தமிழகத்தில் பெரியாரின் தாக்கத்தினால் வளரமுடியாமல் தேங்கியிருந்த ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு, பார்ப்பனரல்லாத இந்து மதப் பிரச்சாரகர் விவேகானந்தனுக்கு பொதுவில் இருந்த இரசிகர் பட்டாளம் நம்பிக்கையளித்தது. இதையே அடித்தளமாக வைத்து தமிழகத்தில் RSS நுழைய திட்டம் போட்டது. அதன் விளைவுதான் குமரியில் கட்டப்பட்ட விவேகானந்தன் நினைவாலயம்.
பார்ப்பனரல்லாதோரையும் உள்ளிழுக்கும் வகையில் வருண சாதி அமைப்புக்கு பங்கம் வராமல் சில சீர்திருத்தங்கள் செய்ய வேண்டும் என்று பிரச்சாரம் செய்தவன் விவேகானந்தன். காங்கிரசு மட்டுமல்ல போலி கம்யூனிஸ்டுகள் கூட விவேகானந்தனை ஏற்றுக் கொள்பவர்கள் தான்.
பொதுவாக ஆர்.எஸ்.எஸ் தனது வளர்ச்சிக்கு மக்களிடம் இயல்பாக இருக்கும் மதநம்பிக்கைகளையும் விழுமியங்களையும் கவர்ந்து கொண்டும், அவற்றுள் ஊடுருவிக் கைப்பற்றியும் அவற்றின் உள்ளடக்கத்தை தமக்கேற்றவாரு மறுசீரமைத்து மதவெறியூட்டுவதையும் தமது செயல் தந்திரங்களில் ஒன்றாகக் கொண்டுள்ளது.
தமிழகத்தில் ஊடுறுவுவதற்கு ஆர்.எஸ்.எஸ் முயன்றது. காலம் காலமாக குமரி மாவட்ட கரையோர மீனவர்கள் கடலாடி வந்து உணவருந்தி ஓய்வெடுக்கவும், தமது வலைகளைக் காய வைக்கவும், ஆண்டுக்கொரு முறை சிலுவை வைத்து ‘குரூஸ்’ எனும் வழிபாடு நடத்தப் பயன்படுத்தி வந்த பாறையை ஆர்.எஸ்.எஸ் விவேகானந்தனுக்கு மணிமண்டபம் கட்ட குறிவைதத்து.
விவேகானந்தனோ நாடெங்கும் சுற்றுப்பயணம் செய்து பல இடங்களில் தங்கி தியானம் செய்திருக்கிறான், சொற்பொழிவுகள் ஆற்றியிருக்கிறான். அங்கேயெல்லாம் நினைவாலயம் காட்டாமல், RSS குறிப்பாக அந்தப் பாறையைத் தேர்ந்தெடுக்கக் காரணம் அதைப் பயன்படுத்தி வந்த மீனவர்கள் கிறிஸ்தவர்களாக இருந்ததும், அம்மாவட்ட மக்கள் தொகையில் அவர்கள் கணிசமான அளவில் கிறஸ்துவர்களா இருந்ததும் தான்.
அவர்கள் எல்லாம் பார்ப்பனியத்தின் கொடுங்கோன்மை, புறக்கணிப்பு காரணமாக மதம் மாறியவர்கள். அதே போல நாடார்களில் கணிசாமானோரும் கிறிஸ்தவர்களாக இருக்கின்றனர். மிச்சமிருக்கும் இந்து நாடார்களையும் ஏனைய சாதி இந்துக்களையும் திரட்டுவதற்கு இந்த விவேகானந்தர் நினைவு சின்னம் வழி செய்யும் என்றும்,
மேலும் இந்தியா முழுவதிலும் இருந்துவரும் மக்களுக்கு இந்த நினைவுச் சின்னம் ஒரு இந்துதுத்வ சுற்றுலாவாக இருக்கும் நன்மையையும் ஆர்.எஸ்.எஸ் கணித்தது.
ஆர்.எஸ்.எஸ் மீனவர்களுக்குறிய பாறையில் நினைவாலயம் அமைக்கப்பட்டால் தமது வாழ்வுரிமை பாதிக்கப்படும் என்பதை உணர்ந்த மீனவர்களும், மக்களும் அந்நடவடிக்கைகளை தம்மால் இயன்ற அளவில் கடுமையாக எதிர்த்தார்கள்.
அன்றைய காலகட்டத்தில் தமிழகத்தில் RSS இந்துவெறியர்களுக்கு பலமில்லாத காரணத்தால், கேரளாவில் இருந்து இரகசியப் படகுகள் மூலம் இறக்குமதி செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ் குண்டர்களையும், தமிழக போலீசையும் வைத்து மீனவர்களை அடித்து விரட்டி விட்டு இந்த ஆக்கிரமிப்பை வெற்றிகரமாகச் செய்தனர்.
மீனவர்களுக்கு அந்தப் பாறை மேல் இருந்த பாரம்பரிய உரிமையை மூடி மறைத்து, அவர்களிடம் இருந்து அதைத் தட்டிப் பறித்த ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு துணையாக மத்தியில் ஆட்சியிலிருந்த சாஸ்திரியும், மாநிலத்தில் ஆட்சியிலிருந்த பக்தவத்சலமும் பக்கபலமாய் இருந்துள்ளனர். காஞ்சி சங்கராச்சாரி மறைமுகமாகத் துணை நின்றான்.
இறுதியில் 1970ஆம் ஆண்டு விவேகானந்தர் நினைவாலயம் திறக்கப்பட்டது. கூடவே கன்னியாகுமரியில் ஆர்.எஸ்.எஸ்இன் நச்சுப்பணிக்கான தளவேலையும் ஆரம்பிக்கப்பட்டது. பின்னாளில் மாண்டக்காடு கலவரத்தை தூண்டிவிட்டு குளிர்காய்ந்தது இந்த RSS கும்பல்.
No comments:
Post a Comment