இந்த ராஜ்யத்தை ஆள நல்ல திறமையான வாரிசு வேணுமுன்னு மகன் வியாசர்முனிவர கூப்புடுறா. முனிவனும் டோய்ங் னு வந்து நின்னு, "உங்களுக்கு மறுபடியும் என்ன உதவி வேணும் தாயே" னு கேக்க, "மகனே முனிவா நம்ம ராஜ்ஜியத்த ஆள திறமையான வாரிசு வேணும், நீ அம்பிகை தங்கச்சி அம்பாலிகை கூட பண்ணி நல்ல வாரிசா ரெடி பண்ணு"னு சொல்றா.
அதுக்கு வியாசர்முனிவன் "உங்க பேச்ச எப்பவும் தட்டமாட்டேன் தாயே, நல்ல முகூர்த்த நேரமா சொல்லுங்க, நான் என்னைய தயார்படுத்திக்கிறேன்" னு சொல்லிட்டான்.
சத்தியவதி தன்னோட மருமகளான அம்பாலிகைய பாக்க போறா. "மருமகளே அம்பாலிகை, அத்த சொல்றத கவனமா கேளு. இன்னைக்கு நைட் உன்ன மேட்டர் பன்ன நம்ம உறவினர் ஒருத்தர் வருவார். அவர அனுசரிச்சி நடந்துக்கோ. உன்னோட அக்கா பண்ணுன தப்ப நீயும் பண்ணிராத. அவள மேட்டர் பண்ணும் போது கண்ன மூடுனதாலத்தான் பிறந்த குழந்தை குருடா பொறந்துச்சி. அதனால நீ எந்த காரணத்த கொண்டும் பண்ணும் போது கண்ன மட்டும் மூடிறாதடி தங்கம்" னு சொல்றா.
அதுக்கு அம்பாலிகை "அத்த நீங்க திறமையான வாரிசு கேக்குறீங்க. அக்கா பண்ணுன தப்ப நான் எப்பவும் பண்ணமாட்டேன். நீங்க தையிரியமா போங்க" னு சொல்லிட்டு தன்னோட பெட்ரூம்ம ரெடி பண்றா.
முகூர்த்த நேரம் ஆச்சி, பெட்ரூம்க்குள்ள முனிவரும் வந்துட்டான். அம்பாலிகை முனிவர பாத்து சாக்காயிட்டா "அத்த உறவினர் னு சொன்னாங்க, இவன் என்னடானா பஞ்சத்துல அடிபட்ட பயித்தியகாரன் மாதிரி இருக்கான். இவன் கூட படுத்து எப்படி புள்ளைய பெக்குறது"னு மனசுக்குள்ளேயே நினைச்சிக்கிட்டு, அத்த சொல்றத தட்டக்கூடாது னு படுக்க ரெடியாயிட்டா.
முனிவர் அவள தொடும் போது பயந்து நடுங்கி, உடம்பெல்லாம் வெலவெலத்து போகுது அவளுக்கு. இருந்தும் மேட்டர் பண்ணும் போது அவ கண்ன மூடாமா இருந்தா. ஒருபடியா எல்லாம் முடிஞ்சி முனிவர் வெளில வாரான்.
சத்தியவதி முனிவன பாத்து "மகனே போனா காரியம் நல்லபடியா இருந்ததா? ஏதும் கொறைகிற இருக்கா?" னு கேக்க, அதுக்கு முனிவன் "எல்லாம் நல்லபடியா முடிஞ்சது, ஆனா உன் மருமகள பண்ணும் போதுதான் அவளோட உடம்பு, பயத்துல நடுங்கி வெலவெலத்து போச்சி. அதனால பொறக்குற குழந்தை வொயிட் கலர்ல பொறக்கும், வேற எந்த குறையும் இருக்காது. குழந்தை வெள்ளையா இருக்குறதால அந்த குழந்தைக்கு பாண்டு னு பேர் வையுங்க"னு சொல்லிட்டு தீவுக்கு கெலம்பிட்டான்.
பத்து மாசம் கழிச்சி அம்பாலிகைக்கு வொயிட்டா ஒரு குழந்தை பிறக்குது. அதுக்கு பாண்டு னு பேர் வச்சி வளக்குறாங்க.
