Tuesday, July 31, 2018

தொடர் 2 - காஷ்மீரிகள் ஏன் கல்லெறிகிறார்கள்.? - குலாப் சிங் ஆட்சி 1846 - 1857

...காஷ்மீரை விலைக்கு வாங்கிய குலாப் சிங்கின் ஆட்சி 1846-57 முதல் அதன் பின் ரன்பீர் சிங் (1857-1885), பிரதாப் சிங் (1885-1925), இறுதியாக ஹரிசிங் (1925-1947) என ஒரு நூற்றாண்டுக்கும் மேல் நீடித்தது.

முதலில் குலாப் சிங்கின் மன்னனை பற்றி பார்ப்போம்.

குலாப் சிங் ஒரு பணவெறி பிடித்தவன். குலாப் சிங்கை யார் வேண்டுமானாலும் சுலபமாகப் பார்த்து விடலாம்.

மக்கள் யாராவது அவரிடம் மனுக் கொடுக்க விரும்பினால், ஒரு கையில் மனுவையும் இன்னொரு கையில் ஒரு ரூபாய் நாணயத்தையும் வைத்துக் கொண்டு “மகாராஜா… மனு” என்று உரக்கக் கத்த வேண்டும்.

பசித்த கழுகைப் போல் கையிலிருந்து பணத்தைப் பிடுங்கிக் கொண்டுதான் என்ன விசயம் என்றே கேட்பான். குலாப் சிங்.

இப்படி ஒருமுறை பணத்தைப் பறிக்க குலாப் சிங் பாய்ந்தபோது மனுவுடன் வந்தவர் சட்டென்று கையை மூடிக் கொண்டிருக்கிறார்.

தனது பிரச்சினையைக் கேட்டால்தான் காசு கொடுப்பேன் என்று சொல்லியிருக்கிறார். அதன் பின் அந்த ஒற்றை ரூபாய்க்காக பொறுமையாக உட்கார்ந்து அவரது பிரச்சினைக்கு காது கொடுத்திருக்கிறான் குலாப் சிங்.

இவன் தனது சமஸ்தானத்தை வளமைப்படுத்த, செல்வங்களை பெருக்கிக்கொள்ள வேளாண் உற்பத்தியை அதிகப்படுத்தினான். அதன் விளைவு அவன் ஆட்சியில் கீழ் இருந்த முஸ்லிம் மக்களை அடிமையின் கீழ்நிலையில் நடத்தினான். ஓய்வெதும்மின்றி உழைக்கும் மக்களுக்கு ஒரே பொழுது உணவு மட்டுமே கொடுக்கப்பட்டது.

தொடரும்...

No comments:

Post a Comment