Tuesday, July 31, 2018

பகுதி 9 - குந்தி பாத்த சூரியன் - கர்ணன் பிறப்பும், பாண்டு திருமணமும் - இதுதான்.. மகாபாரத.. கதை

குந்திபோஜன் எனும் யாதவ மன்னனுக்கு ரெம்ப நாளா குழந்தை  பாக்கியம் இல்லாம வருத்ததுல இருந்தான். அவனோட அத்தை மகன் சூரனுக்கு ஒரு பெண் குழந்தை பொறக்குது. அந்த குழந்தைய தன் மாமன் குந்திபோஜனுக்கு தத்துக்கொடுத்துட்டான் சூரன்.

குந்திபோஜன் அந்த குழந்தைக்கு குந்தி னு பேரு வச்சி வளக்குறான். குந்தி வளந்து கன்னிப்பொண்ணா ஆயிட்டா. ஒரு சமயம் அவங்க அரண்மனைக்கு துர்வாசமுனிவர் விருந்துக்கு வரான். அந்த முனிவன் ரெம்ப கோபக்காரன். விருந்து பரிமாறுறவங்க பயந்து பயந்து பரிமாறுறாங்க, குந்தியும் முனிவனுக்கு விருந்து பரிமாறி பணிவிடை செய்யுறா.

முனிவனுக்கு குந்தி செய்யுற பணிவிடை புடிச்சி போயி, குந்திய தனியா கூப்புடுறான். நம்மல எதுக்கு இந்த முனிவர் கூப்புடுறான் னு இவளும் போறா. குந்திட்ட முனிவர் சொல்றான் " குந்தி நீ பரிமாறுனதும், பணிவிடை செஞ்சதும் எனக்கு புடிச்சிபோச்சி. ஆதனால உனக்கு ஒரு வரம் தாறேன். இந்த மந்திரத்த சொல்லி யார மேட்டர்க்கு கூப்புடுரயோ, அவங்க உன் முன்னாடி வந்து நிப்பாங்க. உன்ன மாட்டர் பாத்து குழந்தையும் கொடுப்பாங்க" னு சொல்லி குந்திக்கு வரத்த குடுத்து அதுக்கான மந்திரத்தையும் குடுக்கான்.

கொஞ்ச நாளுக்கு பிறகு குரும்புத்தனமான குந்தி நந்தவனத்துல தனியா இருக்கா. "ரெம்ப போரடிக்குதே.. அந்த மந்திரத்தயாவது சொல்லி டயம்பாஸ் பண்ணுவோம்"னு சூரியன நினைச்சி மந்திரத்த சொல்றா. உடனே சூரியபகவான் அவ முன்னாடி வந்து டோய்னு நிக்கிறான்.

குந்தி நான் ரெடி நீ ரெடியா னு சூரியன் கேக்க, குந்தி பயந்துட்டா. "ஏய் பெண்ணே பயப்படாதே, உன்ன முடிச்சிட்டு ஒரு குழந்தைய குடுத்துட்டு போயிருவேன். உனக்கு பிறக்குற குழந்தை தெய்வ குழந்தை. அதனால அவன் பொறக்கும் போதே கவச குண்டலத்தோட பொறப்பன். அவனை யாரும் வெல்லமுடியாத வீரனா இருப்பான், தானம் பண்றதுல வள்ளலா இருப்பான்"னு சொல்றான்.

அதுக்கு குந்தி "நான் இன்னும் கன்னிகழியாத பொண்ணு. அதனாலதான் பயமா இருக்கு"னு சொல்றா. அதுக்கு சூரியன் "பெண்ணே பிறக்கப்போகும் குழந்தை தெய்வ குழந்தை அதனால அது பொறந்ததும் நீயும் பழைய மாதிரி கண்ணிபொன்னா மாறிருவ"னு சொல்றான். குந்தியும் மேட்டர்க்கு சரி னு சொல்லிட்டு சூரியபகவன ஆலிங்கனம் செய்யுறா. எல்லாம் முடிச்சிட்டு சூரியன் கெலம்பிருறான்.

பிறகு குந்திக்கு ஒரு குழந்தை கவசகுண்டலத்தோட பொறக்கு. இன்னும் கல்யாணமே ஆகளயே, குழந்தையோட நம்மல பாத்தா காரித்துப்புவாங்களே னு, குழந்தைய ஒரு பெட்டியில வச்சி ஆத்துல அனுப்பிருறா. ஆத்துக்கு அந்தபக்கமா இருந்த திருதராஷ்டிரனோட தேர்ப்பாகன் கண்ணுல தண்ணில மிதந்துவர பொட்டி தென்படுது.

தேர்ப்பாகன் அந்த பொட்டில தங்க வைரம் முத்துக்கள் இருக்குமுனு நினைச்சி பொட்டிய திறக்கான், கழுத்துல கவச குண்டலத்தோட குழந்தை இருக்குறத பார்த்து அதிர்ச்சி ஆகுறான். "எந்த கண்டாரஓலி இந்த காரியத்த பண்ணுனது"னு குழந்தைய தூக்கிட்டு போயி வீட்டுல இருக்குற அவனோட பொண்டாடிக்கிட்ட காட்டுறான்.

