பீஷ்மர் மச்சகந்திய தன்னோட அப்பனுக்கு கூட்டிக்கொடுத்ததால அவங்க ரெண்டுபேருக்கும் சித்ராங்கதன், விசித்திரிவீரியன் னு ரெண்டு குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்து 5 வருஷத்துல பீஷ்மர் அப்பன் சாந்தனு இறந்துட்டான்.
பீஷ்மர் தன்னோட தம்பிகள வளர்த்து, சித்ராங்கதனுக்கு மன்னனா முடிசூட்டுறான். பக்கத்து நாட்டு கந்தர்வராஜ மன்னன்ட்ட போர் செய்யும் போது தம்பி சித்ராங்கதன் செத்து போயிட்டான். பீஷ்மர் அடுத்ததா விசித்திரவீரியனுக்கு மன்னனா முடிசூட்டுறான்.
விசித்திரவீரியனுக்கு வாலிப வயசு வந்ததால பீஷ்மர் தன்னோட தம்பிக்கு பொண்ணு தேட ஆரம்பிச்சுட்டான். அப்போ அஸ்தினாபுரத்து காசிராஜன் மன்னன் தன்னோட மூணு பொண்ணுகளான அம்பை, அம்பிகை, அம்பாலிகைக்கு சுயவர போட்டி ஒன்னு நடத்தினான். அந்த போட்டில தன்னோட தம்பிக்காக கலந்துக்கிட்டான் பீஷ்மர்.
போட்டில செவிச்சி மூணு பொண்ணுகளையும் கூட்டிட்டு தன்னோட தம்பிக்கு கல்யாணம் பண்ணிவைக்க தேர்ல கெளம்பிட்டான். அப்போ. பாதி வழியில அம்பையோட காதலன் சால்வ நாட்டு மன்னன் பீஷ்மர்ட்ட போர் சென்சான். அவன சமாளிச்சி ஒருவழியா தம்பிட்ட வந்துசேந்துட்டான்.
உனக்காக மூணு பொண்ணுகள தூக்கிட்டு வந்திருக்கேன். மூணயும் வச்சி சந்தோசமா இரு னு தம்பிட்ட சொல்லும் போது, மூணுல அம்பை ங்கிற பொண்ணு " நான் சால்வநாட்டு மன்னனை லவ் பன்றேன் அவனத்தான் கல்யாணம் முடிப்பேன் னு சொல்லிட்டு சால்வநாட்டு மன்னட்ட போயிட்டா. "ஒன்னு போனா என்ன? மீதி ரெண்டு இருக்கு.. ரெண்டையும் வாச்சிகோ தம்பி"னு சொல்றான் பீஷ்மர்.
அப்போ அந்த ரெண்டு பொண்ணுகளும் " பீஷ்மர் தான் போட்டில செயிச்சாரு அதானால பீஷ்மரை தான் கட்டிக்குவோம் னு ரெண்டும் விசித்திரவீரியனுக்கு டிமிக்கி கொடுத்துருக்கு. உடனே பீஷ்மர் "நான் சாகும் வரைக்கும் தன்கையே தனக்குதவி னு சாகுரவரைக்கும் ஒண்டிக்கட்டையா வாழுறேன் னு என் சின்னம்மாவோட அப்பன்ட்ட சத்தியம் வாங்கிருக்கேன். அதானால என் தம்பியை கட்டிகோங்க" னு சொல்லி ரெண்டு பேரையும் தம்பிக்கு கட்டிவச்சிட்டான்.
அதேசமயம் அம்பை சால்வ நாட்டு மன்னன்ட்ட என்ன கட்டிக்கோ சொல்றா. உன்ன பீஷ்மர் செயிச்சி தூக்கிட்டு போயிட்டான். so உன்ன கட்டிக்கோ முடியாது. நீ பீஷ்மர்ட்டயே போ னு சொல்லிட்டான். அம்பை பீஷ்மர்ட்ட மறுபடியும் வந்துட்டா. ஆனா பீஷ்மர் தம்பி " வேற ஒருத்தன லவ் பண்ணுன பொண்ண நான் கட்டிக்க முடியாதுன்னு திருப்பி அனுப்பிச்சிட்டான்.
கோவமான அம்பை " இதுக்கெல்லாம் பீஷ்மர் தான் காரணம், லவ் பண்ணுணவட்டயும் poga விடாம, அவன் தம்பிட்டயும் போகவிடாம அவன மாதிரியே என்னையும் ஒண்டிக்கட்டையா ஆக்கிட்டான்.. அவனை சும்மா விடமாட்டேன்...
தொடரும்...
No comments:
Post a Comment