தர்மன் அவனோட மனைவியான பாஞ்சாலிய பெட்டு கட்டி விளையாடுறான். இந்த டயமும் துரியோதனன்கிட்ட தோத்து போயிருறான். பொண்டாட்டிய வச்சி தோத்துட்டானே னு நாளு தம்பிகளும் அழுகுறாங்க. அப்போ பீமன் "டே.. துரியோதனா.. இப்ப வரைக்கும் நீ செயிச்சதெல்லாம் சரி. லாஸ்டா தர்மன் அவனே வச்சி தோத்தா பிறகு எப்படி இன்னொரு பொருள வச்சி விளையாட முடியும்..?"னு கேக்கான்.
அதுக்கு கர்ணன் "டே.. பீமா.. தோத்த பிறகு உனக்கு ஏண்டா இந்த வேல"னு சொல்லிட்டு "துரியோதனா.. இந்த பாண்டவ பயபுல்லக எல்லாம் நம்ம அடிமைக, இவங்க எல்லாம் இங்க இருக்கானுக. நம்ம அடிமை பாஞ்சாலி எங்க இருக்கா...? கூட்டு வர சொல்லு நண்பா.."னு சொல்றான்.
துரியோதனன் தன்னோட தேரோட்டிய கூப்பிட்டு, பாஞ்சாலிய கூட்டுவர காண்டபிரஸ்த நாட்டுக்கு அனுப்புரான். தேரோட்டி பாஞ்சாலிய பாத்து நடந்தத எடுத்து சொல்லி அஸ்தினாபுரத்துக்கு கூப்புடுறான். அதுக்கு பாஞ்சாலி "தேரோட்டி... தர்மன் என்னவச்சி தோத்த பிறகு அவன வச்சி தோத்தானா.. இல்ல தர்மன் அவனை தோத்ததுக்கு அப்றம் என்ன வச்சி தோத்தானா..? னு உங்க மன்னன்ட்ட போயி கேட்டு வந்து சொல்லு"னு தேரோட்டிய திரும்ப அனுப்பி வச்சுருறா..
தேரோட்டி பாஞ்சாலி சொன்னத துரியோதனன்கிட்ட சொல்றான். கோவமான துரியோதனன் "தம்பி.. துச்சோதானா.. இங்க வா"னு அவன் தம்பிய கூப்புடுறான். துச்சோதானனும் "சொல்லுங்கணா"னு கேக்க "டே.. தம்பி அந்த பாஞ்சாலி சிரிக்கிக்கி ரெம்ப கொழுப்பு வச்சி போச்சி.. நீ அவள தூக்கிட்டு வா அவளோட கொழுப்ப கொறப்போம்" னு துரியோதனன் அவன் அனுப்புறான். "செம சான்ஸ்"னு நினைச்சி துச்சோதனன் பாஞ்சாலிட்ட போறான்.
பாஞ்சாலிய பாத்து கூப்புடுறான். அதுக்கு பாஞ்சாலி தேரோட்டிட்ட சொன்ன மாதிரியே இவன்கிட்டயும் சொல்றா. அதுக்கு துச்சோதனன் "அத அங்க வந்து உன் புருசங்கள பாத்து கேளுடி"னு அவள புடிச்சி இழுத்து அவனோட தொடமேல உக்கார வச்சி கூப்பிட்டு போறான். அஸ்தினாபுரம் வந்தும் இத பாத்த பீமன் "டே.. துச்சோதானா.. எங்க பொண்டாட்டியவாடா தொடமேல உக்கார வச்சி கூட்டிட்டு வர.. உன்ன தொடேலயே அடிச்சே கொல்லுவேன்டா.. இது என் பொண்டாட்டி பாஞ்சாலி மேல சத்தியம்" னு கத்துறான். அதுக்கு துச்சோதனன் "டே.. பீமா ரெம்ப பொங்காத.. பஸ்ட் இவ உனக்கு மட்டும்தான் பொண்டாடியா..? சொல்லுடா..? இதுல உனக்கு சத்தியம் மயிரு வேற.."னு சொல்லிட்டே பாஞ்சாலி கைய புடிச்சி இழுத்துட்டு வந்து "ரோலிங்ல போ.." னு பாஞ்சாலிய சபைல நிப்பாட்டுறான்.
