Tuesday, July 31, 2018

பகுதி 29 - பதினைந்து நாள் நடந்த மகாபாரத போர் - இதுதான்...மஹாபாரத...கதை

பாண்டவங்களும் கௌரவங்களும் போர்க்கு ரெடி ஆகி அவங்க அவங்க பார்டல நிக்குராணுக. முதல் நாள் போர் ஆரம்பிக்க போகுது. கௌரவர்கள் சைடு பீஷ்மர், துரோணர், கிருபச்சாரியார், சல்லியன், துரியோதனன், அவன் தம்பிக துச்சோதனன சேத்து 99 பேர் முன்வரிசையில நிக்கானுக..

பாண்டவங்க சைடு பாண்டவங்க அஞ்சு பேரும், அர்ஜுனன் மகன் அபிமன்யூ, திருஷ்டதூமன், விராடன், விராடன் மகன் உத்திரன், சுபேதனனும் முன்னாடி நிக்குறாங்க..

தர்மன் ஆயுதத்த எல்லாம் கீழ போட்டு எதிர் டீம்ல இருக்குற பீஷ்மர்ட்ட போயி ஆசிர்வாதம் வாங்கிட்டு திரும்ப வரான். போர் ஆரம்பம் ஆகுது. கொடிய அசைக்குராணுக, ஒருத்தன் வடக்க பாத்து சங்க எடுத்து ஊத்துறான்.

ரெண்டு குரூப்பும் மோதுராணுக. அபிமன்யூ பீஷ்மர வில்ல வச்சி குச்சிய சொய்ங் சொய்ங் னு விடுறான். பீஷ்மர் பதிலுக்கு அவன் மேல அம்பு விடுறான். அபிமன்யூனால தாக்கு புடிக்க முடியல. திருஷ்டதூமனும், உத்தரனும் அவன காப்பாத்த, பீஷ்மர் மேல அம்பு விடுறானுக. அப்போ பீஷ்மர்க்கு துணையா சல்லியன் உத்திரன அடிக்கான். இத பாத்த உத்திரன் தம்பி சுமேதன் பீஷ்மர்ட்ட மோதுரான். பீஷ்மர் ஒரு நாலு அம்புகல சுமேதன் மேல விட, சுமேதன் செத்து போறான். ஒரு வழியா அபிமன்யூ பீஷ்மர்ட்ட இருந்து தப்பிச்சி வந்துருறான். இப்படியே ஒரு நாள் சண்ட முடிஞ்சிருச்சி.

இரண்டாம் நாள் யுத்தம்:

இந்த டயம், அர்ஜுனன் கண்ணன்ட்ட தேர பீஷ்மர் பக்கம் திருப்ப சொல்லி பீஷ்மர்ட்ட மோதுறான். பீஷ்மர்க்கு காவலா துரியோதனன் அர்ஜுனன தாக்குறான். ஒரு சைடு துரோணரும் திருஷ்டதூமனும் கடுமையா பைட் பண்ணிட்டு இருக்காங்க. துரோணர் திருஷ்டதூமன் தேரோட்டிய கொல்லுறான். சமாளிக்க முடியாத திருஷ்டதூமன் தப்பிச்சிருறான். இப்படியே ரெண்டாவது நாளும் முடியுது.

மூன்றாம் நாள் யுத்தம்:

அர்ஜுனன படைகள் எல்லாம் சுத்தி வளைச்சு தாக்குறாங்க. சகுனிக்கும் அபிமன்யூக்கும் ஒரு சைடு பைட் நடக்கு. நகுலனும் சகாதேவனும் சேந்து துரோணர்ட்ட மோதுராணுக. பீமனுக்கும் துரியோதனனுக்கும் தனியா சண்ட நடக்கு. இப்படியே மூணாவது நாள் முடியுது.

நாளாவது நாள் யுத்தம்:

ரெண்டு குரூப்க்கும் கடுமையா போர் நடக்கு. பாண்டவங்க, துரியோதனன் தம்பிக 50 பேர கொன்னுருராணுக.

