Tuesday, July 31, 2018

தொடர் 1 - காஷ்மீரிகள் ஏன் கல்லெறிகிறார்கள்.? - 75,000 ரூபாய்க்கு விலைக்கு வாங்கப்பட்ட காஷ்மீர்..

காஷ்மீரிகள் ஏன் கல்லெறிகிறார்கள்?” காஷ்மீரிகளுக்கு இந்தியாவின் எல்லைகளைக் காக்கும் படைகளின்மேல் எந்த மரியாதையும் இல்லையே, ஏன்?

கொல்லப்படும் போராளிகளின் இறுதி ஊர்வலங்களுக்கு லட்சக்கணக்கான காஷ்மீரிகள் கூடுகிறார்களே, ஏன்?

இந்தக் கேள்விகளுக்கு ஆசிஃபாவின் முறிக்கப்பட்ட முதுகெலும்பும், குனான் போஷ்புராவில் வழிந்தோடிய குருதி வெள்ளமும் பதிலளித்துள்ளன.

ஆனாலும், பார்ப்பன தேசியத்தில் ஊறிய இந்தியப் பொதுப்புத்திக்கு இந்தப் பதில்கள் புரிவதில்லை. காஷ்மீரிகளைப் புரிந்துகொள்ள காஷ்மீரின் முந்தைய ஆட்சியாளர்களையும் புரிந்து கொள்வது அவசியம். ஏனென்றால் தமிழகமும் ஒரு காஷ்மீராக காவி பயங்கரவாத ஆட்சியால் உருவாக்கப்பட்டகொண்டிருக்கிறது.

காஷ்மீர் என்றென்றைக்கும் பாரத தேசத்தின் பகுதியாகவும் இந்து மன்னர்களின் ஆட்சியின் கீழும் இருந்தது என்பதுதான் சங்கிகள் கூறிவரும் கதை. ஆனால் உண்மை அதுவல்ல.

ஜம்முவின் மன்னராக இருந்த குலாப் சிங் டோக்ரா, 16-03-1846 அன்று கிழக்கிந்தியக் கம்பெனியிடமிருந்து இழிபுகழ் பெற்ற அமிர்தசரஸ் ஒப்பந்தத்தின் மூலம் 75 ஆயிரம் ரூபாய்க்கு காஷ்மீரை விலைக்கு வாங்கினான்.

மலைச் சிகரங்களும், பள்ளத்தாக்குப் பகுதிகளும் சூழ்ந்த அந்த நிலப்பரப்புடன் அதில் வாழும் மனிதர்கள் உள்ளிட்ட உயிரினங்களையும் டோக்ராக்களிடம் விற்றுக் காசாக்கியது கிழக்கிந்திய கம்பெனி.

அன்றைய காஷ்மீரின் மக்கள் தொகையைக் கணக்கிட்டால், தலையொன்றுக்கு ஏழேகால் ரூபாய்க்கு வாங்கிப் போட்டிருக்கிறார் குலாப் சிங் டோக்ரா.

அந்தக் காலகட்டத்தில் காஷ்மீரால் தனது கல்லாப் பெட்டிக்கு எந்தப் பயனுமில்லை என்பதே ஆங்கிலேயக் கும்பினியரின் கணக்காக இருந்திருக்கிறது.

குலாப் சிங்கின் ஆட்சி 1846-ல் இருந்து 57 வரை நடந்தது. அதன் பின் ரன்பீர் சிங் (1857-1885), பிரதாப் சிங் (1885-1925), இறுதியாக ஹரிசிங் (1925-1947) என ஒரு நூற்றாண்டுக்கும் மேல் நீடித்த டோக்ராக்களின் ஆட்சியில் இருந்தது.

காஷ்மீரை ஆண்டு வந்த இந்து மன்னர்களால் விவசாயிகளான இசுலாமிய மக்கள் சொல்லமுடியாத கடுமையான கொடுமைகளை அனுபவித்து வந்துள்ளனர்.

மக்களைத் துன்புறுத்திய நேரம் போக மிஞ்சிய நேரங்களில் காஷ்மீரை ஆண்ட மன்னர்கள் என்னென்ன செயலில் ஈடுப்பட்டார்கள் என்பதை அடுத்த தொடரில் பார்ப்போம்.

No comments:

Post a Comment