பல்லவ நாட்டை கழற்சிங்கர் என்பவன் அரசோச்சி வந்தான். ஒரு சமயம் மன்னர் திருவாரூரில் எழுந்தருளியிருக்கும் தியாகேசப் பெருமானைச் சந்திக்க எண்ணினான். தமது பொண்டாட்டியுடன் புறப்பட்டான். திருவாரூரை அடைந்த மன்னன் பிறைமுடிப் பெருமான் குடிகொண்டிருக்கும் பூங்கோயிலை அடைந்தார்.
பூங்கோயில் புண்ணியரின் அர திருக்கோயிலை வலம் வந்து கொண்டிருந்த பட்டத்து அரசி அழகிய எழில்மிகும் மண்டபங்களைக் கண்டு அதிசயித்தாள்.
அரசியார், மலர் தொடுத்துக் கொண்டிருக்கும் மணிமண்டபத்திற்கு அருகே வந்தாள். அங்கு தொண்டர்கள் அமர்ந்து பூத்தொடுத்துக் கொண்டிருந்தனர். எண்ணத்தைக் கவரும் வண்ண மலர்களைக் கண்டதும் அரசியார்க்கு ஆனந்தம் மேலிட்டது. நறுமண வாசனையில் தரையில் கிடந்த மலர் ஒன்றை எடுத்து மோந்து பார்த்தாள். அரசி மலரை நுகர்ந்து பாத்ததை செருத்துணை நாயனார் என்பவன் பார்த்துவிட்டான்.
அரசியாரின் செயலைக் கவனித்த செருத்துணை நாயனார் சினம் கொண்டு, "என்ன தைரியம் இருந்தா இந்த பூவ மோந்து பாத்திருப்ப" என்று அரிசியின் மூக்கை வாளால் வெட்டிவிட்டான் நாயனார். பட்டத்தரசி மயக்கமுற்று மண் மீது வீழ்ந்தாள். பெருமானை வழிபட்டுக் கொண்டிருந்த மன்னர்க்கு இச்செய்தி எட்டியது. மன்னர் அவ்விடத்திற்கு விரைந்த வந்தான். நிலத்தில் துடித்து துவண்டு கிடக்கும் அரசியாரின் பரிதாப நிலையைக் கண்டான். பதை பதைத்துப் போனான்.
அஞ்சாமல் என்னோட பொண்டாட்டி மூக்கை யார் வெட்டுனது என்று கண்களில் தீப்பொறி பறக்கக் கேட்டான். அம்மொழி கேட்டு, மன்னவா! இச்செயலை செய்தது நான் தான் என்று துணிந்து சொன்னான் நாயனார். அப்படி என்ன குற்றம் செய்தால் என்று மன்னர் கேட்டான். அதற்கு நாயனார் "அரசியார் எம்பெருமானுக்குரிய மலர்களை மோந்து பார்த்தார் என்றான்" இதை கேட்ட மன்னர் மனம் கலங்கினான்.
ஐயனே! நீங்கள் தண்டனையை முறைப்படி அளிக்கவில்லை என்று கூறியவாறே உடைவாளை எடுத்தான். மலரை எடுத்த கையை அல்லவா முதலில் தாங்கள் துண்டித்திருக்க வேண்டும் என்று பாகுபலி ஸ்டாயிலில் அரசியாரின் கையை வெட்டினான்.
மன்னருடைய சிவபக்தியையும், அடியார்கள் மீது அவர் கொண்டுள்ள பக்தியையும் கண்டு அடியார்கள், மன்னரைப் போற்றிப் பணிந்தனர். மன்னரின் புகழ் திக்கெட்டும் பரவியது. இந்த ஈன செயலை செய்த மன்னனை வாழ்த்தி 63 நாயன்மார்களில் இவனையும் ஒருவனா சேர்த்துவிட்டனர். "கழற்சிங்க நாயனார்" என்று இவனை எல்லோரும் போற்றினர். த்து....
- டக்ளஸ் முத்துக்குமார்
No comments:
Post a Comment