ஐந்தாம் நாள் யுத்தம் :

பீஷ்மர கொல்லுறதுக்குனே பொறந்த சிகண்டி பீஷ்மர் கூட மோதுறான். ஆனால் பீஷ்மர், பொம்பளயா இருந்து ஆம்பளயா மாறுனவன்ட்ட நான் சண்ட போடமாட்டேன் சொல்லிட்டு, துரோணர அனுப்புறான். துரோணர் அடிச்ச அடில சிகண்டி துண்டக்கானம் துணியக்காணோம் னு மிரண்டு ஒடுறானு.

ஆறாம் நாள் யுத்தம் :

பீமன் துரியோதனனோட மிச்சம் இருக்குற தம்பிகளயும் கொல்லணுமுன்னு தேடி தேடி அடிக்கான். ஆனா துரியோதனன் தம்பிக பீமன நேக்கா சுத்துப்போட்டு வெளு வெளு னு பீமன போட்டு வெளுக்குராணுக. பத்தாகுறைக்கு துரியோதனனும் பீமன அடிச்சி மூஞ்சி மொகரய எல்லாம் பேத்து விடுறான். அடிதாங்கமா பீமன் சுருண்டு கீழ விழுக, திருஷ்டதூமன் வந்து அரும்பாடுபட்டு பீமன காப்பாத்தி கூட்டி போறான்.

ஏழாம் நாள் யுத்தம்:

இந்த தடவை கடுமையா போர் நடக்கு தர்மன் எல்லாம் பாக்கமும் வளைச்சு வளைச்சு தாக்குறான். ஒருபக்கம் துரோணர்க்கும் விராடன்க்கும் பைட் நடக்கும். துரோணர் விராடனோட தோரோட்டிய கொன்னு தேர கவுத்திபுடுறான். துரோணர்க்கு பயந்த விராடன் அவன் மகன் சங்கனோட தேர்ல் ஏரிக்கிட்டான். "எங்கடா தப்பிக்க" னு துரோணர் விராடன் மேல ஒரு நாளஞ்சி அம்ப விடுறான். விராடன் மிஸ்சாக, துரோணர் விராடன் மகன் சங்கன போட்டுதள்ளுறான். விராடன் படை பூராம் செதரி போரே வேண்டாம் னு ஓடிட்டானுக.

இங்குட்டு ஒருபக்கம் சகாதேவனக்கும் சல்லியனுக்கு கடுமையான சண்ட. சகாதேவன் சல்லியன கொன்னு அவனோட படைய புல்லாம் விரட்டி அடிச்சிட்டான்.

எட்டாவது நாள் போர்:

பீமன் மறுபடியும் துரியோதனன் தம்பிக கூட சண்டைக்கு போறான். மறுபக்கம் துரியோதனன் அர்ஜுனன் மகன் அரவான் கூட சண்ட போட்டு அரவான கொன்னிறுறான். இத பாத்த அர்ஜுனன் "டே.. இந்த துரியோதனன கொல்லாம விடாதீங்கடா.."னு கத்திட்டு கிடக்கான். அந்த டயம் துரியோதனனும் கடாத்கஜனும் போட்ட சண்டல துரியோதனன் கடாத்கஜன சாவடி அடிக்கான். அவன காப்பாத்த பாண்டவங்க துரியோதனன சுத்து போடுறாங்க. அந்த டயம் துரியோதனன் தம்பிக பாண்டவங்க கூட சண்டய போட்டு அன்னன மீட்குறாங்க. இவனுக போட்ட சண்டைல துரியோதனன் தம்பிக 13 பேரு அவுட்.

ஒன்பதாம் நாள் போர்:

துரியோதனன் பீஷ்மர பாத்து "டே.. கிழட்டு நாயே.. ஏண்டா பாண்டவசங்கல யாரையும் கொல்லமாட்டிக்க, உனக்கு போர்நெறி தெரியுமா. போர் னு வந்துட்டா அண்ணன் தம்பி எல்லாம் பாக்க கூடாது. போய் ஒழுங்கா சண்ட போடு"னு சொல்றான். அதுக்கு பீஷ்மர் "சரிடா.. நான் சண்ட போடுறேன். ஆனா சிகண்டிட்ட மட்டும் போடமாட்டேன்"னு சொல்றான். "சிகண்டிய நாங்க பாத்துக்குறோம் நீ ஒழுங்கா சண்டைய போடு.." னு துச்சோதனன் சொல்றான்.

