Tuesday, July 31, 2018

பகுதி 10 - பரிகாரமும் இல்ல, பனியாரமும் இல்ல - பண்டுவுக்கு முனிவர் விட்ட சாபம் - இதுதான்.. மகாபாரத,, கதை

ஒரு வழியா பீஷ்மர் தம்பி மகன்க மூணு பேருக்கும் கல்யாணத்த முடிச்சி வச்சிட்டான். பிறகு  பாண்டுவ ஹனிமூன்க்கு அனுப்பி வச்சான் பீஷ்மர். பாண்டுவும் அவனோட பொண்டாட்டிக குந்தி, மாத்ரியோட ஊட்டி மாதிரி இருக்குற ஒரு மலங்காட்டு பக்கம் தென்னிலவுக்கு கெளம்பிட்டான்.

அருமையான காட்டிப்பகுதி, சலசல னு விழுற அருவி சத்தம், ஆள மயக்கும் பூஞ்சோலை, வெல்வெட் மாதிரி புல்வெளிகள், மூடேத்துர ஈரக்கத்து, அதோட புசுபுசுனு பேய்ர சாரல் மழை னு செம அட்வெஞ்சர் பகுதிக்கு ஹனிமூன் வந்துருக்காங்க. அங்க ஒரு கூடாரத்த போட்டு பாண்டு, ரெண்டு பொண்டாடிகளோட தங்கிருக்கான்.

பாண்டு ஒரு வேட்டை பிரியன். "ரெண்டுபேரும் டெண்டுக்குள்ளயே இருங்கடி, நான் வேட்டைக்கு போயிட்டு வாரேன்"னு வேட்டைக்கு கெளம்பிட்டான். சமவெளி பக்கம் ஒரு மான் கூட்டத்த பாக்குறான். மான் கூட்டத்தில ரெண்டு மான் மட்டும் தனியா ஜோடி சேர்ந்து நிக்கிது. ஜென்ஸ் மான் லேடீஸ் மான மேட்டர் பாக்க சொனைங்கிட்டு கிடக்கு. அந்த நேரம் பாத்து பாண்டு பய மேட்டர்க்கு சொணங்குன ஆண் மான் மேல அம்பு விட்டுருறான்.

"எந்த பயபுள்ளடா என் மேல அம்பு விட்டது''னு மார்ல அம்பு பாஞ்ச நிலைல, தரையில விழுந்துருது ஆண்மான். பாண்டு அங்கிட்டும் இங்கிட்டும் முழிக்கிறான், "மான அம்பு விட்டா யார்ரா பேசுறது"னு மானு பக்கத்துல போறான். "என்ன ஏண்டா அம்பு விட்ட?" னு மானு பாண்டவ பாத்து கேக்க, "தெரியாம நடந்துருச்சி மானே"னு பாண்டு சொல்றான். அதுக்கு மான் "நான் யாருன்னு தெரியுமாடா...? என் பேரு கிந்தகமுனிவன், உங்கள மாதிரி மனுச பிறவியா வாழ புடிக்காமத்தான்டா மான் கூட்டத்தோட மானா வாழுறேன். இப்பதான் ஒரு லேடீஸ் மான மேட்டர்க்கு கரெட் பண்ணுனேன், அதுக்குள்ள என்னய அம்பு விட்டு படுக்க போட்டயடா.."

பாண்டு பதட்டத்துல "என்ன மன்னிச்சிருங்க முனிவரே, தெரியாம நடந்திருச்சி"னு மானு காலப்புடிச்சி அழுகுறான். அதுக்கு மானு "உனக்கு மன்னிப்புங்கறது கிடையாது. நீ மன்னிக்கிற அளவுக்கு சாதாரண பாவமா பண்ணிருக்க, என்னய மேட்டர் பாக்கவிடாம அம்பு விட்ட. அதனால நீ எப்ப உன் பொண்ட்டாடி கூட மேட்டர் பண்ணுறயோ, பண்ணுற பாதியிலயே நெஞ்ச புடிச்சி செத்துப்போவ. இத்தான் நான் உனக்கு குடுக்கிற சாபம்"னு முனிவரான மானு சொல்லிருச்சி.

சாபத்த கேட்ட பாண்டு பதறிப்போயிட்டான். "முனிவரே.. இது ரெம்ப மொராட்டு சாபமா இருக்கு. இதுல இருந்து வெளிவரதுக்கு ஏதும் பரிகாரம் இருக்கா.?"னு கேக்குறான். "பரிகாரமும் இல்ல, பனியாரமும் இல்ல. ஒழுங்கா கெளம்பிரு"னு சொல்லிட்டு மானா இருந்த முனிவர் செத்துட்டான்.

பாண்டு அவசர அவசரமா பொண்டாட்டிக இருக்குற கூடாரத்துக்கு போறான். பொண்டாட்டிகள பாத்து நடந்தத சொல்றான். நடந்தத கேட்ட ரெண்டு பொண்டாட்டிகளுக்கும் தலைசுத்திப்போச்சி. "வருத்தப்படாதீங்க அத்தான், இதுக்கு ஏதாவது பரிகாரம் இருக்கும். மனச தளரவிடாதீங்க"னு குந்தி சொல்றா. ''ஆமா அத்தான், தெம்பா இருங்க"னு மாத்ரி ஆறுதல் சொல்றா.

- தொடரும்..

No comments:

Post a Comment