துரியோதனன் பாஞ்சாலிய பாத்து "அடியே பாஞ்சாலி.. 3D பிக்சர்னு தெரியாம விழுந்தா.. நக்கல் பண்ணி சிரிக்கவாடி செய்யுற... இப்ப சிரிடி" னு சொல்றான். அப்போ கர்ணன் "இனிமே இவளும் நம்மக்கு அடிமை நண்பா"னு சொல்றான். அந்த டயம் துச்சோதனன் "அப்போ.. அவ சேலையும் பாவாடை சாகெட் எல்லாம் நமக்கு சொந்தம் தானே"னு கர்ணன பாத்து கேக்குறான். அதுக்கு கர்ணன் "உனக்கு வேணுமுன்னா போயி, உறுவிக்கோ தம்பி"னு சொல்றான்.
துச்சோதனன் பாஞ்சாலி பக்கத்துல போயி அவ சேலைய புடிக்கான். அப்போ பாஞ்சாலி "டே.. பீஷ்மர்.. திருதராஷ்டிரனா.. நீங்கெல்லாம் பெரிய மனுசங்களாடா... ஒரு பொடிபயன் சேலைய உருவ வாரான், பாத்துட்டு கம்முன்னு கெடகீங்க.. ர்ர்ர்ர்......த்தூ... நீங்கெல்லாம் நாசமாத்தாண்டா போவீங்க"னு சொல்லிட்டு நடக்கிறது நடக்கட்டும் னு கண்ண மூடிக்கிட்டா.
துச்சோதனன் பாஞ்சாலி சேலைய புடிச்சி உருவ ஆரம்பிக்கான். உருவுறான்.. உருவுறான் சேலை நீளமா வந்துட்டே இருக்கு. இவனும் கொஞ்சம் பீடா உருவுறான் 3 மீட்டர் சேலை 30மீட்டர் வரை நீளமா வந்துட்டுட்டே இருக்கு...
அந்த டயம் கிழக்க பாத்த மூலைல ஒரு அசரீரி கேக்குது. "பாஞ்சாலி மாதிரி பத்தினிய யாரும் கலங்கப்படுத்த முடியாது. உங்களுக்கெல்லாம் அழிவு நெருங்கீருச்சி" னு அப்போ பீஷ்மர் துரியோதனன பாத்து "டே.. மகனே நீ செய்யுறது ரெம்ப தப்பு. அவங்கட்ட போட்டில செயிச்சத எல்லாத்தையும் அவங்ககிட்டயே திருப்பி கொடுத்து அவங்க நாட்டுக்கு அனுப்பு"னு கோவமா சொல்றான்.
"இந்த கிழட்டுநாயிக்கு மரகிர கழண்டு போச்சா"னு பாண்டவங்ககிட்ட செயிச்ச பொருளையும், பொண்டாட்டியயும் திரும்ப கொடுத்துட்டு "இனிமே இந்த மக்கமே வராதீங்கடா பாண்டவ நாயிகளா"னு அவங்கள அனுப்புறான்.
அப்போ பாஞ்சாலி துரியோதனன பாத்து "டே.. நீ ஒன்னும் எங்களுக்கு பிச்சை போட்டு அனுப்ப வேண்டாம். இந்த டயம் தர்மன், அவன் செஞ்ச புண்ணியத்த எல்லாத்தையும் பனையமா வச்சி விளையாடட்டும். இதுல நீ செயிச்சா.. என்னய என்னவேனாலும் பண்ணிக்கோடா.. ஆனா தர்மன் செயிச்சா, இப்ப வரைக்கும் நீங்க செயிச்ச எல்லாம் பொருளையும் திரும்ப வாங்கிட்டு கெளம்புறோம்"னு சொல்றா.
இத கேட்ட துரியோதனன் "சரிடி, உன் புருசன விளையாட சொல்லுடி.."னு சொல்றான். இந்த போட்டில தர்மன் செயிச்சிருரான். தோத்த எல்லாம் பொருளையும் திரும்ப வாங்கிருராங்க.
அப்போ பீமன் "டே.. துச்சொதனா.. உன்ன நார்நாரா கிழிக்காம விடமாட்டேன்டா"னு சொல்றான்.