பீஷ்மர் இந்த டயம் வெறியோட பைட் பன்ரான். பாண்டவங்க பயகல ஒண்ணுவிடாம எல்லோரையும் அடிக்கான். பாண்டவங்களும் பீஷ்மர சுத்து போட்டு அம்பு விடுறானுக. அப்ப கண்ணன் அர்ஜுனன பாத்து சொல்றான் "இதுதான் நல்ல சந்தர்ப்பம். இந்த கிழவன போட்டு தள்ளிரு.."னு சொல்றான். பீஷ்மர் பாண்டவங்க கூட மும்மரமா சண்ட போடும் போது இடைலகூடி அர்ஜுனன் பீஷ்மர் மேல அம்பு விடுறான். இத பாத்த பீஷ்மர் "ஒளிஞ்சி இருந்தாடா அம்பு விடுறீங்க"னு ஒரு நாலு அம்ப சர்ரு புர்ரு னு விடுறான். அர்ஜுனன் கண்ணன்க்கு அம்பு பட்டு முட்டி மொகர எல்லாம் பேந்துபோச்சி. கண்ணன் அர்ஜுனன பாத்து "நீ என்னடா மயிரு மாரி அம்பு விடுற. ஒரு கிழவன் அந்த போடு போடுறான்"னு சொல்லிட்டு, கண்ணன் தேர்ல இருந்து இறங்கி தேர் சக்கர்த்த கழட்டி பீஷ்மர கொல்ல போறான். அப்போ பீஷ்மர் "இதத்தான்டா நானும் எதிர்பாத்தேன்... வாடா.."னு கூப்புடுறான். அப்போ அர்ஜுனன் கண்ணன் பாத்து "நீ போர் விதிய மீறுற கண்ணா.. என்கிட்ட.. போர்ல சும்மாதான் இருப்பேன். சண்ட போடமாட்டேன் னு சொன்னால... இப்ப ஒழுங்கா இங்க வந்து உக்காரு. அந்த கிழவன நான் பாத்துகிறேன்"னு சொல்றான். இப்படியே இந்த நாள ஓட்டிட்டாங்க..

பத்தாம் நாள் போர்:

இந்த டயம் பாண்டவங்க சிகண்டிய முன்னாடி வச்சி பீஷ்மர் தாக்குறாங்க. பீஷ்மர் சிகண்டிய தாக்காம அர்ஜுனன வில்லு வச்சி அடிக்கான். சிகண்டி பிஸ்மர வில்லு வச்சி அடிக்கான்.. ஒரு15 பீஷ்மர் மேல ஓட்டைய போடுது. அர்ஜுனன் பீஷ்மர் சாமனுல ஒரு 5 அம்ப விடுறான். பீஷ்மர் "என்னோட விளக்கையே அணைச்சீட்டயேடா..."னு தேரோட ஒரு பைதாவ கழட்டி அர்ஜுனன் மேல வீசுறான். அத தடுத்த அர்ஜுனன் ஒரு 30 அம்புகள கேப்விடாம பீஷ்மர் மேல விட.. பீஷ்மர் சாகுற நிலைல கீழ விழுறான். அவன் உடம்பு புல்லாம் அம்பு இருக்கறதால, அவன் உடம்பு மன்ன தொடல. எல்லோரும் போர நிறுத்திட்டு, பீஷ்மரட்ட சாகவ பாக்க வாரனுக.. பீஷ்மர் துரியோதனன பாத்து போர் நிறுத்திரலாம் னு சொல்லிட்டு செத்துபோரான். ஆனா துரியோதனன் பாண்டவங்கல விடுறதா இல்ல..

பதினோராம் நாள் யுத்தம்:

பீஷ்மர கும்புட்டு கர்ணன் போர்ல இறங்குறான். பீஷ்மர், துரியோதனன், துரோணர், துச்சோதனன் நிக்குறாங்க. துரியோதனன் துரோணர்ட்ட "மாஸ்டர்.. நீங்க தர்மன் பயல மட்டும் புடிச்சிட்டு வாங்க"னு சொல்றான். துரோணர் தர்மன அட்டாக் பண்ணும் போது அர்ஜுனன் துரோணர விரட்டுறான்.

