Tuesday, July 31, 2018

நீடாமங்கலம் தீண்டாமை வன்கொடுமை - தீண்டாமைக்கு எதிராய் போர்தொடுத்த முதல் வழக்கு - பள்ளர் சமுதாய மக்களே புரிந்துகொண்டு அரசியல் செய்யுங்கள்..

1937 ஆம் ஆண்டு டிசம்பர் 28 நாள் தஞ்சையில் காங்கிரஸ் 3வது அரசியல் மாநாடு கூட்டியது.

மாநாட்டின் முற்பகுதியில் சமபந்தி விருந்தும் நடந்தது. சாதி, மதம் பேதமின்றி அனைவரும் உணவரந்தலாம் என்று மீண்டும் மீண்டும் அழைப்பு விடுக்கப்பட்டது. அங்கு வேடிக்கை பார்க்க வந்த மூன்று தலித் தொழிலாளர்கள் சற்று பயத்துடன் உணவருந்த அமர்ந்தனர்.

அனைவரும் உணவருந்திக்கொண்டிருந்த போது சபாபதி உடையார் என்ற காங்கிரஸ் பிரமுகர் ஒரு தலித் மனிதனின் தலையை பிடித்து " ஏண்டா பள்ளப்பயலுகளா... உங்களுக்கு இவ்வளவு திமிர் வந்திருச்சா... இந்த கூட்டத்தில சரிசமமா சாப்புடலாமா.. கேட்டதுடன், பக்கத்தில் கிடந்த சவுக்கு கட்டையை எடுத்து மூன்று தலித்களையும் அடித்து பயங்கரமாக அடித்தார்.

அடி தாங்கமுடியாமல் தலித் மக்கள் அலறலை கேட்டு வந்த போலீஸ்காரர்கள் மேல்சாதியினர்களுக்கு சமாதானம் சொல்லிவிட்டு மாநாட்டில் இருந்து தலித்துகளை வெளியேற்றினர்.

மேலும் அங்கு சாப்பிட வந்த தலித் மக்கள் பந்தியில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். இந்நிலையில் பந்தியில் சாப்பிட்ட தலித்கள் அனுமனூர் பண்ணையில் வேலை செய்பவர் என்று தெரிந்து, அந்த பண்ணையாருக்கு தகவல் சொல்லி அனுப்பினார் அந்த உடையார்.

(28.12.1937) மறுநாள் காலை பண்ணையில் தலித் மக்கள் அறுவடை வேலை செய்துகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பண்ணையாரின் ஏஜெண்டான கிருஷ்ணமூர்த்தி அய்யங்கார் " மாநாட்டு கூட்டத்தில் நேற்று சாப்பிட்டது யார்? அவர்களை இங்கு கொண்டு வாருங்கள் " என்று உத்தரவிட்டார்.

முதலில் தேவசகாயம் என்ற தலித் நபரை கூட்டிப்போனார்கள். அப்போது அய்யர் அவனை சும்மா இழுத்துட்டு வருவியா..? அந்த படுவாவ அடி என்று ஆணையிட்டார். பின்பு அந்த ஊரின் தலையாரி மாணிக்கம் என்பவர் அந்த தேவசகாயத்தை விளாமரத்தில் கட்டி கொடூரமாக தாக்கினார்..

தேவசகாயம் உள்ளிட்ட சில தலித் மனிதர்களுக்கு  தலை மொட்டையடிக்கப்பட்டு தலையிலும், வாயிலும் சாணிப்பால் உற்றப்பட்டது.

நீடாமங்கலம் தாழ்த்தப்பட்ட பள்ளர் சமுதாய மக்கள் மீது நடத்தப்பட்ட இந்த தீண்டாமை கொடுமையை அடுத்த நாள் விடுதலை பத்திரிக்கை வெளியிட்டது. இந்த கொடிய இழிவன செயலை எதிர்த்து சுயமரியாதை இயக்கம் போராட துவங்கியது. தோழர் பெரியார் அவர்கள் நீடாமங்கலத்திற்கு நேரில் சென்று தலித் பள்ளர் மக்களை ஒன்று சேர்த்தார். பள்ளர் சமுதாய மக்கள் பெரியார் அவர்களிடம் நடந்த தீண்டாமை கொடுமைகள் அனைத்தையும் முறையிட்டனர்.