தேரோட்டி பொண்டாடி குழந்தைய பாத்து சந்தோசப்படுறா. "நமக்கும் குழந்தை இல்ல, இந்த குழந்தை பாக்க நல்லாருக்கு அதனால இந்த குழந்தைக்கு கர்ணன் னு பேரு வச்சி நாமலே வளப்போம்" னு புருசன்ட்ட சொல்றா. அவனும் சரினு சந்தோசமா வளக்குறாங்க.

இந்த சமயத்துல குந்திபோஜன் மன்னன் தன்னோட மக குந்திக்கு ஒரு கல்யாணத்த பண்ணிப்பாக்கணுமுனு ஆசப்படுறான். அமைச்சர எல்லாம் கூப்பிட்டு குந்திக்கு சுயவரம் நடத்த, எல்லா அரசர்களுக்கும் ஓல அனுப்ப சொல்றான். சுயவர ஓலய அனுப்புறாங்க.

சுயவர ஓல பீஷ்மர் கைக்கு கிடைக்குது. உடனே பீஷ்மர் தன்னோட தம்பியின் ரெண்டாவது வாரிசான பாண்டுவ கூப்புடுறான். பாண்டு "என்ன பெரியப்பா" னு வரான். பீஷ்மர் பாண்டுவ பாத்து "டே பாண்டு பயலே.. பக்கத்து நாட்டுல குந்திபோஜன் மன்னன் அவன் மகளுக்கு சுயவரம் நடத்துரான்டா, அதுல போயி கலந்துக்கோ, நீயும் எத்தனை நாளைக்குத்தான் சொந்த கையில வாழ்வ, உங்க அண்ணன் திருதராஷ்டிரனுக்கு மாதிரி உனக்கும் கல்யாணம் ஆகவேண்டாமா.?, உடனே புறப்புடு"னு சொல்றான். பாண்டு கெலம்பிட்டான்.

சுயவரத்துல எல்லா நாட்டு மன்னனும் வரிசையில உக்காதிருக்காங்க, பாண்டுவும் லயன்ல உக்காதிருக்கான். குந்தி பாகுறதுக்கு ஏஞ்சல் மாதிரி இருக்கா. லட்டு மாதிரி இருக்குற குந்திய பாத்து எல்லாம் நாட்டு இளவரசர்களும் வழிஞ்சிகிட்டு கிடக்கானுக. பாண்டுவும் ஓவரா வலியுறான். குந்தி கையில மாலையோட, யாரு கழுத்துல போடலாமுனு லயன்ல இருக்குற எல்லாம் இளவரசங்களையும் பாக்குறா. பண்டுவயும் பாக்குறா "என்னடா இவன், யாருக்கும் சம்பந்தமில்லாம ஒயிட்டா உக்காந்துருக்கான். ஆளும் பாக்க ஒரு டைப்பா இருக்கான்"னு மாலைய பாண்டு கழுத்துல போடுறா..

பண்டுக்கும், குந்திக்கும் கல்யாணம் ஆகுது. குந்திபோஜன் மன்னன் சீர்வரிசையோட மகள அஸ்தினாபுரத்துக்கு அனுப்புறான். பீஷ்மர் பாண்டுவுக்கு இன்னொரு பொண்டாட்டி இருந்தா சிறப்பா இருக்கிமுனு, யோசிக்குறான்.  மித்திரநாட்டு மன்னன் சிபிச்சக்ரவர்த்தி மகனான மித்திரனின் மகளை பண்டுவுக்கு பொண்ணு கேக்குறான் பீஷ்மர். அந்த பொண்ணோட பொண்ணோட பேரு மாத்ரி. அழகுணா அழகு.. அப்படி ஒரு அழகு. அவளுக்கு ஒரு சகோதரன் இருந்தான். அவன் பேரு சல்லியன்.

சல்லியனுக்கு பீஷ்மர புடிச்சிப்போக தங்கச்சிய பண்டுவுக்கு தர சம்மதிச்சான். பாண்டுக்கும் மாத்ரிக்கும் கல்யாணம் கிராண்டா நடந்துச்சி. அந்த டைம்ல பாண்டு போர் செஞ்ச மகதம், விகேதம், காசி, அங்கதம் னு நாளு நாட்டயும் செயிக்கான்.

அப்புறம் பீஷ்மர் தன்னோட தம்பியின் கடைசி வாரிசான விதுரனுக்கு பொண்ணு தேடுறான். கிஷ்ணனோட பாட்டன் தேவகன் ங்கிற மன்னனுக்கு ஒரு ஐயர் மாமி மூலம் பொறந்த சாத்வி ங்கிற பொண்குட்டிய விதுரனுக்கு கட்டி வைக்கிறான்.

- தொடரும்..

No comments:

Post a Comment