பதிரெண்டாம் நாள் யுத்தம் :

துரோணர் அர்ஜுனன டைவர்ட் பண்ணிட்டு தர்மன் இருக்குற இடத்த பாத்து போறான். அப்போ துருபதன், துரோணர தடுக்க. துரோணர் துருபதன போடுறேன். தர்மன்க்கு காவலுக்கு நின்ன சத்தியஜித் துரோணர் மேல அம்பு விடுறான். துரோணர் சத்தியஜீத்யும் போடுறான். அப்போ விராடனோட படை துரோணர சுத்து போடுறாங்க, அவங்க எல்லாத்தயும் அடிச்சி போட்டு துருபதன் மகன் பாஞ்சலயன கொல்றான்.

பதிமூன்றாம் நாள் யுத்தம்:
பீமன் துரியோதனன் தம்பிகல ஒவொருத்தானா தேடி போயி போடுறான். இத பாத்த கர்ணன் பீமன அடிச்சி விரட்டுறான். குந்திட்ட பண்ணுன சத்தியத்தால பீமன கொல்லாம விடுறான். துரியோதனன் அர்ஜுனன் கூட சண்ட போட்டு அவன விரட்டிரான். துரியோதனன் தம்பிக ஏழு பேரு சேந்து அபிமன்யூவ கொன்னுபுட்டானுக. இத கேள்விப்பட்ட அர்ஜுனன் ரெம்ப கோவமா சண்ட போடுறான். அர்ஜுனன் ஐத்தரதன் கொல்றான். இந்த போர்ல ரெண்டு சைடும் அதிகமா செத்துடாங்க.

பதினான்காம் நாள் யுத்தம் :

துரோணர எதுக்க முடியாம அர்ஜுனன் முழிச்சிட்டு கெடக்கான். அந்த டயம் கண்ணன் அர்ஜுனன பாத்து "நீ துரோணர் மகன் அஸ்தித்தமன் செத்துடான்னு தர்மன பொய் சொல்லச்சொல்லு. துரோணர் அத கேள்வி பட்டு போர் செய்யமாட்டான். அப்றம் துரோணர ஈஸியா போட்டுரலாம்"னு சொல்றான். அதே  தர்மன் போயி துரோணரட்ட "உன் மகன் செத்துட்டான்"னு பொய் சொல்றான். அத கேட்ட துரோணர், எல்லா ஆயுதத்தையும் கீழ போட்டு சோகமா தேருக்கு அடில உக்காறுறான். அந்த நேரம் திருஷ்டதூமன் வாள எடுத்து துரோணர் கழுத்த வெட்டி கொண்ணுறுறான்.

அடுத்து பீமன் துச்சோதனன நெஞ்ச பிளந்து ரத்தத்த குடிக்கான். கர்ணன் தேர சல்லிய ஓட்ட கரன்னனுக்கும் அர்ஜுனனுக்கும் கடுமையா சண்ட நடக்கு. கர்ணன் ஒவ்வொரு டயமும் அர்ஜுனன அடிக்கும் போதும் கண்ணன் ஏதோ சதி செஞ்சி அர்ஜுனன காப்பாத்துறான். கர்ணன் ஒரு மந்திர அம்ப அர்ஜுனன் மேல விடுறான். அந்த அம்பு அர்ஜுனன் கிரீடத்த தூக்கி எரியுது. சபாஷ் கர்ணன "இன்னும் 3 அம்ப இதே மாதிரி விடு அர்ஜுனன் செத்துருவான்"னு சல்லியன் சொல்றான். அதுக்கு கர்ணன் "ஒரு அம்ப விடுறாதான் குந்திட்ட சத்தியம் பண்ணிருக்கேன் னு சொல்றான். இத கேட்டு கோவமான சல்லியன் "போடா வேண்ண"னு கர்ணன திட்டிட்டு தேரவிட்டு இறங்கி போயிருறான்.