பார்ப்பன பண்ணையார், டி. கே சந்தன ராமசாமி உடையாr, காங்கிரஸ் அமைப்புக்கு எதிராக பள்ளர் சமுதாய மக்கள் தோழர் பெரியாருடன் சேர்ந்து போராட தொடங்கினர்.

மேலும் ஹரிஜனங்களுக்கு "காங்கிரஸ் மரியாதை"  என்றும்  "சமபந்தியில் சாப்பிட்டவர்களுக்கு தலையில் மொட்டை, சாணிப்பால் " என்றும் விடுதலையில் எழுதியதுடன், பண்ணையார் பார்ப்பனன் மீதும் , உடையார் மீதும் வழக்கு தொடுத்தார்.

ஆனால் பார்ப்பன பத்திரிகையான தினமணி பத்திரிகை இந்த கொடூர தீண்டாமை பிரச்சினையை அப்படி ஒரு சம்பவம் நடைபெறாதவாறு ஒரு வருடத்துக்கு மேல் எழுதிவந்தது.

இந்த வழக்கு நீதி மன்றத்தில் தொடர்ந்து இரண்டரை ஆண்டுகள் நடைபெற்றது.. 

ஆனால் இன்றோ நிலைமை தலைகீழா உள்ளது. பள்ளர் சமுதாய மக்களுக்கு மொட்டை அடித்து வாயில் சாணியை ஊற்றிய ஆதிக்க சாதி பார்ப்பனர்க்களுக்குத்தான் இன்று இவர்கள் ஆதரவாக இருப்போம் என்று சொம்பு தூக்குகின்றனர்.

ஆம் பள்ளர் சமுதாய தலைவர் கிருஷ்ணசாமி ஆண்டாள் பிரச்சனையுளும், ரதயாத்திரை பிரச்சினையிலும் பார்ப்பனர்களுக்கு ஆதரவாக இருப்போம் என்று அறிக்கை வெளியிடுகிறார் என்றால் இவர்களின் போக்கு எப்படிப்பட்டதாக இருக்கும்..

நீ அடிமை சமூகம், நீ எனக்கு சரிசமா உக்கார கூடாது, உக்காந்து உணவரந்த கூடாது என்று மொட்டையடித்து சாணிய சாப்பிட வைத்த பார்ப்பனனுக்கு வரிந்து கட்டி வருகிறார்கள்.

உண்மையில் இந்த பள்ளர் சமுதாய தலைவர்களுக்கு அறிவு இருக்கிறாரதா.. இவர்கள் சாதி விடுதலைக்கு போராடுகிறார்களா..?
இவர்கள் பள்ளர் சமுதாய மக்களை ஏன் பார்பனர்களிடம் அடமானம் வைக்கிறார்கள்..
ஆதிக்க சாதி என்று தன்னை அடையாளபடுத்தி கொண்டால் இந்த சாதி ஒழிந்துவிடுமா..? தீண்டாமை நிகழாதா..?
நீ என்னதான் SC அல்ல BC என்றாலும், BC யும் பார்ப்பனர்களுக்கு சூத்திரர்கள்தானே.. பார்ப்பனர்களுக்கு தேவிடியாமகன் தானே..

பார்ப்பனியத்தை அழிக்காமல் எப்பிடி சாதி படிநிலையை தகர்க்க முடியும்...?

இதையெல்லாம் கிருஸ்ணசாமிதான் சிந்திக்கவில்லை, அவர் தனிப்பட்ட ஆதாயத்திற்காக எதுவும் செய்யலாம்..

உங்களுக்குமா அறிவில்லை....?

சிந்திக்க மறுப்பது முட்டாள்தனம் நண்பர்களே...

No comments:

Post a Comment