Monday, July 30, 2018

இந்தியாவில் பெருகிவரும் குழந்தை திருமணமும் - சு... போராட்ட தியாகி திலகரும்...

குழந்தை உரிமைக பாதுகாப்புக்கான தேசிய கமிசன், மற்றும் எங் லைவ்ஸ் இந்தியா என்ற அமைப்பும் நடத்திய சமீபத்திய ஆய்வின்படி...

தேசிய அளவில் ஆண் குழந்தைகளில் 1.32%, பெண் குழந்தைகளில் 1.9% பேர்களுக்கு குழந்தை திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.இருப்பதிலேயே மோசமான மாநிலமாக இருப்பது இராஜஸ்தான் தான்  என்கிறது இவ்வாய்வு. பெண் குழந்தைகளில் 10-17 வயது குழந்தைகளில் 8.3% குழந்தைகளும், 10-20 வயதுடைய ஆண் குழந்தைகளில் 8.6% குழந்தைகளும் குழந்தை திருமணத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

குழந்தை திருமணங்கள் அதிகம் நடைபெறும் முதல் 20 மாவட்டங்கள் இராஜஸ்தான், குஜராத், மத்தியப்பிரதேசம், உத்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருப்பது தற்செயலானது அல்ல. இவ்வாய்வில் குழந்தை திருமணங்கள் மிகமிக குறைவாக நடைபெறும் முன்னேறிய மாநிலங்களாக தமிழ்நாடு உள்ளிட்ட தென் இந்திய மாநிலங்கள், காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள் இருப்பது தெரியவந்துள்ளது.

தொழில் துறையில் முன்னேறிய மாநிலமாக அறியப்படும் மகாராஷ்டிர மாநிலத்தில் பந்தாரா மாவட்டத்தில் 2010ஐ விட ஐந்து மடங்கு குழந்தை திருமணம் அதிகரித்துள்ளது.

குழந்தை திருமணங்களில் முதல் 70 மாவட்டங்கள் எடுத்துக்கொண்டால் ஆந்திராவில் சில மாவட்டங்கள் வருகின்றன. ஆனால் தமிழகம் அப்பட்டியலில் இல்லை. மாட்டு மூத்திரத்தை குடிக்கும் மாநிலங்களைவிட மாட்டுக்கறி சாப்பிடும் தமிழகம்,கேரளா போன்ற மாநிலங்கள் குழந்தை திருமணங்களை தடுப்பதில் மிகவும் முன்னேறி இருப்பதை இப்புள்ளிவிவரம் காட்டுகிறது.

இந்தியாவில் நடக்கும் குழந்தைத் திருமணங்களுக்கு வேதகாலம் தொடங்கி இன்று வரை ஒரு நெடிய பாரம்பரியம் இருக்கிறது. ‘பெண்குழந்தை பூப்பெய்தும் முன் திருமணம் செய்து வைக்கா விட்டால் பெற்றோர் நரகத்திற்கு செல்ல நேரிடும்’ என்றும் ‘பூப்பெய்திவிட்ட பின்னர் கணவன் இல்லை என்றால் பெண்கள் நடத்தை கெட்டு விடுவார்கள்’ என பலப்பல காரணங்களை கூறி மக்களை நம்ப வைத்திருக்கிறது பார்ப்பன இந்துமதம்.

அதே போல இதை எதிர்த்த போராட்டத்திற்கும் ஒரு பாரம்பரியம் இருக்கிறது. குறிப்பாக இன்று நடைமுறையில் உள்ள குழந்தைத் திருமண தடைச் சட்டமும் அதற்கு முந்தைய சம்மத வயது சட்டமும் எளிதில் நிறைவேறி விடவில்லை. பெரியார், மலபாரி போன்றவர்கள் தொடர்ந்து இதற்காக குரல்கொடுத்து வந்தார்கள்.

1889-ம் ஆண்டு வங்காளத்தைச் சேர்ந்த புலோமினி என்ற 11 வயது சிறுமியுடன் அவளது 31 வயது கணவன் உடலுறவில் ஈடுபட்டு கொலை செய்தான். சிறுமிகளை திருமணம் செய்து உடலுறவு கொள்ளுதல் என்பது அன்று வழக்கத்தில் இருந்த ஒன்று. இதைத் தொடர்ந்து குழந்தைகளுடன் உடலுறவில் ஈடுபடுவதை தடை செய்யக் கோரினர்கள் முற்போக்காளர்கள். இந்த விவகாரம் விவாதப் பொருளாகியது.