கர்ணன் இப்ப ஒண்டிக்கட்டையா அர்ஜுனன தாக்குறான். அந்தசமயம் கர்ணன் தேர் சக்கரம் சகதகுள்ள மாட்டிக்குது. அத எடுத்து விட கர்ணன் இறங்கி சக்கர்த்த தூங்குறான். இத பாத்த கண்ணன் "அர்ஜுனன கர்ணன கொல்ல இதுதான் டயம் அமப விடு.. "னு சொல்றான். அதுக்கு அர்ஜுனன் "இப்படி செய்றது போர் தர்மம் இல்ல, எதிரிய நெஞ்சிக்கு நேராதான் மோதனும்"னு சொல்றான். அதுக்கு கண்ணன் "அப்ப அவன் சக்கர்த்த தள்ளி விட்டு வந்து உன்ன போடுவான். நீ சாகு"னு சொல்றான். அர்ஜுனன் கண்ணன் சொன்னத கேட்டு "கர்ணன் மேல அம்பு விடுறான். அம்பு கர்ணன் நெஞ்சில ஓட்டைய போட, நெஞ்ச பிடிச்சிட்டு அங்கேயே உக்காந்துட்டான். அப்ப அர்ஜுனன் கண்ணன்கிட்ட "இவனை எவ்வளவு அம்பு விட்டாலும் சாகமாட்டிக்கான்"னு சொல்றான். அதுக்கு கண்ணன் "இந்த பயபுல்ல தானம் பண்ணி நெறய புண்ணியத்த சேத்து வைச்சிருக்கு அதான் சாகமாட்டிக்கான்" னு சொல்லிட்டு உயிருக்கு போராடிக்கிட்டு இருந்த கர்ணன்கிட்ட, கண்ணன் ஒரு கிழவன் வேசம் போட்டு வந்து "எனக்கு தானமா உன் புண்ணியத்த குடு"னு கேக்க. கர்ணன் "இந்தாடா.. எடுத்து போடா.."னு ஒரு அம்ப பிச்சி குடுக்கான்"

இப்ப அர்ஜுனன்ட்ட போன கண்ணன் "இப்ப விடு.. செத்துருவான்"னு சொல்றான். அர்ஜுனன் ஒரு நாள் அம்பு விட கர்ணன் செத்துட்டான்.

"என் நண்பன கொன்னுட்டேயேடா.. என் தேவாவ கொன்னுட்டயேடா" துரியோதனன் அழுத்துட்டு ஓடிவாறான். குந்துயும் பாஞ்சாலியும் கர்ணன மடில தூக்கி போட்டு அழுகுராலுக.

பதினைந்தாம் நாள் யுத்தம் :

கர்ணன் கொன்னுடாங்க னு வெறிகொண்டு தாக்குறான் துரியோதனன். சல்லியன் தர்மன்ட்ட மோதுறான். தர்மன் சல்லியன கொன்னுபுடுறான். சாகாதேவன் சகுனிய கொல்லுறான். துரியோதனன் எந்த ஆயுதமும் இல்லாம தனியா நிக்கான். அந்த சமயம் அஞ்சி பேரும் சண்டைக்கு வாராணுக. அத பாத்த துரியோதனன் "அஞ்சு பேரோட சண்ட போட முடியாது. ஒவ்வொருத்தனா வாங்க"னு கூப்புடுறான். "அதெல்லாம் முடியாதுடா"னு பீமன் துரியோதனன தொடேலையும் சாமான்லயும் சாகுற நிலைமைக்கு அடிக்கான்.

அந்த டயம் அங்க வந்து இத பாத்த பலராமன் "அறிவுகெட்ட முட்டாக்.......... யாராவது போர்க்களத்தில இப்படி சூத்துல அடிச்சி கொள்ளுவங்களாடா..னு கோவமா பலராமன் ஒரு கலப்பைய தூக்கிட்டு பீமன அடிக்க விரட்டுறான். இடைல பூந்து கண்ணன் பலராமன தடுத்து "பீமன் நம்ம ஆளுடா, அவன கொள்ளக்கூடாது"னு பலராமன சாமதான படுத்துறான்.

அப்போ சாவுக்கு போராடிட்டு இருந்த துரியோதனன் கண்ணன் பார்த்து "டே.. கண்ணா.. நீங்க எல்லாம் சூழ்ச்சி பண்ணி எங்க ஆளுகள கொன்னுபுட்டேங்க"னு சொல்றான். அதுக்கு "கண்ணன் ஆமடா அப்பிடித்தான் கோன்னோம்"னு உண்மைய ஒத்துக்கிட்டான். அதுக்கு துரியோதனன் "நல்லாயிருங்கடா.."னு சொல்லிட்டு செத்துப்போயிட்டான்.

- தொடரும்.....

No comments:

Post a Comment