில் வந்த சிவனையே தடுக்குறீங்களா.." என்று தனது மனைவியை சிவனடியார் அழைத்து போவதை தடுத்த, தனது உறவினர்கள் அனைவருடனும் எதிர்த்து போரிட்டு, உறவினர்களை வெட்டி வீசிவிட்டு, சிவனடியாருடன் (ஐயருடன்) தனது மனைவியை அனுப்புகிறான்.
அதுமட்டுமல்ல திருச்சாய்க்காடு என்ற இடம் வரை அவர்களுக்குப் பாதுகாப்பாக பின்தொடர்ந்து செல்கிறான். அப்படிப்பட்டவரை, இத்தகைய நற்பண்பு, நல்லொழுக்கம் உள்ளவரை, சும்மா விட்டுவிட முடியுமா? அரிய இந்த செயலைச் செய்த அவரது நற்பணியை நினைவு கூற வேண்டும், அவரது வழியில் நாம் நடக்க வேண்டும் என்று, அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவனாக இயற்பகையாரை வைத்து, போற்றி புகழ்ந்து வருகிறது இந்துமதம். இந்த கருமத்த நம்மை வழிபடவும் வைத்துள்ளார்கள்.
பொண்டாட்டியைக் அடுத்தவனுக்கு கூட்டிகொடுத்தவனும், கூட்டிப்போன சிவனடியாரும் பிராமணீயத்தின் பிரதிபலிப்பா? இல்லை, இதுதான் தமிழர்களின் உன்னத நாகரீகமா? இந்து சாமி கும்புடுறவனுக இப்படித்தான் பண்ணிட்டு இருக்கீங்களா...? டே...
- டக்ளஸ் முத்துக்குமார்
No comments:
Post a Comment