இருந்தாலும் சத்தியவதிக்கு மனக்கவலையா இருந்துச்சி. சத்தியவதி பீஷ்மர கூப்புடுரா. "மகனே பீஷ்மா.. இந்த ராஜ்யத்துக்கு ரெண்டு வாரிசு இருந்தும், ரெண்டுலயும் குறை இருக்குரமாதிரி தெரியாது. ஒன்னு என்னடானா வெள்ளாயா இருக்கு, இன்னொன்னுக்கு என்னடானா கண்ணு நொள்ளையா இருக்கு. நம்ம ராஜ்ஜியத்த ஆள இன்னும் நல்ல திறமையான வாரிசு வேணும் பீஷ்மா" னு பீஷ்மர்ட்ட சோகமா சொல்றா.
அதுக்கு பீஷ்மர் " நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும் சின்னம்மா.. சரி, முனிவர எப்ப வரசொல்ல போறீங்க.? இந்த தடவ அக்கா கூடயா? தங்கச்சி கூடயா? " னு கேக்க, "இந்த முறை அக்கா அம்பிகை கூட பீஷ்மா.."னு சொல்லிட்டு, சத்தியவதி தீவுல தவம் பண்ணிட்டு இருக்குற மகன் வியசார்முனிவன மறுபடியும் கூப்புடுறா. முனிவனும் கூப்பிட்டமாத்திறதுல வந்து நிக்கான்.
சத்தியவதி முனிவன பாத்து "மகனே வியசார்முனிவா... நீ ரெண்டு வாரிசு கொடுத்த. அந்த ரெண்டு குழந்தைகளும் நாங்க திருப்திப்படுறமாதிரி இல்ல. அதனால நாங்க திருப்தி படுறமாதிரி ஒரு வாரிச கொடு" னு கேக்குறா.
அதுக்கு முனிவன் "தாயே.. இந்த தவறான காரியத்த அடிக்கடி பண்ணுனா, என்னோட தவதுக்கு கேடு உண்டாகும். இதுதான் உங்களுக்கு லாஸ்ட், இந்த மாதிரி வேலைக்கு இனிமே என்னை கூப்புடாதீங்க. நல்ல முகூர்த்த நேரமா பாத்து பொண்ண ரெடி பண்ணுங்க, உங்களுக்காக கடைசியா இத பண்ணுறேன்."னு சொல்லிட்டான்.
சத்தியவதி அம்பிகைய பார்த்து விசயத்த சொல்றா. "மருமகளே போன டைம் கண்ன மூடுன மாதிரி இந்த தடவ பண்ணிராத. நமக்கு திறமையுள்ள வாரிசு வேணும். நீ சீக்கிரமா உன்னோட பெட்ரூம ரெடி பண்ணுடி" னு சொல்லிட்டு கிளம்பிட்டா.
அம்பிகை எரிச்சல்ப்பட்டு யோசிக்கிறா.."போன தடவ இந்த முனிவப்பய மூஞ்ச பாக்க முடியாமதானே கண்ன மூடிகிட்டேன். இப்ப அத்தகாரி மறுபடியும் அதே முனிவப்பயலுக்கு கூட்டிகுடுக்க பாக்கலே" னு யோசிச்சிக்கிட்டு இருக்கும்போதே ஒரு ஐடியா தோணுது.
அம்பிகை பெட்ரூம ரெடிபண்ணிட்டு அவளுக்கு பதிலா அவளோட வேலைக்கார பொண்ண உக்கார வச்சிட்டு எஸ்கேப் ஆயிருறா. முனிவன் வந்து மேட்டர தொடங்கும் போது பொண்ணு சேன்ஞ்ச் ஆனது அவனுக்கு தெரிஞ்சி போகுது.
முனிவன் வேலைக்கார பொண்ண பாத்து "யார் உன்ன மாத்துனது"னு கேக்க, "என்ன மன்னிச்சிருங்க முனிவரே.. அம்பிகையம்மா தான் உங்க கூட படுக்க புடிக்கலனு என்ன அனுப்பி வச்சாங்க"னு சொல்றா.
அதுக்கு முனிவன் "பயப்படத பணிவிடை பெண்ணே.. நீயும் அழகாத்தான் இருக்க, உனக்கு பொறக்க போகும் குழந்தையும் இந்த ராஜியத்துக்கு வாரிசு ஆவான்"னு பணிவிடை பொண்ணு மேல பாஞ்சிறுறான் முனிவன்.
பத்து மாசம் கழிச்சி வேலைக்கார பொண்ணுக்கு ஒரு குழந்தை பிறக்கு. அந்த குழந்தைக்கு விதுரன் னு பேர் வச்சி வளக்குறாங்க...
- தொடரும்
No comments:
Post a Comment