குந்திக்கு பஸ்ட் குழந்தை யுதிஷ்டிரன் பிறக்குறதுக்கு முன்னாடியே பீஷ்மர் தம்பியோட மூத்த பையன் திருதராஷ்டிரன் பொண்டாட்டி காந்தாரி கர்ப்பமாயிட்டா. ஆனா, ரெண்டு வருசம் ஆகியும் அவளுக்கு புள்ள பொறக்கல. "பத்து மாசத்துலயே புள்ள பொறந்துரமே. என்னடா இது.. ரெண்டு வருசம் ஆகியும் புள்ள பொறக்கமாட்டிக்கு"னு காந்தாரி ஒரு அம்மிக்கல்ல தூக்கி அவளோட வகுத்துலயே அடிச்சிக்கிட்டா.
ஓங்கி அடிச்சதுல, அவளோட கரு கலஞ்சி, சதசதையா அவ காலுக்கு கீழ ஒழுகுது. காந்தாரி அத பாத்து அதிர்ச்சி ஆயிட்டா. அந்த சதைய எல்லாம் கிளீன் பண்ணிட்டு இருக்கும் போது வியாசபகவான் காந்தாரி முன்னாடி வந்துநிக்கான்.
"அடியே காந்தாரி.. என்ன காரியம் பண்ணிருக்க? உனக்கு எதுக்கு அதுக்குள்ள இம்புட்டு அவசரம்? உன் வயித்துல உண்டான கருவ புல்லாம் காலிபண்ணிட்டயேடி"னு திட்டுறான். அதுக்கு காந்தாரி "மன்னிச்சிருங்க பகவானே"னு சொல்ல, அதுக்கு வியாசபகவான் "இப்பயும் ஒன்னும் குடி முழிகிப்போகல. அந்த சதைய எல்லாம் பொருக்கி, நூறு பானையில ஒன்னு ஒன்னா போடு, அது வளந்து உனக்கு நூறு குழந்தைக பொறக்கும்."னு சொல்லிட்டு மறைஞ்சிருறான்.
காந்தாரியும் வியாசர் சொன்ன மாதிரி, ஒழுகுன சதைய எல்லாம் எடுத்து நூறு பானைல போடுறா. மிச்சம் ஒழுகி கிடக்குற பிசுர ஒரு குண்டாக்குள்ள போடுறா.
கொஞ்ச நாளுக்கு அப்பறம், ஆமகுஞ்சி முட்டைய ஒடைகிட்டு வெளிய வர மாதிரி, ஒரு பானைல இருந்து ஒரு குழந்தை வெளிய எட்டி பாக்கு. இந்த முதலாவதா எட்டி பாத்த குழந்தைதான் "துரியோதனன்".
இந்த துரியோதனன் பானைல இருந்து பொறக்கும் போது.. திடீர்..திடீர்...னு எல்லா பொருளும் ஒடையுதாம்... சாயுதாம்.. தூரத்தில ஒரு கழுத ஊ... னு ஊழவிட்டு கத்துதாம். இதெல்லாம் கேட்டுட்டு இருந்த பீஷ்மர் தம்பியோட கடைசி மகன் விதுரன், பீஷ்மர்ட்ட சொல்றான். "பீஷ்மர்ப்பா.. இந்த மொத குழந்தை பிறந்தது, ஏதோ கேட்ட சகுனம் மாதிரி தெரியுது"னு சொல்ல
பீஷ்மர் காந்தாரி புருசன் திருதராஷ்டிரன கூப்பிட்டு "மகனே.. உனக்கு பொறந்த இந்த மகன் நம்ம குலத்த அழிக்க பொறந்த மாதிரி தெரியுது. இந்த குழந்தைய கொன்னுட்டு மீதி இருக்குற 99 குழந்தைய வளப்போம்"னு சொல்றான் அதுக்கு திருதராஷ்டிரன் "இல்ல பீஷ்மரப்பா.. இந்த குழந்தைய கொல்ல வேண்டாம். இத வளப்போம். வர்ரத அப்றம் பாத்துகிலாம்"னு சொல்லிட்டான்.
மீதி இருக்குற 99 குடத்துல இருந்தும் ஒருஒரு நாளா ஒன்னுஒண்ணா பொறக்கு. லாஸ்ட்டா குண்டாக்குள்ள போட்ட பிசுரல இருந்து ஒரு லேடீஸ் குழந்தை பொறக்கு. அதுக்கு "துச்சலை" னு பேரு வைகுறாங்க.
மொத்தம் கௌரவர்கள்னு 101 உருப்படி. 100 ஆண் குழந்தை ஒரு பெண் குழந்தை.
- தொடரும்
குறிப்பு :-
கௌரவர்கள் வேற யாருமில்ல, பாண்டுவோட அண்ணன் திருதராஷ்டிரன் மகங்க தான். பாண்டு மகங்க பாண்டவர்கள்.
No comments:
Post a Comment