ஆங்கிலேய அரசு சம்மத வயது சட்டத்தை (Age of Consent Act, 1891) தாக்கல் செய்தது. இதன்படி 12 வயதுக்கு உட்பட்ட பெண்களுடன் உடலுறவில் ஈடுபடுவதை பாலியல் வன்முறை என்று அறிவித்தது. இங்கு ஒன்றை கவனிக்க வேண்டும். திருமண வயதை அல்ல, உடலுறவில் ஈடுபடுவதற்கான வயதைத் தான் அரசு உயர்த்தியிருந்தது.

குழந்தைகளுடன் உடலுறவில் ஈடுபடக்கூடாது என்றதும் வெகுண்டெழுந்தார்கள் இந்து ‘தேசியவாதிகள்’. இந்த சட்டம் இந்து மதவிவகாரத்தில் தலையிடுவதாகவும், இது ஒரு  ஆபத்தான முன்னுதாரணமாக ஆகிவிடும் என்றும் கூறி இந்த சட்டத்தை கடுமையாக எதிர்த்தவர் யார் தெரியுமா? ஆர்.எஸ்.எஸ்-ன் மூதாதையர்களின்  ஒருவரும் மாபெரும் தேசியவாதி என்று பார்ப்பன இந்துமத வெறியர்களால் பாராட்டப்படும் ‘லோகமானிய’ திலகர் தான் அவன்.

திலகர் தன்னுடைய கேசரி இதழில் இந்தச் சட்டத்தை எதிர்த்து கட்டுரைகளை எழுதினார். இந்து மதத்தின் அடிப்படை கூறுகளில் கைவைப்பதற்கு வெள்ளைக்காரர்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்று  முழங்கினான். மேலும் இந்த சட்டத்திற்காக போராடிய மலபாரி என்பவர் பார்சி இனத்தவர் என்பதால் அவர் இந்து மதவிவகாரங்களில் தலையிடாமல் தன்னுடைய பார்சி இனப் பெண்கள் விசயத்தில் மட்டும் கவனம் செலுத்துமாறு அவரை கண்டித்தான் திலகர்.

விளக்குமாற்றுக்கு பட்டுகுஞ்சம் கட்டுவது போல இன்று திலகரை தேசியவாதியாக காட்ட இந்துத்துவா ஆதரவாளர்கள் பகீரத முயற்சி செய்கிறார்கள். அரவிந்தன் நீலகண்டன் ஆங்கிலய அரசு கொண்டு வந்ததால் தான் அந்த சட்டத்தை திலகர் எதிர்த்தான் என்று  கேலிக்குரிய வாதங்களை வைத்தாவது திலகருக்கு முட்டுக்கொடுக்க முடியுமா என்று பார்க்கிறார்.

அன்றைய சட்டசபைகளில் இருந்த பார்ப்பன இந்துமத வெறியர்களாலும் அந்த சட்டம்  எதிர்க்கப்பட்டது. ஆயினும் இவர்களின் எதிர்ப்புகளை மீறி சட்டம் நிறைவேறியது.

ஆனாலும் இன்றுவரை இந்த குழந்தை திருமணம், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை அதிகம் நடைபெறும் மாநிலங்களை பாஜக ஆள்வதும், அங்கே செல்வாக்கோடு இருப்பதும் தற்செயலானதல்ல. ஆதிக்க சாதிவெறி, அகமணமுறை இறுக்கம், லவ்ஜிகாத் பெயரில் முசுலீம் மக்களை அச்சுறுத்துவது என பார்ப்பனியம் இங்கே கோலேச்சுகிறது.

குஜராத், ம.பி, உ.பி என ‘மாட்டு மூத்திர ' மாநிலங்களின் அருகதை சந்தி சிரிக்கிறது. வட இந்தியாவை சுடுகாடாக வைத்திருக்கும் இந்த புண்ணியவான்கள் தான் திராவிட இயக்கம் தமிழகத்தை சீரழித்துவிட்டதாகவும், இவர்கள் வந்து தூக்கி நிறுத்த போவதாகவும், மயிரை புடுங்குவதாகவும் சவடால் அடிக்கிறார்கள்.

ஆதாரம் :
Child Marriages—Especially Of Girls—Rise in Urban India, Decline In Rural.

A Statistical Analysics of CHILD MARRIAGE IN INDIA-based on census

Douglas Muthukumar

No comments:

Post a Comment