தர்மன் "டே.. துரியோதனா... உன் சாவு ஏன்கையில தான்டா.. இது எங்கம்மா குந்தி மேல சத்தியம்."னு சொல்றான்.
அடுத்து அர்ஜுனன் "டே.. கர்ணா.. என் வில்ல வச்சி உன் நெஞ்சில ஓட்டைய போட்டு, உனக்கு சாவ காட்டுவேன்டா.."னு சொல்றான்.
நம்ம பங்குக்கு எதையாவது சொல்லணுமே னு நகுலன் "டே.. சகுனி.. உன்னோட மகன் உலுகான கொல்லுவேன்டா."னு சொல்றான்.
சகாதேவன் "டே.. சகுனி.. நான் உன்னயே கொள்ளுவேன்டா."னு சொல்றான்.
கடைசியா பாஞ்சாலி "டே.. துரியோதனா.. உன்னோட ரெத்தத்துல நனையாம, என் கூந்தல அள்ளிமுடிய மாட்டேன்டா. அதுவரைக்கும் விரிச்சி போட்டு தான் அலயுவேன்"னு சொல்றா..
அதுக்கு துரியோதனன் "நல்லா விரிச்சிபோட்டு அல.. உன்ன புல் மேக்கப்ல பாத்தாலே ரெம்ப கேவளமாத்தான் இருப்ப.. இது விரிச்சி போட்டு அலையபோராலாம்"னு சிரிச்சிட்டே சொல்றான்.
அதுக்கு பீமன் பாஞ்சாலிய பாத்து "உன்ன யாரடி இந்தமாதிரியெல்லாம் சத்தியமெல்லாம் பண்ன சொன்னது. இப்ப நாம சீரிஸ்ஸா சத்தியம் பண்ணும் போது, அவனுக காமெடி பண்ணி சிரிக்கிறாங்க.."
அப்போ கர்ணன் பாண்டவங்கல பாத்து "என்னங்கடா எல்லாம் வெட்டிபுடுவோம், குத்திபுடுவோம் னு பூச்சாண்டி காட்டுறீங்க.. இங்கதானடா நாங்களும் இருக்கும், எங்கே.. எங்கள வந்து கொல்லு பாக்கலாம்"னு ஒரு கஜச்ச எடுத்துட்டு வாரான்.
அப்போ பீமன் "வாங்கடா ஒத்தைக்கு ஒத்த"னு இவனும் ஒரு கஜத்த தூங்குறான். இத பீஷ்மர்.., பீமன பொடனில ரெண்ட போட்டு "டே.. அறிவுகெட்ட பீமா.. உங்க அஞ்சி பேரால எல்லாம் கர்ணன கொல்ல முடியாது. இப்படியே முறிக்கிட்டு திரிஞ்சீங்கனா.. அவன் உங்க வாய கிளிச்சி தான் அனுப்ப போறான். பாஞ்சாலிக்கும் கிழிக்கத்தான் போறான்"னு சொல்றான்.
பீஷ்மர் சொன்னத கேட்ட பாண்டவங்க அதுக்கு இப்ப நாங்க என்ன பண்றது னு கேக்குறாங்க. அதுக்கு பீஷ்மர் சொல்றான் "டே.. பாண்டவங்களா... இப்ப நீங்க சண்ட போட்டா, நம்ம குலம் அழிச்சி நாசமாத்தான் போகும். உங்களுக்கு ராமாயண கதை தெரியுமாடா..?"னு கேக்கான். அதுக்கு பாண்டவங்க "தெரியும்"னு சொல்றாங்க.
பீஷ்மர் "டே.. ராமாயணத்துல 14 வரும் வனம் வாசம் போற மாதிரி, நீங்க ஒரு 14 வருசம் காட்டுக்குள்ள வனவாசம் போங்க.. அப்பறம் இங்க இவனுக கோபமும் கொறைச்சிரும், உங்க கோபமும் கொறைஞ்சிரும். அதுக்கு அப்றம் பாண்டவங்களும் கௌரவர்களுக்கும் ஒத்துமையா வாழலாம்" னு சொல்றான்.
பாண்டவர்களும் சரி சொல்லிட்டு வனவாசம் கெளம்புராணுக...
- தொடரும்..
No comments:
Post a Comment