Wednesday, July 25, 2018

தந்தையை கொன்று 63 நாயன்மார்களில் ஒருத்தனான சாண்டீஸ்வர நாயனார்...

சோழவளநாட்டில் மணியாற்றின் கரையில் சேய்ஞலூர் என்னும் ஊரில் எச்சத்தன், பவித்திரை எனும் தம்பதிகளுக்கு ஆண்மகனாக பிறந்தான். பெற்றோர் விசாரசருமா என்ற பெயரை வைத்து அன்புடன் வளர்த்து வந்தனர்.

ஒருநாள் வேதமோதும் மழலைப்பட்டாளத்துடன் விசாரசருமர் விளையாடிக்கொண்டிருந்தார். பசுக்கூட்டங்களுடன் மேய்ந்துகொண்டிருந்த கன்றை ஈய்ந்த ஒரு பசு இடையனை கொம்பினால் முட்டப்போயிற்று. கோவமான இடையன் தன்கையிலுள்ள கோலால் அப்பசுவை அடித்து விரட்டினான்.  பசுவை அடிப்பதைக் கண்ட விசாரசருமர் இடையனைத்தடுத்து, "டே பசுக்களின் உடலுறுப்புக்களில் தேவர்களும் முனிவர்களும்  குடியிருக்கின்றார்கள். ஈஸ்வரனிறு பஞ்சகவ்யம் அளிக்கும் அப்பசுக்களை மேய்பது சிறந்த தொழிலாகும்" அவ்வூர் பண்ணையாருட்ட பேசி, அந்த மாடுகளை மேய்க்கும் பணியில் இறங்கிட்டான்.

பசுவின் பால் வளமுடன் பெருகிவருவதைக் கண்ட விசாரசருமர் நாம் ஏன் அப்பாலை சிவலிங்கத்திற்குத் ( சிவனோட ஆணுறுக்கு) அபிஷேகம் செய்யக் கூடாது எனச் சிந்தித்தான்.

மணியாற்றின் கரையில் ஒர் மணல் திட்டில் ஆத்திமரத்தின் நிழலில் சிவலிங்கம் (சிவன் ஆணுறுப்பை) ஒன்றை வெம்மண்ணில் செய்தான். பசுவின் பாலினால் அபிஷேகம் செய்தான், ஆடினான், பாடினான். தொடர்ந்து நாள் தோறும் சிவபூஜையும் அபிஷேகமும் நடத்தி வந்தான்.

இந்த முட்டாள்தனமான செயலை பார்த்த ஒருவன் ஊருக்குச் சென்று பசுவின் சொந்தக்காரர்களிடம் விசாரசருமன் பாலை வீணாக்கித் தரையில் கொட்டுகின்றான் எனக் கூறினான்.  அதுகேட்டு வெகுண்ட அந்தணர்கள் எச்சத்தனிடம் " உன்னோட மகன் விசாரசருமார் மண்ணுல சுன்... சென்ச்சி என்னோட மாட்டு பாலயெல்லாம் வேஸ்ட் பண்ணிட்டான்" என்று கம்பலன்ட் பண்ணிருக்கான். அவனோட அப்பன் மன்னிப்பு கேட்டு தன் மகனைத் தண்டிப்பதாகக் கூறினார்.

மறுநாள் விசாரசருமரும் பசுக்களை மேய்ப்பதற்குச் சென்றார். வழக்கம் போல மணியாற்றில் நீராடி சிவலிங்கத்தைப் அபிசேகம் செய்து, மலர்களை வைத்துக் குடங்களில் பாலைச் சேர்த்துக் வைத்துக் கொண்டு சிவபூசையைத் தொடங்கினான்.

சற்றுத் தூரத்தில் இதை பார்த்த எச்சத்தன் பாலாபிஷேகத்தைக் கண்டவுடன் வேகமாக இறங்கி ஓடி வந்து, தன் கையிலுள்ள கோலால் விசாரசருமரை அடித்து காலால் எட்டி உதைத்தார். கடுஞ்சினம் கொண்ட தகப்பனார் அபிஷேகத்திற்கு வைத்திருந்த பாற்குடங்களை எட்டி உதைத்து கீழே கொட்டினார்.

இடையூறு செய்தவர் தன் தந்தை என்பதை அறிந்தும், அவர் செய்தது சிவாபாராதமாகையால் அவரது பாசத்தைக் களையவேண்டும் எனக் கருதி தமக்கு முன்னே கிடந்த அருவளை எடுத்தான். அதைக் கொண்டு தன் தந்தையின் கால்களை வெட்டி எறிந்தான். எச்சத்தன் உயிர்நீத்தான். மறுபடியும் அவன் சிவபூஜை செய்ய தொடங்கிட்டான்.

விசாரசருமரின் பூஜைக்கு மகிழ்ந்த இறைவன் உமையம்மையோடு காட்சியளித்தான். தன் திருக்கரங்களால் அவனை கட்டிப்பிடித்து “நம்பொருட்டு பெற்ற தந்தையின் கால்களை வெட்டியெறிந்து இறக்கச்செய்தாய் ஆதலின் இனிமேல் நாமே உமக்குத் தந்தையானேம்” என்றருள் புரிந்து மார்போடு அணைத்து தழுவி உச்சிமோந்தான்.

அவனை தொண்டர்களுக்கெல்லாம் தலைவராக்கினான். “தாமுண்ட அமுதும் பரிவட்டம் மற்றும் மாலைகள் உனக்கே ஆகுக” என்றுரிமையாக்கி “சண்டீசன்” என்ற பதவியையும் தந்து அருள்பாலித்து தம்முடியில் இருந்து கொன்றை மலர்மாலையை எடுத்து விசாரசருமருக்குச் சூட்டினான். விசாரசருமர் “சண்டேஸ்வர நாயனார்” ஆனான்.

- டக்ளஸ் முத்துக்குமார்

No comments:

Post a Comment